child labour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
child labour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜூன், 2012

குழந்தைத் தொழிலாளர் முறை

குழந்தைத் தொழிலாளர்களைக்  காப்பாற்ற வேண்டும. எனவே, தலைப்பிலும் செய்தியிலும் குழந்தைத் தொழிலாளர் மு‌றை ஒழிப்பு எனக் குறிப்பிடுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ப் பேரணி
லால்குடியை அடுத்த புள்ளம்பாடி பேரூராட்சி, அனைவருக்கும் கல்வி இயக்கம், மற்றும் பள்ளிகளின் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.
 
பேரணியை புள்ளம்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் நடராசன் கொடியை அசைத்து தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ், செயல் அலுவலர் முருகேசன், துணைத் தலைவர் ஆனந்திமுருகேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ்குமார், எஸ்.எஸ்.ஏ பயிற்றுனர் விவேகானந்தன், கண் காணிப்பாளர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர்கள் ஆல்பர்ட்,(டி.இ.எல்.சி) பத்மாவதி,(கி.பள்ளி)விமலா (மே.பள்ளி) கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
 
இப்பேரணியில் அருண கிரி, சிறப்பு ஆசிரியர்கள் வாசுதேவன், ரூபி, நிஜாம், கல்விக் குழுத்தலைவர்கள் சித்ரா, தியாகு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Wednesday, June 13,2012 03:56 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும. எனவே, தலைப்பிலும் செய்தியிலும் குழந்தைத் தொழிலாளர் மு‌றை ஒழிப்பு எனக் குறிப்பிடுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
Wednesday, June 13,2012 03:10 PM, குடிமகன் said: 0 0
குழந்தைகலை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு ஏன் அனுப்பறான் என்றால் அவன் சம்பாத்தியம் டாஸ்மாக் கடைல குடுப்பதற்கே சரியகிடும்போது எப்படி வீட்டுக்கு பணத்தை எடுத்துக்கொண்டு போகமுடியும்.குடும்பங்களை நிர்கதியாக்கும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.


திங்கள், 19 மார்ச், 2012

children in bars

 குடி மையங்களில் தொடு உணவு பரிமாறும் சிறுவர்கள் : எதிர்காலம் கேள்விக்குறி



குடி மையங்களில் தொடு உணவு பரிமாற சிறுவர்களை பணியில் ஈடுபடுத்து வருவது அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில், 600க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன. இதில், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர், வாடிக்கையாளர்களுக்கு மது வாங்கி கொடுத்தல், தொடு உணவு பரிமாறுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும், 8ம் வகுப்பை தாண்டாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.

குடி மையத்தில் தஞ்சம்:குடும்ப வறுமையால் தான் குடி மையத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என, சிறுவர்கள் கூறுகின்றனர். இவர்களின் கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அப்பா வருமானம் போதவில்லை; அதனால் ஊத்திக் கொடுக்கும் வேலைக்கு வந்து விட்டோம் என, பலர் தெரிவிக்கின்றனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முறையான கவனிப்பு இல்லாததால் பலர் குடி மையத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

குடிக்கு அடிமை:வேலை கிடைத்தால் போதும் என வரும் சிறுவர்கள் , பிறர் குடித்து வைத்துச் சென்ற பாட்டில்களை வடித்து ருசி பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். 24 மணி நேரமும் மிதமான போதையில் இருப்பவர்களும் உண்டு. எதிர்காலம் குறித்த எந்த கவலையும் கிடையாது.

குடி மையங்களில் பணியாற்றும் சிறுவர்கள் பற்றி ஆய்வு நடத்தும் அறிவழகன் கூறியதாவது:குடி மையங்களில் மீசை முளைத்திடும் பருவத்தில் உள்ள சிறுவர்கள் அதிகம் உள்ளனர். ஐந்துக்கும், 10க்கும் பிச்சைக்காரர்கள் போல் கையேந்தி நிற்கின்றனர். பழங்குடியினர், நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வரும் சிறுவர்கள் அதிகமாக உள்ளனர்.இவ்வாறு அறிவழகன் கூறினார்.

சென்னை குடி மையங்கள் ஆய்வு நடத்தியவரின் பார்வையில்...
* 6,00க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன.
* ஒரு மையத்தில் இரு சிறுவர்களாவது ஊத்திக் கொடுக்கின்றனர்.
* கல்வியறிவு பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
* வீட்டை விட்டு வெளியேறி வழி தெரியாமல் தஞ்சம் அடைவோரும் உண்டு.
* குடும்ப வறுமையால் பணியாற்றும் சிறுவர்களும் உண்டு.
* பெற்றோரே குழந்தைகளை அடகு வைத்துள்ளதும் உண்டு.
* பெற்றோர் பிரிந்ததால் ஆதரவற்ற சிறுவர்களும் உள்ளனர்.
* பொய் சொல்லி விட்டு வேலை செய்யும் சிறுவர்கள் அதிகம்.

- ஆர்.மோகன்ராஜ் - தினமலர்

செவ்வாய், 8 ஜூன், 2010

குழந்தைத் தொழிலாளரை ஒழிப்பதற்கான நாளன்று. அவர்களைத் தொழிலில் இருந்து மீட்டு வாழ வைக்க வேண்டியதற்கான விழிப்புணர்வு நாள். எனவே, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் எனக் குறிப்பிட வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++
"மாத்தி யோசி' என்பது இது தானோ தேதி தெரியாமல் உறுதிமொழி எடுத்தது












பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,03:17 IST

சேலம்: "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்' என்றைக்கு எனத் தெரியாமல், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுத்து புதுமை(!) படைத்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 11 மணிக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்படுவதாவும், இதில் அனைத்து பிரிவு ஊழியர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், எனவும் அறிவிக்கப்பட்டது. குழந்தை தொழிலை ஒழிக்கும் உறுதி மொழி எடுப்பதற்காக, அரசு மருத்துவமனை டாக்டர்களும், அனைத்து பிரிவு ஊழியர்களும் நேற்று காலை 10.30 மணிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் கூடி, கண்காணிப்பாளர் டாக்டர் மோகனுக்காக காத்திருந்தனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் ஆய்வை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக வந்து சேர்ந்தார் கண்காணிப்பாளர் மோகன். பின், நர்ஸ் பயிற்சி பள்ளி மாணவிகள், டாக்டர்கள், நர்ஸ்கள் ஒன்று கூடி, "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின' உறுதி மொழியும் எடுத்தனர்.
இதற்கிடையே, சில விவரமான மருத்துவமனை ஊழியர்கள், ஜூன் 11ம் தேதி தான் "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்' என்பதை கண்காணிப்பாளர் மோகனிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு, "குழந்தை தொழில் ஒழிப்பு உறுதி மொழி எடுத்தது குறித்த செய்தி மற்றும் படங்களை பிரசுரிக்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார். எதை கணக்கில் கொண்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது என்பதும், இந்த விஷயத்தில் எங்கே குழப்பம் ஏற்பட்டது என்பதும் மருத்துவமனை நிர்வாகத்திற்கே வெளிச்சம்.