நாகை: கழிவறையை சுத்தப்படுத்துமாறு இந்திய கடற்படை கட்டாயப்படுத்தியதாக
நாகை மீனவர்கள் கூறினர். இலங்கை விடுதலை செய்த நாகை மீனவர்களை, நாகை
கலெக்டர் முனுசாமி மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து, நடந்த
விபரங்களை கேட்டறிந்தனர். மீனவர்கள் தரப்பில் கூறியதாவது:நடுக்கடலில் மீன்
பிடித்த பேரையும், 40 பேரையும் இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று
சிறையிலடைத்தனர். அங்கு எவ்வித தொல்லையும் செய்யவில்லை. ஆனால், இந்திய
கடற்படையினரிடம் ஒப்படைத்த பின், எங்களை முகாமிலிலுள்ள கழிவறைகளை
சுத்தப்படுத்துமாறு, இந்திய வீரர்கள் கட்டாயப்படுத்தினர். இதற்கு
மறுத்ததால் இரண்டு நாள் உணவு தரவில்லை. பசி, பட்டினியுடனேயே நாகைக்கு வந்து
சேர்ந்தோம். எங்களை பாதுகாக்க வேண்டிய இந்திய ராணுவமே, எங்களை
துன்புறுத்தியது அதிர்ச்சியை அளித்தது என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக