condolence லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
condolence லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜூன், 2012

செல்லூர் இராசுவின் மகன் மரணம்

அவர் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள். காலங்கடந்த பயணங்களையும் மிகு விரைவையும் தவிர்ப்பின் குடும்பத்திற்குத் துயரம்தரும் சூழல் எழாது என்பதை அத்தகையோர் உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

செல்லூர்  இராசுவின் மகன் மரணம்: செயலலிதா இரங்கல்

First Published : 25 Jun 2012 03:34:38 PM IST

Last Updated : 25 Jun 2012 04:19:29 PM IST

சென்னை, ஜூன்.25: கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி நேற்று சாலைவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் செல்லூர் ராஜூவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

வியாழன், 2 பிப்ரவரி, 2012

Saraswathy daughter of Paventhar Bharathidasan expired : பாவேந்தர் பாரதிதாசன் மகள் சரசுவதி மறைவு

பாவேந்தர் பாரதிதாசன் மகள் சரசுவதி மறைவுக்கு மலர்வணக்கம்


சரசுவதி கண்ணப்பன்(பாவேந்தரின் மூத்தமகள்,22 அகவையில் எடுக்கப்பெற்ற படம்)

பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி அவர்கள் தம் 92 ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை எய்தினார், அவரின் மறைவுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. பாவேந்தரின் மகன் திரு.மன்னர்மன்னன் அவர்கள் தலைமையில் புதுவைத் தமிழறிஞர்கள், பாவலர்கள், பெரியோர்கள் பலர் கலந்துகொண்டு மலர்வணக்கம் செய்தனர்.

பாவேந்தரின் குடும்பத்தின் சார்பில் மன்னர்மன்னன், பாரதி,செல்வம்,தென்னவன்,அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவைத்தமிழறிஞர்கள் பாவலர்மணி சித்தன், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முத்து, திரு. வி.பி.சிவக்கொழுந்து, கவிஞர் கல்லாடன், புரவலர் ந.கோவிந்தசாமி,பேராசிரியர் தெ.முருகசாமி, நந்திவர்மன், வழகறிஞர் கோவிந்தராசன், பேராசிரியர் க.இளமதிசானகிராமன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கனகராசு, முனைவர் செங்கமலத் தாயார், பாவலர் மாநி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மன்னர் மன்னன் ஐயா தம் தமக்கையாரின் சிறப்பினையும் அக்காலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திருமணச் சிறப்பு நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார்.


மன்னர்மன்னன், மு.முத்து, பாரதி,மு.இளங்கோவன், மதனகல்யாணி உள்ளிட்டோர்


மன்னர் மன்னன்,மு.முத்து,புரவலர் ந.கோவிந்தசாமி,மாநி உள்ளிட்டோர்


வி.பி.சிவக்கொழுந்து, மு.முத்து,கோ.பாரதி, வழக்கறிஞர் கோவிந்தராசு, மு.இ.

செவ்வாய், 26 ஜூலை, 2011

Actor Ravichandran died: நடிகர் இரவிச்சந்திரன் காலமானார்

என்றைக்கும் பார்க்கச் சலிக்காத காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமாகித் திரைஉலகின் வெற்றி நாயகராக வலம் வந்த இரவிச்சந்திரன் அவர்களின் மறைவிற்கு அவர்தம் குடும்பத்தாருக்கும் நேயர்களுக்கும் தினமணி நேயர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்

First Published : 25 Jul 2011 09:32:29 PM IST


சென்னை, ஜூலை 25: கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் ரவிச்சந்திரன் இன்று இரவு மருத்துவமனையில் காலமானார்.பழம்பெரும் நடிகரான அவர், டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுக படமே அவருக்கு நல்ல ‌பெயரை பெற்று தந்தது. அதிலும் அந்தபடத்தில் வந்த  "விஸ்வநாதன் வேலை வேண்டும்..." , "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா..." உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.இவர் நடித்த "அதே கண்கள்", "இதயகமலம்", "கெளரி கல்யாணம்", "குமரிப்பெண்", "உத்தரவின்றி உள்ளே வா" உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. தனக்கென தனி பாணியைப் பின்பற்றிய ரவிச்சந்திரனின் ஸடைல், அப்போதைய  கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளை வெகுவாய்க் கவர்ந்தது.பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் "ஊமை விழிகள்" படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதில் வில்லனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்தார்.சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிசிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்,அன்னாரின் வயதை குறிப்பிட்டு இருக்கலாமே ?
By சங்கரன்.புதுவை
7/25/2011 11:15:00 PM
இவர் ஒரு சிறந்த நடிகர் . இவரது இறப்பை கேட்டு மிக்க கவலை .இவரது குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த கவலையை ஈழத்து மக்கள் சார்பாக தெரிவித்துகொளுகிறேன்
By John Shiva
7/25/2011 10:36:00 PM
கனமான குரல் வளம் உடைய அற்புதமான நடிகர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இறங்கல்ல்கள். அவரது பூர்விகம் பற்றிய குறிப்புகளை வெளியிடவும்.
By ரவீந்திரன்
7/25/2011 10:35:00 PM
கனமான குரல் வளம் உடைய அற்புதமான நடிகர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இறங்கல்ல்கள். அவரது பூர்விகம் பற்றிய குறிப்புகளை வெளியிடவும்.
By ரவீந்திரன்
7/25/2011 10:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 7 ஜூலை, 2011

Scholar Sivathambi expired: மூத்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி காலமானார்

தமிழ் ஈழ ஆதரவு நிலையால் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனதுபோல் அந்த நிலையில் இருந்து திசை மாறியதால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெற்றவர். காலத்தின் கோலம் இவ்வாறிருப்பினும் சிறந்த  இலக்கியத்திறனாய்வாளர் என்ற முறையிலும் சங்கத்தமிழில் புலமை மிக்கவர் என்ற நிலையிலும்  இவரது மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில்  இரங்கலைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

 
 
 
மூத்த தமிழறிஞர் 
கார்த்திகேசு சிவதம்பி காலமானார்

First Published : 07 Jul 2011 03:28:10 AM IST


சென்னை, ஜூலை 6: இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி (79) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.  அவருக்கு மனைவி ரூபாவதியும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர் சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ் சினிமா வரை பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர்.  1932-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் "பண்டைத் தமிழகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வுகள் "பலதுறை சங்கம ஆய்வு' என்ற முறையில் அமைந்திருக்கும். பல அறிவுத் துறைகளின் துணைகொண்டு ஒரு கருத்தை நிறுவுவதில் வல்லவர்.  "தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி', "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்', "மதமும் மானுடமும்' "தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்', "இலங்கைத் தமிழர் யார், எவர்', "தொல்காப்பியமும், கவிதையும்' "தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.  சென்னைப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராக இருந்தார். உலகத் தமிழ் மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகளில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.  கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் மிகப்பெரிய விளம்பரமாக அவரது பங்கேற்பை அப்போதைய தமிழக அரசு செய்தது. இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்.  இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது, அமைதிக் குழுவில் இடம்பெற்றிருந்தார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
கருத்துகள்

ஈழத் தமிழர்கள் ரத்த ​வெள்ளத்தில் மிதக்கும் ​போதும், தமிழச்சிகள் கூட்டுப் பாலியல் ​கொடு​மைக்குள்ளாக்கப்பட்டு பிணமாக்கப்பட்ட​போதும் தமிழ்த் தா​யை வாழ​வைக்கும் ​​பொருட்டு ​​கோ​வை ​செம்​மொழி மாநாட்டில் கலந்து ​கொண்டு, க​ருணாநிதி​ பரிவாரத்​தை வாழ்த்திய கார்த்தி​கேசு கருணாநிதி தம்பி மரணமுற்றதற்காக வருந்துகி​றேன். ஜனார்த்தனன்
By ஜனார்த்தனன்
7/7/2011 4:56:00 PM
பட் கீப் சிலேன்ட் ஒன முல்லிவைக்கள் படுகொலை ஜோஇன் ஹான்ட்ஸ் வித் அண்டி பாமில் போர்செஸ்
By க.vijayakumar
7/7/2011 11:07:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 10:11:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 8:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 23 மே, 2011

Minister expired in Road accident: சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பலி

மிகவும் வருத்தத்திற்குரிய துயரச் செய்தி. அவரது குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் கட்சியினருக்கும் தினமணி  வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்கள். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சாலைவிபத்தில் அமைச்சர் பலி: எம்எல்ஏக்கள் பதவியேற்பு ஒத்திவைப்பு?
First Published : 23 May 2011 08:34:46 AM IST

Last Updated : 23 May 2011 09:19:02 AM IST
திருச்சி, மே 23: திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், வேறொரு காரில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதியும் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். கால் மணி நேர இடைவெளியில் அவர் யதேச்சையாக விபத்துக்கு உள்ளான மரியம் பிச்சையின் காரைக் கண்டு நிறுத்தி உதவியுள்ளார். உடனடியாக அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய, அங்கிருந்து அவர் திருச்சி திரும்பினார். ஆனால், சிவபதியின் காரும் விபத்துக்கு உள்ளானதாக காலையில் தகவல் பரவியது. இதை அடுத்து, தகவல் அறிந்து கொள்வதற்காக அமைச்சரிடம் தொடர்பு கொண்ட தினமணி நிருபரிடம், அமைச்சர் சிவபதி தான் நலமாக இருப்பதாகவும், தன் விபத்தில் சிக்கவில்லை, தனக்கு காயம் எதுவும் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவை செயலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், சாலைவிபத்தில் பலியான அமைச்சர் மரியம்பிச்சைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து நடத்தலாமா அல்லது வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
கருத்துகள்

May God rest his soul in peace. innalillahi va inna ilaihiraagioon.
By sulaiman
5/23/2011 9:24:00 AM
ஆழ்ந்த அனுதாபங்கள்
By vivek
5/23/2011 9:00:00 AM
It is very sad. He might have thought in his mind to do many good things for our state assuming his new responsibility. It is very unfortunate and his end should not have come in this way. Heartfelt condolence to his bereaved family and pray Almighty to rest his soul in peace and give strength to his family tobear this irreparable loss.
By Abdullah.B,Dubai
5/23/2011 8:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்

ஞாயிறு, 22 மே, 2011

Chinna kuthuusi expired: மூத்தஇதழாளர் சின்னக்குத்தூசி காலமானார்

 
சாதி, சமய வேறுபாடின்றி எக்கருத்தையும் ஆராய்ந்த இதழாளர் மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கல்கள். இளம் இதழாளர்கள் அவரைப்பின்பற்றினால் நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!  

மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி காலமானார்
First Published : 22 May 2011 10:52:12 AM IST


சென்னை, மே 22: மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77. இரா.தியாகராஜன் என்பது அவருடைய இயற்பெயர். கடந்த ஒரு வருடமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வந்தார். தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதிவந்தார். 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தவர். ராமநாதன் - கமலா தம்பதியரின் புதல்வர். திருவாரூரில் பள்ளிப்படிப்பு முடித்து, ஆசிரியர் பயிற்சி பெற்று, பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். பின்னாளில் பத்திரிகையாளராகப் பரிமளித்த அவர், பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ளார். பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் இவர்.இவரது இறுதிச் சடங்கு, இன்று (மே 22) மாலை 4 மணி அளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான, சின்ன குத்தூசி அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது மறைவு, பத்திரிக்கை உலகிற்கு இழப்பு.
By பி.டி.முருகன் திருச்சி
5/22/2011 12:08:00 PM
அடடா, நேற்றுதான் இவரை பற்றி விகடனில் படித்தேன். தி.மு.க. திருந்துவதற்கு இவர் பேனா உயரட்டும் என்று எழுதியிருந்தார்கள். கடவுளே தி.மு.க. திருந்தக் கூடாது என்று நினைத்து விட்டார் போலும்.
By Paamaran
5/22/2011 11:34:00 AM
எவ்வளவு தலைவர்களை சந்தித்த ஒரு நல்ல பத்திரிகையாளர் மறைந்து விட்டார்.பத்திரிகை உலகுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.அவர் ஆத்மா சாந்தியடையட்டும்
By vaayaadi
5/22/2011 11:25:00 AM
May rest in peace, kudos for his excellent services to the community
By RSekar
5/22/2011 11:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 16 ஏப்ரல், 2011

tamil osai editor bakkiya nathan demises - kalaignar condolence : தமிழ் ஓசை ஆசிரியர் மறைவு: கருணாநிதி இரங்கல்

ஊடகத்தில் தமிழைப் பேண வேண்டும் என்ற பா.ம.க.வின் கொள்கை நிலைப்பாட்டிற்கு உறுதுணையாக  இருந்தவர்;  மிகை முனைப்பால் பல செய்தியாளர்கள் விலகக் காரணமாக  இருந்தாலும், எந்தப் பொருண்மையானாலும் தமிழ் சார் நோக்குடன் ஆய்ந்து அறிக்கை உருவாக்குபவர்;தமிழ் ஓசை ஆசிரியர் திரு பாக்கியநாதன் மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


தமிழ் ஓசை ஆசிரியர் மறைவு: கருணாநிதி இரங்கல்


சென்னை, ஏப்.15: தமிழ் ஓசை நாளிதழின் ஆசிரியர் பாக்கியநாதன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் ஓசை நாளிதழின் ஆசிரியர் பாலா என்கிற பாக்கியநாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தவர் திடீரென நேற்று மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நல்ல வாதத் திறமையோடு அரசியல் கருத்துக்களை விமர்சிக்கக் கூடியவர் பாலா. பாமக நிறுவனர் ராமதாஸ் எதைத் தொடங்குவதாக இருந்தாலும் என்னை அழைத்துத் தான் அதனை நடத்தி வைத்திடக் கூறுவார். அதன்படி தமிழ் ஓசை நாளிதழே நான் தொடங்கி வைத்ததுதான். அந்த இதழில் என்னைப் பற்றிய விமர்சனங்களைக் கூட பாலா எழுதும்போது அவரது ஆற்றலை கண்டுள்ளேன். அவரது மறைவு ராமதாஸுக்கும், பாலாவின் குடும்பத்தினருக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 22 ஜூலை, 2010

விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்
விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்


சிட்னி, ஜூலை 21- விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு செய்யும் கருவியான கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (85) காலமானார்.1934-ல் டேவிட் வாரனின் தந்தை விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை அவர் கண்டுபிடித்தார்.1953-ம் ஆண்டு முதல் விமானங்களில் கருப்புப் பெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாரனுக்கு மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.
கருத்துக்கள்

இன்று வரையும் வானூர்திகளின் நேர்ச்சிகளை (விபத்துகளை)க் கண்டறிய பெரிதும் உதவியாக இருப்பது கருப்புப பெட்டியே. ( பலர் எண்ணுவது போல் பெட்டியின் நிறம் கருப்பு அல்ல; துயர நிகழ்வைக் கண்டறிவதால் பெற்ற பெயர் இது.)இதனை உருவாக்கிய அருந்திறலாளர் டேவிட்டு வாரன் அவர்களுக்குத் தினமணி இணைய வாசகர்கள் சார்பில் அஞ்சலி! குடும்பத்தினர் துயரத்தில் பங்கேற்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 2:48:00 AM
இதுவரை நடந்த விமான விபத்துக்கள் அனைத்திலும் பிளாக் பாக்ஸ் பற்றிய விவரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவேயில்லை, எல்லா விபத்துக்களின் சூத்திரதாரர்களும் திட்டமிட்டேக் காப்பாற்றப் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லாமே திருடஙகதான் இந்த உலகத்திலே.
By muhibb
7/21/2010 5:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *