cancelation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cancelation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2012

கொலைகாரனை உயிர் இழந்தோர் பிள்ளைகள் கொண்டாட வேண்டுமாம்!

இலங்கை  அதிபரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: தேர்வுகள் நிறுத்தம்

First Published : 20 November 2012 12:36 PM IST
இலங்கை ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிகளில் நடக்கவிருந்த மாகாண அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்வதற்காகவே இவ்வாறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு வருகை தந்த அரசு அதிகாரிகள், ஜனாதிபதியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு உத்தரவிட்டனராம்.
இதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

வெள்ளி, 19 நவம்பர், 2010

62 தொலைத்தொடர்பு உரிமங்களை நீக்க டிராய் பரிந்துரை

உடனடியாகப் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் குறுக்கு வழியில் செயலை முடிக்கலாம் என எண்ணி ஊழலை விதைப்பவர்கள் பின்னர்ப் படுகுழியில் விழ வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து நேர் வழியில் செல்வார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

62 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய டிராய் பரிந்துரை


புதுதில்லி, நவ. 18: ஏர்செல், யூனிநார், விடியோகான், எடிஸ்சாலட் (ஸ்வான்) உள்ளிட்ட நிறுவனங்களின் 62 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருக்கிறது.2ஜி அலைக்கற்றை ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 2008-09-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு உரிமங்களை டிராய் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் 62 உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்திருக்கிறது. அதில் யூனிநார் நிறுவனத்தின் 8 உரிமங்களும் ஏர்செல் நிறுவனத்தின் 5 உரிமங்களும் அடக்கம் எனத் தெரிய வந்திருக்கிறது.ஒப்பந்தத்திலுள்ள விதிமுறைப்படி சேவைகளைத் துவக்காததே உரிமங்களை ரத்து செய்யப் பரிந்துரை செய்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.