AIR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AIR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜூன், 2012

aero charger for cell: அலைபேசி மின்னேற்றத்திற்குக் காற்றிலிருந்து மின்திறன்

சொல்கிறார்கள்

"தொலைத் தூரப்பயணங்களுக்கு...'

காற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து, மொபைல் போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ள ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பீட்டர் ஜான்: இன்றைய நிலையில், மிக அத்தியாவசியத் தேவையான மொபைல் போன்களை, நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக, சார்ஜ் செய்ய முடியாமல் போகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே, நான் காற்றிலிருந்து மின்சாரம் உருவாக்கி, அதன் மூலம் மொபைல் போன் சார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த மொபைல் போன் சார்ஜர் கருவியை, பயணத்தின் போது ஜன்னல் ஓரம் வைத்தால், உள்ளே வரும் காற்று, விசிறியை சுழல வைக்கும். அந்த விசிறி, மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுழல வைக்கும்.டைனமோ சுற்றுவதால், "ஏசி' மின்சாரம் உற்பத்தியாகிறது. மொபைல் போனை, "டிசி' மின்சாரம் மூலமே, சார்ஜ் செய்ய முடியும். இதையடுத்து கிடைக்கும், "ஏசி' மின்சாரத்தை, "டிசி' மின்சாரமாக மாற்ற, சிறிய டையோடை பயன்படுத்தியுள்ளேன்.இக்கருவி, வாகனங்களில் வெகுதூரம் பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை தயார் செய்ய, அதிகபட்சமாக, 350 ரூபாய் வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ, தகடால் ஆன விசிறி, டையோடு, ஒயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களைக் கொண்டு, இதைத் தயாரிக்கலாம். சில மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கு, ஐந்து வோல்ட் மின்சாரம் தேவைப்படுவதால், அதற்காக தற்போது சில மாறுதல்களைப் புகுத்தி வருகிறேன்.தற்போது, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பேட்டரி மூலம் இயங்கும், இரு சக்கர வாகனங்களுக்கு, சார்ஜ் தீர்ந்து போனாலும், காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்கி, பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்து வருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பிற்கு அதிக செலவு ஆவதால், அரசிடம் இருந்து ஊக்கத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.


புதன், 19 அக்டோபர், 2011

இலக்குவனார் இலக்கிய இணையம், சென்னை
இணைந்து நிகழ்த்தும்
டாக்டர் சி. இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்
நாள்: 29.9.2011                                                                                காலை 10.00 மணி

தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.

தமிழால் வாழ்ந்தோர் பலர்; தமிழுக்காக வாழ்ந்தோர் மிகச் சிலர். அம்மிகச் சிலருள் ஒருவரான பேராசிரியர் சி. இலக்குவனார் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த ஆராய்ச்சியாளர், மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பேராசிரியர், உணர்ச்சிக் கவிஞர், எழுச்சியூட்டும் இதழாளர், தமிழினப் போராளி எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர். தமிழின் இரு கண்களாக இலங்கும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் நுட்பமாய் ஆய்வுசெய்து அறிவுலகிற்கு வழங்கியவர். இவர் ஆற்றிய பல்வேறு பணிகளுள் எக்காலத்தும் நிலைத்த புகழ் தருவதாய்த் தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதாய் அமைந்தது அவரது தொல்காப்பிய ஆராய்ச்சியேயாகும். தொல்காப்பியத்தின் அருமைபெருமைகளைப் பிறமொழி அறிஞர்கள் உணரவேண்டுமென்கிற உயரிய நோக்குடன் அதை ஆங்கிலத்தில் செம்மையாக மொழியாக்கம் செய்திருப்பதுடன் மொழியியல் பார்வையில் ஆழமும் விரிவும் பொருந்தியதொரு திறனாய்வையும் வழங்கியிருப்பது அவரது விரிந்த நூலறிவையும் புலமைசார் ஆய்வு அணுகுமுறையையும் பல்லாண்டுக் கடும் உழைப்பினையும் புலப்படுத்தி நிற்கின்றன.


தொடர்ச்சி காண்க   :




வெள்ளி, 30 செப்டம்பர், 2011

இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம் -ஒளிப்படங்கள்

டாக்டர். சி.இலக்குவனார் 

நூற்றாண்டு உரையரங்கம்

பதிவு செய்த நாள் : 30/09/2011


நேற்று காலை “இலக்குவனாரின் பன்முக ஆளுமை” என்னும் தலைப்பில் இந்திய ஒலிபரப்பு நிறுவனம் – அகில இந்திய வானொலி நிலையம் – மாநிலக் கல்லூரி – இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்திய  முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்க ஒலிப்படங்கள்








இந்த உரையரங்கின் ஒலிப்பதிவினை 18/10/2011 இரவு 10மணி முதல் தமிழகத்திலுள்ள  அகில இந்திய வானொலி நிலையங்கள் அனைத்தும் ஒலிபரப்பும்.


http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-1.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-2.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-3.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-4.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-5.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-6.jpg
0