வியாழன், 2 மே, 2013

அஞ்சல் தலையில் உங்கள் ஒளிப்படம் இடம்பெற வேண்டுமா?

அஞ்சல் தலையில் உங்கள் ஒளிப்படம் இடம்பெற வேண்டுமா?

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 3) தொடங்கப்பட உள்ளது.
"எனது அஞ்சல் தலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகளை வெளியிட அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுக்க தபால்களை அனுப்பப் பயன்படுத்தலாம். "எனது அஞ்சல்தலை' தேவைப்படும் வாடிக்கையாளர்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய 12 அஞ்சல் தலைகளைப் பெற கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28543199 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக