திங்கள், 23 ஏப்ரல், 2012

அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகிறார்?

நாம் பெருமைப்படவோ மகிழ்ச்சி யடையவோ ஒன்றும் இல்லை. தமிழன் என்ற முறையில் இல்லா விட்டாலும்  மனித நேயத்துடனும் நடந்து கொள் ளவில்லை. சிறுவர்களுடனோ மாணாக்கர்களுடனோ உரையாடக் குடியரசுத்தலைவர் தேவையில்லை. ஒரு வேளை இதற்காகத்தான் இலங்கை சென்று வந்தாரோ எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தமிழ்நல எதிராளிகளை வரவேற்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகிறார்?

First Published : 23 Apr 2012 03:17:28 PM IST

மும்பை, ஏப்.23: அரசியல் சார்பில்லாத ஒருவரை அடுத்த குடியரசுத் தலைவராக தேர்வுசெய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் யோசனை கூறியுள்ளார்.பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்ததாக அரசியல் சார்பற்றவர் ஒருவரை தேர்வு செய்வதுதான் சிறந்த தேர்வாக இருக்கும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தனது சார்பில் யாரையாவது வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுவரும் நிலையில் சரத்பவாரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி அந்த பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நம்புகின்றனர்.இந்த நிலையில் பவார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.அவரை வேட்பாளராக நிறுத்த முலாயம்சிங்கின் சமாஜவாதி, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஒருவர் போட்டியிடுவதை நமது அரசியலமைப்பு தடை செய்யவில்லை. அணுசக்தித் துறையில் பெரும் பங்களிப்பு மற்றும் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரின் செயல்பாடு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது கலாமை வேட்பாளராக நிறுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து சரத்பவார் கருத்து: அப்துல்கலாமுக்கு ஆதரவு அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் குறித்து சரத்பவார் கருத்து: அப்துல்கலாமுக்கு ஆதரவு அதிகரிப்பு
புதுடெல்லி, ஏப். 23-

ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற எம்.பி.க் கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சி தன் விருப்பப்படி ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. அந்த கட்சி கூட்டணிக்கு 8 சதவீத ஓட்டுக்கள் குறைவாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் இதே நிலையில்தான் உள்ளது. எனவே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளின் கைகளில்தான் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான சக்தி உள்ளது.

இந்த கட்சிகளிடம் 24 சதவீத வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, ஜெயலலிதாவின் அ.தி.மு.க., மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.

இதில் உத்தரபிரதேசத்தில் மட்டும் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் 1 1/2 லட்சம் வாக்குகளை வைத்துள்ளன. எனவே மாநில கட்சிகள் யாரை அடையாளம் காட்டும் என்று காங்கிரஸ், பா.ஜ.க. எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றன. வேட்பாளர் பற்றி இதுவரை எந்த கட்சியும், எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளன. கடைசி நிமிடத்தில் வேட்பாளரை களம் இறக்கலாம் என்று காங்கிரஸ் பொறுமையாக உள்ளது.

இந்த நிலையில் அரசியல் சார்பு இல்லாதவர் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை மனதில் வைத்து இப்படி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்துல்கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என்று முலாயம்சிங் யாதவ் கூறி வருகிறார். அவருக்கு ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மற்ற மாநில கட்சிகளும் அப்துல் கலாமை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மாநில கட்சிகளின் ஒருமித்த கருத்தால் அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Monday, April 23,2012 06:07 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
நாம் பெருமைப்படவோ மகிழ்ச்சி யடையவோ ஒன்றும் இல்லை. தமிழன் என்ற முறையில் இல்லா விட்டாலும் மனித நேயத்துடனும் நடந்து கொள் ளவில்லை. சிறுவர்களுடனோ மாணாக்கர்களுடனோ உரையாடக் குடியரசுத்தலைவர் தேவையில்லை. ஒரு வேளை இதற்காகத்தான் இலங்கை சென்று வந்தாரோ எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தமிழ்நல எதிராளிகளை வரவேற்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


1 கருத்து:

  1. அட! தினமணி மறுபடியும் என் கருத்தூட்டங்களைப்பதியத் தொடங்கி விட்டதே! நன்றி.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு