ulaga semmozhi tamil maanadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ulaga semmozhi tamil maanadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூன், 2010


மாநாட்டுச் செலவு ரூ.68 கோடி: முதல்வர் தகவல்
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=263913&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0bae%u0bbe%u0ba8%u0bbe%u0b9f%u0bcd%u0b9f%u0bc1%u0b9a%u0bcd+%u0b9a%u0bc6%u0bb2%u0bb5%u0bc1+%u0bb0%u0bc2.68+%u0b95%u0bcb%u0b9f%u0bbf%3a+%u0bae%u0bc1%u0ba4%u0bb2%u0bcd%u0bb5%u0bb0%u0bcd+%u0ba4%u0b95%u0bb5%u0bb2%u0bcd
First Published : 29 Jun 2010 12:54:00 AM IST


கோவை, ஜூன் 28: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நேரடியாக ரூ.68.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக ரூ.243 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பங்கேற்றனர். கலை, இலக்கிய வரலாற்றை விளக்கும் வகையில் அன்றைய தினம் மாலையில் நடந்த இனியவை நாற்பது ஊர்திகள் அணிவகுப்பை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.  ஜூன் 24 முதல் 26 ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொதுக் கண்காட்சியை நான்கு நாள்களிலும் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.  தினமும் 13 மணி நேரம் கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.  மாநாட்டுச் சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் கலந்து கொண்ட கட்டுரையாளர்களுக்கு 3 ஆயிரத்து 200 மலர்கள் வழங்கப்பட்டன. 2 ஆயிரத்து 300 மலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  இணைய மாநாட்டில் 110 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இம் மாநாட்டில் 500 பேர் பங்கேற்றுள்ளனர். இணைய மாநாட்டின் சிறப்பு மலரில் 130 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இணையக் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். முகப்பரங்கில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  உணவுக் கூடங்களில் மாநாடு நடைபெற்ற 5 நாள்களிலும் 4 லட்சம் பேருக்கு ரூ.30 சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிலிருந்து 2 ஆயிரத்து 605 விருந்தினர்கள் வருகை தந்தனர். இவர்களுக்கு 92 ஹோட்டல்களில் 1,242 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.   ஜூன் 24 முதல் 27 வரை நடைபெற்ற ஆய்வரங்குகளில் 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமர்வரங்குகளில் 50 நாடுகளில் இருந்து 840 பேர் வருகை தந்தனர். இதில் 152 பேர் கட்டுரை சமர்ப்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா (4), கனடா (11), சீனா (1), செக்கோஸ்லோவியா (1), பின்லாந்து (1), பிரான்ஸ் (1), ஜெர்மனி (5), கிரீஸ் (10), இத்தாலி (10), ஜப்பான் (2), ம
லேசியா (23), மொரீசியஸ் (3), நெதர்லாந்து (3), நியூசிலாந்து (1), ஓமன் (1), ஹாங்காங் (10), ரஷியா (1), சிங்கப்பூர் (22), தென்ஆப்பிரிக்கா (3), தென் கொரியா (38) இலங்கை (38), தாய்லாந்து (2), ஐக்கிய அரபு நாடுகள் (1), இங்கிலாந்து (9), அமெரிக்கா (14) ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர் என்றார் முதல்வர்.25 போலீஸôருக்கு வெகுமதிஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீஸôருக்கு வெகுமதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியான உடனே நகர் முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. உளவுத் துறை போலீஸôர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். பீளமேடு பகுதியில் மாநாட்டுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகம் செய்து கொண்டிருந்த 4 பேரை போலீஸôர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், மாநாட்டு எதிராக சுவரொட்டிகளை ஒட்ட முயன்றது, மாநாட்டுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட 9 பேரை போலீஸôர் கைது செய்தனர்.மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களை சேகரித்துக் கொடுத்த உளவுத் துறை போலீஸôருக்கும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க உறுதுணையாகச் செயல்பட்ட போலீஸôருக்கும் வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி, கொடிசியா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுப் பாதுகாப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்ட 25 போலீஸôருக்கு தலா ரூ. 3 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்பட்டது. வெகுமதியைப் பெற்றவர்களுக்கு டிஜிபி லத்திகா சரண் வாழ்த்து தெரிவித்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இடம்பெற்ற, அரிய கண்காட்சியைக் காணத் தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாரம் அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொடிசியா வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.செம்மொழி மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற "இனியவை நாற்பது' அலங்கார ஊர்திகள் மக்கள் பார்வைக்காக மேலும் ஒரு வாரம் கொடிசியா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை திங்கள்கிழமை ஆர்வத்துடன் பார்த்து மகிழும் பள்ளி மாணவர்கள்.கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள செப்பேடுகளை திங்கள்கிழமை பார்வையிடும் பள்ளி மாணவர்கள்.
கருத்துக்கள்


மக்கள் நெரிசலைச் சமாளிதது ஒழுங்குபடுத்திய காவல்துறையினர் உண்மையிலேயே பாராட்டிற்குரியவர்கள். (பொதுக் கண்காடசிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். எப்பொழுது பார்த்தாலும் மக்கள் அலைதான் வாசலில் தென்பட்டது.) அதே நேரம், தங்களின் நோக்கம் வன்முறையல்ல என்பதைச் செயலில் காட்டிய தமிழ் உணர்வாளர்களும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். எனவே, சுவரொட்டி ஒட்டியமை போன்ற காரணங்களுக்காகத் தளையிடப்பட்ட அனைவர்களையும் மாநாட்டு வெற்றியை முன்னிட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2010 5:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள் ..சி.இலக்குவனார்

தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் இரண்டு கண்களாகவே கருதி அந்நூல்கள் சொன்ன கருத்துப்படியே தம் வாழ்வை அமைத்துக் கொண்ட பேராசிரியர் சி.இலக்குவனார்(1910-1973). இவர் தமிழில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் பெரும் புலமை கொண்டவர். இலக்குவனார் தமிழ் வளர்ச்சியின் பொருட்டு 'தமிழ்க் காப்புக் கழகம்' என்னும் ஒரு தமிழ்க் கழகத்தை மதுரையில் துவங்கி தமிழ்ப் பணி ஆற்றினார். இவர் எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், வள்ளுவர் கண்ட இல்லறம், அம்மூவனார் போன்ற கவிதை நூல்களையும், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், என் வாழ்க்கைப் போர், கரும வீரர் காமராசர் ஆகிய வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். இலக்குவனார் ஆற்றிய தமிழ்ப் பணியை பாராட்டி, 'முத்தமிழ்க் காவலர்', 'செந்தமிழ் மாமணி', 'பயிற்சி மொழிக்காவலர்', 'இலக்கணச் செம்மல்' போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.

புதன், 26 மே, 2010

தாய் மொழியில் தடுமாறலாமா?


இன் ​றைய நாளில் பள்​ளி​க​ளில் தமி​ழின் நிலை,​​ தமிழ் கற்​பிக்​கும் முறை​கள்,​​ தமிழ் மொழி​யில் மாண​வர்​க​ளின் நிலை இவை​க​ளைப் பார்க்​கும் போது சில கசப்​பான உண்​மை​களை இங்கே வெளிப்​ப​டுத்த வேண்​டி​யுள்​ளது.​கல் ​வித்​து​றை​யில் ஒரு புள்ளி விவ​ரம் கேட்​கப்​ப​டு​கி​றது.​ அது என்​ன​வென்​றால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை எத்​தனை மாண​வர்​க​ளுக்கு தமிழ் எழுத,​​ படிக்​கத் தெரி​ய​வில்லை,​​ எத்​தனை மாண​வர்​கள் சுமா​ராக எழு​தப் படிக்​கக் கூடி​ய​வர்​கள் என்ற விவ​ரங்​க​ளைக் கேட்​கி​றார்​கள்.​ பத்​தாம் வகுப்​புக்கு வந்​தும் கூட தமி​ழில் எழுத,​​ படிக்க தெரி​யா​த​வர்​கள் எல்லா பள்​ளி​க​ளி​லும் இருக்​கி​றார்​கள் என்​பது உண்​மையே!​ இதை யாரா​லும் மறுக்​க​மு​டி​யாது.​ தமிழ்​நாட்​டில் தாய் மொழி​யிலே தடு​மாற்​றம் என்​றால் மற்ற பாடங்​களை இவர்​கள் எப்​படி படிக்க முடி​யும்?​ எப்​படி புரிந்​து​கொள்ள முடி​யும்?​ ஆக தமிழ் மொழிப்​பா​டத்​தில் இப்​ப​டி​யொரு நிலை இருப்​ப​தற்கு என்ன கார​ணம்?​ கல்​வித்​து​றை​தான் கார​ணம்.​அனை​வ​ருக்​கும் கல்வி என்ற திட்​டம் கொண்டு வந்த நேரத்​தில்,​​ 6,​ 7,​ 8-ம் வகுப்​பு​க​ளுக்கு கற்​பித்து வந்த இடை​நிலை ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பதி​லாக பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​களை நிய​மித்​தார்​கள்.​ இடை​நிலை ஆசி​ரி​யர்​கள் எல்லா பாடங்​க​ளை​யும் சிறப்​பா​கக் கற்​பித்து வந்​தார்​கள்.​ ஆனால் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​த​போது கணக்கு ஆசி​ரி​யர்​க​ளை​யும்,​​ அறி​வி​யல் ஆசி​ரி​யர்​க​ளை​யும் நிய​மித்​தார்​கள்.​ அதன்​பி​றகு ஆங்​கில ஆசி​ரி​யர்​களை நிய​மித்​தார்​கள்.​ இந்த ஆசி​ரி​யர்​க​ளுக்​குத் தமிழ்ப் பாடத்தை நடந்த பாட​வேளை ஒதுக்​கிக் கொடுக்​கப்​பட்​டது.​ இவர்​கள் தமிழ் மொழி அறிவு பெற்​றி​ருந்த போதி​லும் தமிழ்ப் பாடத்​திற்கு முக்​கி​யத்​து​வம் தரு​வ​தில்லை.​ தங்​க​ளு​டைய பாடத்​தைக் கற்​பிப்​ப​தி​லேயே கவ​ன​மாக இருக்​கி​றார்​கள்.​ தமி​ழில் இலக்​க​ணம்,​​ செய்​யுள் பகு​தி​க​ளைத் தொடு​வ​தில்லை,​​ உரை​ந​டையை மட்​டும் மாண​வர்​களை படிக்​கச் சொல்​லி​யும்,​​ உரை​யைப் படித்து விடை​களை எழுதி தயார் செய்​தும் தமிழ்ப் பாடத்தை முடித்​து​வி​டு​கி​றார்​கள்.​ஆக,​ ​ தமிழ் மொழி​யைக் கற்​பிக்க தமிழ் ஆசி​ரி​யர்​கள் நிய​மிக்​கப்​பட்​டி​ருந்​தால் தமிழ் மொழி​யில் மாண​வர்​கள் செய்​யும் பிழை​க​ளைச் சுட்​டிக்​காட்டி சரி​யான தமிழை பிழை இல்​லா​மல் எழு​தும் பயிற்​சி​யைக் கொடுக்க முடி​யும்.​ஆசி​ரி​யர்​கள் நிய​ம​னம்:​​ஆசி ​ரி​யர்​களை நிய​மிக்​கும் போது 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு மற்ற பாட ஆசி​ரி​யர்​களை நிய​மிப்​பது போல தமிழ் ஆசி​ரி​யர்​கள் இது​வரை நிய​மிக்​கப்​ப​ட​வில்லை.​ உதா​ர​ண​மாக 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு நான்கு பணி​யி​டங்​களை ஒதுக்​கும்​போது இரண்டு கணித பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள்,​​ இரண்டு அறி​வி​யல் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள் அல்​லது ஒரு அறி​வி​யல் ஆசி​ரி​யர்,​​ ஒரு ஆங்​கில ஆசி​ரி​யர் என்ற நிலை​யில்​தான் நிய​ம​னம் செய்​யப்​ப​டு​கி​றது.​ தமிழ் ஆசி​ரி​யர் பணி​யி​டங்​கள் அறவே விடப்​பட்​டுள்​ளது.​ இந்த நடை​முறை நடு​நிலை,​​ உயர்​நிலை மற்​றும் மேல்​நி​லைப் பள்​ளி​கள் என எல்லா வகைப் பள்​ளி​க​ளி​லும் நீடிக்​கி​றது.​தரம் உயர்த்​தப்​ப​டும் பள்​ளி​கள்:​​தொடக் ​கப்​பள்​ளியை நடு​நி​லைப் பள்​ளி​யாக தரம் உயர்த்​தும்​போது கணி​தம் மற்​றும் அறி​வி​யல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்​கி​றார்​கள்,​​ ஏன் ஆங்​கில ஆசி​ரி​ய​ரைக் கூட நிய​மிக்​கி​றார்​கள்.​ ஆனால் தமி​ழா​சி​ரி​யர் எந்​தப் பள்​ளி​யி​லும் இது​வரை நிய​மிக்​கப்​ப​ட​வில்லை.​ அதே​போல் ஒரு நடு​நி​லைப்​பள்​ளியை,​​ உயர்​நி​லைப் பள்​ளி​யா​கத் தரம் உயர்த்​தும்​போது தமி​ழா​சி​ரி​ய​ரைத் தவிர மற்ற பாட ஆசி​ரி​யர் பணி​யி​டங்​கள் உடனே அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றது.​ தமி​ழா​சி​ரி​யர் பணி​யி​டங்​கள் பள்ளி தொடங்கி சுமார் நான்கு அல்​லது ஐந்து ஆண்​டு​கள் கழித்​துத்​தான் அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றது.​÷உ​யர்​நி​லைப்​பள்​ளி ​களை மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​கத் தரம் உயர்த்​தும் போதும் இதே நிலை​தான்.​ முது​நி​லைத் தமி​ழா​சி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​யா​மல் யாரோ ஒரு​வர் அப்​பா​டத்தை நடத்​து​கி​றார்​கள்.​÷இப்​படி பள்​ளி​க​ளில் தமிழ்ப் பாடங்​க​ளைச் சரி​யான ஆசி​ரி​யர்​க​ளைக் கொண்டு கற்​பிக்​கா​மல் இருப்​ப​தால் மாண​வர்​கள் தமிழ் மீது ஆர்​வம் இல்​லா​மல் இருக்​கி​றார்​கள்.​ தொழில் கல்​வி​யில் சேரு​ப​வர்​கள் கூட தமிழ் பாடங்​க​ளில் தேர்ச்சி பெற்​றால் போதும்.​ கணி​தம்,​​ இயற்​பி​யல்,​​ உயி​ரி​யல் போன்ற பாடங்​க​ளில் உள்ள மதிப்​பெண்​களை தொழில் கல்வி படிப்​பிற்கு எடுத்​துக் கொள்​வ​தால் அப்​பா​டங்​க​ளில் மட்​டும் அதிக கவ​னம் செலுத்​து​கி​றார்​கள்.​ தமிழை ஒதுக்​கி​வி​டு​கி​றார்​கள்.​எனவே தாய்த் தமிழ் நாட்​டில் தமிழ் மொழி​யின் இத்​த​கைய நிலை​யைப் போக்க,​​1.​ எல்லா பள்​ளி​க​ளி​லும் 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு தமி​ழா​சி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​ய​வேண்​டும்.​2. ​ தரம் உயர்த்​தப்​ப​டும் எல்லா பள்​ளி​க​ளுக்​கும் மற்ற பாட ஆசி​ரி​யர்​களை நிய​மிப்​பது போலவே தமி​ழா​சி​ரி​யர்​க​ளை​யும் நிய​ம​னம் செய்ய வேண்​டும்.​3.​ தொழில் கல்வி பட்​டப்​ப​டிப்​பில் சேரு​வ​தற்​கும் தமிழ்ப் பாடத்​தில் பெறும் மதிப்​பெண்​ணை​யும் கணக்​கில் எடுத்​துக் கொள்ள வேண்​டும்.​4.​ தமிழ்ப் பாட வகுப்​பு​க​ளில் பேச்​சுப் பயிற்சி,​​ தாங்​களே கருத்​து​களை சிந்​தித்து கட்​டு​ரை​கள் எழு​தும் பயிற்சி,​​ நூல்​களை திற​னாய்வு செய்து விமர்​சிக்​கும் பயிற்சி போன்ற செயல்​பா​டு​க​ளைச் செய்ய வழி காணும் போது இது மொழித் திறனை வளர்க்க உத​வும்.​5.​ தனி​யார் பள்​ளி​க​ளில் கூட தமிழ் பாடத்​திற்கு முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​வ​தில்லை.​ ஆங்​கில வழி​யில் படிக்​கும் மாண​வர்​கள் பெரும்​பா​லா​னோர் தமி​ழைப் படிக்க தடு​மா​று​வார்​கள்.​ கார​ணம் இங்​கே​யும் தமி​ழுக்கு முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​வ​தில்லை.​ இந்​நி​லை​யை​யும் மாற்ற தகுந்த நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.​சம் ​பந்​தப்​பட்​ட​வர்​கள் இவற்​றைக் கவ​னித்து தகுந்த நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டால் தமிழ் நாட்​டில் மாண​வர்​க​ளி​டம் தமிழ் மொழி வளர்ச்​சி​யு​றும்.​ இல்​லை​யென்​றால் தமிழ்,​​ நாளும் தேய்ந்து கல்வி கற்​ற​வர்​கள் கூட சரி​யான தமிழ் சொற்​க​ளைப் பயன்​ப​டுத்​தத் தெரி​யா​மல் செய்​யுள்,​​ இலக்​கி​யம்,​​ இலக்​கண அறிவை பெறா​மல் மங்​கும் நிலை ஏற்​ப​டும் என்​ப​தில் ஐய​மில்லை.​கோ.செல்​வ​ரா​சன்,​​ காம​ராசு நகர்,​​ பெத்த தாளாப்​பள்ளி அ.நி.​ கிருஷ்​ண​கிரி மாவட்​டம்
கருத்துக்கள்

சரியான கோரிக்கைகள் முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில் தமிழ்த்தாய் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் நுழைவுரிமையின்றிக் கண்ணீர் வடிக்கக் கூடாது. உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செம்மொழி மாநாடு​​ ​​கட்சி மாநா​டாக காட்சி அளித்து விடக்​கூ​டாது: முதல்வர் எச்சரிக்கை


செம்மொழி மாநாடு​​ ​​கட்சி மாநா​டாக காட்சி அளித்து விடக்​கூ​டாது: முதல்வர் எச்சரிக்கை



சென்னை, ​​ மே 25: கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாடு,​​ தி.மு.க.வின் கட்சி மாநாடாகக் காட்சி அளித்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.​ ​​ இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:​ ​​ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது.​ அம்மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்கி ஆய்வு செய்தேன்.​ ​​ மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை வகைப்படுத்தி,​​ முறைப்படுத்தி செய்திட அமைச்சர்களின் தலைமையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ அந்தக் குழுக்களுடன் நான் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினேன்.​ மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அமைச்சர்களும்,​​ அதிகாரிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.​ ​​ பொது அரங்க நிகழ்ச்சிக்கான பிரமாண்டமான பந்தல் மிக அழகாக அமைக்கப்பட்டு வருகிறது.​ பழம்பெரும் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட 28 ஆய்வரங்கங்களும்,​​ வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் வியந்து பாராட்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.​ ​​ வெறும் கண்காட்சியாக மட்டுமில்லாமல்,​​ காலமெல்லாம் நினைவுகளிலிருந்து அகலாத கருத்துக் காட்சியாகவும் அமையும் விதத்தில் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.​ ​பழந்தமிழர் பண்பாடு,​​ நாகரிகம்,​​ தமிழிலக்கிய காட்சிகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.​ ​​ அதைப்போலவே,​​ ஊர்வலத்தில் செல்லவிருக்கும் ரதங்கள் காண்போரைக் கவரும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.​ இவ்வளவு மகிழ்ச்சிக்கும்,​​ உற்சாகத்துக்கும் இடையே என் மனதுக்கு வருத்தத்தைத் தருகிற காட்சியையும் நான் கோவையில் காண நேர்ந்தது.​ ​ கோவை விமானம் நிலையம் தொடங்கி,​​ வ.உ.சி.​ மைதானம் வரையிலும்,​​ இன்னும் நகரின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.​ கொடிகள்,​​ பதாகைகள்,​​ கட்சி நிர்வாகிகளின் உருவங்கள் தாங்கிய பேனர்கள் ஆகியவை தெவிட்டும் அளவுக்கு எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தன.​ ​​ துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின் கோவைக்கு சென்ற நாளிலும் இதே காட்சியைப் பார்த்து,​​ கண்டித்தார் என்று அறிந்து கொண்டேன்.​ ​​ நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில்,​​ தமிழ் மொழிக்காகவும்,​​ தமிழர்களுக்காகவும்,​​ தமிழக அரசால் நடத்தப்படுகிற மாநாடு.​ அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சி அளித்து விடக் கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக உள்ளேன்.​ ​​ இதை கோவை மாவட்ட தி.மு.க.வினர் அறிந்து கொள்ளாமல் உள்ளது எனக்கு வியப்பாக உள்ளது.​ ​​ தி.மு.க.​ கொடிகள்,​​ பதாகைகளுக்குப் பதிலாக,​​ பொதுமக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில்,​​ சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள்,​​ மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள்,​​ பழங்கால மன்னர்களின் திருவுருவங்கள்,​​ புலவர்களின் ஓவியங்கள் ஆகியவற்றை அழகாக அமைக்கலாம்.​ அது எனக்கு மட்டுமல்லாமல்,​​ மாநாட்டுக்கு வரும் பல லட்சக்கணக்கான மக்களுக்கும்,​​ வெளிநாட்டினருக்கும் நிறைவளிக்கக் கூடியதாகவும்,​​ தமிழ் மொழியின் பெருமை,​​ வரலாறு,​​ பண்பாடு இவற்றை விளக்குவதாகவும் இருக்கும்.​ ​​ எனவே தி.மு.க.வினர் அதற்கேற்ப செயல்பட வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

சரியான முறையான நிறைவான அறிக்கை! கட்சிக் கொடிகளும்பதாகைகளும் வேண்டா என்றால் மிகுதியாக வைக்க வேண்டும் என்ற அரசியல் அகராதிப்படி நடந்து கொள்ளாமல், முதல்வர் வேண்டுகோளுக்கிணங்கச் சங்க இலக்கியக் காட்சிகளை மக்கள் பார்வையில் வைக்க கட்சியினர் முன்வரவேண்டும். அதுவே முதல்வருக்குப் பெருமை தேடித்தரும். மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:44:00 AM

Whatever C.M may say, this conference is conducted as aparty conference at the cost of public money. Except extravaganza and mere bon fire, nothing will be achieved.

By ankandasamy
5/26/2010 12:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 16 மே, 2010

நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்: முதல்வர் கருணாநிதி



கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல் குறுந்தகட்டினை, சென்னையில் சனிக்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட டாக்டர் எல்.சுப்பிரமணிய
சென்னை, மே 15: இளைஞர்கள் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் கருணாநிதி குறுந்தகட்டை வெளியிட, அதை இசைக் கலைஞர் எல். சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:ரஹ்மானுடைய இசையை நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து நீங்களெல்லாம் பருகக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் எழுதிய பாடல் தான். ஆனால், தமிழகத்தினுடைய புலவர்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்குப் பின்னர் வந்த கடைச் சங்க காலம், இடைச் சங்க காலம் எனப் பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த கம்பர், காளமேகம் காலம் வரையில் எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் ஒரு பாட்டில் அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்பாடு கொண்டது என்பதை நன்கு அறிவேன். பாடலை எழுதும் போது அருகில் இருந்தவர்கள், இந்தப் பாடல் வெற்றிகரமான பாடலாக வர வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையோடு எதிர்பார்த்தார்கள். இந்தப் பாடலை எழுதும் போது ஏற்பட்ட உணர்வை நான் மட்டுமே அறிவேன். எனது வாழ்நாளில் 10, 12 ஆண்டுகளைத் தவிர்த்து மீதியுள்ள ஆண்டுகள் எல்லாம் தமிழ், தமிழ் என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன. அதனால் யார் ஒருவர் தமிழ் என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன், ஒன்றிக் கலந்திடுவேன், உணர்வுகளை மதிப்பேன், அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்துவேன். தரணி வாழ் கலைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் வீட்டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமைதான் ஆஸ்கார் விருதுகள். ரஹ்மானை போன்ற இளைஞர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு இளைஞனும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும். ஏனெனில், நம்பிக்கை தான் வாழ்வின் முதல் படி. அதில் கால் வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.நம்பிக்கையோடு நான் செலுத்திய உழைப்புதான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம். அதே போல், ரஹ்மான் உலகப் புகழ் பெறுவதற்கு அவரது நம்பிக்கை, இடைவிடாத முயற்சிதான். இது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்துச் சக்தியை ஏற்படுத்தக் கூடியது. இந்த பாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்குகிறது. எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள். பிறந்த பின் என்ன என்பது தான் இன்றைக்கு உள்ள பிரச்னை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். எல்லாரும் ஒரே இனம் என்ற முத்திரையுடன் வாழ வேண்டும் என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. கோவை மாநாடே இந்தப் பாடலுடன்தான் ஆரம்பமாகும். இந்தப் பாடல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும். நானே விளம்பரமாக இருந்து ஒவ்வொருவரையும் மாநாட்டுக்கு அழைக்கின்றேன் என்றார் கருணாநிதி.அமைச்சர்கள் க. அன்பழகன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, பாடகர் டி.எம்.செüந்தரராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

(தொடர்ச்சி) 4/4)௪) கல்வெட்டு எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பில்லாத பொழுது தமிழல்லாத பிற எழுத்து வடிவங்களை மேடைப்பின்னணியாக அமைத்ததும் தவறான அறிவூட்டலாக அமைகிறது. தவறான கொள்கையுடையவர்கள் மாநாட்டுக் குழுக்களில்செல்வாக்கு செலுத்துவதால் இந்த நிலைமை போலும்! தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை- தமிழ் பண்பாட்டை - தமிழ் நாகரிகத்தை - தமிழ் வரலாற்றை - தமிழ்ச் செம்மையை உணர்த்தும் வகையில் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வடிவமையுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 5:44:00 AM

1/4) ௧.) இப்பாடலை மாநாட்டின் மைய நோக்குப் பாடல் என்று சொல்வதைவிட மாநாட்டை முன்னிட்டு வெளியிடும் தமிழ்நெறி விளக்கப் பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 2/4 ௨) உலகில் பெரும்பான்மைத் தமிழர்களின் எதிர்ப்பையும் தமிழ்நாட்டில் ஒரு சாராரிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இம்மாநாட்டை விழிப்புடன் நடத்த வேண்டும். செம்மொழி மாநாட்டில் அயல்முரசு (டிரம்) இசை எதற்கு? ஒப்பீட்டு அடிப்படையில் பிற கலையை அறியச்செய்யவோ பல கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமையவோ வாய்ப்பிருப்பின் ஏற்கலாம். தமிழிசைவாணர்களுக்கு முதன்மை அளியுங்கள். 3/4 ௩) அயல் இசையாய் இருப்பினும் பாரதியார், பாரதிதாசன், கவிமணி. நாமக்கல்லார் முதலான தமிழ்க்கவிஞர்களின் பாடலை இசைக்கக் கூடாதா? சிவப்புப் பகுதியில் விலை மகள் அழைக்கும் ஓ! இரசிக்கும் சீமானே வா என்னும் பாடலையா இசைப்பது? இதுதான் செம்மொழித் தமிழை உயர்த்தும் பண்பாட்டு நிகழ்ச்சியா? வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது? பொறுப்பாளர்கள் மைய நோக்கிற்கேற்ப இசை நிகழ்ச்சிகளை அமையுங்கள். (தொடர்ச்சி 4/4 காண்க)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 5:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
௧.) இப்பாடலை மாநாட்டின் மைய நோக்குப் பாடல் என்று சொல்வதைவிட மாநாட்டை முன்னிட்டு வெளியிடும் தமிழ்நெறி விளக்கப் பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ௨) உலகில் பெரும்பான்மைத் தமிழர்களின் எதிர்ப்பையும் தமிழ்நாட்டில் ஒரு சாராரிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இம்மாநாட்டை விழிப்புடன் நடத்த வேண்டும். செம்மொழி மாநாட்டில் அயல்முரசு (டிரம்) இசை எதற்கு? ஒப்பீட்டு அடிப்படையில் பிற கலையை அறியச்செய்யவோ பல கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமையவோ வாய்ப்பிருப்பின் ஏற்கலாம். தமிழிசைவாணர்களுக்கு முதன்மை அளியுங்கள். ௩) அயல் இசையாய் இருப்பினும் பாரதியார், பாரதிதாசன், கவிமணி. நாமக்கல்லார் முதலான தமிழ்க்கவிஞர்களின் பாடலை இசைக்கக் கூடாதா? சிவப்புப் பகுதியில் விலை மகள் அழைக்கும் ஓ! இரசிக்கும் சீமானே வா என்னும் பாடலையா இசைப்பது? இதுதான் செம்மொழித் தமிழை உயர்த்தும் பண்பாட்டு நிகழ்ச்சியா? வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது? பொறுப்பாளர்கள் மைய நோக்கிற்கேற்ப இசை நிகழ்ச்சிகளை அமையுங்கள். ௪) கல்வெட்டு எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பில்லாத பொழுது தமிழல்லாத பிற எழுத்து வடிவங்களை மேடைப்பின்னணியாக அமைத்ததும் தவறான அறிவூட்டலாக அமைகிறது. தவறான கொள்கையுடையவர்கள் மாநாட்டுக் குழுக்களில்செல்வாக்கு செலுத்துவதால் இந்த நிலைமை போலும்! தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை- தமிழ் பண்பாட்டை - தமிழ் நாகரிகத்தை - தமிழ் வரலாற்றை - தமிழ்ச் செம்மையை உணர்த்தும் வகையில் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வடிவமையுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Latest indian and world political news information

சென்னை : ''தமிழின் சிறப்பையும், தொன்மையையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும், பழக்க வழக்கத்தையும் உலகம் அறியச் செய்யும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் அமைந்துள்ளது,'' என, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் வெளியீட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் பேசினார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டின் மையநோக்குப் பாடலை முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இயக்குனர் வாசுதேவ்மேனன் பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலின், 'சிடி' வெளியீட்டு விழா, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. 'சிடி'யை வயலின் வித்வான் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

பாடல், 'சிடி'யை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இயற்றுவது என முடிவு செய்த உடன், அதில் சங்ககாலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும், அதில் காட்டப்பட்டுள்ள தமிழரின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் ஒரு பாடலில் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி தான் என்பதை அனைவரும் ஏற்கும் வகையில் செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாமல் ஒரே பாடலில் கொண்டு வருவது எவ்வளவு இடர்பாடு நிறைந்தது என்பதை நன்றாக அறிவேன். அந்த பாடல் எழுதும்போது ஏற்பட்ட உணர்ச்சி எனக்கு மாத்திரமே தெரியும். அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மகிழ்ச்சியை இந்த பாடலுக்கு உங்களிடம் கிடைத்துள்ள வரவேற்பின் மூலம் அறிய முடிகிறது. எனக்கு முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, வலியுடன் மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அறிந்து, அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அவரை வாழ்த்தி கடிதம் எழுதி அனுப்பினேன். அவரின் மூலம் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்த பாடலின் முதல் வரியான, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதன் பொருள், பிறப்பு என்பது எல்லாருக்கும் பொதுவானது; நாம் அனைவரும் ஒன்றே என்பதை குறிக்கும். அந்த வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 205 அறிஞர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்த பாடலின் மூலம் தமிழின் தொன்மையையும், சிறப்பையும் அறிவார்கள். அந்தளவிற்கு சிறப்பாக இந்த பாடலை அனைவரும் விரும்பும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அவரை எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரும் தமிழர், நானும் தமிழர் என்பது தான், எங்களை இணைத்துள்ளது.

இந்த பாடல் செம்மொழி மாநாட்டின் விளம்பர பாடலாக அமையும். இந்தப் பாடல் தான் செம்மொழி மாநாட்டின் துவக்கத்தில் ஒலிக்கப்படும். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் செம்மொழி மாநாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






புதன், 12 மே, 2010

செம்மொழி மாநாடு: மாநாட்டில் முதல்வரின் பேத்தி பங்கேற்கும் வீணை நிகழ்ச்சி



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொது அரங்கில் முதல்வர் கருணாநிதியின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை நிகழ்ச்சி, பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜனின் தலைமையிலான கலை நிகழ்ச்சி மற்றும் சுற்றுலாக் குழுவின் மூலம் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாநாட்டின் பொது அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய கலைஞர்கள், அவர்களுக்கான நேரம், ஒரு குழுவில் எத்தனை கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என்பவையும் முழுமையாக இறுதி செய்யப்பட்டுவிட்டன.கலை நிகழ்ச்சிகள் ஜூன் 19-ம் தேதி தொடங்கி மாநாட்டு நிறைவு நாளான ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன.முதல்வர் கருணாநிதியின் பேத்தி செல்வி எழிலரசி ஜோதிமணி பங்கேற்கும் வீணை நிகழ்ச்சி ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 6 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.போர்வாளா, பூவிதழா என்ற தலைப்பில் பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் நிகழ்ச்சியும், பிறப்பொக்கும் என்ற கலை நிகழ்ச்சி பிரசன்ன ராமசாமி குழுவினரும், புஷ்பவனம் குப்புசாமியின் தமிழிசை மற்றும் மக்களிசை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தோம்பல் குழுவின் மூலம் கலைக் குழுவினருக்கு உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதுதவிர மாநாட்டு தொடக்க விழாவுக்கு முன்னதாக 3 நாள்களுக்கு கோவை நகரில் 10 இடங்களில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கருத்துக்கள்

அடுத்தவருக்கு ஒரு நீதி! தனக்கொரு நீதி என்பதே அரசியல்வாதிகளின் பண்பாடா? பத்மா சுப்பிரமணியம் விழா ஒன்றிற்கு வாழ்த்துரை கேட்ட செயலரைக் கண்டித்து அதனைப் பெருமையாக வெளிப்படுத்திய முதல்வர் இன்றைக்கு அவருக்கு உலக மாநாட்டில் வாய்ப்பு தருகிறார். தனக்குப் பாதிப்பு என்றால் சாமானியனுக்கு எதிரான ஆரியச் சூழ்ச்சி என்பதும் தனக்குப்பங்கிருக்கிறது என்றால் ஆரியத்திற்கு ஆலவட்டம் அளி்ப்பதும் என்று மாறும்? பேத்தியின் வீணை அரங்கேற்றத்தின் பொழுதே முதல்வர் உலக மாநாட்டிற்கான வாய்ப்பை உறுதி செய்து விட்டார். பேத்திக்கு வாய்ப்பளிக்க வழியில்லையெனில் முதல்வர் பதவியால் என்ன பயன்? ஆனால், பத்மா சுப்பிரமணியத்திற்கு ஏன் வாய்ப்பு? ஒன்று விழாவிற்கான வாழ்த்தினை அனுப்ப மறுத்துத் தெரிவித்த வீர உரைகளைத் திரும்பப் பெற வேண்டும். அல்லது உலக மாநாட்டில் தரப்படும் வாய்ப்பைத் திரும்பப் பெற வேண்டும்.(பத்மா சுப்பிரமணியம் நாட்டிய நிகழ்ச்சி தருவதாயின் தமிழறிஞர்கள் மூலம் பொருளை நன்கு புரிந்து கொண்டு நிகழ்ச்சியை அமைக்க வேண்டுகிறேன்.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 4 மே, 2010

செம்மொழி மாநாட்டுக்காக சோனியாவை சிரமப்படுத்த விரும்பவில்லை: முதல்வர் பேட்டி



முதல்வர் கருணாநிதியை தனது இல்லத்தில் திங்கள்கிழமை இருகரம் கூப்பி வரவேற்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
புதுதில்லி, ​​ மே 3:​ கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வருமாறு வற்புறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சிரமப்படுத்த விரும்பவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்,​​ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்த பிறகு மாலையில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை ஏற்கெனவே கேட்டுக் கொண்டோம்.​ அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.சமீபத்தில்தான் தமிழக சட்டப்பேரவைக் கட்டடத் திறப்பு விழாவுக்குப் பிரதமர் மன்மோகன் சிங்கும்,​​ ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் வந்திருந்தார்கள்.​ அதனால் அவர்களை மீண்டும் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை.மாநாட்டுக்காக கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.சேலம் உருக்காலை தொடங்க இடம் கொடுத்தவர்கள் வேலை வாய்ப்பு கோரி கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.​ இடம் தந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற உத்தரவாதம் ஏற்கெனவே அளிக்கப்பட்டிருப்பதை நிறைவேற்ற முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.பக்கத்து மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னை பற்றி திட்டக் குழு கூட்டத்தில் பேசினேன்.​ அக் குழுவின் தலைவராக பிரதமர் இருப்பதால் தனிப்பட்ட முறையில் அவருக்கு இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.​ ராசா தலித் என்பதால் ஆதிக்க சக்திகள் அவருக்கு எதிராக ஸ்பெக்ட்ரம் புகாரை எழுப்பி வருகின்றன.இலங்கையில் போர் முடிந்துவிட்ட நிலையில்,​​ அதிகாரப் பங்களிப்பு செய்வது தொடர்பாக அந்த அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.​ மத்திய அரசு மூலமாகத்தான் வலியுறுத்துவோம் என்று கருணாநிதி கூறினார்.மகளிர் மசோதாவை விரைவில் நிறைவேற்றிட வலியுறுத்தல்மகளிர் மசோதாவை மக்களவையில் விரைவில் நிறைவேற்றிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்,​​ தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் வலியுறுத்தினார்.மூன்று நாள் பயணமாக தில்லி வந்துள்ள முதல்வர் கருணாநிதி,​​ சோனியா காந்தியை திங்கள்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.​ சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர்.​ சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் மசோதாவை மக்களவையில் விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்றிட வேண்டும் என்று சோனியாவிடம் அவர் அப்போது வலியுறுத்தினார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் சட்ட மேலவை கொண்டுவருவது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.​ அதை உடனடியாக நிறைவேற்றுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன் என்றார்.​ ​எதிர்க்கட்சிகள் மீது புகார்:​​ 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று அதிமுக,​​ பாஜக ஆகிய கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.​ இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் கடும் அமளி ஏற்பட்டது.​ இதுகுறித்து கருணாநிதியிடம் கேட்டபோது,​​ மத்திய அமைச்சர் ஆ.​ ராசா தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்க்கட்சிகள் அவர் மீது திட்டமிட்டு புகார் கூறிவருகின்றன.​ ஆதிக்க சக்திகள் அவரை வெளியேற்ற சூழ்ச்சி செய்து வருகின்றன என்றார்.​ இதுதொடர்பாக நிருபர்கள் அவரிடம் மேலும் கேள்விகள் கேட்டதற்கு முதல்வர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.முதல்வருடன் அவருடைய மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி,​​ மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரும் சோனியாவுடனான சந்திப்பின்போது உடன் இருந்தனர்.​ ​ பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.முன்னதாக திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,​​ சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.​ 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.பா.ம.க.வுடன் கூட்டா?​​​​வருங்காலத்தில் திமுக கூட்டணியில் பா.ம.க.​ இணைய வாய்ப்பு உள்ளதா என்று தெரியாது.பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவரோடு ஆலோசனை ஏதும் நடத்தவில்லை என்று முதல்வர் கூறினார்.
கருத்துக்கள்

நாம்தமிழர் என்ற உணர்வின்அடிப்படையிலும் மனிதநேயப்படுகொலை, இனப்படுகொலை முதலானவற்றிற்குக் காரணமானவர்களை எதிர்க்கவும் மாநாட்டிற்கு வரவில்லை என்பவர்கள் உணர்வைப் பாராட்டலாம்.அல்லது இனஅழிப்புக் குற்ற உணர்வில் வரவில்லை என்றாலும் பாராட்டலாம்.தொடர்ந்து இன அழிப்பில் ஈடுபட்டு வருவதால் அதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, முதல்வரின் தமிழைக் கேட்கவாவது வந்திருக்க வேண்டும். அரசியல் காரணங்களாலும் தமிழ் எதிர்ப்புக் காரணங்களாலும் வர மறுப்பவர்களை முதல்வர் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் என்பது புரிகிறது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
5/4/2010 11:21:00 AM

கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி / சிங் எப்படி வருவார்கள்... ( அவர்கள் தமிழரை ஒரு இந்திய பிரஜையா கூட நெனைக்க வில்லை.....வேட்க்க கேடு)

By appavi
5/4/2010 10:05:00 AM

கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி / சிங் எப்படி வருவார்கள்... (பல அயிர உயிர்களே காவு வாங்கியவர்கள்..)

By tamilan
5/4/2010 10:02:00 AM

கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை. யாரும் பார்க்கவில்லை. அவர்கள் இலவசக் கலர் டிவியில் மூழ்கிப் போய்விட்டார்கள். கவலைப்படாதீர்கள் கருணாநிதி.

By ravivararo
5/4/2010 9:46:00 AM

கலைஞரே !...அழைப்பிதழ் அடிச்சு எடுத்துகிட்டு ..உருண்டடுச்சு பேர பெருசா எழுதி எடுத்துகிட்டு போனீங்களே என்னாச்சு ?...2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் டோஸ் கெடச்சுதா ?...அழகிரிய மந்திரியிலேர்ந்து கழட்டி விட்டுட்டு கனிய மந்திரியாக்க மாட்டேனுட்டாங்களா ??? எப்படியோ தமிழ் மொழிய கேவலப் படுத்திப் புட்டீங்க !!! இன்னுரும் எங்க புரட்சித் தலைவி இருக்க வேண்டிய இடத்தில இருந்தா...அமெரிக்க அதிபர் போன் போட்டு அழைப் பிதழ் கேட்டு வாங்கிகிட்டு விழாவுக்கு ஓடி வருவாரு !!!...hehehe...ஒருத்த வீட்டுக்கு பத்திரிகை கொடுக்க போயி :::அவங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பலன்னு சொன்னால் எப்படி கேவலமா இருக்கும் ! ஆக டெல்லி விசிட் நாறிப் போச்சு !!! தமிழ் மொழியின் மாநாட்டிற்கு நாட்டின் பிரதமர் ஓடி வந்து கலந்து கொள்ள வில்லை என்றால்....நீ தமிழ் மொழிய கேவலப் படுத்தி புட்டய்யா !

By rajasji
5/4/2010 8:38:00 AM

ஒரு கக்கூஸ் கட்டுவதற்கு கூட டெண்டர் விடுகிறார்கள். ஆனால் எதுவுமே இல்லாமல் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்து விட்டு தலித் பெயரை சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். இவர்கள் ஆரம்பித்த டம்மி கம்பெனி பெயர்கள் ZEBRA, SWAN, PARROT. என்ன ஒரு அப்பட்டமான ஊழல்.

By நவீன் சென்னை
5/4/2010 7:52:00 AM

ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டு அதை ஜாதி பெயரை வைத்து தப்பிக்க நினைக்கு இவர்களை சும்மா விடக் கூடாது.

By நவீன் சென்னை
5/4/2010 7:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் அழைப்பு



சென்னை, அக். 18: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்குமாறு சட்டப் பேரவையில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக சட்டப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடித விவரம்:தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது.கட்சி வேறுபாடின்றி தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தங்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகிறேன்.மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு மாநாட்டுக்கென அமைக்கப்பட உள்ள பல்வேறு குழுக்களில் தங்கள் கட்சியின் சார்பாக தாங்களோ அல்லது தங்களது பிரதிநிதி ஒருவரோ இடம்பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.அதற்கான பெயரை அக்டோபர் 25-ம் தேதிக்குள் எழுதி அனுப்பிட வேண்டுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.தனி அலுவலர் நியமனம்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்ய தனி அலுவலராக மூத்த ஐஏஎஸ். அதிகாரி கே. அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் தனிப் பொறுப்பு அலுவலராக டாக்டர் எஸ். பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

கருணாநிதி ஒரு தெலுங்கு நாய் !

By கருணாநிதி ஒரு தெலுங்கு நாய் !
11/4/2009 1:08:00 PM

THIRUTTU PAYAL , IDHU DMK MAHANADU, TAMIL INATHIN KARUMATHI , IVAN EPPO SAGUVAN , PORUKKI , POTHUM UN TAMIL VIYABARAM

By nan
10/20/2009 5:35:00 PM

நேற்று கலைஞர் அறிவித்து இருக்கிறார் என்ன தெரியுமா உலக தழிழ் மாநாடு அல்ல இது உலக செம்மொழி மநாடு இது உலகத்தில் எங்குமே நடக்கவில்லை நான் தான் நடத்துகிறேன் ஆம் இவர் தான் நடத்துகிறார் ஏனென்றால் தழிழ் மொழியை விற்று பிழைப்பவர் தானே இந்த கருணாநிதி. இன்று சொல்லுகிறேன் இதில் முன்னோடிகள் தான் தான் அறிவாளி என நினைக்கும் வைரமுத்து,கருப்பு சட்டை அணிந்து உலகை ஏமாற்றும் கி.வீ,தற்பொழுது புதிதகா துதிபாடும் கிழட்டு கவிஞன் வாலி, மற்றும் தழிழுக்காக உழைக்காத தழிழ் அறிஞர் குழு,மகன்,துணைவி மகள் மற்றும் குடும்பத்தின்ர் கலந்து கொள்ளும் க.க. பாராட்டு விழா தான் இது.எது எப்படியொ தமிழின துரேர்கி கருணாந்தி தான்.

By sekaran
10/20/2009 1:01:00 AM

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் கருத்து மிக அருமை. அவர் கூறுவதில் 25 சதவீதம் நடந்தால் கூட மகிழ்ச்சி. ஆனால் இவையெல்லாம் இன்றைய நிலையில் பதவி மோகத்தில் இருக்கும் மு.க. வினால் நடக்கும் என்ற நம்பிக்கை இம்மி அளவும் இல்லை. திரு நவீன் அவர்கள் கூறுவது போல் துதி பாடிகளின் மாநாடு நடக்கும் என்றே தோன்றுகிறது. இது தற்புகழ்ச்சியில் மிதக்க முதல்வருக்கு பயன்படும் மாநாடாக இருக்கும். கணக்கில் அடங்கா அவருடைய ஏமாற்று வேளையில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

By GANESSIN
10/20/2009 12:43:00 AM

Karunanithi is not fit to conduct the World Tamil Conference.He is the No.1 person who betrays the Tamil race.He misuses the Tamil to cheat the people.He must be extradited to Srilanka(singaleese area).

By VENDHAN
10/19/2009 10:59:00 PM

MR. CM :-No need to this conference. Send a all party and scholars team to Sri Lanka and let them stay there till all tamils are settled at the own place, if India give huge money, we have to right to monitor the developement also. If Centre does not listen, ask all your minsters to resign, but let them not withdraw support otherwise your governement will fall for sure.

By People of TamilNadu
10/19/2009 9:11:00 PM

தமிழ் இன்னம் அழிய தயங்காமல் பாடுபடும் கருணனிதி தமிழ் காக்கப்போவதாய் தம்பட்டம் அடிகுறார். உலகத் தமிழினம் கருணா நிதி மரனம் பாத்து கதிருகினம் நிலமை தனை புரியாமல் தம்பட்டம் சுஜவிளம்பரம் துதிபாடிகலின் துதிபாடல் கருணா நிதி அவர்களே உங்கலுக்கு அவமானமை இல்லய நிங்கள் செய்யும் செயல்.

By tharan
10/19/2009 7:16:00 PM

....EVE A RAILWAY SEAT BOOKING FORM ISSUED IN TAMIL NADU ONLY AVAILABLE IN HINDI AND ENGLISH..NO SHEEP BARK ABOUT THIS...THIS JOKE TAMIL CONFERENCE..WHY NOT INVITE RAJAPAKSE AND SONIA....YOU HAVE PROVED AGAIN AND AGAIN YOUR ARE A CLOWN....SRI LANKA GENERAL IS 100% RIGHT .....FOR FREE MEAL AND TRANSPORT THOUSANDS OF TAMINGLISH SPEAKING TAMIL NADU SHEEPS WILL ATTEND THIS CARNIVEL.

By KOOPU
10/19/2009 6:36:00 PM

THAZHNTHA THAMIZHAGAME, THANAI MARANTHA THAMIZHAGAME, NEE THIRUNTHUM NAAL ENNAAL, INNUM ETHTHANAI PERIYAAR, ANNA, KALAINGAR VARAVENDUM UNAKKU THANMAANAM ENBATHE VARADHA INNUM ETHTHANAI NAAL VANDHERIGAL, OODUKAALIGALUKKU JAALRA PODUVAAI.

By parithi
10/19/2009 5:08:00 PM

மௌனமே உன் அணு ஆயுதம். மௌனத்தால் நீ எத்தனை பேரையும் போட்டுத் தள்ளலாம்! கேள்விக்கு பதில் அளிக்காதே! மீண்டும் கேட்டால்? - பதிலளிப்பதுபோல் நடி. தொடர்ந்து கேட்டால்? - நீ சொல்லும் பதில் யாருக்கும் விளங்கக் கூடாது! அணைப் பிரச்சினை? - அடுத்த தேர்தலுக்கு அத்திவாரம். ஆற்றுப் பிரச்சினை? - தேர்தல் கடலில் அடிக்கடி கலக்க வேண்டும்! தமிழ் நாட்டு மக்கள்? - என்னை நம்பி ஏமாறுபவர்கள். இலங்கைத் தமிழர்கள்? - யார் அவர்கள்? நடிகர்கள்? - என் கண்கள்! நடிகைகள்? - கண்மணிகள்! கூட்டணி? - அடிக்கடி மாற வேண்டும்! தமிழ் மாநாடு? - தமிழுக்கு அஞ்சலி செலுத்த. தமிழ் மொழி? - நான் பிழைக்க கிடைத்த வழி! கனிமொழி? - என் வாய் மொழி. ஸ்ராலின்? - என்னைப் போல் ஒருவன். ராஜபக்ச? - என் உயிர் நண்பன்! கட்சி? - என் குடும்ப சொத்து! பதவி? - என் பரிவாரங்களுக்கு. நோக்கம்? - ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்! ஆட்சி கைக்கு வந்தபின்? - மக்களை எட்டத்தில் வைக்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சி? - கலைஞர் ரி.வி பார்க்க! குறைந்த விலையில் அரிசி? - ஓட்டுக்கு பிச்சை! வாக்குறுதி? - அடிக்கடி மீற வேண்டும்! பெரியார

By realDMK
10/19/2009 4:11:00 PM

மௌனமே உன் அணு ஆயுதம். மௌனத்தால் நீ எத்தனை பேரையும் போட்டுத் தள்ளலாம்! கேள்விக்கு பதில் அளிக்காதே! மீண்டும் கேட்டால்? பதிலளிப்பதுபோல் நடி. தொடர்ந்து கேட்டால்? நீ சொல்லும் பதில் யாருக்கும் விளங்கக் கூடாது! அணைப் பிரச்சினை? அடுத்த தேர்தலுக்கு அத்திவாரம். ஆற்றுப் பிரச்சினை? தேர்தல் கடலில் அடிக்கடி கலக்க வேண்டும்! தமிழ் நாட்டு மக்கள்? என்னை நம்பி ஏமாறுபவர்கள். இலங்கைத் தமிழர்கள்? யார் அவர்கள்? நடிகர்கள்? என் கண்கள்! நடிகைகள்? கண்மணிகள்! கூட்டணி? அடிக்கடி மாற வேண்டும்! தமிழ் மாநாடு? தமிழுக்கு அஞ்சலி செலுத்த. தமிழ் மொழி? நான் பிழைக்க கிடைத்த வழி! கனிமொழி? என் வாய் மொழி. ஸ்ராலின்? என்னைப் போல் ஒருவன். ராஜபக்ச? என் உயிர் நண்பன்! கட்சி? என் குடும்ப சொத்து! பதவி? என் பரிவாரங்களுக்கு. நோக்கம்? ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்! ஆட்சி கைக்கு வந்தபின்? மக்களை எட்டத்தில் வைக்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சி? கலைஞர் ரி.வி பார்க்க! குறைந்த விலையில் அரிசி? ஓட்டுக்கு பிச்சை! வாக்குறுதி? அடிக்கடி மீற வேண்டும்! பெரியார்? இன்னும் பெரிய சி

By REAL DMK
10/19/2009 4:00:00 PM

எப்பொழுதும் இலக்குவனார் திருவள்ளுவன் நடுநிலையாக நமக்கு வேண்டிய தகவல்களுடன் கருத்து தெரிவிப்பவர். கருணாநிதி கட்சிகளை அழைப்பது நாடகம் என்று அவருக்குத் தெரியாதா? வந்தால் ஈழ மக்களைக் கொன்றொழித்ததை மறக்கடிக்கலாம். வராவிட்டால் தமிழ்த்துரோகி நாங்கள் கூப்பிட்டோம் வரவில்லை என விருப்பம் போல் ஆடலாம் எனத் திட்ட மிட்டுள்ளார். எனவே எப்படியும் மாநாட்டை நடத்துவார். இம்மாநாட்டில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைகள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்பதற்காக இலக்குவனார் திருவள்ளுவன் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். நாம் அதனைப் பின்பற்றி இம்மாநாட்டில் ஜால்ராக்கள் இல்லாமல் தமிழர் தாயகம் பற்றிப் பேச வேண்டும் என்று வற்புறுத்தலாமே! ஆகவே நல்ல கருத்தைப்புரிந்து கொள்ளாமல் நவீன் ஏன் அவசரப்படுகிறார்? இனத் துரோகிகள் நடத்தும் மாநாட்டிலும் தமிழ் இன விடுதலை ஒலிக்க இலக்குவனார் திருவள்ளுவன் கருத்தைப் பின்பற்ற வேண்டும்.

By தமிழ் விரும்பி
10/19/2009 1:12:00 PM

உலக தமிழ் மாநாடு அல்ல தன்னை புகழ்ந்து பேசுவதற்க கருணாநிதி ஏற்பாடு ,தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் மாநாடு ஜால்ராக்கள்வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி ,பாட்டு எழுத படம் இல்லாமல் இருக்கும் கிழடு வாலி இவர்களுக்குத்தான் உலக தமிழ் மாநாடு

By sankar
10/19/2009 12:24:00 PM

SADANAI ARASAR ,,KARUNA NIDHI VAALGA DEEPALI SALES WINES 300 CR, SALES ,,SHOULD HIS NAME PUT INTO KINNES RECORD ,, MHAGHA ULAGA SAADANAI PURINDHA THIRU KALAINAR AVERKAR VAALGHA,, NOBEL PARISUKKU SIBAARISU SEYYAVENDUM,, THAMIL NATTU MAKKALAI KUDI MAGHANAAGHA UYATHIYA KUDI MANNAN VAALGHA,,

By SATHISH
10/19/2009 12:15:00 PM

உலக தமிழ் மாநாடு அல்ல தன்னை புகழ்ந்து பேசுவதற்க கருணாநிதி ஏற்பாடு ,தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் மாநாடு ஜால்ராக்கள்வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி ,வாலி இவர்கள்

By sankar
10/19/2009 11:42:00 AM

2009ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த காமெடி சுவரொட்டி.இலங்கைத் தமிழர்களுக்கு 4 நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு /செருப்பால் அடிக்கனும் கெலைஞருக்கு.usanthan

By usanthan
10/19/2009 11:20:00 AM

உலக தமிழ் மாநாடு அல்ல. "உலகத் துரோகி கருணா மாநாடு"தான் நடக்கப் போகிறது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி போன்ற அடிவருடிகள் இப்போதே போட்டி போட்டுக் கொண்டு ஜால்ரா வாழ்த்துக்கள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகும். நவீன் சென்னை நற்றி நற்றி.usanthan

By usanthan
10/19/2009 11:17:00 AM

இலக்குவனார் திருவள்ளுவனைப் போல் நான்கு பேர் இருந்தால் போதும். விளங்கீரும். கருணா அடுத்த முறையும் ஆட்சியை பிடிப்பான். ஓநாயிடம் ஆடு நியாயம் கேட்பது போல் உள்ளது உன் தமிழ்ப் பற்று. கருணாவிற்ககு என்ன தகுதி உள்ளது தமிழ் மாநாட்டை இப்போது நடத்த.

By நவீன் சென்னை
10/19/2009 9:30:00 AM

உலக தமிழ் மாநாடு அல்ல. "உலகத் துரோகி கருணா மாநாடு"தான் நடக்கப் போகிறது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி போன்ற அடிவருடிகள் இப்போதே போட்டி போட்டுக் கொண்டு ஜால்ரா வாழ்த்துக்கள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகும்.

By நவீன் சென்னை
10/19/2009 9:27:00 AM

உலகின் மூத்த மொழி தமிழ்,மற்றும் சீனா மொழி . தமிழனை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டால் சீனா மொழி மட்டுமே உலகின் தொன்மையான மொழியாக ஆகிவிடும் . அப்படி ஒரு திட்டத்துடனும் தான் சீனா தமிழர்களை அழிக்க பல வழிகளிலும் முயல்கிறது. மானமுள்ள தமிழர்கள் இந்தியாவின் மீது வெறுப்பாய் இருக்கிறார்கள் . விரைவில் தமிழ்நாடு தனி நாடாய் கேட்டு போராடும் நிலை வரத்தான் போகின்றது . இந்தியாவுடன் இருந்து என்ன நன்மை கிடைத்தது என் இனிய தமிழ் இனத்திற்கு? அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீரை கூட வாங்க முடியா கேவலத்தில் இருக்கின்றோம். பதவி வேண்டுமென்றால் டெல்லிக்கு நேரடியாய் போவதும் , இனப்படுகொலை என்றால் கடிதம் மட்டும் எழுதும் இது போன்ற கேவலமான தலைவனை உலகில் எந்த இனமும் பெற முடியாது. போன வருடம் இலவச டிவி கொடுத்து ஆட்சியை பிடித்தாய். அடுத்த ஆட்சியில் என்ன இலவசமோ? என் பரம்பரையை உன் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வைப்பேன் என்பது மட்டும் நிச்சயம். வரலாறு என்றும் அழியாது.

By emilee ,singapore
10/19/2009 9:18:00 AM

உலக தமிழ் மாநாடு அல்ல. "உலகத் துரோகி கருணா மாநாடு"தான் நடக்கப் போகிறது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன், சுப. வீரபாண்டியன், வைரமணி போன்ற அடிவருடிகள் இப்போதே போட்டி போட்டுக் கொண்டு ஜால்ரா வாழ்த்துக்கள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகும்.

By நவீன் சென்னை
10/19/2009 8:52:00 AM

Tamilin galai kondru atha kandu kame eruthuttu manadu nadatharaiyee athu matum ellame kanimozi poi Gift vangittu vanthale ethuku melayum onakku Emaranuma Tamil Makkal Onna Mathiri Kevalamanavan entha Olagathula Ellave Ellaida Neeyellam oru....................

By Thamizan
10/19/2009 8:40:00 AM

Thiruvalluvare, perasaiya unakku .. mudhalil tamizh naattil nalla muraiyil tamizh valarppom , athan piraguthan adutha manilangalil tamizh valarpathellam .. ummai vittal tamizhai ulaga mozhi aakkividuveer polum .. tamizhanukku andha garvamum perumaiyum vendum .. vendum . migavum vendum ..

By thamiz kirukkan
10/19/2009 8:37:00 AM

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தப் போவதாக தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பான அமைப்பான IATR எனப்படும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கூட்டமைப்பின் ஒப்புதல் இதற்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் இந்த மாநாடு ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு என்றில்லாமல், உலக தமிழ் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் நடத்தப்படும் என்றும் தற்போது தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bbctamil.com

By Subash
10/19/2009 8:07:00 AM

Sir, this is one more instance of politicizing things in Tamil Nadu style. Now, what have political parties to do with a classical language? Why should they be involved in nominating members to a large number o committees? This way, DMK roped in parties in deciding on Free TVs to form what is called all party-committee; the free TV scheme has been roundly criticized even by eminent personalities like Abdul Kalam. Classical Tamil is best served by scholars - if the intention is to exchange, promote and formulate programs for further intensive scholarly activities. I don't think political parties can in any way contribute. The intention seems to be to legitimize a different agenda. Classical Tamil should not have any politician to broker on its behalf. It is just one more political move.

By ARJUN
10/19/2009 7:51:00 AM

(3/3) 20. மழலை நிலை முதல் உயர்நிலை வரை தமிழே கல்வி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முதலிய நிலைப்பாடுகளை எட்ட இச்செம் மொழி மாநாடு உதவியதெனில் உலகத் தமிழர்கள் அனைவரும் வரவேற்பர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:18:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:11:00 AM

(3/3) 20. மழலை நிலை முதல் உயர்நிலை வரை தமிழே கல்வி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முதலிய நிலைப்பாடுகளை எட்ட இச்செம் மொழி மாநாடு உதவியதெனில் உலகத் தமிழர்கள் அனைவரும் வரவேற்பர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:18:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:06:00 AM

(2/3) 10. எல்லா நாட்டு இந்தியத் தூதரக அதிகாரிகளும் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும், 11. தமிழ் இலக்கிய வரலாறும், தமிழ்ப் பண்பாட்டு நாகரிகச் சிறப்பும் எல்லா மொழிப்பாடங்களிலும் சேர்க்கப்பட வேண்டும், 12. தமிழ் இந்தியாவின் மத்திய அரசின் மொழியாக வேண்டும்.13.மத்திய அரசின் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக ஆக்கப்பட வேண்டும், 14. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அனைத்துக் கல்வி நிலையங்களிலம் தமிழ்மொழிக் கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும், 15. தமிழ்நாட்டுக் கோயில்களில் மண்ணின் மொழியாகிய தெய்வ தெய்வ மொழியாகிய தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெற வேண்டும், 16. தமிழ்நாட்டின் உண்மையான ஆட்சிமொழி தமிழ மட்டுமே, 17. தமிழில் இல்லாத ஆணைகள், ஒப்பந்தங்கள், படிவங்கள், பெயர்ப்பலகைகள், பட்டியல்கள், காசோலைகள், கையொப்பங்கள்,செல்லத்தக்கன அல்ல, 18. ஆரவாரக்கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், 19. பிற கலைகளுக்கெல்லாம் தமிழ்க்கலை தாய்க்கலையாக இருப்பது ஆராயப்பட்டு உலகறியச் செய்ய வேண்ணடும், தொடர்ச்சி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:17:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:04:00 AM

(1/3) மாநாட்டில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றால் ஈழப் படுகொலைகளை மறைக்க மாநாடு என்னும் குற்றச்சாட்டை மூழ்கடித்து விடலாம்; பங்கேற்க வில்லையெனில் விருப்பம் போல் செயல்படலாம். எனவே, இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. எனினும், இம் மாநாட்டின் மூலம், 1. உலகின் மூத்த இனம் தமிழ் இனம், 2. உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, 3. தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம், 4. தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும், 5. மாநாட்டின பொழுது ஒரே நேரத்தில் உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ்மொழித் துறை தொடங்கப்பட வேண்டும், 6. தமிழ்மொழித்துறையை இந்திய மொழித் துறை என வரலாற்றைத் திரித்துஅழைக்கக் கூடாது, 7. இந்திய மொழித்துறை எனத் திரித்து அழைக்கப்படும் தற்போதைய மொழித்துறைகளும் தமிழ் மொழித்துறை என அழைக்கப்பட வேண்டும், 8. ஈழத் தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும், 9. உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் சிக்கல்கள ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும். தொடர்ச்சி காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 10/19/2009 3:17:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 7:04:00 AM

When 3000,000 Tamils are incarcerated in SriLanka with the help of Sonia and Congress party, this is NOT the time to have a World Tamil Conference.

By ragavan
10/19/2009 6:04:00 AM

ENNA KALAIJARE, INDHA MAANATTAI NADATHINAAL KOADI KANAKKIL KAASAI SURUTTALAM ENDRU PLAN PANNI VEALAI PAARKIREENGA....... NEENGA UTKAARNDHU YOASIPEENGALOOOOOOOOOOOOOOOOOOO

By Reehan
10/19/2009 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *