சனி, 15 டிசம்பர், 2012

வீடுகளுக்கு வெளிச்சம் தருகிறோம்!

சொல்கிறார்கள்

"வீடுகளுக்கு வெளிச்சம் தருகிறோம்!'இந்தியா - பாகிஸ்தான் போரில், மருத்துவ பணியாற்றிய, சேவை மனப்பான்மை கொண்ட பிஸ்வ குமார்: என் சொந்த ஊர், கும்பகோணம். 1962ல், மருத்துவ படிப்பை முடித்தவுடன், இந்திய ராணுவத்தில் பணியாற்றினேன்.மருத்துவமனையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்களிடம் நெருங்கிப் பழகி வைத்தியம் பார்த்ததால், சேவை மனப்பான்மை, என் ரத்தத்தில் ஊறிப் போனது."ப்ரீமேசன்ஸ்' என்ற உலகளாவிய அமைப்பில், என்னை இணைத்து கொண்டேன். இந்தியா முழுவதும் சென்று, மனிதர் களைச் சந்திக்கவும் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் பெற்றேன்.அதன் மூலமாக, 2011ல், இந்தியா முழுக்க, 58 குக்கிராமங்களை தத்துதெடுத்து, அந்த கிராம மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். "ஜோதிர்கமயா' என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம்,தமிழகத்தில் சத்திய மங்கலம், கொடைக்கானல், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள மலைவாழ் கிராமங்களுக்கும் மின் வசதி வழங்கினோம்.மலைவாழ் கிராமங்களில் நக்சல் அமைப்பை சேர்ந்தவர்கள், முதலில் எங்களை பல கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். "இரவு நேரங்களிலும், உங்கள் குழந்தைகள் படித்து டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்பதற்காகத் தான், நாங்கள் இத்தனை கஷ்டப்பட்டு வந்து, வெளிச்சம் தருகிறோம்' என்றதும், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்.கிராமங்களில் ஒளியேற்றியதோடு, எங்களது கடமை முடிந்து விடவில்லை. ஒவ்வொரு கிராமத்தின் மின்சாரத் தேவையை, தொடர்ந்து தடையின்றி வழங்க, எங்கள் அமைப்பை சேர்ந்த ஊழியர்கள், அடிக்கடி விசிட் செய்து, பாட்டரி உட்பட சோலார்கருவிகள் நன்றாக இயங்குகின்றனவா என்பதை கண்காணித்த படி இருப்பர்.சூரிய மின் சக்திக்காக அரசு வழங்க இருக்கும், மானியத் தொகையையும், இன்னும் பல கிராமங்களுக்கு பயன்படுத்த உள்ளோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக