தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஜூன், 2013

உடலுறவே திருமணம்தான் - தீர்ப்பு

தாலி கட்டி, மாலை மாற்றி,  தீ வலம் வந்தால்தான் திருமணமா?


கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது. தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”ற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை.இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும். அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

புதன், 1 மே, 2013

மூவருக்குப் பச்சைக்கொடி ? அசாம் கைதியின் தூக்கு ஆயுள் தண்டனையாகக் குறைப்பு - உச்ச மன்றம் அதிரடித் தீர்ப்பு

அசாம் கைதியின் தூக்கு  ஆயுள் தண்டனையாக க் குறைப்பு - உச்ச மன்றம்  அதிரடி த் தீர்ப்பு
அசாம் கைதியின் தூக்கு ரத்து: ஆயுள் தண்டனையாக குறைப்பு-சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி, மே 1-

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவருக்கு கவுகாத்தி நீதிமன்றம் 1997-ம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தது.

1990-ல் ரஞ்சன்தாஸ் என்பவரை கொலை செய்த அவர் ஜாமீனில் வந்த போது 6 ஆண்டு கழித்து ஹரகந்ததாஸ் என்பவரை கொன்றார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அசாம் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் 1999-ல் உறுதி செய்தன.

இதையடுத்து மகேந்திர நாத்தாஸ் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். 12 ஆண்டுகள் கழித்து கடந்த 2011-ம் ஆண்டு கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

கருணை மனு மீது தாமதமாக முடிவு எடுத்ததால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மகேந்திரநாத் தாஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து மகேந்திரநாத்தாசுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் 16 ஆண்டுகளாக தூக்கு கயிறை எதிர்நோக்கி இருந்த அவரது தலை தப்பியது.

ஏற்கனவே இது போல் கருணை மனு மீது ஜனாதிபதி தாமதமாக முடிவு எடுத்ததால் பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி புல்லர் தண்டனையை குறைக்க கோரி சுப்ரீம் கோட்டில் மனு செய்தான். அவன் தீவிரவாதி என்பதாலும் குண்டு வெடிப்பில் தொடர்புடையவன் என்பதாலும் அவனது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 24 ஏப்ரல், 2013

இசுடெர்லைடு ஆலை தீர்ப்புக்கு எதிராக வைகோ சீராய்வு மனு

இசுடெர்லைடு ஆலை தீர்ப்புக்கு எதிராக வைகோ சீராய்வு மனு

First Published : 23 April 2013 12:33 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் வைகோ சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி தொழிற்பேட்டையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து ம.தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997-ஆம் ஆண்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். 2010-ஆம் ஆண்டு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி விட்டன என்பன உள்ளிட்ட காரணங்களால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் வைகோ ஆஜராகி வாதாடினார். எனினும், உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சாதகமாக வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வைகோ சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்தச் சீராய்வு மனுவில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 1994-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியபோது அந்த ஆலை இயற்கை உயிரினங்கள் வாழ் பகுதியில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. மன்னார் வளைகுடாப் பகுதி, தேசிய கடல் பூங்கா என்பதால் இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதியாகும். 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் ஆலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் வான் தீவும், 7 கி.மீ. தூரத்தில் கசாவர் தீவும் 15 கி.மீ. தூரத்தில் கரைச்சில்லி மற்றும் விலாங்குச்சில்லித் தீவுகள் இருக்கின்றன. அதனால் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனையை மீறியது. காற்று மாசுபடுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் நீர் மாசுபடுத்தல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் ஆலை நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது சட்டக் கட்டாயம். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை 01.10.2007 முதல் 18.09.20909 வரை சுமார் இரண்டு ஆண்டுகள் சட்டப்படி ஒப்புதலைப் பெறாமலேயே அதே போலவே 01.04.2009 முதல் 13.08.2009 வரை நான்கு மாதங்களும், 01.01.2010 முதல் சட்டப்படி ஒப்புதல் பெறாமலேயே ஆலையை இயக்கி வந்துள்ளது. அவ்வாறு ஆலை இயங்கியது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியபோது 250 மீட்டர் அகலத்தில் ஆலையைச் சுற்றி பசுமை அரண் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த நிபந்தனை ஒரே வாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் 25 மீட்டராகக் குறைக்கப்பட்டது. ஆனால், ஆலை தொடங்கி பல ஆண்டுகள் ஆன பின்னும் 2012-இல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆலையை ஆய்வு செய்த ‘நீரி’  அமைப்பு 25 விழுக்காடு பசுமை அரண் அமைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தன்னிடம் 172.17 ஹெக்டேர் நிலம் இருப்பதாகச் சொல்லி உள்ளது. இதில் 25 விழுக்காடு நில அளவு 43.04 ஹெக்டேர் ஆகும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை 26 ஹெக்டேர் அளவில்தான் பசுமை வளாகம் அமைத்துள்ளது. இன்னும் 17.04 ஹெக்டேர் பசுமை வளாகம் அமைக்கப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த 25 விழுக்காடு பசுமை வளாகத்தை ஸ்டெர்லைட் ஆலை இன்றுவரை அமைக்கவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை ஆஸ்திரேலியாவில் இருந்து மூலப் பொருளாக தாமிர அடர்த்தியை இறக்குமதி செய்கிறது. அந்த மூலப் பொருள்களில் யுரேனியம், ஆர்சானிக், பிஸ்மத், ஃபுளோரின் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களும் சேர்த்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. யுரேனியம் என்ற பொருளைக் கையாளுவதற்கு உரிய சட்ட அனுமதியை ஸ்டெர்லைட் ஆலை பெற்றிருக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் நச்சு மாசுப் பொருள்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறியதையும், அதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டதையும் கருத்தில் கொண்டுதான் ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது ஆலை 29.09.2010-இல் மூடப்பட்டு விட்டதையும் ஆலையை நடத்துவதற்கான சட்டப்படியான ஒப்புதலைப் பெறாமல் இருந்ததையும் மறைத்து வழக்கு தொடர்ந்து உள்ளது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உண்மையை மறைத்தும், திரித்தும் மேல் முறையீடு செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட பின்பும் இந்த ஆலையில் 1,300 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்; தூத்துக்குடி துறைமுகத்தில் 10 விழுக்காடு வர்த்தகத்தை ஸ்டெர்லைட் ஆலை தருகிறது; மத்திய, மாநில அரசுகளுக்கு வருமான வரியாகவும், ‘வாட்’ வரியாகவும், சுங்க வரித் தீர்வையாகவும் பெருமளவில் செலுத்துவதால் ஆலையை மூடத் தேவையில்லை என்று கூறி ஆலையை நடத்த அனுமதியளித்து தீர்ப்பளித்தது.
சில சட்டபூர்வமான வினாக்களுக்கு விடை காண வேண்டி உள்ளது.
காற்று மாசுத் தடுப்புச் சட்டம் பிரிவு 21-இன் கீழும், நீர் மாசுத் தடுப்புச் சட்டம் பிரிவு 25-இன் கீழும் ஆலையை நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமா? அல்லது சாதாரண நடைமுறையா?
ஆலையை அமைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தபோது 25 கி.மீ. இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதிக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஆலையில் இருந்து எந்தக் கழிவும் வெளியேற்றப்படவில்லை என்று ஸ்டெர்லைட் ஆலை கூறியதால் அந்த நிபந்தனை தளர்த்திக் கொண்டது சரியா?
மன்னார் வளைகுடாப் பகுதி இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதி என்று திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போது வன விலங்குகள்  சட்டத்தின்கீழ் அரசு அறிவிக்கை  கொடுத்தால் மட்டுமே இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதியாக மன்னார் வளைகுடாப் பகுதியை ஏற்றுக் கொள்ள முடியும் என்றால் சரியா?
1998, 1999, 2003, 2005 ஆண்டுகளில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த ‘நீரி’ அமைப்பு (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம்) கொடுத்த ஆய்வு அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தியுள்ளது என்று கண்டறிந்த பின்பும், இழப்பீடு தொகை செலுத்தினால் ஆலையை இயக்கலாம் என்றால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க இயலுமா?
உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட தீர்ப்புகளை வழங்கும்போது ஓர் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தினாலும் அதிகமான வரியை அரசுக்குச் செலுத்துகிறது; ஒரு பொருளைப் அதிகமாக உற்பத்தி செய்து வணிக வாய்ப்பை அதிகரிக்கின்றது; பொருளாதாரம் மேம்பாடு அடைகிறது என்பன போன்ற நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாக்க முடியும்?
ஸ்டெர்லைட் ஆலை உண்மைகளை மறைத்தும் பொய்யானதாகவும் மேல்முறையீட்டைச் செய்திருப்பது உண்மைதான் என்பதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் முன்னுதாரணத் தீர்ப்புகளின்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கைத் தள்ளுபடி செய்யாமல் அந்த ஆலையின் வணிகத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஆலைக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்திருப்பது சட்டத்தின் பார்வையில் ஏற்புடையதா?
என்ற வினாக்களையும் எழுப்பி உள்ளார்.
இவ்வாறு மனு வைகோ, உச்ச நீதிமன்றம் 02.04.2013 அன்று அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் 28.09.2012 அன்று ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சனி, 3 நவம்பர், 2012

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

First Published : 03 November 2012 02:54 PM IST
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது தீர்ப்பாயம்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

இந்திய அமைதிப்படைக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்: விரைவில் தீர்ப்பு

காங்கோவில் பணியாற்றிய இந்திய அமைதிப்படைக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்: விரைவில் தீர்ப்பு
காங்கோவில் பணியாற்றிய இந்திய அமைதிப்படைக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்: விரைவில் தீர்ப்பு
புதுடெல்லி, அக்.23-

1997 - 1999 ம் ஆண்டு வரை காங்கோ நாட்டில் உள் நாட்டுப் போர் நடைபெற்றது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபை தலைமையின் கீழ் பணியாற்ற இந்திய அமைதிப்படையின் 4000 ராணுவ வீரர்கள் சென்றனர். கடந்த 2007 - 2008 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 6 சீக்கியப் பட்டாளியன்கள் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இது குறித்து விசாரணை நடத்த பிரிகேடியர் தலைமையின் கீழ் ஒரு கலோனல் விசாரிக்க ஐ.நா. உத்தரவிட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடிவடைந்த நிலையில், அது குறித்து தீர்ப்பை கலோனல் விரைவில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2010 ம் ஆண்டு மேஜர் ஒருவர் காங்கோவில் உள்ள ஒரு ஹோட்டலில், பாலியல் தொழிலாளர்களுடன் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வியாழன், 29 செப்டம்பர், 2011

வாச்சாத்தி வழக்கு: 17 பேருக்குக் கடுங்காவல்; 215 பேரும் குற்றவாளிகள்- பரபரப்பு தீர்ப்பு

வாச்சாத்தி வழக்கு: 17 பேருக்கு கடுங்காவல்; 215 பேரும் குற்றவாளிகள்- பரபரப்பு தீர்ப்பு

First Published : 29 Sep 2011 12:35:56 PM IST

Last Updated : 29 Sep 2011 04:40:25 PM IST

தருமபுரி, செப்.29: 19 ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த வாச்சாத்தி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி குமரகுரு அறிவித்துள்ளார். இதில் வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி குமரகுரு இதர வழக்குகளை விசாரித்துவிட்டு 11 மணியளவில் வாச்சாத்தி வழக்கை விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து குற்றவாளிகளின் கருத்தைக் கேட்டார்.அவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் குற்றவாளிகள் அல்ல. சம்பவம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டனர்.இதைத்தொடர்ந்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே அரசு ஊழியர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதுவே அவர்களுக்கு பெரிய தண்டனை என்றும் தெரிவித்தனர்.மேலும் அரசு ஊழியர்களான அவர்கள் அரசுப் பணியைத் தான் செய்தனர். இந்த வழக்கு சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பானது என்பதால் இதில் வழங்கப்படும் தீர்ப்பு சந்தனக் கட்டை கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்று தெரிவித்தனர்.இந்த வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 155 பேர் வனத்துறை அலுவலர்கள். 108 பேர் போலீஸ்காரர்கள். 6 பேர் வருவாய்த் துறை ஊழியர்கள். அவர்களில் 54 பேர் மரணமடைந்துவிட்டனர்.இந்த வழக்கின் விவரம்:தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக் கிராம‌‌ப் பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறையினருக்கு புகார் வ‌ந்தது தொடர்பான விசாரணையின்போது சந்தன கட்டை கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று வாச்சாத்தி கிராம பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய கூட்டுக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் உள்பட மொத்தம் 133 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வாச்சாத்தி பகுதியில் கூட்டுக்குழுவினர் சோதனை நடத்தியபோது மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை, காவல்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கிராம மக்கள் தரப்பில் பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை 1992-ம் ஆண்டு ஜூன் 22-‌ம் தேதி அரூர் காவ‌ல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவை விசாரித்த உ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்ற‌ம், வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக் குழுவினர் சோதனையின்போது நடந்தது என்ன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் த‌‌மிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென்மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தியது. இந்த குழுவின் அறிக்கை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்யப்பட்டதை‌த் தொடர்ந்து இந்த தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ன்பே‌ரி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின‌ர்.இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 17-‌ம் தேதி இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.இந்த நிலையில் வாச்சாத்தி சம்பவத்தின்போது தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்த ஆட்சியர், மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர், உதவி ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சா‌ற்றப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தருமபுரி அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனுவை ‌நீ‌திம‌ன்ற‌ம்‌ ‌நிராக‌ரி‌த்தது. இது தொடர்பாக சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் ‌நிராக‌ரி‌க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது.பின்னர் வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்தில் கடந்த ஜூலை 5-‌ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துவந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. மற்றும் குற்றம்சா‌ற்றப்பட்டவர்கள் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.
கருத்துகள்

ADMK செய்தது தவறென்றால், இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படிருக்கும் அதிகாரிகளுக்கு ஊதிய /பதவி உயர்வுமளித்த திமுக் ஆட்சியை என்ன சொல்வது?ஒருவரையாவது கருணாநிதி சஸ்பெண்டு செய்தாரா?அல்லது இந்த வழக்கை துரிதபடுத்தினாரா ?(வழக்குநடந்த 18 ஆண்டுகளில் 10ஆண்டு திமுக ஆட்சி!வழக்கு நடத்திய CBIகூட திமுக கூட்டணி மந்திரிசபையின் கீழ்).ஆகமொத்தம் தேர்தல்முறைகேடுகளுக்கு அதிகாரவர்க்கத்தின் துணை தேவை என்பதால் கழகங்களும் அரசுஅலுவலர்களின் அராஜகங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றன!இப்போதும் கூட அப்பீலில்,அரசு இவர்களைத் தப்பிக்கவிட முழுமுயற்சி செய்யப்போவது உறுதி!கழகங்களோ, காங்கிரசோ வாச்சாத்தி விவகாரத்திற்காகப் போராட்டம் நடத்தியதில்லை!நாட்டினை சீரழிக்கும் கிரிமினல் அரசியல்வாதிகள்-அலுவலர்கள்- போலீஸ்- கேடிகள் கூட்டணியை அழித்தொழிக்க அனைவரும் கை கோர்ப்போம்!
By மணி
9/29/2011 4:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *