சனி, 16 ஏப்ரல், 2011

100 influenced persons - times magazine : fraud actions of mahindha

டைம்சில் மகிந்தவின் பெயர் வருவதற்காக மில்லியன் கணக்கில் பணம் அளித்த சிறீலங்கா

புகழ்பெற்ற ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய உலகின் வலிமைமிக்க நூறு தலைவர்களுக்கான கருத்துக்கணிப்பில் தனது பெயரும் இடம்பெறவேண்டும் என்பதற்காக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபச்சா இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக புலம்பெயர் நாட்டில் இருந்து இயங்கும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனா என்பவரிடமே இந்த நடவடிக்கைக்கான முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாக அது மேலும் தெரிவித்துள்ளது.
அவருக்கு உதவியாக சிறீலங்கா அரச தலைவரின் ஊடகப்பிரிவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது எனவும், இதற்கான நிதி உதவிகள் வெளிநாடுகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. நேற்று முந் தினம்(14) முடிவடைந்த இந்த மின்னஞ்சல் வாக்கெடுப்பில் மகிந்தா 28 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக