செவ்வாய், 11 டிசம்பர், 2012

சொல்கிறார்கள்.

சொல்கிறார்கள்.

தமிழகத்தின், விளையாட்டு விடிவெள்ளி, மாலதி: என் சொந்த ஊர் கோயம்புத்தூர். படிக்கும் போது, சீனியர்ஸ், வாலிபால் விளையாடுறதை வேடிக்கை பார்த்து, விளையாட்டில், ஆர்வமும், ஆசையும் வந்தது. பி.இ.டி., ஆசிரியையிடம், என் ஆசையைச் சொன்னேன். அவர் தந்த பயிற்சியால், மாவட்ட அளவில், வாலிபால் போட்டியில் சிறப்பாக விளையாடி, மாநில அளவிலான அணியில் இடம் பிடித்தேன்.அதன்பின், பி.காம்., படிக்கும் போது, பால் பேட்மின்டன் கத்துக்கிட்டு, கல்லூரி, "டீம்ல' இடம் பிடித்தேன். "சப்ஸ்டிட்யூட்டா' விளையாடிட்டு இருந்த நான், இறுதி ஆண்டில், "மெயின் பிளேயர்' ஆனேன். பாரதிதாசன் பல்கலை அணியோட விளையாடி பெற்ற வெற்றி, பால் பேட்மின்டன்லயும் மாநில அளவில் இடம் வாங்கிக் கொடுத்தது.சென்னை, பொறியியல் கல்லூரியில், எம்.பி.ஏ., படிக்க, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில், இடம் கிடைத்தது.கடந்த ஆண்டு, ஆந்திராவில் நடந்த, பால் பேட்மின்டன் போட்டி தான், நான் முதன் முதலில் கலந்து கொண்ட, தேசிய அளவிலான போட்டி. அதில், தமிழக அணி, மூன்றாவது இடம் பிடித்தது. அதில், சிறப்பாக விளையாடியதற்காக, "சியர் இந்தியா' விருது, எனக்கு கிடைத்தது.இந்தாண்டு, கர்நாடகாவில் நடந்த தேசிய அளவிலான, பால் பேட்மின்டன் போட்டியில், வலிமை வாய்ந்த அணியை எதிர்த்து விளையாடிய போது, கையில் அடிபட்டு விட்டது.எல்லாரும், "சப்ஸ்டிட்யூட்' கொடுத்துட்டு, ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். ஆனாலும், நான் தொடர்ந்து விளையாடினேன். தமிழக அணி முதல் பரிசு வாங்கியது. அந்தத் தொடரில், "சிறந்த விளையாட்டு வீரர்' விருது, எனக்குக் கிடைத்தது.பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும், ஒவ்வொரு பரிசு வாங்கும்போதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.ஏழாண்டுகளாக, தமிழக அணிக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறேன்.மாநில அளவில், பல வெற்றிகளை பார்த்த எனக்கு, விரைவில், தேசிய அளவில் இடம் பிடித்து, இந்தியாவிற்காக விளையாடணும் என்பதே, ஆசை!


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக