புதன், 1 மே, 2013

வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்களுக்குப் புதிய விதிமுறைகள்

வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்களுக்கு ப் புதிய விதிமுறைகள்

வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை (ஓசிஐ) வைத்திருப்போருக்கு புதிய விதிமுறைகளை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அட்டை (ஓசிஐ) வைத்திருப்போர், இந்தியாவுக்கு பயணிக்கும் போது ஓ.சி.ஐ. அட்டை, யு விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாஸ்போர்ட், போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
ஓசிஐ அட்டை வைத்திருப்போர் எத்தனை முறை வேண்டுமானா லும் இந்தியாவுக்குள் வந்து செல்லலாம். மேலும் வாழ்நாளுக்குரிய விசாவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டோர் புதிய பாஸ்போர்ட் பெற்றவுடன் ஓசிஐ அட்டை ஆவணங்களை மீண்டும் பெற வேண்டும்.
அவசர பணியின் நிமித்தம் செல்லும் போது ஓசிஐ அட்டைதாரர் பழைய பாஸ்போர்ட்டையும், யு விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஓசிஐ அட்டையையும் கொண்டு செல்லலாம்.
ஓசிஐ அட்டைதாரர்களின் மைனர் குழந்தைகள் ஓசிஐ அட்டை பெற இயலாது. அவர்களுக்கு இந்திய வம்சாவளியினர் என்ற அட்டை மட்டுமே வழங்கப்படும். ஓசிஐ அட்டை வைத்திருப்போர் இந்தியாவில் உள்ள உள்ளுர் காவல் நிலையத்தில் ஆஜராகத் தேவையில்லை.
பான்கார்ட் பெறவும், வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும் ஓசிஐ அட்டையை அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம். ஆனால் ஓசிஐ அட்டைதாரர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்திய அரசு வேலைவாய்ப்பையும் பெற இயலாது. ஓசிஐ அட்டைதாரர் வாழ்நாள் முழுவதும் விசா இல்லாமல் இந்தியாவில் பயணிக்கலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக