ஞாயிறு, 9 டிசம்பர், 2012

ஒப்படைப்பதுதான் வாழ்க்கை

சொல்கிறார்கள்

"அருப்பணிப்பது தான் வாழ்க்கை!'


பின் தங்கிய கிராமங்களை மேம்படுத்துவதில், தன்னை ஈடுபடுத்தியுள்ள, நெல்லை மாவட்டம், புளியரை, "டி.கேர் நர்சிங் கல்லூரி' முதல்வர், கணேசன்: என் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த புதுக்குடி. நான், விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே கஷ்டப்படும் பின்னணி.

கேரளாவில், இரண்டாண்டு வேலை செய்து, சம்பாதித்த பணத்தில் தான், கல்லூரியில் சேர்ந்தேன். பெட்டிக் கடை நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தில், கல்லூரி செலவுகளை சமாளித்தேன். இப்படி, கஷ்டப்பட்டு, பி.எஸ்சி., பட்டதாரி ஆனேன்.எனக்கு, சிறு வயதிலிருந்தே, சுற்றுப்புறச் சூழலில் ஆர்வமுண்டு. நாம் வசிக்கும் கிராமம், வசிப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையேல், வசிக்க ஏற்றதாக, அதை, நாமே மாற்ற வேண்டும் என்பது, என் கொள்கை.

வளர்ந்தோம், படித்தோம், வேலையில் சேர்ந்தோம் என்றில்லாமல், மக்களுக்காக, வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான், என் வாழ்க்கை என, முடிவெடுத்தேன்.விடுமுறை நாட்களில், கிராமம் தோறும் பயணிப்பேன். எந்த கிராமம், சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது என்று கவனிப்பேன். அங்கிருக்கும் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் பேசி, சுகாதாரக்கேட்டை சுட்டிக்காட்டி, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன்.

நீர்நிலைகளை தூர் வாருவோம்; வேண்டாத குப்பையை செடி கொடிகளை அப்புறப்படுத்துவோம்; குப்பையை ஒழுங்காக, அதற்குரிய இடங்களில் போடுமாறு, வீடு வீடாகச் சென்று கேட்டுக் கொள்வோம். சாக்கடை, கழிவுநீர்ப் பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம், சரிசெய்யும் படி கேட்டுக் கொள்வேன். கிராம சுகாதாரத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவோம்.பாவூர்சத்திரம், சுரண்டை, செங்கோட்டை உட்பட, ஏறக்குறைய, 80 கிராமங்களில், இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக