சொல்கிறார்கள்
"ஒன்லி மோர்ஆக்ஷன்!'
"ஒன்லி மோர்ஆக்ஷன்!'
"உலக அளவில் சாதிக்கும் புலம்
பெயர்ந்த இந்தியத் தலைவர்கள்' எனும் நூலில், நான்காவது இடத்தை பிடித்துள்ள,
தமிழர் டாக்டர் ராமதாஸ்: என் சொந்த ஊர் மாயவரம் அருகிலுள்ள நல்லாடை.
விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். முறையான மருத்துவம் கிடைக்காததால் தான்,
உடன் பிறந்த சகோதரரின், உயிரை அநியாயமாக இழக்க நேரிட்டது. அப்போது, முடிவு
செய்தேன், நான், மருத்துவராகி, கிராமத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்று.
காமராஜர் கொண்டு வந்த, "மெட்ராஸ் எஜுகேஷன் ரூல்' தான், என்னைப் போன்ற
ஏழைகளுக்கு, வரப் பிரசாதமாக அமைந்தது. 1983ல், ஆப்பிரிக்கா கண்டத்தின்
அருகில் இருக்கும், செஷல்ஸ் தீவுக்கு, மருத்துவ தொழில் செய்ய சென்றேன்.
அங்கு, ஆல்பர்ட் ரெனே என்பவர் அதிபராக இருந்தார். அவர், என்னை, அந்நாட்டு
ராணுவத்திற்கு, மருத்துவம் பார்க்கும் பணியில் அமர்த்தினார். என் சேவையை
பார்த்து, ராணுவத் தலைமை மருத்துவராக உயர்த்தினார்.சீப் மெடிக்கல் ஆபீசரான
பிறகு, "பீப்புள் பார்ட்டி' கட்சியின் பொருளாளர் பதவி கிடைத்தது. கட்சியில்
இருந்து கொண்டே, ஆங்கிலத்தில் பத்திரிகை நடத்தினேன். அதில், என் சுய
கருத்துகளையும் எழுதினேன்.எனக்கு, ஜூலியா என்ற மனைவியும், ஆண், பெண் என,
இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
என் வெற்றியின் ரகசியம், "நோ வேஸ்ட் டாக்; ஒன்லி மோர் ஆக்ஷன்' என்பதே.நான்
கல்லூரியில் படித்த போது, "நான் ஏழையாகப் பிறந்தது என் தவறில்லை. ஆனால்,
சாகும்போதும் ஏழையாகவே செத்தால் தான் தப்பு' என்ற வாக்கியம் படித்தேன்.
இந்த வாக்கியம் தான், என்னை வழி நடத்தி இருக்கிறது.இன்று, 45 பன்னாட்டு
கம்பெனிகளின் அதிபதியாக இருக்கிறேன். என்னிடம், 2,000க்கும் மேற்பட்ட
வெளிநாட்டினர் வேலை பார்க்கின்றனர். பல நாட்டு தலைவர்களை
சந்தித்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக