வெள்ளி, 14 டிசம்பர், 2012

"லிம்கா அருவினையில் இடம் பெற்றேன்!

சொல்கிறார்கள்


"லிம்கா சாதனையில்இடம் பெற்றேன்!'
டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும் பூங்கொடி: என் சொந்த ஊர், ஈரோடு. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். 18 வயதில் திருமணம் முடிந்தது.என் கணவர், மில்லில் மெக்கானிக் வேலை செய்பவர். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில், ஒயர் கூடை பின்னுவது, இட்லி மாவு அரைத்து விற்பது, வீட்டில் இருந்த படி, அரிசி வியாபாரம் செய்வது என, சின்ன சின்ன வேலைகளைப் பார்த்தேன்.இது, ஆரம்பக்கால, மண வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்தது.ஆரம்பத்தில், என் கணவரின் டி.வி.எஸ்., 50 வண்டியை மட்டும் ஓட்டுவேன். கார் டிரைவிங் மேல் விருப்பம் இருந்ததால், அதையும் கற்றுக் கொண்டேன்.லைசென்ஸ் எடுக்க, திருச்சி, ஆர்.டி.ஓ., ஆபீஸ் போன போது, பெண்கள், கார் ஓட்ட ஆர்வமாக இருக்கின்றனர்; ஆனால், சொல்லித் தருவதற்கு தான், ஆட்கள் இல்லை என்பது தெரிந்தது.உடனே, "நாம் ஏன், பெண்களுக்கென்று, ஒரு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கக் கூடாது?' என யோசித்து, கணவரிடம் கேட்டேன். ஒரு டிரைவிங் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்து, பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதை, மற்றவர்களுக்கும் சொல்லித் தர வேண்டும் என நினைத்தேன்.நண்பர்கள் உதவியுடன், 2005ல், டிரைவிங் ஸ்கூல் துவங்கினேன். வீட்டிலேயே ஆபீஸ் அமைத்து, "பியட்' காரை, குறைந்த விலைக்கு வாங்கினேன். முதலில், என் குழந்தைகள் இருவரையும், ஸ்கூலில் கொண்டு போய் விட்டு வந்தேன். பின், ஸ்கூல் ட்ரிப் அடிக்க ஆரம்பித்தேன்.ஸ்டிமிலேட்டர் (வீடியோ கேம் விளையாடுவது) மூலம் டூவீலர், போர்வீலர் என, டிரைவிங்கில் அத்தனை விஷயங்களையும் சொல்லித் தருகிறேன். இதுவரை, 4,000 பெண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன்.லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன். மும்பையில் உள்ளது போல, பெண்களே ஓட்டும் கால் டாக்சியை, திருச்சியில் நிறுவ வேண்டும் என்பது, என் கனவாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக