செவ்வாய், 30 ஏப்ரல், 2013

இலங்கையில் பொதுநல மாநாடு 40 நா.உ.களும் விலக வேண்டும்: பாசக

இலங்கையில் பொதுநல மாநாடு நடைபெற்றால் 40  நா.உ.களும் விலக வேண்டும்: பாசக

இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கை காமன்வெல்த் மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
இதனை பிரதமர் ஏற்கவில்லை என்றால் 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக