சமீபகாலமாக பிரபலமாகிவருவதுதான் கேன்டிட் போட்டோகிராபி.
கேன்டிட் போட்டோகிராபி என்பது வேறு ஒன்றும் இல்லை, மக்கள் கேமிராவிற்கு
போஸ் கொடுக்காமல், இயல்பாக இருக்கும் போதும், இயங்கும் போதும்
எடுக்கப்படும் போட்டோகிராபியைதான் கேன்டிட் போட்டோகிராபி என்கிறார்கள்.
பெரும்பாலும் திருமண விழாக்களிலும் மற்றும் பிறந்த நாள் போன்ற விழாக்களிலும் எடுக்கப்படுவது.
பிளாஷ் லைட் உபயோகிக்காமல், ஜூம் லென்ஸ் உபயோகித்து, விழா நாயகர்களை சுற்றி நடக்கும் விஷயங்களை, கிடைக்கும் வெளிச்சத்தைக் கொண்டு எடுக்கப்படுவதாகும்.
பெங்களூரு, ஹைதரபாத் போன்ற நகரங்களில் எந்த திருமணம் என்றாலும் வழக்கமான படங்களை எடுக்க ஒரு போட்டோகிராபரும், இது போல கேன்டிட் படங்களை எடுப்பதற்கு ஓரு போட்டோகிராபருமாக இரண்டு போட்டோகிராபர்கள் அமர்த்தப்படுவார்கள்.
கேன்டிட் போட்டோக்களுக்கான ஆல்பமும் தனியாக தயாரிக்கப்படும்.
உயிரோட்டமாகவும், உணர்வுபூர்வமாகவும் காணப்படும் இந்த படங்களை அனைவருமே விரும்புவார்கள். சென்னையில் இப்போதுதான் இந்த கேன்டிட் போட்டோகிராபி வளர்ந்து வருகிறது.
இந்த கேன்டிட் போட்டோகிராபியில் சிறந்து விளங்குபவர்தான் சென்னையைச் சேர்ந்த ரேவதி நடராஜன். சிறு வயது முதற்கொண்டே புகைப்படக்கலையில் ஆர்வமாக இருந்த ரேவதி, திருமணத்திற்கு பிறகு கணவர் தந்த ஊக்கம் காரணமாக கேன்டிட் போட்டோகிராபரானார். இவரை இந்த துறையில் சீரமைத்தவர் சென்னையில் சென்டியண்ட் புகைப்பட பயிற்சி நிறுவனம் நடத்திவரும் லக்ஷ்மண் ஆவார். லக்ஷ்மண் புகைப்பட துறையில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். பல்வேறு மீடியா நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு, புகைப்பட பயிற்சி நிறுவனம் நடத்திவருகிறார்.
தற்போது கோடை கால ஐந்து நாள் பயிற்சி முகாம் நடத்த உள்ளார்.
இந்த பயிற்சி முகாமில் கேன்டிட் புகைப்பட பயிற்சி உள்ளிட்ட பேசிக் மற்றும் அட்வான்ஸ் போட்டோகிராபி கற்றுக்கொடுப்பதற்கும் உள்ளார். தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்: 9551057405.
குறிப்பு: கேன்டிட் போட்டோக்களை பார்க்க, சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.

- எல்.முருகராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக