கல்லுரி செய்முறை, தேர்வுகள் ஆங்கிலத்தில்தான்
இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக வந்த
செய்தியை அடுத்து அரசின் இந்த முயற்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்
தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் 10-5-2013 அன்று தமிழகச்
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது “கடந்த கல்வி
ஆண்டில், 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தலா
இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு
அதில் 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, வரும்
கல்வி
ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி
வகுப்புகள் தொடங்கப்படும்.
இதனால் ஆண்டுக்கு 1.5 இலட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர்” என்று அறிவித்திருந்தார்.
தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள்
ஆகியவற்றில் ஆங்கில மொழிக் கல்விக்கு நடைபாவாடை விரித்திடும் அ.தி.மு.க.
அரசின் பிற்போக்கான நடவடிக்கையைக் கண்டித்து 14-5-2013 அன்று “தூங்கும்
புலியை இடறுகிறார்கள்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கை விடுத்திருந்தேன்.
தமிழ் வழிக் கல்விக்கு முற்றிலும் எதிராக அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு
வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டிலிருந்து அனைத்துக்
கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அசைன்மெண்ட்” மற்றும் தேர்வுகளையும்
ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும்; தமிழில் எழுதக் கூடாது; என்று அ.தி.மு.க.
அரசு தற்போது உத்திரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை அடுத்து கல்லூரிகளில்
அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் ஏடுகளில் செய்தி
வெளியானது. இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு
மிகவும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஒருசிலர் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தால், வேலை வாய்ப்புக்கு அது
உதவிகரமாக இருக்குமென்ற ஒரு வாதத்தை வைக்கிறார்கள். உலகின் பல்வேறு
நாடுகளில் ஆங்கிலம் வழக்கு மொழியாகக் கூட இல்லை. ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான்,
சீனா போன்ற பல நாடுகளில் அந்த நாட்டு மொழிகள் தான் ஆட்சி மொழியாகவும்,
பயிற்று மொழியாகவும் விளங்குகின்றன. எனவே அ.தி.மு.க. அரசு, அனைத்துப்
பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் என்று பேரவையில் அறிவித்து விட்டு,
தற்போது தமிழ்நாட்டில், கல்லூரி தேர்வுகளில் தாய்மொழி தமிழுக்கே இடமில்லை,
எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டுமென்று பிடிவாதமாக உத்தரவின் மூலம்
நிறைவேற்ற நினைப்பது “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்”
என்பதைப் போலத்தான் இருக்கிறது. தமிழின மாணவர்களிடையே பாகுபாட்டினை
ஏற்படுத்தும் அரசின் இந்த முடிவுகள் கடும் கண்டனத்திற்குரியவை.
- என்று கூறியுள்ளார்.
தமிழுக்கு இடம் இல்லையா?கருணாநிதி கண்டனம்
சென்னை:கல்லூரிதேர்வுகளிலும், தமிழுக்கு இடம் இல்லையா'
என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து,
அவரது அறிக்கை:
தமிழ் வழிக்கல்விக்கு முற்றிலும் எதிராக,
அ.தி.மு.க., அரசு மேற்கொண்டு வரும், நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும்
கல்வி ஆண்டிலிருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்'
மற்றும்தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும்; தமிழில் எழுதக் கூடாது
என, உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவை அடுத்து, கல்லூரிகளில்
அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஒரு சிலர், ஆங்கிலம் பயிற்று மொழியாக
இருந்தால்,வேலை வாய்ப்புக்கு அது உதவிகரமாக இருக்கும் என, ஒரு வாதத்தை
வைக்கின்றனர்.உலகின் பல்வேறு நாடுகளில், ஆங்கிலம் வழக்கு மொழியாகக் கூட
இல்லை. ரஷ்யா, ஜெர்மன், ஜப்பான், சீனாபோன்ற பல நாடுகளில், அந்நாட்டு
மொழிகள் தான், ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், விளங்குகின்றன.
எனவே,
அ.தி.மு.க., அரசு அனைத்துப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் என,
சபையில் அறிவித்து விட்டு, தற்போது தமிழகத்தில், கல்லூரிதேர்வுகளில்,
தாய்மொழி தமிழுக்கே இடமில்லை; எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்கவேண்டும்
என, பிடிவாதமான உத்தரவின் மூலம், நிறைவேற்ற நினைப்பது, "ஒட்டக்கூத்தன்
பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதைப்போலத் தான் இருக்கிறது. தமிழின
மாணவர்களிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தும், அரசின் இந்த முடிவுகள், கடும்
கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.