வியாழன், 14 ஏப்ரல், 2011

No place in the voter list - Tmt. thangabalu - தங்கபாலு மனைவிக்கு வாக்குரிமை இல்லை

அனைவரையும் வாக்களிக்கச் சொல்லும் தேர்தல் ஆணையம் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அனைவர் பெயர்களும் வாக்காளர்  பட்டியலில் தவறாமல் இடம் பெற்றிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாப்பூர் தொகுதியில்   எங்கள் வீட்டிலுள்ள நால்வருக்கும்  - அடையாள அட்டைகள் இரு்பபினும் - வாக்காளர் பட்டியலில் பெயர்கள் காணாமல் போய்உள்ளன. வேறு சிலரும் இவ்வாறு தெரிவித்தார்கள். எனவே, தேர்தல் ஆணையம் இப்பொழுது முதலே அனைவர் பெயரும்  வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும் இடம் பெற்ற பெயர்கள் நீக்கப்படும் முன்னர் நீக்கப்டுவதை ஆராயவும்  உரியவர்களுக்குத்தெரிவித்து விவரம் கேட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



தங்கபாலு மனைவிக்கு ஓட்டு இல்லை


சென்னை, ஏப். 13: மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு ஓட்டு இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.சென்னை வேளச்சேரி தொகுதிக்குள்பட்ட அடையாறு காமராஜர் அவென்யூ சென்னை மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தங்கபாலு குடும்பத்தினருக்கு ஓட்டு உள்ளது.புதன்கிழமை 9 மணிக்கு மனைவி ஜெயந்தி, மகள் இந்து ஆகியோருடன் தங்கபாலு வாக்களிக்க வந்தார். தங்கபாலு அவரது மகள் ஆகியோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால், மனைவி ஜெயந்தியின் பெயர் இல்லை. அதனால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்குச் சாவடி அடையாளச் சீட்டு ஆகியவற்றை காட்டி தனது பெயர் ஏன் இல்லை என தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார் ஜெயந்தி. மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயந்தியின் வேட்புமனு உரிய ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்கவும் முடியவில்லை. இது குறித்து ஜெயந்தியிடம் கேட்டபோது, முதலில் எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்தார்கள். இப்போது எனக்கு ஓட்டே இல்லை என்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளே இதற்குக் காரணம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக