தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஆகஸ்ட், 2020

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு


இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு

பன்னாட்டுத் தளத்தில் தமிழர் அரசியலை அரசதந்திரத்துடன் மேற்கொள்வதற்கு மக்கள் ஆற்றல்களை வலுவாக அணிதிரட்டக் கூடிய, தமிழ்த் தேசியத்தைத் தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும் !

இணக்கஅரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், பன்னாட்டு அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும் தமிழர்களின் நலன்களையும்  இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தைத் தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது சார்பாளர்களாகத் தேர்வு செய்யவேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் தேசியச் சிக்கலுக்குத் தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினைத் தமிழர் தேசத்தின் விடுதலை வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பைத் தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இத்தேர்தலில் மக்கள் தமது சார்பாளர்களைத் தேர்தவு செய்யும் முன் கீழ் வரும் செய்திகளில் அவர்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு கோரியுள்ளது.

1 – ஈழத்தமிழர்களின் தேசிய இனச்சிக்கலுக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அறிந்தேற்புடன் –  தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கசேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேசுவரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

2 – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த இலங்கை அரசும் அதன் அரசியல், படைத்துறைத் தலைவர்களும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

3 – நடந்தேறிய பன்னாட்டுக் குற்றங்கள் முறைப்படுத்தப்பட்ட குற்றங்கள்(‘Systemic Crime‘) என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிப்பட்டவர்களாலோ, ஒரு குறிப்பிட்ட படைப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. மாறாக இவை இலங்கை என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே இலங்கை அரசைப் பன்னாட்டு நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான பன்னாட்டுச் சட்டத்தின் கீழ்க் கொண்டு செல்லத் தமிழர் சார்பாளர்கள் பாடுபடவேண்டும்.

4 – பன்னாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

5 – தாயகத்தில் தமிழர் தேசக் கட்டமைப்பை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பன்னாட்டுக் குமுகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியையும் தமிழர் தேசம் கையாள வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதன், 27 மார்ச், 2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்

அகரமுதல
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.
எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது.
தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் குறித்த https://tgteelection.org/tamil/  இணையத்தளத்தின் வழியே பெற்றுக் கொள்ளலாம்.
நாடுவாரியான தேர்தல் ஆணையங்களின் தொடர்பு விவரங்கள்:
செருமனி : திரு இரா.பாசுகரன்
மின்வரிberlintamil@web.de
 பிரான்சு : திரு குமாரசாமி பராசா
மின்வரிtgtefranceelection@gmail.com
பேசி: 07 53 31 85 45
சுவிசுதிரு ஞானசம்பந்தன் குகநாதன்
மின்வரிswiss.ec@tgte.org
 பிரித்தானியா : திரு சி.சிதம்பர(பிள்ளை)
மின்வரிinfo@tgteelection.org
 அமெரிக்கா திரு இராசன் மனோரஞ்சன்
மின்வரிranjan@3sg.com
 தென்மார்க்கு  – நோர்வே – சுவீடன் – பின்லாந்து:   திரு எசு.கே.கதிர்
மின்வரிkathirkar@hotmail.com
பேசி : 4591403739
 ஆத்திரேலியா – நியூ சிலாந்து :  திருவாட்டி இலட்சுமி உலோகதாசன்
மின்வரிausnzl.ec@tgte.org
 கனடா : திரு சிவ இரத்தினசிங்கம்
மின்வரிsiva.mtg@gmail.com
 தேர்தல் தொடர்பிலான நாடுவாரியான விவரங்களை அந்தந்த நாடுகளின் தேர்தல் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 25 அக்டோபர், 2018

பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019

அகரமுதல

 பிரித்தானியா தமிழர் பேரவையின்

உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019.

 பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி  மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் பலதடுப்பரண்களை உருவாக்கித் திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு பிரித்தானியா தமிழர் பேரவையின் தொடர்ச்சியான செயற்பாடு  முதன்மைக்காரணமாக அமைந்து வருகின்றது.
 இதில் குறிப்பிடத்தக்கவை
  1. கொடூரத் தடுப்பு முகாம்களைத் திறந்து விடு, “Unlock the Concentration Camps in Sri Lanka”
  2. அவர்கள்உயிரோடு உள்ளனரா?, “Are they Alive?”
  3. பன்னாட்டுத் தற்சார்பு உசாவல், “International Independent Investigation”
  4. நிலப் பறிப்பை நிறுத்து, ” Stop the Land Grab”
  5. ஐரோப்பாவின் வரிச் சலுகை ஏற்றுமதியை நிறுத்து, “Stop GSP+”.
  6. தண்டனையின்றித் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, “Continuing Genocide with Impunity”
போன்ற விழிப்புணர்வுப் பரப்புரை நடவடிக்கைகள், பல்வேறு அரசியல் தந்திரச் செயல் திட்டங்கள் மூலம் இலங்கை அரசினை உலக நாடுகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் கொண்டு வந்தமை, தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான அழுத்தத்தினைத் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழு (APPG T) ஐ.நா போன்றஅமைப்புக்களினூடாக மேற்கொண்டமை மற்றும் தமிழர் பகுதிகளில் புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகள்தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு இலங்கை அரசின் தொடர்ச்சியான பண்பாட்டு இனவழிப்பினை ஆவணப்படுத்தி ஐ.நா. வில் வெளியிட்டமை போன்ற பல செயற்பாடுகள் முதலானவை.
உங்கள் பகுதியிலுள்ள உள்ளூர் தமிழர் பேரவைகளின் தேர்தல் தொடர்பான தகவல்கள் கீழ் உள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளில் இணைந்து தாயகத்தின் விடிவுக்காக அரசியல்  தந்திர வழி முறைகளில்உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பதிவு அலுவலகம் :
பிரித்தானியத் தமிழர் பேரவை, அலகு 1, ஃபவுண்டேயின் வணிக மையம், அகல் வரிசை, (ountayne Business Centre, Broad lane,) இலண்டன் ( N15 4AG)
பேசி+44(0)20 8808 0465

தேர்தல் அட்டவணையைத் தளத்தில் காண்க.

வலைத்தளம்www.britishtamilsforum.org
மின்வரிinfo@britishtamilsforum.org
சுட்டுரை: https://twitter.com/tamilsforum
சங்கீத்து(Sangeeth)
பி.த.பே.ஊடக ஒருங்கிணைப்பாளர்(BTF Media Coordinator)

வியாழன், 3 அக்டோபர், 2013

தேர்தல் தோல்வியால் தமிழர்கள் மீது சிங்களப்படை தாக்குதல்

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது இராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கையர் தகவல்
இராமேசுவரம்: இலங்கையில், தமிழ் தேசிய கூட்டணி வெற்றியால், ஆத்திரமடைந்த சிங்கள ராணுவம், தமிழ் இளைஞர்களை கடத்தி தாக்குவதாக, தனுஷ்கோடி வந்த இலங்கை அகதி தெரிவித்தார்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை ரோந்து கப்பலில் சிக்காமல், இலங்கையை சேர்ந்த மர்ம படகில் வந்த மூவர், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில், இலங்கை தமிழர் ஒருவரை இறக்கி திரும்பினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, வல்வெட்டி துறையை சேர்ந்த, செல்வ கிருஷணன், 39, என்பதும், 1984ல், அகதியாக தமிழகம் வந்து, 2011ல், பாஸ்போர்ட் மூலம், இலங்கை சென்றதும், தற்போது அகதியாக தனுஷ்கோடி வந்ததும் தெரிந்தது.

செல்வகிருஷ்ணன் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த, வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணிக்கு, பிரசாரம் செய்த இளைஞர்களை, ராணுவ சி.ஐ.டி., பிரிவு, இரவோடு இரவாக கடத்திச் சென்று, சில நாள் வைத்து தாக்குகின்றனர். நானும் பிரசாரத்தில் ஈடுபட்டதால், ராணுவ சி.ஐ.டி., பிரிவினர், என்னை தேடி வந்தனர். உயிருக்கு பயந்து, மனைவி, குழந்தைகளை விட்டு, பேசாளை கடற்கரையில் இருந்த மீனவர் படகிற்கு, 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, தனுஷ்கோடி வந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இந்திய அரசின் காரணமாகவே இலங்கையில் தேர்தல் நடைபெற்றது: வாசன்

1 / 2 ) தனி  இறையாண்மை உடைள சிங்கள அரசின்  செயல்பாடுகளில் இந்தியா தலையிடாது எனக் கூறி அங்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகச் செயல்படாதது உண்மையா? இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தேர்தல் நடைபெறுவதாகக் கூறுவது உண்மையா? இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாததுடன் திட்டமிடுதலிலும் படையணிகளை அனுப்புவதிலும் படைக்கருவிகள், வேதியல் குண்டுகள் கொண்டு அழிப்பதிலும் உடந்தையாக இருந்த இந்திய அரசு, இப்பொழுதும் தொடரும் இனப்படுகொலைகளையும் கற்பழிப்புகளையும்  கட்டாயக் கருத்தடைகளையும் நிலப்பறிப்புகளையும் படையினரின் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தலாமே! தமிழக மீனவர்களின் படுகொலைகளைக்கூடத் தடுத்து நிறுத்த வகையற்ற சிங்கள அடிமையான இந்திய அரசு, தேர்தலுக்காகப் பொய்களை அவிழ்த்து விடுவதில் பயனில்லை. இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் இருப்பது உண்மையானால், ஈழப்பகுதிகளில் இருந்து சிங்களப் படைகளையும்  சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/ (தொடர்ச்சி  2/2 காண்க)

2 / 2) அப்படி எல்லாம் அடுத்த நாட்டில் மூக்கை நுழைக்க மாட்டோம் என்றால்,  (ஒன்று) வக்கற்ற அரசு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். (இரண்டு, ) சிங்களக் கூட்டாளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியில் தன் அணியின் செல்வாக்கிற்காக மிரட்டும் பாணியில் தமிழர் நலனில் கருத்து உள்ளதுபோல் வாசன் நடிப்பதைக் காங்கிரசார் நம்பினாலும் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது:  வாசன்

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஜி.கே. வாசன்.தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சிதான் எப்போதும் முதன்மையான அணி. இரண்டாவது அணி, மூன்றாவது அணி பற்றியெல்லாம் தெரியாது.காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 15 ஆண்டுகளாகவும், ராகுல் காந்தி 10 ஆண்டுகளாகவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மூலை முடுக்குக்கு எல்லாம் எந்தவித லாபத்தையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணிக்காகச் சுற்றுப் பயணம் செய்கின்றனர்.பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார். அதில், தமிழகம் வருகையும் ஒன்று.
சோனியா காந்தி, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவர்கள். அவர்கள் காட்டும் வழியை அனைத்து மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநிலத் தலைவர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற, உள்ளாட்சி உறுப்பினர்கள், அடிதட்டு தொண்டர்கள் பின்பற்றி வருகிறோம். அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துவது எங்களது கடமை என்ற உரிமையோடு செயல்பட்டு வருகிறோம்.கடந்த 65 ஆண்டுகளாக இந்திய மக்கள் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினாலும், அது 3 அல்லது 4 முறைதான் நிகழ்ந்தது. அதிலும், பாஜக ஒரு முறைதான் ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை பழைமை மாறாமல் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளது. விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தலைவர்களின் வழியைப் பின்பற்றி வருவதால், எங்களுடைய பணிக்கு மக்கள் உறுதியோடு வாக்களிப்பர் என நம்புகிறோம்.
இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறுவதற்காகவும், நலனுக்காகவும் அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும். இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் மூலம், தமிழர் நலன் சார்ந்த நல்ல முடிவு ஏற்பட்டுள்ளது.இந்த வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து அமைதி திரும்ப வேண்டுமானால், அப்பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே வடக்கு மாகாணத்தின் முதல் கோரிக்கை என அம்மாகாணத்தின் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தகைய சூழலை இந்திய அரசு உடனடியாக ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படுத்தினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மீனவர் பிரச்னையில் முழுமையான தீர்வு ஏற்படுவதற்கு மத்திய அரசு தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றார் வாசன்.
அப்போது, பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


புதன், 18 செப்டம்பர், 2013

ஒற்றுமையாய் இயங்குவதாலே உண்டு நன்மையே - கலாநிதி இராம் சிவலிங்கம்



நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தேர்தல்: பாகம் 2
ஒற்றுமையாய் இயங்குவதாலே உண்டு நன்மையே
--- கலாநிதி இராம் சிவலிங்கம்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு,  என்பதை எம் மூதாதையர் எமக்குக் கற்றுத் தந்தனர். நதிகள் இணைந்து ஆறாக மாறும்போது அதன் சக்தி பெருகுவதை இயற்கை எமக்கு எடுத்துக் காட்டியது. வலிமை மிக்க ஒற்றுமையும், வழிசமைக்கும் ஒருங்கிணைந்த செயற்பாடும் எமது வெற்றிக்கு வழிகோலும் என்பதால், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அதை நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கைகளில் ஒன்றாக பெருமையுடன் இணைத்து, பொறுமையுடன் காத்திருந்தோம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....... தமிழீழம் மலர்ந்து ஆண்டுகள் பல ஆகியிருக்குமே. ர்வதேச ரீதியில் சகல தமிழ் சங்கங்களின், அமைப்புக்களின் ஆதரவுடனும் ஒத்துழைபுடனும் எமது புதுமை மிக்க அரசியல்ப் போரை  முன்னெடுத்துச் செல்லவேண்டிய நாம்;  எமது பாசக்கரங்களை நீட்டி, அவர்களை அன்புடன் அரவணைக்க  வேண்டிய  வேளை, எம்மவர்க்கு உதவுபவர்களையே நிந்திப்பது துரோகமல்லவா?

ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு முன், கனடாவில் உள்ள ரீ,வீ,   எனும் தொலைக் காட்சியின் வெளிச்சம் நிகழ்வில் பங்குபற்றிய சபாநாயகர் பொன் பாலராஜன் அந்த நிகழ்வில் பங்குகொண்ட மற்றவருடன் சேர்ந்து தமிழர் கூட்டமைப்பையும் அதன் தலைவர் சம்பந்தனையும் தாக்கிப் பேசியது நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கைக்கு முரணானது மட்டுமல்ல எம் இனத்துக்கும் மாறான செயல்லவா? தமிழீழத்தில் வாழும் அத்தனை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழர் கூட்டணியை தாக்கிப் பேச இவர்களுக்கு என்ன அதிகாரம்/ அருகதை இருக்கிறது?

ஆண்ட இனம் அடுத்தநாள், சத்தமில்லா மூன்றாவது உலகப் போரினால், நிராயுதபாணியாக நின்றபோது, சிங்கள அரசபடை தம்மிழர்களை காட்டு விலங்குகளளைப் போல்  வேட்டையாடிய வேளை , தமிழரின் உயிருக்கோ, உடமைகளுக்கோ எந்தவித பாதுகாப்பும் இல்லாத நேரம்  அந்த இனத்துக்கு தலமை தாங்க முன்வந்த மறத்தமிழனை, சிங்கள அரசுபோல் மாசுபடுத்த முயலும் இவர்களை எப்படியப்பா கூறுவது? எம்மவர்க்கு உதவுபவர்களைத் தூற்றி, சிங்கள அரசின் விருப்புக்கு செயல்ரூபம் கொடுப்பதுவும் துரோகச் செயலின் ஓர் அங்கமல்லவா? 

மானமொன்றே வாழ்வென வாழ்ந்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27,  இருபத்தைந்து ஆண்டுகளாக, ஆண்டுதோறும் சிறந்த முறையில் உலகெலாம் நடாத்திவரும் அந்த உத்தமர்ர்களிடமிருந்து  அதற்கான அதிகாரத்தை  கைப்பற்ற  முயன்றதும்; கைகூடாததால், லண்டனிலும்  ரொறன்ரோவிலும், மாவீரர் பணிமனை என்ற பெயரில் பிரிவினையை உருவாக்கியதும் யாரப்பா? தமிழீழ அரசின் பிரதமரால் தத்தெடுக்கப்பட்ட, அவரின் செல்லப்பிள்ளைகளான மதவடிக்குழுவினரே.

இறுதியாக, இந்த ஆண்டு யூன் மாதம்   தமிழ் வண் தொலைக் காட்சி நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கத்தில்  நாடுகடந்த தமிழீழ அரசின் பேச்சாளர் சியான் சின்னராசா, எமக்குத் தேவையான் போது பணமும் ஆதரவும் தந்து உதவிய நாம் தமிழர் இயக்கத்தையும் அதன் தொண்டர்களையும் சாடியது எந்த விதத்தில் ஒற்றுமைக்கு வழிகோலும்? எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய  பதவிகளை வகிப்பவர்கள் பொறுப்போடல்லலவா நடக்கவேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், ஒற்றுமைக்கான எமது பயணம் " ஊருக்குத்தான் உபதேசம், அது உணக்கும் எனக்கும் இல்லையடி" என்ற கூற்றுப்போல் ஆகிவிட்டதே . விண்ணில் பறக்க வேண்டிய நாம், இன்று மண்ணில் புரளுவதற்கு யார் காரணம்? தகுதியற்ற தலமையா? அல்லது தகமை இல்லா நிர்வாகமா?

நாம் ஒற்றுமையாய் வாழ, ஒருங்கிணந்து செயற்பட பண்பாடும், பழக்க வழக்கமும், விசுவாசமும் கொண்டவர்கள் வேட்பாளராக எம்முடன் இணைய வேண்டும், எம் உறவுகள் தமது மட்டில்லா ஆதரவை எமக்கு  மறவாது தரவேண்டும். இத்தொடரின், முன்னைய பாகம் வேண்டுமாயின், ண்னுடன்  தொடர்புகொண்டால் அனுப்பிவைக்கப்படும், நன்றி.

கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@synpatico.ca