புதன், 1 மே, 2013

சேதுக்கால்வாய்த் திட்டம்: அரசின் காழ்ப்புணர்வு: கருணாநிதி

சேதுய் த் திட்டம்: அரசின் காழ்ப்புணர்வு: கருணாநிதி
சென்னை: சேது சமுத்திர திட்டத்திற்கு, மூடுவிழா நடத்த, அ.தி.மு.க., அரசு காழ்ப்புணர்வோடு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை:சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுமானால், அதன் மூலம் தமிழகத்தில், தொழில், வர்த்தகம் பெருகும். நாட்டின் அன்னியச் செலவாணி வருவாய் அதிகரிக்கும். கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும். தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும். ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில், கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.சேதுசமுத்திரத் திட்டம், வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தத் திட்டம் பூர்த்தியடைந்து விட்டால், தி.மு.க., வுக்கு பெரும் பெயர் வந்து விடும் என்ற காரணத்தால், இந்தத் திட்டத்திற்காக, 829 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மூடு விழா நடத்த, அ.தி.மு.க., அரசு காழ்ப்புணர்வோடு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வரவேற்கிறோம்:
தமிழக பா.ஜ., தலைலவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை, மனப்பூர்வமாக, தமிழக பா.ஜ., வரவேற்கிறது. எங்களைப் பொருத்தவரை, ராமார் பாலத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக