sanscrit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sanscrit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

தமிழுக்கு நீதி வழங்குங்கள் - Thamizhukku needhi vazhankungal : thamizhaga arasiyal







21.11.12 ஆம் நாளிட்ட தமிழக அரசியல் இதழில்
வெளிவந்த 
தமிழுக்கு நீதி வழங்குங்கள்
என்னும் தலைப்பிலான என் கருத்துரை வரிவடிவில் பின்மாறு தரப்படுகிறது: -


தமிழுக்கு நீதி வழங்குங்கள்

அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றதும் முதல் 6 மாதங்களுக்கு மக்கள் நலத் திட்டத்தில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதன்பின்பே தமிழ் வளர்ச்சி தொடர்பான துறைகளில்  கவனம் செலுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், தமிழ் வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அரசு பாராமுகமாக இருப்பதாகத் தமிழ் அன்பர்களிடையே வருத்தம் நிலவுகிறது.  
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவர்  முதல்வர் அவர்கள்தாம். தலைவர் என்ற முறையில் உரிய குழுவைக் கூட்டி மத்திய அரசிடம்  இருந்து வேண்டிய நிதியைப் பெற்றுத் தரவேண்டியதும் முதல்வரின் பொறுப்புதான். தமிழுக்குப் பிறகு செம்மொழி என அறிவிக்கப்பட்ட சமசுகிருதத்திற்கு  2008-09, 2009-10, 2010-11, ஆண்டுகளில்  முறையே   72.10 , 99.18, 108.75 கோடி உரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. ஆனால், உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு  இந்நிதியாண்டுகளில் முறையே  4.47, 8.61, 10.16 கோடி உரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாண்டில் முதல் தவணையாகச் சமசுகிருதததிற்கு உரூபாய் 54.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும் தமிழுக்கு உரூபாய் மூன்று கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்தத் தமிழ்ப்புறக்கணிப்பைப் போக்கை எதிர்த்துத் தமிழக முதல்வர் செயற்பாடுகளில் இறங்கிட வேண்டும்.
அடுத்துத் தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் பற்றியன(விவகாரம்).

 செம்மொழித்திட்டத்தின் கீழ்ப் பல்வேறு சமசுகிருத அமைப்புகளைக் கருதுநிலைப் பல்கலைக்கழகங்களாக ஏற்று மத்திய அரசு நிதியுதவி செய்துவருகிறது. மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தலைநகரத் தமிழ்ச்சங்கம், தில்லித் தமிழ்ச்சங்கம் முதலான அனைத்துத் தமிழ்ச்சங்கங்களையும்  இதே போன்ற திட்டத்தின் மூலம் இணைத்து நிதியுதவி பெற்றுத்  தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் தமிழர்  வாழும் உலக நாடுகளிலும் தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் நிறுவ மத்திய அரசின் நிதியுதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக, மும்பை, கல்கத்தா, புது தில்லி, முதலான பெருநகரங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, ஈழம், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளிலும் தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் ஒரு பகுதியாகத் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு முழுமையான நிதியுதவி பெற்றுத் தரவேண்டும். இதற்கு வாய்ப்பாக அப்பல்கலைக்கழகத்தின் நிலப்பகுதியைப் பறிதது  யாருக்கும் ஒதுக்கீடு செய்யத் தடைவிதித்து,  மாவட்ட ஆட்சியக வளாகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும்.
தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் ஆராய்ச்சிக்காக ஆண்டிற்கு 20 பல்கலைக்கழகங்கள் என்ற அளவில் உலகப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பீடங்கள் ஏற்படுத்த வேண்டும். உலகக் கல்லூரிகளில் ஆண்டிற்கு 100 என்ற அளவில்  தமிழ்த்துறை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமசுகிருதம் முதலான பிற மொழி களின் 15 மூத்த அறிஞர்களுக்கு ஆண்டுதோறும்  நிதியுதவி வழங்கும் வாழ்நாள் விருதுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழுக்கும்  இவ்வாறு மூத்த தமிழறிஞர் விருது வழங்கப்படும் என அறிவித்தும் அவ்வாறு வழங்கப் படவில்லை. எனவே, உடனடியாகக் கடந்த ஆண்டுகளுக்கும்  சேர்த்து ஆண்டிற்கு 15 மூத்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும்.  காலங்கடந்து ஒரே ஒரு முறை  சில ஆண்டுகளுக்குச் சேர்த்து வழங்கப்பட்ட இளந்தமிழறிஞர்களுக்கான விருதுகளையும்  இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரைச் செம்மொழி நிறுவனத்தின் தலைவராக ஆக்கியது கடந்து ஆட்சியின் தவறு எனக்  கருதினால், முதலில் ஒரு கூட்டம் நடத்தி மேற்குறித்தவாறான நிதியுதவிகளை மத்திய அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுத்துப் பின்னர் விலகித் தமிழ் அறிஞர் ஒருவரைத் தலைவராக ஆக்க வேண்டும்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், முதலான அனைத்துத் தமிழ் அமைப்புகளிலும் தமிழ்ப் புலமை உடையவர்களையே தலைவராகவும்  பிற பொறுப்புகளிலும் நியமிக்க வேண்டும். தமிழ்த்துறைகளில் தமிழ் படித்தவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் சூழலைக் கடந்த ஆட்சி ஏற்படுத்தி விட்டது. இதனை மாற்ற வேண்டும்.
அதேபோல்,  தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை இணையக் கல்விக்கழகம் எனக் கடந்த ஆட்சி  மாற்றி விட்டது. இதனை முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றித் தமிழ்ப் புலமை உடையவர்களையே நியமிக்க வேண்டும்.
தமிழ் ஆட்சிமொழித்திட்டம் என்பது தமிழகஅரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் என்ற தவறான போக்கை மாற்ற வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தனியார் அலுவலகங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் பன்னாட்டு அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக விளங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளையும் மாநாகராட்சிப் பள்ளிகளையும் புரவலர் திட்டத்தின் கீழ்த் தனியாரிடம் ஒப்படைத்துச் சிறந்த வசதிகள் கொண்ட பள்ளிகளாக மாற்ற வேண்டும். இவற்றை ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களாக மாற்றும்  அநீதியான செயல்களை உடனே நிறுத்த வேண்டும். மூன்றாண்டிற்குள் அனைத்துக் கல்விக்கூடங்களையும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்றவும் ஆவன செய்ய வேண்டும்.
கொள்கையளவில் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை எனக் கூறிக்கொண்டே  அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம் மொழி அல்லது மூன்றாம் மொழி என்ற போர்வையில் இந்தித் திணிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் பல பள்ளிகளில் தமிழ் இல்லாமல் சமசுகிருதம் மட்டும் கற்பிப்பபதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேறுவழியின்றித் தமிழை மறந்து சமசுகிருதம் படிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எல்லாப்பள்ளிகளிலும் தமிழே கட்டாய முதன்மொழியாக இருக்க வேண்டும். பிற மொழிகளைத் தாய்மொழியாக உள்ளவர்கள் மட்டும் அம் மொழிகளை மூன்றாம் மொழிகளாகப் படிக்க வகை செய்ய வேண்டும்.
            11, 12 ஆம் வகுப்புகளில் பிற மொழிகளை விருப்பப்பாடமாக எடுக்கும் நிலை உள்ளது. தொடக்கநிலைப் பாடம் என்பதால் பலர்  மிகுதியான மதிப்பெண்கள் எடுப்பதற்காக அம் மொழிகளைக் கற்கத் தள்ளப்படுகின்றார்கள். 10+2 கல்வித் தரத்திற்கு இணையாக அக்கல்வித்திட்டத்தைக் கருத முடியாது. எனவே, இம்முறையை நீக்க வேண்டும். பிற மொழி என்பது கலலூரி அளவில் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். பள்ளி அளவில் தமிழும் ஆங்கிலமும் பிற தாய்மொழியினருக்கு மட்டும் அவரவர் மொழிகளும் இருந்தால் போதுமானது. இல்லாவிடில் தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையராக ஆகித் தமிழே தேவையில்லை எனப் போர்க்கொடி தூக்கும் துன்ப நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள இந்திப்பரப்புரையை அவையை மூட வேண்டும். தமிழ் பரப்பு அவையைத் தோற்றுவிக்க வேண்டும். தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு தொடர்பான அனைத்துத்துறைகளுக்கும் முழுமையான வேண்டிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இக்கனவுகளை நிறைவேற்றித் தமிழரசாக மாறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? உறவுக்குக் கை கொடுத்தாலும் உரிமைக்குத் துணிவுடன் குரல் கொடுத்துப் போராடும் முதல்வர் அவர்கள் தமிழ்வளர்ச்சிகளில் விரைவில் கவனம் செலுத்துவாரா?
நன்றி : தமிழக அரசியல்





சனி, 21 ஏப்ரல், 2012

sanscritised education is not good for anytime;

மெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமசுகிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி 

 

http://ieyakkam.blogspot.in/2012/04/blog-post_19.html


சமீபகாலமாக இணையதளங்களில், மெக்காலே 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய உரையின் ஒரு பகுதி என்பதாக ஒரு ஆவணம் உலா வந்து கொண்டுள்ளது. அது பழங்கால ஆவணம் என்பதைக் காட்டுவதற்காக மெக்காலேயின் படம் அச்சிடப்பட்ட  அக்காலத்திய ஆவணம் ஒன்றில் அக்காலத்திய ஆங்கில எழுத்து வடிவங்களுடன் அந்த ஆவணம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்:


1835 பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலே பிரபு நிகழ்த்திய உரை :
‘நான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்ததில், ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ கூட பார்க்கவில்லை. அப்படியொரு செல்வச் செழிப்பையும், உயர்ந்த தார்மீக மதிப்புகளயும் திறமைமிக்க மனிதர்களையும் நான் பார்த்தேன். இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய ஆன்மீக கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காமல் இந்நாட்டை ஒரு போதும் நாம் வெற்றி கொள்ள முடியாது. ஒருவேளை இந்தியர்கள், தங்கள் மொழியைவிட ஆங்கிலம் உயர்ந்தது என்றும், உயர்ந்தது எல்லாம் வெளிநாட்டைச் சேர்ந்தது என்றும் நினைத்தால் அவர்கள் தங்களது சுய மதிப்பையும் சுயத்தையும் கலாச்சாரத்தையும் இழப்பார்கள்; நாம் விரும்பியவாறு ஓர் உண்மையான அடிமைநாட்டு மக்களாக ஆவார்கள். அதற்காகத்தான் நாம் இந்தியாவின் பழைய, முற்கால கல்விமுறையையும் கலாச்சாரத்தையும் மாற்ற வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன்.’
போலி என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள்
இதைப் படித்ததும் ஒருவர் ஆங்கிலக் கல்விமுறை வந்தபின்தான் நம்மில் பிச்சைகாரர்களும், திருடர்களும் உருவானார்கள் என்றும், ஆங்கிலக் கல்வி முறையைவிட அதற்கு முன்பு நம் நாட்டில் இருந்த கல்விமுறை உயர்ந்ததாக இருந்தது என்றும் அதை மெக்காலேயே ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் தவறான முடிவுகளுக்கு வரலாம். இதில் மெக்காலே சொன்னதாகக் கூறப்படும் கருத்துக்கள் மெக்காலேயின் கருத்துக்கள்தானா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னதாக இந்த ஆவணம் போலியானது என்பதைக் காட்டக் கூடிய சில வெளிப்படையான ஆதாரங்களப் பார்ப்போம்.
முதலில் இந்த உரை 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரை என்று கூறப்படுகிறது. ஆனால் 1834ம் ஆண்டு இந்தியா வந்த மெக்காலே 1838ம் ஆண்டு வரை  அவர்  இந்தியாவில்தான் இருந்திருக்கிறார். ஒரு வேளை இடையில் அந்த ஒரு நாளில் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்திருக்கலாம் அல்லவா என்றும் கூட ஒருவர் வாதிடலாம். ஆனால் அக்குறிப்பிட்ட நாளில் அதாவது 1835 பெப்ரவரி 2 அன்று இந்தியாவில் கொல்கத்தாவில் நடந்த கவர்னர் ஜெனரலின் பொதுக்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு ஒரு குறிப்பில் கையெழுத்திட்டுள்ளார். அது மெக்காலேயின் மினிட் என்று இந்திய கல்வி வரலாற்றில் அழைக்கப்படுகிறது.
அந்த போலி ஆவணத்தை உருவாக்கியவர்களின் நோக்கம், ஆங்கிலக் கல்விமுறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இங்கு இருந்த சமஸ்கிருத கல்வி முறை உயர்ந்ததாகவும் உயர்ந்த கலாச்சாரம் மிக்க, எவருக்கும் அடிமையாகாத மனிதர்களை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தது என்றும், ஆங்கிலக் கல்வி முறையின் மூலம்தான் இந்திய மக்களை ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தி வைக்க முடிந்தது என்பது போலவும் ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதே.
எனவே, மெக்காலே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆற்றியதாகக் கூறப்படும் இந்த உரை ஒரு குறிப்பிட்ட உள் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். மேலும் அந்த ஆவணத்தில் Calibre என்ற ஆங்கில வார்த்தை Caliber என்று அமெரிக்க ஆங்கில எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆவணத்தில் அமெரிக்க ஆங்கில முறையில் எழுதப்பட்டிருப்பது இதன் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.
வேத, புராணக் கல்வி அடிமை மனநிலையை அகற்ற வல்லதா?

ஆங்கிலக் கல்வி முறையை மெக்காலே இந்தியாவில் அறிமுகப்படுத்தியதன் நோக்கம் ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்பிருந்த சமஸ்கிருத குருகுலக் கல்வி முறை அல்லது திண்ணைப் பள்ளிக் கல்வி முறையால் இவர்கள் சொல்வது போல் உயர்ந்த தார்மீக மதிப்புகளயும் எளிதில் அடிமையாகாத மனிதர்களயும் உருவாக்கியிருக்க முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும். சமஸ்கிருதக் கல்வி முறையின் ஆதாரப் பாடங்கள் வேதங்களும், புராணங்களும்தான்.
ஆனால் இந்த வேதங்களும், புராணங்களும் தான், பஞ்சமர்கள், சூத்திரர்களுக்கு அடிமை; சூத்திரர்கள் வைசியர்களுக்கு அடிமை; சூத்திரர்களும் வைசியர்களும் ஷத்திரியர்களுக்கு அடிமை இவர்கள் அனைவரும் பிராமணர்களுக்கு அடிமை என்ற வர்ணாசிரம தர்மத்தை சொல்லித் தருகின்றன. சக மனிதர்களயே சக மனிதர்களுக்கு ஜாதிகளின் பெயரில் அடிமையாக்கும் வேதங்களைக் கற்கும் மாணவர்கள், எப்படி எளிதில் அடிமையாக்க முடியாத கலாச்சார முதுகெலும்பு உள்ளவர்களாக உருவாக்க முடியும். சமஸ்கிருத இலக்கியங்கள், வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியன வர்ணாசிரம அமைப்பு முறைக்கும் ஜாதி அடிப்படையிலான அடிமைத்தனத்திற்கும் தத்துவார்த்த விளக்கம் கொடுத்து, அந்த அடிமைத்தனத்தின் வலி தெரியாமல் மக்கள் அடிமையாகவே காலம் முழுவதும் வாழ்ந்து மடிவதை இறைவனின் நியதியாகவே முன்வைக்கின்றன.
ஆங்கிலக் கல்வி வெள்ளயர்கள் வேறு வழியின்றிக் கொண்டு வந்ததே
அதனால்தான் ஆரம்பகால கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள் சமஸ்கிருதக் கல்வியையே இந்திய மக்களுக்கு வழங்க விரும்பினர். பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறும் மேலைநாட்டு ஜனநாயக இலக்கியங்களை இந்தியர்களுக்குக் கற்றுத்தரும் ஆங்கிலக் கல்வி முறையைக் காட்டிலும் பிறப்பால் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் வேத இலக்கியங்களைக் கற்றுத் தரும் சமஸ்கிருதக் கல்வி முறையே நம்முடைய மேலாதிக்கத்தை நிலைநாட்ட உகந்தது என்று எண்ணினர்.
வாரன் ஹேஸ்டிங்ஸ் (17721785) முதல் வந்த பல்வேறு கவர்னர் ஜெனரல்கள் அரபி மற்றும் சமஸ்கிருதக் கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் நிறுவினர். 1821 முதல் 1833க்கு இடைப்பட்ட காலங்களில் கல்கத்தா, பனாரஸ் (காசி), ஆக்ரா, புனே போன்ற இடங்களில் பல்வேறு அரபி மற்றும் சமஸ்கிருதக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. அவற்றின் நிர்வாகச் செலவிற்கு கம்பெனி அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கீடு செய்தது. சமஸ்கிருதம் மற்றும் அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதே சமயம் ஆங்கிலக் கல்விக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய நிலை இருந்தது. அரசு செலவில் சமஸ்கிருத நூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன.
இந்திய அறிஞர்களின் வேண்டுதலின் விளைவாக தோன்றியதே விஞ்ஞானப்பூர்வ கல்வி
ஆனால் கம்பெனி ஆட்சி அறிமுகப்படுத்திய சமஸ்கிருதக் கல்வி முறையின் மூலம் இந்திய மக்களின் அறிவு வளர்ச்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்த ராஜாராம் மோகன்ராய் போன்ற ஆங்கிலக் கல்வி கற்ற இந்திய சமூக சீர்திருத்தவாதிகள், ஆங்கிலக் கல்வியே எங்கள் மக்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத் தொடங்கினர். 1823ல் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில் சமஸ்கிருத கல்வியின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்ட அறிவை நுட்பமான புதிய வார்த்தைகளின் மூலம் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதில் எவ்வித பயனும் இல்லை என்றார்.
ஒருபுறம் ஆங்கிலக் கல்விக்கான கோரிக்கை இந்திய சமூக சீர்திருத்தவாதிகளின் மத்தியில் வலுப்பெற்று வந்த வேளையில், மறுபுறம் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் எழுத்தர் போன்ற அடிப்படைப் பணியிடங்களுக்கும் பிரிட்டிஷ் கம்பெனிகள் மற்றும், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான ஆங்கில அறிவு பெற்ற இந்திய தொழிலாளர்களின் தேவை ஏற்பட்டது.
மாறிவிட்ட வாழ்க்கைச் சூழ்நிலையோடு பொருந்திவராத சமஸ்கிருத கல்வி 
அதே சமயத்தில் உதவிப் பணம் பெற்று சமஸ்கிருத, அரபி கல்வி பெற்றவர்கள் அக்கல்வியை பயன்படுத்தி ஒரு மேலான வாழ்க்கை நடத்த முடியாமல் மீண்டும் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கத்தை உதவி கோரி அணுகியதும் ஒரு சமூக சிக்கலை கம்பெனி ஆட்சிக்கு உருவாக்கியது. சமஸ்கிருத அரபிக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரம் ஈட்ட உதவுவனவாக இல்லை. மாறாக அவை பொருளாதார சிக்கல் பெரிய அளவில் இல்லாமல் மக்களின் வாழ்க்கை சுமூகமாக நடைபெற்ற சூழ்நிலையில் அவ்வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த மதவாத மதிப்புகளை வாழ்க்கைக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவனவாகவே இருந்தன.
பழைய நிலவுடைமை பொருளாதாரத்தின் அடித்தளம், அதற்கு முன்பிருந்த அமைதியான வாழ்க்கை, கம்பெனி ஆட்சியால் நிர்மூலம் செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் இயந்திர தொழில் உற்பத்தி முறை தலைகாட்டத் தொடங்கி இருந்தது. பழைய பொருளாதார அடித்தளம் தகர்ந்து போனதால் தங்களின் பொருளியல் ரீதியான வாழ்விற்கும் வழிகாட்டக் கூடிய ஒரு கல்வியை தேடும் வசியத்தில் அப்போது மக்கள் இருந்தனர். அப்படிப்பட்ட விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவை சார்ந்த கல்வியாக வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் கல்வியாக ஆங்கில கல்வி இருந்ததால் அரசாங்க உதவித் தொகை கிடைக்காத போதிலும் தாங்களே பணம் செலுத்தி ஆங்கிலக் கல்வியை கற்கும் வசியத்தில் மக்கள் இருந்தனர். இவை அனைத்தும் சேர்ந்துதான் மெக்காலே ஆங்கில கல்வி முறையை பரிந்துரைக்கும் ஒரு சூழ்நிலையை அவருக்கு உருவாக்கியது.
சமஸ்கிருதக் கல்வி முறைக்கு மாற்றாக ஆங்கிலக் கல்வி முறையை வலியுறுத்திய மெக்காலே தனது 1835 பெப்ரவரி 2ம் நாளைய குறிப்பில் (மினிட்), சமஸ்கிருதக் கல்வியின் மூலம் பயனுள்ள அறிவை மக்களுக்கு வழங்க முடியாது; மூட நம்பிக்கைகளையே கற்றுத்தர முடியும். மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து, மாணவர்களின் இளமையையும் வீணடித்து, அவர்களுக்கு ஒரு கழுதையை தொட்டால் வரும் தீட்டை எவ்வாறு புனிதப்படுத்துவது, அல்லது ஒரு ஆட்டை கொன்ற குற்றத்திற்கு வேதத்தில் இருந்து எந்த மந்திரத்தை உச்சரித்து பரிகாரம் தேடலாம் என்பது போன்றவற்றைத்தான் கற்றுத் தர முடியும் என்று வாதிடுகிறார். சமஸ்கிருதக் கல்வி முறை பற்றி இப்படிப்பட்டதொரு எதிர்மறையான கருத்தைக் கொண்டிருக்கும் மெக்காலே, அக்கல்வி முறையை உயர்வாகப் புகழ்ந்து பேசியதாக அந்த இணையதள ஆவணத்தில் கூறப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மெக்காலே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பயன்படக்கூடிய கல்வி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தவே விரும்பினார் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஆங்கிலக் கல்வியின் மூலம் அப்புறப்படுத்திய முற்கால இந்தியாவின் சமஸ்கிருதக் கல்வி முறை ஆங்கிலக் கல்வி முறையை விட உயர்ந்தது என்று கூறமுடியாது. ஆங்கிலேயர்கள் என்ன நோக்கத்திற்காகக் ஆங்கிலக் கல்வியைக் கொண்டு வந்திருந்தாலும் ஆங்கிலம் கற்ற இந்தியர்கள்தான் இந்தியாவின் இலக்கிய மறுமலர்ச்சியில், விடுதலை போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. சமஸ்கிருதம் மட்டுமே கற்ற பண்டிதர் எவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் எதையும் வகிக்கவில்லை.
ஒரு மூடநம்பிக்கையை ஒழித்தது மற்றொன்றை கைக்கொள்ள அல்ல
மெக்காலேயின் நோக்கமும் கூட பரந்த அளவில் ஆங்கிலக் கல்வி அனைவருக்கும் சென்று சேர செய்ய வேண்டும் என்பதாக இருக்கவில்லை. ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் தன் மூலம் அவர்கள் பெறும் அறிவை, நாட்டின் சராசரி சாதாரண மக்களுக்கு அவரவர் தாய் மொழியின் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது விருப்பம். அவரது இந்த சாதாரண, கம்பெனியின் நடைமுறை ஆட்சிக்கு உதவவல்ல விருப்பத்திற்கு மாறாக இந்திய மக்களின் முழுமையான கல்வி வளர்ச்சியில் பெரும்   அக்கறை கொண்டு இருந்த ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற இந்திய பெருமக்களை பரந்த அளவில் ஆங்கிலக் கல்வியும் தன் மூலம் பெறப்படும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொருளாலாகிய உலகம் சார்ந்த தத்துவதர்க்க சாஸ்திர கல்வியும் மக்களிடம் சென்று சேர வேண்டுமென்று விரும்பினர்.
அவர்கள் ஆங்கிலக் கல்வியை அது தரும் அறிவிற்காக வரவேற்றார்களே தவிர அதன் மேல் உள்ள மோகத்தால் வரவேற்கவில்லை. ராஜாராம் மோகன்ராய் இது போன்ற சீர்திருத்தங்களை வலியுறுத்துவதை வைத்து அவர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டார் என்ற வதந்தி கிளப்பிவிடப்பட்டது. அப்போது அவர் கூறினார்: ‘நான் ஒரு மூடநம்பிக்கையை விட்டொழித்தது வேறொரு மூடநம்பிக்கயை பற்றிக்கொள்வதற்காக அல்ல’ என்று.
எந்திரத் தொழிலுற்பத்தி முறை முன்னிறுத்திய புதிய கேள்விகள்
உண்மை இதுவாக இருக்கையில், மெக்காலே பற்றிய இந்த போலி ஆவணத்தை தயாரித்து மக்களுக்கிடையில் புழக்கத்தில் விட்டது யாராக இருக்கும் என்று பார்த்தால், அது ஹிந்து மத அடிப்படைவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவுசெய்யப் போதிய ஆதாரம் அந்தப் போலி ஆவணத்திலேயே உள்ளது. அதாவது அந்த ஆவணத்தில் உள்ள ‘ஆன்மீக கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காமல்’ என்ற வார்த்தைகள் கண்ணுக்கு கண்ணாடியாக அதை உருவாக்கியவர்களின் இந்துத்துவ அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. இந்துத்துவ சக்திகளின் போக்கும் நடவடிக்கையும் அக்காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிவதும் நமக்கு அவசியமாகும்.
அறிஞர் கொசாம்பி கூறுவது போல், மிகமிக ஏழ்மை நிலையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு கிராம மக்களை தள்ளி அந்த கிராம சமூக உற்பத்தியின் மூலம் உருவான உபரியைக் கொண்டு புது புது மூட நம்பிக்கைகளயும் ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி, ஏழ்மை நிலைக்கு எதிராக எழும் மனநிலையை அக்காலத்திய ஆளும் வர்க்கம் மிகுந்த திறமையுடன் காலங்காலமாக மட்டுப்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் அந்த அமைதியான வாழ்க்கை சூழல் வெள்ளயர் புகுத்திய எந்திர தொழில் உற்பத்தி முறையினாலும் விஞ்ஞானம் சார்ந்து நடைபெற்று வந்த அந்த உற்பத்தி முறை தன் உபபொருளாக கொண்டுவந்த பத்தாம்பசலித்தனங்களுக்கு எதிரான மனநிலையைக் கண்டும் அஞ்சினர். அதனை எதிர்த்து இந்த இந்து மறுமலர்ச்சிவாதிகள் ஆரம்பத்தில் போராடவும் செய்தனர்.
ஆனால் சமூக வாழ்க்கையின் பெருகி வரும் தேவையை ஈடுகட்டுவதாக அந்த எந்திர உற்பத்தி முறை இருந்ததால் தன் பரவலை அவர்களால் தடுக்க முடியவில்லை. அந்நிலையில் அந்த சனாதன வாதிகளின் ஒரு பகுதியினர் இந்த போக்கிலுள்ள சமூக வளர்ச்சிக்கு தேவைப்படும் தன்மைகளை கணக்கில் எடுத்துக் கொண்டனர். காரியார்த்தமான விதத்தில் வெள்ளையரை தங்களது வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பவர்கள் என்ற எண்ணத்தில் எதிர்க்கும் துணிவுடன் களமிறங்கிய இந்திய தேசிய முதலாளிகளாடு இணைந்து செயல்படத் தொடங்கினர். தேசிய இயக்க பொது நீரோட்டத்தில் கலந்தனர். இப்போக்கில் தங்களை இணைத்துக் கொள்ள முடியாத இந்து மத அடிப்படைவாதிகள் வேறொரு நிலையினை எடுத்தனர். மதத்தின் பெயரால் தாங்கள் உழைக்காமல் இருக்க உதவும் வர்ணாசிரம தர்ம வாழ்க்கை முறையை மீண்டும் எப்படியாவது நிலைநாட்டி அதில் குளிர்காய வேண்டும் என்று விரும்பினர்.
விடுதலைப்போரில் வகுப்புவாத சக்திகள் குறைவான பங்கினையே வகித்தனர் என்பதே வரலாறு புகட்டும் பாடம்
ஆனால் அன்றாட வாழ்க்கைத் தேவைகளால் உந்தப்பட்டு இயந்திர தொழில் உற்பத்தி முறையிலும் அதற்கு உதவும் ஆங்கில கல்வியிலும் தங்களை பெரிதும் ஈடுபடுத்த முனைந்திருந்த மக்கட்பகுதியினை இந்த தங்களின் குறுகிய நோக்கத்திற்கு ஆதரவாக உடனே கொண்டுவந்து நிறுத்த முடியாது என்பதை அவர்கள் நாளைடைவில் அறிந்து கொண்டனர். எனவே  தான்   பின்னர் பொங்கி பிரவாகித்த விடுதலைப் போராட்டத்தில் அந்த இந்துமத அடிப்படை வாதிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக ஆங்கில அரசாங்கத்தை எதிர்க்காமல் முன்பு ஒரு வாழ்க்கை முறையாக இருந்து பின்னர் ஒரு பிரிவினரின் சுயநல நோக்கத்திற்காக என்று சீரழிந்து வகுப்பு வாதமாக மாறிப் போன அந்த வர்ணாசிரம கண்ணோட்டத்தையும், அதை போதிக்கும் இந்துத்துவத்தையும் ஆர்ப்பாட்ட அரவமின்றி வளர்க்கத் தலைப்பட்டனர். விடுதலை கிடைத்த பின் தங்கள் வேலையைத் தொடங்கலாம் என்றிருந்தனர். விடுதலைப் போராட்டம் கொழுந்துவிட்டெரிந்த காலத்தில் இவ்வாறு இந்துமத அடிப்படை வாதத்தை ஆதார சுருதியாகக் கொண்ட அமைப்புகள் விடுதலைப் போரில் எந்தவொரு குறிப்பிடத்தக்க பங்கினையும் ஆற்றவில்லை என்பதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
அன்று நாடு அடிமைப்பட்டு கிடந்த போது அவ்வாறு செயலற்று இருந்துவிட்டு இன்று இதுபோன்ற போலி ஆவணங்களை தயாரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்த அளவிற்கு, அதாவது அவர்கள் தங்களது மொழியினால் நம்மை அடிமைப்படுத்த முயன்றதை இன்றும்கூட அம்பலப்படுத்தி முறியடிக்க முனைபவர்கள் என்ற அளவிற்கு போலி வேடம் போடுகிறார்கள்.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இருந்த கல்வி உயர்குணங்கள் நிறைந்த மனிதர்களை உருவாக்க வல்லதாக இருந்தது என்று கூறுவது அப்பட்டமான பொய்யே தவிர வேறெதுவும் இல்லை. வெள்ளையரின் வருகைக்கு முன்பு அனைவருக்குமான பொதுக்கல்வி என்ற கண்ணோட்டமே இருக்கவில்லை. அச்சு இயந்திரமும் ஆங்கிலேயர்களால் தான் அறிமுகம் செய்யப்பட்டது. சமஸ்கிருத, அரபு மொழிகளில் இருந்த நூல்களும் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு போதுமானவைகளாக இல்லை. புத்தகங்களை ஒட்டு மொத்தத்தில் ஒரு சிறு அலமாரியில் அடைத்து விடலாம் என்றே மெக்காலே கூறினார்.
நம்மைப் பொருத்தவரை ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை தன் சுரண்டலை எதிர்க்க வேண்டும்; அவர்கள் எவ்வாறு நமது பொருளாதாரத்தை கொள்ளயடித்தார்கள், உள்நாட்டு தொழில்கள் வளர விடாமல் நலிவடையச் செய்தார்கள், உலக நாடுகளாடு போட்டியிட முடிந்தவர்களாக ஆக முடியாத ஒரு பின் தங்கிய நிலைக்கு நம்மை எவ்வாறு தள்ளினார்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு எவ்வாறு மக்களை பிரித்தார்கள், மத அடிப்படையில் நாடு துண்டாடப்படுவதற்கு காரணமாக இருந்தார்கள் என்ற அடிப்படைகளில் அவர்களை எதிர்க்க வேண்டும். நேர்மையாக தலை நிமிர்ந்து நின்று எதிர்க்க வேண்டும். ஆனால் எதிர்க்க வேண்டிய சமயத்தில் தங்களது தன்னலம் சார்ந்த குறுகிய காரணங்களுக்காக எதிர்க்காது இருந்துவிட்டு பின்னாளில் போலி ஆவணங்கள் தயாரித்து அவர்களுக்கு எதிரானவர்கள் போல் செத்த பாம்பை சினம் தீர டிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம், அப்பட்டமான கயமைத்தனம்.
மொழி யாரையும் அடிமைப்படுத்தும் தன்மையானதல்ல 
மேலும் மொழிகளின் மூலம் நாடுகளை அடிமைப்படுத்துவது என்றுமே நடவாத காரியம். அடிமை மனநிலை கொண்ட ஒரு சிலர் ஆங்கிலத்தை கற்று வெள்ளையர்களுக்கு பல்லக்கு தூக்கி இருக்கலாம். அது ஆங்கிலம் என்ற மொழியின் கோளாறல்ல; அவர்களது இரத்தத்தில் கலந்திருக்கும் அடிமைத் தனத்தின் கோளாறு. உலகம் முழுவதிலும் இருந்த விஞ்ஞான முற்போக்கு சிந்தனைகளை நமது மக்களுக்கு கொண்டு வந்ததன் மூலம் ஆங்கில மொழி விடுதலை போராட்டத்திலும் சரி, அதற்கு பிந்திய காலத்திலும் சரி சமூக வாழ்க்கையில் ஒரு முற்போக்கான பாத்திரத்தையே ஆற்றியுள்ளது. இந்திய சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கேள்வி கேட்பாரற்று நிலவி வந்த வர்ணாசிரம ஜாதி அமைப்பு முறையையே கேள்விக்குள்ளாக்கிய ஜாதி ஒழிப்பு, சமூக சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவில் தோன்றியதற்கு காரணமும் ஆங்கிலக் கல்வி நமக்களித்த சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக கருத்துக்கள் தான். மேலும் ஆங்கிலத்தின் மூலம் உயர்ந்த சிந்தனைகள் நமது நாட்டில் உள்ள மொழிகளுக்கெல்லாம் வந்ததன் காரணமாக நமது மொழிகளிலும் கலைச்சொல்லாக்கம் வளர்ந்தது, துரிதப்பட்டது. உரைநடை இலக்கியம் வளர்ந்து அனைத்து மக்களும் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது.
மொழிகள் ஒட்டு மொத்தத்தில் சிந்தனைகளயும், கருத்துக்களயும் சுமந்து செல்லும் வாகனங்களை தவிர அவற்றிற்கு ஆதரவாக ஆர்ப்பரிப்பது, எதிராக மீசை முறுக்குவது என்ற வெறிவாதத்தை வைகளாகவே தூண்டக்கூடியவை அல்ல. இலக்கிய மேதை சரத்சந்திரர் கூறியது போல் நமது தேசிய கலாச்சாரம் இது போன்ற கல்வி கற்பதன் மூலமாக அழிந்துவிடும் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. இது போன்ற உயர்ந்த கருத்துக்களையும், வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள உதவும் கல்வி இப்போதிருப்பதை காட்டிலும் மேலான உயர்வான ஒரு உலகளாவிய கலாச்சாரத்தையும், சமூக வாழ்க்கையையும் உறுதி செய்யும் என்றால் அதனை வரவேற்று ஏற்றுக் கொள்வதே சரி, அதில் ஒரு தவறும் இல்லை.

மாற்றுக்கருத்து ,மே 2009 

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

Prof.Dr.S.Ilakkuvanr article about thamizh, mother of indial lagnuages: வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10: தமிழும் ஆரியமும்! - பேராசிரியர் சி.இலக்குவனார்

இந்தக் கட்டுரையை வெளிப்படுத்தியதன் மூலம் தினமணி ஆசிரியர்  குழுவினர் தங்கள் தமிழ்ப்பற்றையும்  தமிழே இந்திய மொழிகளின்தாய் என்னும் உண்மையை வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் வெளிப்படுததி உள்ளனர். செந்தமிழ் மாமணி பெரும்பேராசிரியர்  முனைவர்  சி.இலக்குவனார் அவர்கள் கட்டுரையை வெளியிட்டமைக்குத்  தினமணிக்குப் பாராட்டுகள். இக் கட்டுரை பாட நூல்களில் இடம் பெறுவது மொழி ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அன்புடன்  பொறுப்பாளர்க்ள, இலக்குவனார் இலக்கிய இணைம் &  இலக்குவனார் இலக்கிய மன்றம்.

வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10: தமிழும் ஆரியமும்!

First Published : 16 Oct 2011 02:43:18 AM IST


மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல் உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.  ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல் குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்'தான் என்பது நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும். ஆரியம் தமிழோடு கொண்ட கலப்பின் பயனாகவே இன்று நம் பரதகண்டத்தில் உலவும் மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. ஆதலின், இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர் சிலர் உருவகப்படுத்திக் கூறுவர். ஆரியத்தைத் தந்தையென அழைத்து அதற்கு முதன்மை கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தாலும், "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்' என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது; ஆரியமே இந்திய மொழிகளின் அன்னை என்ற கொள்கை உண்மைக்கு மாறுபட்டது என்பது வெளிப்பட்டுவிடுகின்றது.  ""சதுர்மறை ஆரியம் வருமுன்  சகமுழுது நினதாயின்  முதுமொழி நீ அநாதியென  மொழிகுவதும் வியப்பாமோ''  என்னும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூற்று, மொழிப்பற்று மிக்க புலவர் கூற்று எனப் புறக்கணித்துவிடல் இயலாது. பரதகண்டம் முழுவதும் பரவி வழங்கிவந்த பழந்தமிழோடு, ஆரியம் கலப்புற்றுப் பல்வேறு கிளைமொழிகள் உருவாகியுள்ளன. வடஇந்திய மொழிகள் தமிழ்க்குழு மொழிகளோடு வேறுபட்டன போல் தோன்றினும், தமிழ்மொழி அடிப்படையிலேயே அவை உருவாகி வளர்ந்துள்ளன என்பது நுணுகி ஆராய்வார்க்குத் தெள்ளிதிற் புலனாகும்.  ""வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'' எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ஆரிய மொழிக் கலப்பால் சிதைவுண்டு காலப்போக்கில் பல்வேறு கிளைமொழிகளாகக் கிளைத்தது. ஆரிய மொழித்தன்மை மிகுந்துள்ள மொழிகள் "ஆரியக் குடும்ப மொழிகள்' எனவும், தமிழ்த்தன்மை மிகுந்த மொழிகள் "தமிழ்க் குடும்ப மொழிகள்' (திராவிடக் குடும்ப மொழிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய மொழிகளும் அதனைச் சார்ந்துள்ள மொழிகளும் தமிழ்த் தன்மைகளை மிகுதியான அளவில் இன்றும் கொண்டு விளங்குகின்றன. அன்றியும் ஆரிய மொழி, எழுத்துக்களைப் படைத்துக் கொண்டதே அது தமிழோடு தொடர்பு கொண்ட பின்னர்தான் என்பது இருமொழி எழுத்துக்களையும் நுணுகி ஆராய்ந்தால் தெள்ளிதின் புலனாகும்.  இரு மொழிகளும் வேறுபட்ட இனத்தனவாயிருந்தும் இரண்டிலும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒü என்னும் பத்து உயிர்களும்; க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து மெய்யெழுத்துக்களும் ஒத்திருக்கின்றனவே! எதனால் இவ்வொற்றுமை? ஒன்றைத் தழுவி இன்னொன்று அமைத்துக் கொண்டாலன்றி இவ்வொற்றுமை ஏற்பட இயலாதன்றோ? எதனைத் தழுவி எது அமைத்துக் கொண்டது?  வடமொழியில் உள்ள ஐவ் வருக்கங்களை நோக்கினால், தமிழினைத் தழுவித்தான் ஆரியமொழி தன் எழுத்துக்களை அமைத்துக்கொண்டது என்பது புலனாகும். ஐந்து வருக்கங்களிலும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இரண்டு மொழிகளிலும் ஒன்றே. இடையில் உள்ள மூன்று எழுத்துக்களும் ஆரியம் மிகுதியாகப் பெற்றுள்ளது. தமிழிலும் அவ்வொலிகள் உண்டு. ஆனால், அவ்வொலிகளைக் காட்டும் தனி வரி வடிவங்கள் இல்லை. கடன் பெற்ற கூர்த்த மதியுடைய ஆரியம், புதிய வரி வடிவங்களைப் படைத்துத் தன் நெடுங்கணக்கினை விரிவுபடுத்திக் கொண்டது; வரி வடிவக் குறைபாடற்ற மொழியாகிவிட்டதாகக் காட்டிக்கொண்டது. நன்றாகச் செய்யப்பட்டது "சமஸ்கிருதம்' - என்று தன்னை அழைத்துக் கொண்டது.  ஏன்? தமிழ்மொழி ஆரியத்தைத் தழுவித் தன் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது என்று கூறினால் பொருந்தாதோ எனின், முற்றிலும் பொருந்தாது. கடன் கொடுப்பான் ஒருவன் வேண்டியன பெற்றுக்கொள் என்று உரிமையளிக்குங்கால், குறைவாகப் பெறுவார் இருப்பாரோ? இரார். அங்ஙனமே தமிழ் ஆரியத்தினின்றும் கடன் பெற்றிருக்குமேல் குறைபாடுடைய முறையில் கடன்பெறக் காரணம் இல்லை. ஆரிய நெடுங்கணக்கைப்போல் அமைத்துக் கொண்டிருக்கலாமே. தமிழினின்றும் உருமாறிப் பிரிந்த தெலுங்கு, மலையாளம் பிற்றை நாளில் அவ்வாறு செய்துகொள்ளவில்லையா? ஆதலின் தமிழ் நெடுங்கணக்கைக் கண்டபின்னரே அமைத்துக்கொண்டது என்பதே சாலப் பொருந்தும்.  ஆரியர் இந்நாட்டுக்கு வந்த காலம் கி.மு.2000 முதல், 1500 வரை என்பார்கள். அக் காலத்திலேயே தமிழ்மொழி எழுத்துக்களைப் பெற்றிருந்த "செம்மொழி'யாகும். தமிழ் எழுத்துக்களைக் கண்டே ஆரியமும், பொனீஷியர் மொழியும், எகிப்தியர் மொழியும் எழுத்துக்களை அமைத்துக்கொண்டன என்று கூறுதலே பொருந்தும். இதற்கு மாறாகச் சிலர் கருதுவது உண்மைக்கு மாறானதாகும்.  குமரியொடு வடவிமயத்து ஒருமொழியாய் வழங்கி வந்த தமிழ், ஆரியத்தின் கலப்பால் பல மொழிகளாகப் பிரிந்தது. தொல்காப்பியர் காலமாம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு அளவில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடையே தமிழ்' எனும் பெயருடன் தனியே நிலவியது.  குமரியென்று கூறப்படுவது இப்பொழுதுள்ள குமரிமுனை (கன்னியாகுமரி) அன்று எனவும், இலங்கைக்குத் தெற்கே பூமையக் கோட்டை ஒட்டியிருந்த குமரி மலையெனவும், குமரியாறெனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அன்றுள்ள தமிழின் நிலையைத் தொல்காப்பியத்தின் துணைகொண்டு நன்கு அறியலாகும்.  தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் இருவகையாக அமைந்திருக்கக் காணலாகும். சில விதிகளைத் தொல்காப்பியர் தாமே கூறுவதுபோல் அமைந்திருப்பது ஒரு வகை; பிறர் கூற்றினை மேற்கொண்டு கூறுவதுபோல் அமைந்திருப்பது இன்னொரு வகை. தமக்கு முன்பு நிலவிய வழக்கைக் கூறுங்கால் பிறர் கூற்றாகவே கூறுவார். தமிழுக்கு எழுத்துக்கள் முப்பது என்பதும், அவை அகர முதல் னகர இறுவாய் எண்ணப்பட்டு வந்தன என்பதும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள செய்திகள் என்பது அவர் நூற்பாவால் அறியலாம்.  ""எழுத்தெனப் படுப அகரமுதல்  னகர இறுவாய் முப்பது என்ப''  என்று கூறுவதை நோக்குமின். ஆனால், வடமொழிச் சொற்கள் தமிழில் கலக்குங்கால் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்று கூறும்போது தாமே கூறுவதுபோல் நூற்பா அமைந்துள்ளது.  ""வடசொற் கிளவி வடவெழுத்து ஒரூஇ  எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே''  என்னும் நூற்பாவில், "என்ப', "என்மனார்' போன்ற சொற்கள் இல்லாமையால், வடசொற்கள் தமிழில் கலக்குங்கால் வடவெழுத்துக்குரிய ஒலியால் எழுதப்பட வேண்டும் என்று விதி வகுத்தவர் தொல்காப்பியரேயாவார். இன்றும் இவ்விதி, பிறமொழிச் சொற்களை எவ்வாறு எடுத்தாளவேண்டும் என்பதற்கு நமக்கு வழிகாட்டுகின்றது.  ஆரியம், தமிழைக் கண்டு தம் ஒலி வடிவ எழுத்துக்களை அமைத்துக் கொண்டமையால் இருபத்தைந்து எழுத்துக்கள் இரண்டிலும் ஒன்றாய் உள்ளன. தமிழில் உள்ள எழுத்துக்கள் இருபத்தைந்தையும் ஏற்றுக்கொண்டு எ, ஒ, ற, ன, ழ என்னும் ஐந்து எழுத்துக்களை விட்டுவிட்டது ஆரியம். ஆகவே, எ, ஒ நீங்கிய உயிர் பத்தும்; க-ங, ச-ஞ, ட-ண, த-ந, ப-ம முதலிய பத்தும்; ய, ர, ல, வ, ள முதலிய ஐந்தும் ஆக, இருபத்தைந்தும் இரண்டுக்கும் பொதுவாம். தொல்காப்பியர் காலத்தில் எ, ஒ என்ற இரண்டும் புள்ளி பெற்று எழுதப்பட்டு வந்துள்ளன. எழுதுங்கால் புள்ளி விட்டும் எழுதியிருப்பர். அதனால், ஆரியர் குறில்களை விடுத்து, நெடில்களை அமைத்துக்கொண்டனர் போலும். தமிழ் மொழியின் ஈரோசைச் சட்ட இயல்பு அறியாது, ஒரு வரிவடிவம், ஒரே ஒலியைத்தான் குறிப்பிடவேண்டுமென்று கருதி, ஐவருக்கங்களிலும் மும்மூன்று எழுத்துக்களையும் பிற எழுத்துக்களையும் படைத்துக் கொண்டனர்.  இரு மொழிக்கும் உரிய பொதுவெழுத்துக்களால் ஆன சொற்கள் இரண்டு மொழிகளிலும் தடையின்றிப் பயிலத் தொடங்கின. தமிழ்ச் சொற்கள் பல ஆரியத்துள் சென்றன. ஆரியச் சொற்கள் தமிழிலும் புகுந்தன. ஆரியர்கள் செல்வாக்கு இந்நாட்டில் பெருகப் பெருகத் தம் மொழியில் புகும் தமிழ்ச் சொற்களை உருமாற்றி வடமொழிச் சொற்கள் எனக் கருதுமாறு ஆக்கிக்கொண்டனர். வடமொழியைக் கடவுள் மொழி (தேவ பாஷை) என்றும், ஏனைய மொழிகளைப் பேய்மொழிகள் என்றும் (பைசாச பாஷை) அழைத்தனர். வடமொழியானது கடன் கொடுக்குமேயன்றிக் கடன் கொள்ளாது என்றும் பறைசாற்றினர். தமிழ்மொழியாளர்கள் வடமொழியாளர்கள் மருட்டலில் மயங்கி, வடசொற்களைக் கலந்து பேசலே நாகரிகத்தின் உயர்வுக்கு அறிகுறி என்று தமிழ்மொழியில் வடசொற்களைக் கலந்து பேசலை மகிழ்ந்து ஏற்றனர். ÷தொல்காப்பியர் விதியையும் மறந்தனர். ஆரியத்தைக் கற்று அதில் நூல்களையும் இயற்றினர். ஆரியர்கள் இந்நாட்டு மக்களில் சிறுபான்மையினராக இருந்தமையால், இந்நாட்டு மக்கள் மொழியை அழித்துவிட முடியவில்லை. இந்நாட்டு மக்கள் ஆரிய மொழியின் சொற்களைத்தான் ஏற்றுக்கொண்டனரேயன்றி, மொழியின் அடிப்படை அமைப்பை மாற்றிக்கொண்டாரிலர். இந்நாட்டு மொழியமைப்பில் ஆரியமொழிச் சொற்கள் மிகுந்து புதுமொழிகள் தோன்றின. ஆனால் ஆரியம் மறைந்துவிட்டது. வட இந்திய மொழிகள் தமிழின் அமைப்பின் மீது வடசொற்களைக் கொண்டு கட்டப்பட்டவைகளாம். தென்னிந்திய மொழிகள் ஆரிய மொழியைப் பின்பற்ற முயன்றபோதும் தம் சொற்களை இழந்துவிடவில்லை. ஆதலின் தமிழ்த் தன்மை மிகுந்துள்ளன. வடஇந்திய மொழிகளினின்றும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.  வடஇந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் இன்று ஆரியக் குடும்ப மொழிகள் என்றும், திராவிடக் குடும்ப மொழிகள் என்றும் மொழிநூலாரால் அழைக்கப்படுகின்றன. எல்லாம் தமிழ்த் தாயினின்றும் தோன்றியனவேயாம். ஆரியம் உலக வழக்கழிந்து ஒழிந்ததுபோல் தமிழ் ஒழியாது. தமிழுக்குரியோர் இந்நாட்டு மக்கள். எங்கும் பெரும்பான்மையினராய் உள்ளனர். பெரும்பான்மையினர் மொழியை - இலக்கண அமைப்பும் இலக்கிய வளமும் கொண்ட மொழியை-  சிறுபான்மையினர் மொழி அழித்தல் இயலாது. ஆகவே, தமிழும் அதன்வழிப் பிறந்த மொழிகளும் ஒருநாளும் அழியா.  இன்று இந்தியாவின் ஆட்சிமொழியாக இருப்பதற்கு உரிமையுடையது தமிழேயாகும். இந்தி அதன் சொற்களால் ஆரியத்தின் வழிமொழியே என்றாலும், கட்டமைப்பால் தமிழேயாகும். கலப்பு மொழியாகும். அதற்குள்ள உரிமை தாய்மொழியாம் தமிழுக்கு இல்லையே! தமிழுக்கு முழு உரிமை அளிக்காது போயினும், இந்தியோடு வீற்றிருக்கும் சம உரிமையாவது அளிக்கலாம் அன்றோ? ஆகவே, இந்திய அரசின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகத் தமிழையும் ஆக்குதல் வேண்டும்.  இந்தியர்கள் அனைவரும் தமிழைக் கற்பதற்குரிய வசதிகளையும் கல்வித் திட்டத்தில் ஏற்படுத்துதல் வேண்டும். வட இந்தியர்கள் தமிழையும் தென்னிந்தியர்கள் வடமொழியையும் கற்றல் வேண்டும். தமிழும் ஆரியமும் கற்கப்பட்டால் வடக்கு தெற்கு என்ற வேறுபாடு மறைந்து அனைவரும் ஒற்றுமையுற்று வாழும் நிலை தோன்றும். தமிழே "இந்திய மொழிகளின் தாய்' என்றும், ஆரியக் கலப்பால்தான் தமிழ் இவ்வாறு பல மொழிகளாகக் கிளைத்தது என்றும் அறியும் நிலை ஏற்படும். இருவேறுபட்ட இனத்தைச் சார்ந்த இரண்டும் இணைந்து தன்னியல் மாற்றம் உறாமல் தனித்தனியே வளர்ச்சியுற வழியமைத்தல் வேண்டும். குமரியொடு வட இமயத்து ஒரு மொழியாய் வாழ்ந்த தமிழ், ஆரியத்தால் அழிவுண்டது; ஆரியம் மறைந்துவிட்டது. அழிவுற்று உரிமையிழந்த தமிழை அரியணையில் ஏற்றுவதற்கு ஆவன செய்தல் அனைவர்க்கும் உரிய கடனாகும்.
(இக்கட்டுரை வெளியான ஆண்டு 21.8.1961).
-  பேராசிரியர் சி.இலக்குவனார்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இவற்றுள் பல தமிழ்ச் சொற்களே! சான்றாகக் கண்டு என்பது என்பது பிரிவைக் குறிக்கின்றது. உடலில் இருந்து முகத்தைப் பிரிக்கும் உறுப்பு  கண்டம் எனப்பட்டது. சிறு சருக்கரைக் கட்டிகள் கற்கண்டு எனப்படுகின்றன. கண்டந் துண்டமாக வெட்டுதல் என்பதும் இதனை உறுதிப்படுத்துகின்றது. கணு என்பது பிரிவைக் குறிக்கின்றது. கரும்புக் கணு என்று  கரு்ம்பின் பிரிவுப் பகுதியைக் குறிக்கிறது. நிலத்தின் பிரிவுகள் கண்டம் எனப்படுகின்றன. இவற்றைத் தனியே நான் பின்னர்க் குறிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

<தமிழே விழி! தமிழா விழி >


செவ்வாய், 11 ஜனவரி, 2011

Sanskrit is Dravidian and NOT Indo-Aryan

---------- Forwarded message ----------
from Thiruvelan
From: veera pandian 
Date: Mon, Jan 10, 2011 at 4:08 PM
 
From: K. Loganathan
Date: Sunday, 9 January, 2011, 8:08 AM

 
This is a repost to Ancient India to diffuse the widespread linguistic divide of India into Dravidian and IndoAryan or IndoEuropean. I think there is no basis for such a division.

Loga

Sanskrit is Dravidian and NOT Indo-Aryan
 Dear Friends
While Sumerian literature has been studied for more than a century, it has been a surprise to me that while it was recognized  it is neither Indo-European nor Semitic, it has not been recognized as Tamil but certainly an Archaic form of it. This has led to the immense negligence of its relevance to the study of ancient Indian languages and cultures. It has also led to overlooking the fact that Rigkrit ( Sanskrit) is also another variant of this SumeruTamil and hence just as much Dravidian as Tamil is.
After reasonably extensive studies of Sumerian texts and a variety of texts in Rigkrit and Sanskrit I want to put up these claims for the consideration of scholars interested in such topics.
The studies that I want to mention briefly are linguistic where I have developed Aspcets of Evolutionary Linguistics such as Uri Linguistics Viri Linguistics and so forth  and which are different from the reconstructive linguistics such as PIE.
 My First Claim is :
Sumerian is Archaic Tamil and possibly the Tamil of the First Sangkam (Academy).

In order to substantiate this  I can site many studies –lexical grammatical and so forth that I have already referred and if necessary I can always repeat, Just to cite a simple example  I take the following sentence from Sulgi Hymn B (C. 2000 BC)
13. tur-mu-de e-dub-ba-a-a am ( Since my very youth, I belonged to edubba)
The Tamil reconstruction would be :
Ta. tur-mutee il tubbaiya aa aam ( Since my very youth I attended the tablet house(school))
In this reconstruction , in phonology morphology and semantics and so forth, the basic utti-s constituting the Viri Linguistics are already there.  Here let me overlook the problems about transcription of the cuneiform texts where  some refinements are required but not a fundamental revision.  For example ‘e’ is rewritten as ‘il’ and which can be incorporated in future readings of the Sumerian itself.  Leaving aside such issues for the time being, let me come to the discussion of the utti-s relevant to the issue.
1.
The Phonological Utti-s
Here we have ‘mude’ rendered as ‘mutee’ with the mapping of ‘d’ into ‘t” and ‘e’ into ‘ee’ . The root of this could be Su. mus (the foundation, the initial etc) and hence also s > d. t etc.
We have also ‘a’ as > Ta. aa (to become) and am> Ta. aam ( a particle of affirmation etc). Here while the ‘–a’ in e-dub-ba-a’ is rendered as ‘y-a’, the next ‘a’ and ‘am’ are rendered as ‘aa aam’ i.e. with the long vowel. Here we note that ‘y’ might have been present but the script was defective for symbolizing it. It could have been read as such but not rendered accurately in the script.
We notice that ‘tur’ remains the SAME both in phonological shape and meaning
We also have ‘dub’ rendered as ‘tub’ where we have d > t , something we see also in Sumerian itself e.g  dug and tuk
2.
The Semantic Utti-s
Now looking at the meanings we see that the meaning of ‘tur’ remains the same as Ta. where tur, tul, tun means ‘small, fine’ and metaphorically ‘evil” etc. The Tamil tur-umbu means something small , tul-li-yam means something fine, minute etc. Tur-neRi is the ‘little way”, the evil way in semantic implications.
The ‘mude’ has become Ta. mutee and mutalee as in ‘akaram mutala ezuttellaam ( KuRal 200 AD). The Mutu also means ancient old etc. The ‘mutal’ also means the foundation, the basis etc. In all these we see a family of semantic relationships that are linked to each with some meanings, perhaps the metaphorical as historically later. The most primordial meaning may be that of Su. mus, the foundation, the basis etc.
3.
The Morphological utti-s
Now we notice that ‘dub’ or ‘dub-ba’ has the Tamil equivalent of Tubbu, the clue, the sign etc that has to be read or deciphered as in tuppu tulangkaL etc. Now we can also see some grammatical operations: dub-ba> bud-da > buddi (Ta. putti) ; intelligence etc. What we have here is metathesis along with the birth of an associated meaning – from a tablet of knowledge to that of intellect of intelligence. We can also see the possible derivation: dub-ba> bud-da> poti and il-dub-ba> poti-il, the famous centre in the ancient  Madurai where the Tamil Academy is said to have functioned. The “poti-il’ may actually be ‘il-tub-bu” but distorted or extended somewhat in meaning
Here we also notice the SAMNESS of meaning in relation to ‘tur’ ‘a or aa’ ‘am or aam’ etc.
Thus the Semantic Utti-s bring out both the SAMENESS in meaning as well DIFFERENCE but where the difference can be explained in terms of historical evolution of various kinds.
4.
The Grammatical Utti-s
Now when we take up ‘e-dub-ba-a” and render it as Ta. il tubbaiya  we have ‘-a’ as the Tamil genitive. locative suffix “-a” that is also widely present in C. Tamil and with same grammatical function. The ‘am’ and Ta. aam are almost the same in grammatical function – an enclitic of agreement, emphasis etc.
Now in the clause ‘tur-mu-de’ we have an identity in grammatical function in the word order: akara mutal, iLamai mutalee etc. Here the “mu-de’ is an adverb of time(?) and the same word order holds in Tamil as well. Now in ‘e-dub-ba’ we see a different word order - in fact the reversal – tubbaiya il  etc. This is  one of the DIFFERENCES in grammar and which is  rule governed. While there is agreement in having the formative ‘-a’ as the adjectival format, ( nall-a maintain ( good man), peri-a viidu ( big house) while in Tamil it is before the Noun in Sumerian it is post the qualified noun. For example e-gal-la > Ta. il kaLLa> kaLLa il etc.
The rule is : N1 ^ N2-a > N2-a ^ N1

Now my second claim is :


Rigkrit(Sanskrit) has Archaic Tamil (SumeruTamil)  as it’s base language  where we have to apply the various kinds of Utties of Uri Linguistics to recover the base form


The following is an example of it:
This is  the second Sloka of Rig Veda 1.1


agnih puurvebhir rishibhir idyo nuutanair uta/ sa devam eha vakshati
May the adorable God, eternally adorned by the seers of times, past and present, be a source of inspiration to wise men of all ages.
The BASE  Tamil form is :
*Ta. angki-a: puurvee-ba-ere (e)ri-si-ba-ere iidiyoo nuuta-na-ere uuta/ saa teyvam  eeka vaku-si-ati
Oh The adorable (and beautiful) One! Bless the newly emerging bright persons so that they would go ahead in divine pursuits  like the bright ones of the ancient  times without any disruption ( in this tradition)
Notes: The infixes ‘ba’ and ‘na’ are third person pronominal infixes which are still available in Tamil
Just to give an example of the derivation of Tamil base,  we can cite the following derivation:
puurvebhir , rishibhir
The most interesting morphological element here is "bhir" and which is certainly a later development of  Su. ba-e-re  as in the following lines
 

Sir
21.  ni-me-lam u-lu-da nam-lu-u-lu  ( When mankind comes before you)
22. ni-me -gar-hus-bi u-mu-re-gin  (In fear and trembling at (your ) tempestuous radiance)
23. me-ta me-hus-bi   su ba-e-re-ti  (They receive from you their just deserts)
* Ta. nii meLLam  vizuta uLuuLunam
* Ta. nooy mey kaal ush(Na)bi uu maar kan(al)
* Ta. meyttu mey ush(Na)bi  cuur (av)varee ti
The grammatical complex 'ba-e-re" ( they) is derived from two more basic words 'ba" ( person) and e-ne > e-re( Ta. inam: a group of people or creatures). The 'ba" as meaning a person still exists in Indonesia and in Malay it exists as" bapa" (father) perhaps to be derived from 'ba-apa" where Su 'aba'  ( as a variant of ama: mother) and Ta. appaa means  'father'.
In Tolkaappiyam we have '-ba" alone as a plural person marker as Ta. en-ba ( say-they). We also have '-manaar" as in "en-manaar pulavar" ( the scholars say-they ..)
It is clear that Sk -bhir above is a late variant of the more primitive " ba-e-re" that exists also  in Tamil as 'peer" meaning people.
We can also mention here that Su. mu-re that occurs in these sentences is of a similar genesis (< mu-e-re) and which exists as Ta. maar, ( and 'manaar")  the plural person marker in verb morphology. This also exists in Malay as 'mereka' ( they)
The 'ri-shi" may be taken as a Su. (e)ri-ji or (e)ri-si  meaning persons who are illuminated, bright, intelligent and so forth. Perhaps from this original sense emerged the secondary notion of 'seers'.
The "puurvee' can be linked with 'puu-uru-ee" where 'Ta. puu meaning to emerge, flower , arise etc. and hence as secondary sense , the point of origin which is more frequently mentioned in Sumerian  as ul-li ( Ta. uuzi). It exists in Ta. as puurvam ( the ancient times) and may also be  linked with Ta. puraaNam, mythological tales.( , puur-aaNa- am : ancient tales of gods))

With  more stdies such as these we can also identify the various kinds of utties that are listed above for Viri Linguistics making the whole enterprise something scientific, a kind of Utti Science.
For more such studies please see:
https://sites.google.com/site/vedictamil/tamil-the-base-of-sk

Concluding Remarks:
If my claims are acceptable then it would follow that not only Sumerian is Archaic Tamil  but also Rigkrit and Sk variants of it where because they have undergone many changes we have to apply the utties of uri Linguistics  to recover the BASE form and which is Archaic Tamil. This implies that including Sk as belonging to the Indo-European family of languages is NOT  valid and hence also the study of Proto Indo European languages as such . There are NO  Indian languages related to the European languages.  This may also imply that AIT etc is not valid. It has to be replaced with Sumerian Migration Theory and so forth.


Loga  15-10-10
 From: Rajeev
Date: Monday, January 10, 2011, 1:46 PM

 
Dear Sir,

With the basis of linguistic analysis, Prof. Max Meular one had mesmerized
the people of entire world.
I do not know whether any discrete analysis will lead us to a certain conclusive 
point as the Mother Nature is Continuous?
However, we wish you a great success in your research, and it may put India
on top of World.
With best regards

Dr. Rajeev Agnihotri

From: K. Loganathan

Date: Monday, 10 January, 2011, 12:07 PM

  Dear Sir

Indian History at least for the past 200 years  or so has seen a divide between Dravidian and Aryan and all because the European Indologists have created the MYTH that Sanskrit is IndoEuropean and that the Indian population is racially  Aryan and Dravidian.  The Brahmins in the South went along with this idea(not all) and which fitted with their own and ancient  VarNasrama Dharma. This is the ROOT  CAUSE for the birth of Dravidian movements towards the close of 19th cent  and a mass movement to PURIFY TAMIl  by getting rid of all Sk sounding words. I grew up in this cultural atmosphere and wondered how true all these European and Brahmin views.

Then when I came across Sumerian Texts in the University of London and realized that it is Archaic Tamil and later that Rigkrit, the language of Vedas is a variant of this SumeroTamil, tI began to question all these historical views. The present series of studies I am posting  is a product of such attempts.

I am convinced that in the DEEP PAST the whole of India was essentially Dravidian and that many different ethnic groups  have come and mingled with  these ancient Dravidians  who were probably the first stream out of Africa, , But despite all these the CULTURE or the temple-centered Agamic Hinduism remains quite the same all over India.

I think the Indian historians must put aside most of the views of the European Indologists and  bring in SumeroTamil studies to bear upon Indian languages and culture so that we gain  a true understanding of Indian History.

Loga


 

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

வேதங்கள் ஓதுகின்ற இடம் எல்லா வளமும் பெற்றிருக்கும: ஆந்திர முதல்வர் ரோசய்ய

திருமலையில் வசந்த மண்டபத்தில் பேசும் ஆந்திர முதல்வர் ரோசய்யா.
திருப்பதி,அக்.15: வேதங்கள் ஓதுகின்ற இடம் எல்லா வளமும் பெற்றிருக்கும் என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்தார்.  திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு முதல்வர் ரோசய்யா ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் வசந்த மண்டபத்தில் நித்ய வேதபாராயணம் என்ற வேதங்கள் ஓதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:  வேதங்கள் மிகவும் புனிதமானவை; அவை ஓதிக்கொண்டிருக்கின்ற பகுதிகளும், அங்கு வாழும் மக்களும் எல்லா வளங்களும் பெறுவர். தற்போதுள்ள சூழ்நிலையில் இது போன்ற கலாசார நிகழ்வுகள் மிகவும் அரிதாகிவிட்டன.  திருமலை நிர்வாகம் இத்தகைய புனிதமான காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ரோசய்யா கூறினார்.  இதில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட வேத புத்தகங்கள் முதல்வருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கல்லா அருணாகுமாரி, ராமச்சந்திரா ரெட்டி,வெங்கட்ட ரெட்டி மற்றும் திருமலை கோயில் நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரக்குழு தவைவர் சத்தியநாராயணா,முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணா ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

அயல்நாட்டு மொழியாம் சமசுகிருதத்தைப் போற்றும் அளவிற்கு மண்ணின் மொழியான தமிழைப்பற்றியும் தத்தம் மொழியின் தாய்மொழியான தமிழின் சிறப்பைப் பற்றியும் அறியாமல் பலரும் உரைப்பதன் (உளறுவதன்) காணரம் தமிழ் என்றும் திராவிடம் என்ளும் பேசுபவர்கள் உண்மை வரலாற்றை உலகறியச் செய்யும் பரப்புரைப் பணியில் ஈடுபடாமைதான். எனவே எங்கும் மூட நம்பிக்கை வளர்கிறது. தமிழ் தனக்குரிய இடத்தைப் பெறாமல் தவிக்கிறது. இனியேனும் திருந்தட்டும் தமிழினம்! உண்மையை உணரட்டும் பிற இனம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 4:28:00 AM
மணி, துல்லுதுரை, சாலமன் நீங்கள் எல்லாம் பார்பன வர்ணாசிரம கொள்கையின் அடிமைகள் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் உங்கள் சுயமானத்தை விற்றுவிட்டீர்கள், உங்கள் மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளது. சின்ன பிள்ளைகள் கூட இப்ப டிரவுசர் போடுவதை விட்டுவிட்டு பேண்டுக்கு மாறிவிட்டார்கள். நீங்கள் அந்த பார்பன ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் டிரவுசரை போட்டு கொண்டு வானர குரங்குகள் போல காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சி. உங்களுக்கு எதற்கு படிப்பு, சாப்ட்வர் ஹைடெக் எல்லாம். பக்தி என்று வந்து விட்டால், மாட்டுச் சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் கலந்து குடிக்கலாம் (பஞ்சகவ்யம்: மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) என்கிற அளவுக்கு உங்கள் அறிவு மழுங்கி விட்டதே என்ன செய்ய. இது எல்லாம் வந்தேறி பிராமிணன் கொண்டுவந்தது. இது எல்லாம் தமிழர் பண்பாடு இல்லை என்பதை புரிந்து கொள். By SINTHIKKAVUM
By cop
10/17/2010 2:32:00 AM
உன்னை எல்லாம் முதலமைச்சராக ஆக்கியதற்கு பதிலா எரும மாட்டை ஆக்கி இருக்கலாம். நீ எல்லாம் பார்பன வர்ணாசிரம கொள்கையின் அடிமைகள் என்பது தெரியும். உங்களுக்கு எதற்கு படிப்பு, சாப்ட்வர் ஹைடெக் எல்லாம். பக்தி என்று வந்து விட்டால், மாட்டுச் சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் கலந்து குடிக்கலாம் (பஞ்சகவ்யம்: மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) என்கிற அளவுக்கு உங்கள் அறிவு மழுங்கி விட்டதே என்ன செய்ய
By KAVI
10/17/2010 12:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *