சனி, 4 மே, 2013

5 பேருக்கு உயிர் கொடுத்த தொழிலதிபர் - மூளைச்சாவு ஏற்பட்டதால் தானம்

5 பேருக்கு உயிர் கொடுத்த தொழிலதிபர் மூளைச்சாவு ஏற்பட்டதால் தானம்


திருப்பூர்:மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து, தொழிலதிபரின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டன.திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் துணிக்கடை வைத்திருந்தவர் வெள்ளியங்கிரி, 43; இவரது தந்தை, தண்டபாணி, 77, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குடும்பத்தினர் மருத்துவமனையிலே தங்கி இருந்தனர். வெள்ளியங்கிரி, தந்தையை பார்க்க, தினமும் மருத்துவமனைக்கு, சென்று வந்து கொண்டிருந்தார்.

கடந்த 29ம் தேதி,திருப்பூர், பெரியார் காலனியில் உள்ள வீட்டில்,தனியாக இருந்த வெள்ளியங்கிரி, மயக்க நிலையில் விழுந்துகிடந்தார். உறவினர்கள் , வீட்டை உடைத்து, அவரை மீட்டு கோவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதை, கடந்த 30 ம் தேதி, டாக்டர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன் வந்தனர்.
கடந்த 2ம் தேதி அதிகாலை, சென்னையில் இருந்து வந்த, மருத்துவ குழு, உறுப்புகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டது. கிட்னிகளில் ஒன்று, கோவை மெடிக்கல் சென்டருக்கும், மற்றொன்று, ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், கல்லீரல், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், விழித்திரைகள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தானமாக வழங்கப்பட்டன.
வெள்ளியங்கரியின் சகோதரி கணவர், அருண்குமார் கூறியதாவது:உடல் உறுப்புகள் கிடைக்காமல், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 1994ம் ஆண்டு, என் சகோதரிக்கு, சிறுநீரகம் கிடைக்காமல், எட்டு மாதங்கள் அலைந்து, 25 லட்சம் ரூபாய் செலவழித்தோம். வெள்ளியங்கிரிக்கு, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டதும், உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். யாருக்கு, இந்த உறுப்புகள் பொருத்தப்படுகிறது என, தெரியாது. ஆனால், எங்கிருந்தோ ஐந்து குடும்பங்கள் வாழ்த்தும்.இவ்வாறு, அருண்குமார் கூறினார்.
வெள்ளியங்கிரியின் மனைவி பெயர் ராஜேஸ்வரி, 32; இவர்களுக்கு, சரண், 8, ஹர்சினி, 3, என குழந்தைகள் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக