ரூ.1.27 கோடி மதிப்பு தங்கச் சட்டை - புனே தொழிலதிபர் கொண்டாட்டம்
புனே:புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை
அணிந்து, புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில்,
புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார்.
புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார்.
பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்து, தங்க சட்டையை உருவாக்கியுள்ளனர். அதில், பொத்தான்கள், "ஸ்வரோவ்ஸ்கி' செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்க சட்டையாக இருந்தால், பார்க்க நன்றாக இருக்காது என்பதால், அந்த சட்டையில் ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர்.இந்த சட்டையின், இப்போதைய விலை, 1.27 கோடி ரூபாய். இதை, தேஜ்பால் ரங்கா என்ற பொற்கொல்லர் வடிவமைத்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு, தங்க சட்டை அணிய உள்ள தத்தா, இதற்கு முன்பே தங்கத்தால் பல பொருட்களை அனுபவித்து வருகிறார். தங்க பேனா, தங்க மொபைல் போன், கையின், பத்து விரல்களிலும், தங்க மோதிரங்கள் என, தங்கத்தால் ஜொலிக்கிறார்.இது பற்றி தத்தாவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
தங்கத்தின் மீது எனக்கு தணியாத தாகம் உண்டு. பலரும் புத்தாண்டை, புது கார், பொழுதுபோக்கு என கொண்டாட முடிவு செய்துள்ளனர். நான் சற்று வித்தியாசமாக, தங்க சட்டை அணிய முடிவு செய்தேன்.பாதுகாப்பு பற்றி கவலைப்படுகின்றனர்; நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே, பாதுகாவலர்களை வைத்துள்ளேன். தங்க சட்டை அணியும் போது, கூடுதல் காவலர்களை பணியமர்த்தி கொள்ள உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

முகப்புக் கட்டுரை
தஞ்சைக் கோவில் : கொண்டாட்டத்திற்கு இடையில் சில கேள்விகள்
-மணா''கட்டியவர்கள் யார்?'''' காண்டிராக்டரா? அவர் எந்த அளவுக்குக் கட்டியிருப்பார்?'' '' குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளுக்காவது தாங்குமா?'' - இப்போதுள்ள உழைப்பின் மதிப்பு அவ்வளவு தான்.
ஆனால் இதே காலத்தை எதிர்கொண்டு -ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இயற்கை இடையூறுகளை எல்லாம் தாண்டி இன்றைக்கும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவில் நிலைத்து நிற்கிறது என்றால் - அன்றைக்கு அவர்கள் கோவில் கட்டுமானத்தில் காட்டிய அர்ப்பணிப்புணர்வு மிக்க உழைப்பு கெட்டிதட்டி இப்படி வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விரிந்திருந்த சோழர் ஆட்சியில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அற்புதம் இந்தக் கோவில். கோவில் கட்டுமானத்தில் காலத்தை மிஞ்சி நிற்க என்னென்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமோ அவற்றை அன்றே பயன்படுத்தி இருக்கிறார்கள். கருங்கற்கள் அவ்வளவு நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலைத் தாங்கிய அடித்தளம் கூட நிலநடுக்கத்தைத் தாங்கும் விதத்தில் சிறு பாறைகளைத் தாங்கியபடி கட்டப்பட்டிருக்கிறது.
வெகு தூரத்திலிருந்து கற்களை வரவழைத்து -13 அடுக்குகளைக் கொண்ட கோவில் கோபுரத்தைத்தாங்கும் சுவர் இரண்டு பகுதிகளாக இருப்பதால் கூடுதல் கனத்தைத் தாங்கக்கூடியதாக இருக்கிறது.
கி.பி 1004 ஆம் ஆண்டு துவங்கி 1010 ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ள கூம்பு வடிவில் குவிந்த கோபுரத்தை வெகு கவனமாகக் கட்டி முடித்திருக்கிறார்கள். குஞ்சரமல்லன் தலைமையிலான சிற்பிகள் குழு இந்த அற்புதத்தைச் சாதித்திருக்கிறது. அப்போது கோவில் கலசத்திற்குப் பொற்கூரை வேய்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் இறைந்து கிடக்கும் கோவிலில் வேலைபார்த்த சிற்பிகளின் பெயர்கள் எல்லாம் செதுக்கப்பட்டிருப்பது ராஜராஜ சோழனுக்கும் பெருமை. பணியாற்றிய சிற்பிகளுக்கும் பெருமை.
கோவிலுக்குள் உயர்ந்து நிற்கும் லிங்கத்தின் உயரம் 13 அடி. கோவிலுக்கு ராஜராஜன் வழங்கியிருக்கிற நகைகளை எல்லாம் பார்க்கும்போது அடுத்தடுத்த படையெடுப்புகளின் போது அவை கொள்ளை போய்விட்டாலும் கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் மன்னரான ராஜராஜன் தான் கட்டிய கோவிலின் மீதிருந்த அளவு கடந்த மதிப்பை வெளிப்படுத்துகின்றன.
அருண்மொழித்தேவன் என்ற இயற்பெயர்கொண்ட ராஜராஜசோழன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்த போது - அதற்குச் சூட்டப்பட்ட பெயர் ராஜராஜேஸ்வரம். கோவிலில் உள்ள இரண்டாம் கோபுர வாசலின் பெயரே ராஜராஜன் வாசல் தான்.
எத்தனையோ தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் நிறைந்து கிடக்கிற கோவிலுக்குள் இருக்கும் '' உணர்வுவயப்பட்ட தன்மை''க்கு ஓர் உதாரணம் -இந்தக் கோவிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழன் உயிர்துறந்த போது அரசியான வானவன்மாதேவியும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தத்தாகவும் ,அவருக்கு ராஜராஜனின் தமக்கையான குந்தவை கோவிலுக்குள் சிலை எழுப்பியிருப்பதாகவும் அந்தக் கல்வெட்டு சொல்கிறது.
இனி அந்த நினைவுகளை விட்டு நிகழ்கால வெக்கைக்குள் வருவோம்.
அதே ராஜராஜனுக்கு ஒரு சிலையைச் செய்து - கோவிலுக்கு முன்னால் ஒரு ஓரத்தில் அவரை இழிவு படுத்துகிற மாதிரி ராஜராஜன் சிலையை வைத்தது ஒன்று தான் காலங்கடந்து செய்த கைங்கர்யம். அந்தச் சிலையைக் கோவிலுக்குள் வைக்கக்கூடாதா என்கிற கேள்விகள் எழுந்தபிறகு சென்ற ஏப்ரலில் கூட கோவிலுக்குள் சிலையை நிறுவ இருப்பதாக அறிவித்தவர்கள் - ஆயிரமாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் ஏன் சௌகர்யமாக மறந்து போனார்கள்?
ராஜராஜனின் பிறந்த தினமாகிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று இன்றும் கோவிலுக்குள் சதயவிழா கொண்டாடப்படும் போது , அவர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் கோவில் முழுக்க நிறைந்திருக்கும் போது - உருவாக்கிய மன்னர் சிலையை கோவிலுக்குள் கொண்டு போவதில் என்ன பாரபட்சம் ?
இதற்குப் பின்னும் ஒரு மூடநம்பிக்கை புதைந்து கிடப்பது தான் ராஜராஜ சோழன் சிலை நகராமல் அதே இடத்தில் இருப்பதற்கும் காரணம்.
இல்லையென்றால் ,மத்தியில் தி.மு.க வும் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருந்து கொண்டு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் ?
ஆயிரமாண்டுக்கு முந்திய ஆட்சியில் தலைநிமிர்ந்த ஒரு மன்னரை நம்முடைய மிகக் குறுகிய கால அரசியலுக்குள் புகுத்திப்பார்க்கலாமா?
கும்புகோணத்திற்கு அருகில் உள்ள உடையாளுருக்கு அருகில் சோழர்களின் பழைய தலைநகரம் இருந்ததாக தஞ்சையில் செய்திகள் அடிபடுகின்றன.அங்கு ராஜராஜ சோழனின் சமாதி பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தாலும் அவற்றைப்பற்றி அரசு எந்த பதிலையும் தரவில்லை. அதேசமயம் மறுக்கவும் இல்லை.
அந்த இடத்திற்கு அருகில் கிரந்த எழுத்துக்கள் அடங்கிய தூண்கள் எல்லாம் இருந்தும் அவை இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. அதைப்போல அமெரிக்காவைச் சேர்ந்த ரொனால்ட் என்பவர் கோவிலுக்கு வழங்கிய அபூர்வமான ருத்ராட்ச மாலை காணாமல் போனது பற்றியும் இப்போது சில விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தஞ்சையில் உள்ள தஞ்சை உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்களால் இப்போது முன் வைக்கப்படும் ஒரு கேள்வி.'' தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டது 1010 இல். அதைக்கட்டிய ராஜராஜன் தமிழ் மன்னர். சோழர் ஆட்சி முடிவுக்கு வந்தது கி.பி.1535ல். அதன் பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்டு அதன்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் மராட்டிய மன்னர்கள்.தமிழர்கள் கட்டிய கோவிலை மராட்டிய வாரிசுகள் நிர்வகிக்கலாமா? '' என்ற கேள்வியும் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு நிர்வாகத்தில் உள்ள அறநிலையத்துறையே தஞ்சைக் கோவிலின் நிர்வாகத்தையும் எடுத்துக் கொண்டால் என்ன என்கிற கேள்வியும் இதையொட்டி எழுந்திருக்கிறது.
ஒருபக்கம் - காவிரியில் கூடுதலாக நீரைவிடச் சொல்லி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட நிறைவேற்ற மத்தியக்கூட்டணி அரசில் இருந்தும் சரிவர முயலாத தமிழக அரசு மேலே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?
ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த ராஜராஜசோழனுக்குத் தன்னுடைய சாதனை என்று சொல்லிக்கொள்ள காலம் கடந்தும் எத்தனையோ அம்சங்கள் மிஞ்சியிருக்கின்றன.
இப்போது உள்ளவர்களுக்கு அப்படி என்ன மிஞ்சும் ?