புதன், 1 மே, 2013

மூவருக்குப் பச்சைக்கொடி ? அசாம் கைதியின் தூக்கு ஆயுள் தண்டனையாகக் குறைப்பு - உச்ச மன்றம் அதிரடித் தீர்ப்பு

அசாம் கைதியின் தூக்கு  ஆயுள் தண்டனையாக க் குறைப்பு - உச்ச மன்றம்  அதிரடி த் தீர்ப்பு
அசாம் கைதியின் தூக்கு ரத்து: ஆயுள் தண்டனையாக குறைப்பு-சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி, மே 1-

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவருக்கு கவுகாத்தி நீதிமன்றம் 1997-ம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தது.

1990-ல் ரஞ்சன்தாஸ் என்பவரை கொலை செய்த அவர் ஜாமீனில் வந்த போது 6 ஆண்டு கழித்து ஹரகந்ததாஸ் என்பவரை கொன்றார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அசாம் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் 1999-ல் உறுதி செய்தன.

இதையடுத்து மகேந்திர நாத்தாஸ் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். 12 ஆண்டுகள் கழித்து கடந்த 2011-ம் ஆண்டு கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

கருணை மனு மீது தாமதமாக முடிவு எடுத்ததால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மகேந்திரநாத் தாஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து மகேந்திரநாத்தாசுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் 16 ஆண்டுகளாக தூக்கு கயிறை எதிர்நோக்கி இருந்த அவரது தலை தப்பியது.

ஏற்கனவே இது போல் கருணை மனு மீது ஜனாதிபதி தாமதமாக முடிவு எடுத்ததால் பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி புல்லர் தண்டனையை குறைக்க கோரி சுப்ரீம் கோட்டில் மனு செய்தான். அவன் தீவிரவாதி என்பதாலும் குண்டு வெடிப்பில் தொடர்புடையவன் என்பதாலும் அவனது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக