(ilan)kovan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
(ilan)kovan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 நவம்பர், 2011

Tamil families uprooted 20 years ago not resettled in Ea'raavoor

Tamil families uprooted 20 years ago not resettled in Ea'raavoor

[TamilNet, Wednesday, 02 November 2011, 10:46 GMT]
Even though the war ended three years ago in the East, houses and lands belonging to Tamils in Ward Four of Era’voor village in the Era’voorpaththu-Chengkaladi DS division are still under the control of the occupying Sri Lankan forces in the name of High Security Zone. The villagers displaced twenty one years ago in the year 1990. The roads that lead to Tamil settlements located 16 km off Batticaloa city along Batticaloa-Vaalaichchenai highway still remain blocked. SL Resettlement Ministry Secretary A.M.U.D. Basanayake has said that he was in dark regarding the resettlement of uprooted Ea'raavoor Tamil families.

Amid claims by the District Government Agent and Resettlement Deputy Minister that all of the uprooted families have been resettled, Tamil families of Ward Four of Ea'raavoor waiting for resettlement continue to stay elsewhere in rented houses and with relatives and friends.

The appeals made by the villages, both personally and through memorandums to the authorities concerned for immediate resettlement, have been ignored.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தளபதி இரமேசு கொலைசெய்யப்பட்ட இடத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டனரா ?

11 October, 2011 by admin
இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகாமையில் மேலும் சில உடலங்கள் காணப்படுவதற்கான ஆதாரப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கேணல் ரமேஷ் அவர்கள் இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் தொகுதியோடு மற்றும் அதே இடத்தில் மேலும் சில உடலங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெட்டமுள்ளிவாய்காலூடாக கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவருடன் சென்று விடுதலைப் புலிகளின் சில முக்கியஸ்தர்கள் சரணடைந்திருந்தனர். அவர்களில் சுமார் 50 பேர் அடங்கலாம் என நேரில் பார்த்த சாட்சிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் கேணல் ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் உயிரோடு வைத்து விசாரணை நடத்தும் காணொளிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் இறந்து கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியது. அதே இடத்திற்கு அருகாமையில் தற்போதும் மேலும் சிலரது உடல்கள் இருப்பதும் புகைப்படமாக வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. காரணம் அவர்களுடன் சென்ற புலிகளின் முக்கிய தளபதிகள் அல்லது முக்கியஸ்தர்களின் மனைவி மற்றும் உறவினர்களையும் இலங்கை இராணுவம்
கொடூரமாகக் கொலைசெய்துள்ளது இப் புகைப்படத்தில் தெளிவாகியுள்ளது.
மற்றும் முள்ளிவாய்க்காலில் வைத்து சிலரை இலங்கை இராணுவம் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்ததும் புகைப்படமாக வெளியாகியுள்ளது. முள்ளிவாய்க்காலை இறுதியாக இராணுவம் கைப்பற்ற முன்னர் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது அப்பகுதி தீ பற்றி எரிந்தவண்ணம் உள்ளதும் புகைப்படங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனை வைத்தே அங்கே எவ்வாறான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதனை அனைவராலும் ஊகிக்க முடியும். தமிழ் மக்களையும் சரணடைந்த புலிகளையும் மற்றும் அவர்களது உறவினர்கள்
என்ற ஒரு காரணத்துக்காகவும் இலங்கை இராணுவம் அவர்களை ஈவிரக்கம் இன்றி படுகொலைசெய்துள்ளது. நிர்வாணப்படுத்தி உடலங்களை அவமானப்படுத்தியுள்ளது. இவை அனைத்தையுமே தமிழர்கள் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது திண்ணம்.

வியாழன், 28 ஜூலை, 2011

Chandrika Kumaratunga berates Sri Lankan government

Chandrika Kumaratunga (right) with Mahinda Rajapaksa in 2005 Mrs Kumaratunga argues that her successor Mahinda Rajapaksa (left) is leading a divided nation

Chandrika Kumaratunga berates Sri Lankan government

Former Sri Lankan President Chandrika Kumaratunga has condemned the current government, saying it has failed to win peace in the country after the war.
She alleged that members of ethnic minorities are leaving the country in response to its policies.
Giving a lecture in Colombo, she said her children had reacted with anguish to a controversial TV documentary on alleged war-time atrocities.
Mrs Kumaratunga ended her second term as president six years ago.
She has always been critical of her successor, Mahinda Rajapaksa, but these remarks are perhaps her strongest yet.
Mrs Kumaratunga said the government was not committed to sharing power with ethnic minorities and warned that if it continued its "winner-takes-all" policy, large numbers of minority people would continue to leave the country - referring to Tamils, and to Burghers or people of mixed descent.
She said Sri Lanka was now a "terribly divided nation" and that the state was against everyone who opposed it, whatever their ethnic group.
And she said both her adult children, who lived abroad, had telephoned her, one of them sobbing, when the British station Channel 4 broadcast a documentary purporting to show war crimes by both sides in the war.
After it her son said he was ashamed to call himself Sinhalese and Sri Lankan, she said.
The government says the documentary is a fake.
Mrs Kumaratunga's blame was not all directed at the current government.
She said that Sri Lankans should have the humility to admit they had "failed as a nation".
And she strongly criticised an act introduced by her own father as prime minister, which elevated the Sinhala language above others: she said it caused ethnic riots and contributed to the war by excluding minorities.
The former president's remarks came as local elections appeared to confirm the country's ethnic divisions, with a Tamil party victorious in the north and the president's party sweeping the board elsewhere.

செவ்வாய், 17 மே, 2011

we lost because of our allies - kovan: தோல்விக்குக் காரணம் "சகவாசம்': இளங்கோவன் குமுறல்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தோல்விக்கு காரணம் "சகவாசம்': இளங்கோவன் குமுறல்

மதுரை: ""சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு முக்கிய காரணம் சகவாச தோஷம்,'' என, காங்., முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குமுறினார்.

மதுரையில் அவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டி: முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர். நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடையில்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்னைகள் இருக்காது. தொழில் வளம் பெறும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.

தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்., வேட்பாளர்கள் போட்டியினர். தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்., தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது. காங்.,க்கு புதிய தலைவரை சோனியா விரைவில் அறிவிப்பார். சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு "சகவாச தோஷம்' தான் முக்கிய காரணம். மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்தனர். சோனியா யாரை தலைவராக அறிவித்தாலும், அதை ஏற்று காங்கிரசை வளப்படுத்த தொண்டர்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட பாடுபடுவேன். இவ்வாறு கூறினார்.

சனி, 16 ஏப்ரல், 2011

Kovan opposes to remove 19 from cong. :காங்கிரசிலிருந்து 19 பேரை நீக்கியது தன்னிச்சையானது: ஈ.வி.கே.எசு. இளங்கோவன்

கோவனைக் காங்.கில் இருந்து நீக்குவது அக்கட்சிக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது; அவருக்குமே நல்லது. தன்னைத்தவிர யார்தலைவராக இருந்தாலும்   சிக்கல் எழுப்பிப்பிறரைத் தூண்டிக் கொண்டே தலைமையை மதிக்காமல் நடந்து கொண்டு பிறரையும் அவ்வாறே எதிர்க்கச் சொல்பவர். தமிழினப் பகைவர். நடுநிலையாளர்போல் பேசித்திரியும் சந்தர்ப்பவாதி.    பரபரப்புச் செய்தி தருகிறார் என ஊடகங்கள் அவருக்கு முதனமை கொடுப்பதால் தன்னைப் பெருந்தலைவராக எண்ணிக்கொண்டு மயக்கத்தில் உழல்பவர். எனவே, உடனடியாக அவர் மீது காங். நடவடிக்கை எடுத்தால் நன்று. மற்றபடி பாழ்செய்யும் பல் குழுக்களால் காங். அழிவது மகிழ்ச்சியே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




காங்கிரஸிலிருந்து 19 பேரை நீக்கியது தன்னிச்சையானது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


கரூர், ஏப். 15: காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட 19 பேரை நீக்கியது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவின் தன்னிச்சையான செயல் என்றார் மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.கரூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 பேரை நீக்கியது செல்லாது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீக்கப்பட்ட 19 பேரில் பாதிப் பேர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள். மீதிப் பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை நீக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் அனுமதி தேவை. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்வானவர்கள். இவர்களை நீக்க காங்கிரஸ் தலைமை, ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். ஆனால், அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாகச் செயல்பட்டு 19 பேரை நீக்கியுள்ளார் தங்கபாலு.தொண்டர்களைத் தலைவர்கள் ஏமாற்றியதாகத்தான் வரலாறு உள்ளது. ஆனால், மனைவியையே தங்கபாலு ஏமாற்றியதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டார். மேலும், வாக்காளர் பட்டியலில் தனது மனைவியின் பெயரே இடம் பெறாத வகையிலும் செய்துவிட்டார். எனவே, மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் (தங்கபாலு) மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியாக பெரிய கட்சி. எனவே, தொண்டர்கள் தங்களின் குறைகளை அமைதியான போராட்டங்கள் மூலமாகத் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு காந்திய வழியிலான போராட்டங்களுக்கு நான் எப்போதும் ஆதரவு தெரிவிப்பேன். இப்போதிருக்கும் தலைவரை மாற்ற வேண்டுமென ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் விரும்புகின்றனர் என்றார் இளங்கோவன்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

Kalaignar knows about the needs of the poor - kovan said : ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி: ஈ.வி.கி.ச.. இளங்கோவன்

கோவனுக்கு அல்லது கோவன் ஆதரவாளர்களுக்கு இடம் தராததால் வந்த  அறிவு எழுச்சி! (ஞானோதயம்!) தெளிந்த புத்தி தொடரட்டும்!  என்றாலும் தேர்தல் முடிந்ததும் மறுபடியும் முருங்கை மரம் ஏறவதற்கே வாய்ப்பு உள்ளது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


ஆம்பூர், ஏப். 10: ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர் திமுக தலைவர் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ. விஜய் இளஞ்செழியனை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி. அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.  திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.  கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்படவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார். 

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

muthusamy versus chandirakumar: விஐபி தொகுதி - 8: நல்லவரின் நேரம் நல்லாயிருக்கா?

ஒன்றுமி்ல்லாத கோவனின் ஆதரவு இருக்கின்றது என்றால் முத்துச்சாமிக்குத் தோல்வி உறுதி. அவரது ஆதரவு என்பது மாயை. தலைமையை எதிர்த்துப் புரட்சியாளர்போல் எண்ணிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருப்பார். எனவே, அவரது ஆதரவு மக்களை  எதிர் அணியினருக்கு வாக்களிக்கச் செய்து விடும். அந்தோ பாவம்! முத்துச்சாமி! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக்   காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

விஐபி தொகுதி - 8: நல்லவரின் நேரம் நல்லாயிருக்கா?


தொகுதி மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பது ஈரோடு கிழக்குத் தொகுதி. மொத்தம் 1,75,396 வாக்குகள் உள்ள இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், முதலியார் வாக்குகள் பிரதானமானவை. தி.மு.க. சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி கடந்த ஆண்டுதான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது மட்டுமல்லாமல் அவரது மனதிலும் இடம் பெற்றவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் 1977 பேரவைத் தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. சார்பில் இந்தத் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். பிறகு 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்றார். 1988-ல் அ.தி.மு.க. பிளவுபட்டபோது ஜானகி அணியில் இடம்பெற்றிருந்த இவர், 1989-ல் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் டெபாசிட் இழந்தார். அ.தி.மு.க. இணைப்புக்குப் பிறகு, 1991-ல் பவானியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றார்.1996-ல் ஈரோடு தொகுதியில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியிடம் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, கட்சியில் இருந்து வெளியேறிய அவர் சில ஆண்டுகளில் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பினார். 2001 மற்றும் 2006 பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்களில் அ.தி.மு.க.வில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 2010-ல் தி.மு.க.வில் இணைந்தார். இதுதான் முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் அரசியல் சரித்திரம்.எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் முத்துசாமியின் இடத்தை செங்கோட்டையன் பிடித்துக்கொண்டார். முத்துசாமிக்கு 1996-க்கு பிறகு பல சவால்கள் இருந்தன. தி.மு.க.வில் இணைந்த பிறகும், இந்த சவால்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தே.மு.தி.க. சார்பில் களமிறங்கியுள்ள வி.சி.சந்திரகுமார், கடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 29 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய வாக்குகளுக்கு இணையான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இச்சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள சுமார் 60 தொகுதிகளில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும்தான் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இந்த வாய்ப்பை ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க. வழங்கியுள்ளது. இதனால் சமுதாய ஒற்றுமையை இந்தத் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும் என்று இத்தொகுதியில் உள்ள முதலியார் சமூகத்தினரும் களமிறங்கியுள்ளனர்.விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்னை போன்றவை இத்தொகுதியில் தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய பிரச்னைகள். கொங்கு மண்டலத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்படும் கொ.மு.க.வை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு சேர்த்தவர் முத்துசாமி. இவரை வெற்றி பெற வைப்பது தங்களது கடமை என்று கருதி இவருக்கு வீடுவீடாக வாக்குச் சேகரித்து வருகின்றனர் இந்தக் கட்சியின் நிர்வாகிகள். அ.தி.மு.க.வில் இருந்து இவருடன் வெளியேறிய தொண்டர்களும், இவர் பின்னால் அணிவகுத்துள்ளனர். ம.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி இது. ம.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாததால், ம.தி.மு.க. மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தியின் ஆதரவாளர்கள் அமைச்சர் முத்துசாமிக்கு ஆதரவாகக் களம் இறங்கக் கூடும் என்பது அவருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.மேலும், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்களும் முத்துசாமிக்காகப் பிரசாரத்தில் முனைப்புடன் இறங்கி இருக்கிறார்கள்.காங்கிரஸýக்கு என்று கணிசமான வாக்கு வங்கி ஈரோட்டில் இல்லை என்றாலும், பெரியார் குடும்பத்துக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ள தொகுதி இது என்பதால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவு அமைச்சர் முத்துசாமிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.முத்துசாமி 1977 முதல் ஏற்படுத்தி பலப்படுத்திய அ.தி.மு.க. வாக்கு வங்கி அவருக்கு சாதகமாகத் திரும்புமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். 1989-ல் அ.தி.மு.க. (ஜா) அணியின் சார்பில் முத்துசாமி போட்டி போட்டபோது, எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி அவருக்கு சாதகமாக இருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆரால் ஆளாக்கப்பட்ட முத்துசாமி தி.மு.க.வில் இணைந்ததை அவருக்கு நெருக்கமான பலரே கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.அ.தி.மு.க.வுக்கு என்று இருக்கும் வாக்கு வங்கி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான தே.மு.தி.க.வின் வாக்குகள், கணிசமான முதலியார் வாக்கு வங்கி இவையெல்லாம் தே.மு.தி.க. வேட்பாளருக்கு சாதகமாக இருக்கிறது என்றால், தி.மு.க. வேட்பாளரான முத்துசாமியின் மிகப் பெரிய சவால், தி.மு.க.வினரைத் தனக்கு சாதகமாக பிரசாரத்தில் இறக்குவது. முத்துசாமியின் வளர்ச்சி மாவட்டத்தில் தனது செல்வாக்கை பாதித்து விடும் என்று கருதும் மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி. ராஜா, தனது ஆதரவாளர்களுடன் அவர் போட்டியிடும் அந்தியூர் தொகுதியில் கவனம் செலுத்துவதால், தி.மு.க.வின் ஆதரவும் முழுமையாக இல்லாமல், அ.தி.மு.க.வினரையும் விரோதித்துக் கொண்டு, இளங்கோவனின் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் முத்துசாமி.முத்துசாமி நல்ல மனிதர் என்று சொல்லாதவர்களே கிடையாது. அது வாக்குகளாக மாறுமா என்பதுதான் கேள்வி!



திங்கள், 28 பிப்ரவரி, 2011

if, no share in the govt., no support to d.m.k.ஆட்சியில் பங்கு இல்லாமல் திமுகவை தொடர்ந்து ஆதரிக்க வேண்டியதில்லை

மத்தியில் ஆளும் காங்கிரசால் இந்திய நிலப் பகுதிகள்  சீனாவிற்கும் பாக்கிசுதானுக்கும்  தாரை வார்க்கப்பட்டன. தமிழ் நிலமான கட்ச    தீவு  சிங்களவனுக்கு  அளிக்கப் பட்டது .     தமிழ் நாட்டை ஆண்டாள் முழு தமிழ் நிலமும் சிங்களவனுக்கு தரப்படும். எனவே காங்கிரசை அடியோடு தோற்கடிப்போம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் . / தமிழே விழி! தமிழா விழி ! /   


தமிழகம்
ஆட்சியில் பங்கு இல்லாமல் திமுகவை தொடர்ந்து ஆதரிக்க வேண்டியதில்லை

First Published : 28 Feb 2011 02:25:08 AM IST

Last Updated : 28 Feb 2011 04:31:24 AM IST

திருவாரூர், பிப். 27: ஆட்சியில் பங்கு இல்லாமல், தொடர்ந்து திமுகவை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் பேசியது:காங்கிரஸýக்கு எத்தனை தொகுதிகள் அளிப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு காங்கிரஸôர் 234 தொகுதிகளையும் கேட்கிறார்கள் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியான முதல்வரின் இந்தக் கருத்தை காங்கிரûஸ கிண்டல் செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இது உண்மையாகக்கூட இருக்கலாம். நாங்கள் 234 தொகுதிகளையும் கேட்கவில்லை. அதில் பாதி அல்லது 110 தொகுதிகள் அளித்தாலும் போதுமானது.பெரும்பான்மை இல்லாவிட்டாலும், காங்கிரஸ் ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சியை திமுக நடத்தியுள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை. ஆனால், தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இந்த நிலையில், நாங்கள் துணை முதல்வர் பதவியோ, அமைச்சர்களில் 50 சதவீத இடமோ கோரவில்லை. மூன்றில் ஒரு பங்காவது அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும்.இங்குள்ளவர்கள் தில்லியில் அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் நாங்கள் உங்களுடன் (திமுக) அமைச்சர்களாக இருக்கக் கூடாதா? கூட்டணியில் எத்தனை இடம், அமைச்சரவையில் எத்தனை சதவீதம் என்பதை காங்கிரஸ் கட்சியின் 5 பேர் குழு முடிவு செய்யும்.தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு ஓரளவுக்கேனும் திருப்தி தரும் வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். நாங்கள் வாக்களிப்போம், யாரோ ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்வார்கள். நாம் அடிமைகளாகவே இருப்பதா?வரவுள்ள ஆட்சியில் நமக்கும் பங்குண்டு என்ற நிலை இருந்தால்தான் காங்கிரஸ்காரர்கள் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் தேர்தல் பணியாற்றுவார்கள்.எங்களுக்குப் பணம் தேவையில்லை. கௌரவம், அந்தஸ்து, சுயமரியாதை இவைதான் முக்கியம் என்றார் இளங்கோவன்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

elangovan comments about veera porali muthukumar

வீரப்போராளி முத்துக்குமாரின் உயிர்க்கொடை குறித்த கோவனின் பேச்சு கொழுப்பெடுத்த பேச்சு. கடந்த முறை போட்டியி்ட்டு மண்ணைக் கவ்வியவர் இந்த முறைபோட்டியிடவும்  வாய்ப்பில்லாமல் மண்ணைத் தின்பார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

cong.wants berth in govt. : E.V.K.S.I. : அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வேண்டும்: ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் எனக் கோவன் சொல்வதில் இருந்தே தமிழ்நாட்டில் காங்.விரட்டப்படும் என்பதை உணர்ந்துள்ளார் என்பது புரிகிறது. விரட்டப்படும் கட்சி ஆட்சியில் அமர ஆசைப்படுவது மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்கும். மனித நேயர்களே! காங்.ஐ அடியோடு விலக்குங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தூத்துக்குடி, ஜன. 24: திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி. கதிர்வேல் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வரவிருக்கின்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதி, எந்தத் தொகுதி என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தமிழக முதல்வர் கருணாநிதியும் முடிவு செய்வார்கள்.  அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. பதவி வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், கூட்டணிக் கட்சி என்கிற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும்.  காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தைதான் இதுவரை கூறி வந்தேன். இப்போதும் கூறுகிறேன். நேற்று பேசியது, அதற்கு முந்தைய நாள் பேசியது பற்றியெல்லாம் கருத்து கூற விரும்பவில்லை. இப்போது என்ன நிலை என்பதுதான் முக்கியம் என்றார் இளங்கோவன்.  இணைந்து செயல்படுவோம்: முன்னதாக, திருமண விழாவில் மத்திய அமைச்சர் வாசனும், இளங்கோவனும் கலந்துகொண்டனர். அப்போது இளங்கோவன் பேசியது:  இந்த விழாவில் நானும் வாசனும் ஒன்றாக கலந்துகொண்டிருப்பதை பலரும் இங்கே குறிப்பிட்டனர். நானும் வாசனும் ஒன்றாக இருப்பது இயற்கைதான். காங்கிரஸ் கட்சியை பேரியக்கமாக வளர்க்க இருவருமே ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம். இதில், எங்களுக்குள் எந்தவித வேறுபாடும் கிடையாது.  என்னுடைய குரல் வேண்டுமானால் சற்று பெரிதாக இருக்கும். ஆனால், வாசன் வேலையில் பெரியவர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்படும்வரை, கூட்டணி குறித்து முடிவெடுக்கும்வரை கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருப்பதில் தவறில்லை.  ஆனால், தேர்தல் குறித்து சோனியா காந்தி என்ன முடிவெடுத்து அறிவிக்கிறாரோ அதனை அப்படியே ஏற்று பணியாற்றுவோம் என்றார் அவர்.  விழாவில் பேசிய பலரும் ஜி.கே. வாசனும் இளங்கோவனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்திப்பேசினர்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

share in the govt. : கூட்டணி எதுவானாலும் ஆட்சியில் பங்கு: ஈவிகேஎசு. இளங்கோவன்

மக்களிடம் செல்வாக்கு இல்லாத பொழுதே கொலைகாரக் கட்சியில்  இருந்து இந்த ஆட்டம் போடும் இவர் முதலமைச்சர் ஆக வேண்டுமா? தாங்கவே தாங்காது தமிழ்நாடு! சிறையில் இருந்து கனவு காணச் செய்வோம்! தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கூட்டணி எதுவானாலும் ஆட்சியில் பங்கு: ஈவிகேஎஸ். இளங்கோவன்

ரோடு, ஜன. 13: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியில் பங்கு கோரும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார்.  ÷ஈரோட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும். சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த முதல்வருக்கு நன்றி.  ÷திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கன் சிலை அமைக்கவும், கடகனேரியில் காமராஜர் சிலை அமைக்கவும் அமைச்சர் பூங்கோதை, எம்எல்ஏ அப்பாவு ஆகியோர் தடையாக உள்ளனர். இவர்களை முதல்வர் கண்டிக்க வேண்டும். சிலை அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தியாகி சுடலைமுத்து நாடார் வரும் 19-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இப் போராட்டத்தை அவர் சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டும்.  ÷இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டோம் என கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த மத்திய அரசிடம் முதல்வர் பேசி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மணல் விலையேற்றம்: தமிழகத்தில் லோடு கணக்கில் விற்றுக்கொண்டிருந்த செங்கல், மணல் இப்போது எண்ணிக்கை, கிலோ கணக்கிலும் விற்பனை செய்யப்படும் அளவுக்கு விலையேற்றம் கண்டுள்ளன. இதனால் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது. தமிழக அரசின் தெளிவற்ற கொள்கைகளே இதற்குக் காரணம். இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆட்சியில் பங்கு: தமிழகத்தில் இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி குறித்த இறுதி முடிவை கட்சித் தலைமை அறிவிக்கும்.  ஒருவருக்குப் பதவி கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில் சட்ட மேலவையை எம்ஜிஆர் கலைத்தார். யாருக்கோ பதவி கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சட்ட மேலவையை கருணாநிதி மீண்டும் கொண்டு வந்திருக்கலாம்.  வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியில் பங்கு கோருவதோடு, அந்த ஆட்சியில் முதன்மையான இடத்தைப் பெறுவோம்.  அரசியல்வாதிகள் அனைவருக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் எனக்கும் உள்ளது. நான் ஏழை. இதனால் காங்கிரஸ் கட்சி குறித்து திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கு கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.

திங்கள், 3 ஜனவரி, 2011

cong.will take good decesion: காங்கிசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்: ஈ.வி.கே.எசு. இளங்கோவன்

தி.மு.க.கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால்  காங் மண்ணை அடியோடு கவ்வி  இருக்கும் என்பது நன்கு தெரிந்தும் கோவன் இவ்வாறு உளறுவதால் காங். தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது  என்பதை  விட வேறு என்ன சொல்வது? 
மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காங்கிரஸ் விரைவில் நல்ல முடிவு எடுக்கும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை, ஜன. 2: காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.சென்னை, பெரம்பூரில் காங்கிரஸ் கட்சியின் 126-ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை இந்திரா தேசியப் பேரவை சார்பில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்."காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் வேண்டும், மரியாதை வேண்டும், அங்கீகாரம் வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள எல்லா காங்கிரஸôரும் கருதுகின்றனர். தி.மு.க. செய்யும் தவறுகளுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக வேண்டியுள்ளது. எனவே, தி.மு.க. அணியில் காங்கிரஸ் கட்சி இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான காங்கிரஸ்காரர்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களின் இந்த உணர்வுகளை எல்லாம் நாங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் சொல்லியிருக்கிறோம்.ஆகவே, காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும். அதன் பிறகு தமிழகத்தில் எங்களது பிரசாரமே வேறு விதமாக இருக்கும்.கடந்த மக்களவைத் தேர்தலில் நான், தங்கபாலு உள்பட காங்கிரஸ் கட்சியின் முன்னணியினர் பலர் தோல்வியடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம். தி.மு.க.வுடன் மட்டும் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கும்' என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

cong.will be defeated in the d.m.k.alliance: திமுக கூட்டணியில் போட்டியிட்டால் காங்கிரசு தோற்கும்: ஈவிகேஎசு .இளங்கோவன்

உண்மைதான். தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்டால் காங். தோற்கும். ஆனால் வேறு கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் படுதோல்வி அடையும். தனித்துப் போட்டியிட்டால் அல்லது தனி அணியில் போட்டியிட்டால் மண்ணைக் கவ்வும். எது வசதி என்று காங். முடிவெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் எவ்வாறு போட்டியிட்டாலும் கோவன் தொலைந்து போவது உறுதி. அதனைக் கோவன் மனத்தில் கொண்டு அமைதி காக்கட்டு்ம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

திமுக கூட்டணியில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும்: 
ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை, டிச.25: திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி பற்றி இளைஞர் காங்கிரஸார் புகார் கூறினர். அதேபோல், திமுக ஆட்சி சரியில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிவருகிறார். இவை பற்றி இன்று மதுரை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார். அதற்கு வலி நிவாரணி ஏதேனும் உண்டா என்று செய்தியாளர் கேட்டதற்கு, " நிவாரணி எல்லாம் இல்லை நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்" என்று சூசகமாகப் பதிலளித்தார் இளங்கோவன்.
கருத்துகள்

ஸ்பெக்ட்ரம் கூட்டு கொள்ளையில் உங்க பங்க பிரிச்சிகிட்டு இப்ப கழட்டி விட்டா என்ன நியாயம்.... already நீ தோத்து போய்ட்ட ...இனி காங்கிரஸ் தமிழ் நாட்டில் வர முடியாது....
By udaya
12/25/2010 9:12:00 PM
அப்பாடா தமிழகத்திற்கு விடிவு காலம் வரப்போகிறது.சிறைக்கு போகப்போகிறது நாற்பது ஆண்டுகால கொள்ளை கூட்டம்.கோடீஸ்வரர்கள் கம்பி எண்ண போகிறார்கள். ஆகா நல்ல நேரம் வந்தாச்சு.
By rama
12/25/2010 9:11:00 PM
"தை பிறந்தால் வலி பிறக்கும்.". இளங்கோவன் ஒத்துகொண்டார். காங்கிரஸ்சுக்கு தமிழகத்தில் வழி பிறக்காது. வலிதான் பிறக்கும் என்பதை தெரிந்துகொண்ட இளங்கோவன் அவர்களே தமிழனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எத்தனை ராகுல்கள் வந்தாலும் தமிழனின் இதயத்தில் ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர்கள் ஏற்படுத்தி உள்ள வடுக்களை மாற்றமுடியாது. தனித்து நின்றால் காங்கிரசுக்கு ஜாமீன் தொகை கூட கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
By தமிழன்.K
12/25/2010 9:11:00 PM
அதிமுக கூட்டணி வருமா காங்கிரஸ் ....
By மோகன்
12/25/2010 8:51:00 PM
எப்படியும் இளங்கோவனுக்கு வோட்டு விழப்போவதில்லை. வேட்டுதான். அறுவை சிகிச்சை எப்படியிருந்தாலும் நோயாளி இளங்கோவை காப்பாற்ற முடியாது. அருள்மொழி
By அருள்மொழி
12/25/2010 8:46:00 PM
ஈ வீ கே எஸ் அவர்களே நீங்க செஞ்ச துரோகத்துக்கு அடுத்தவன குறை சொல்லாதீர்கள்
By நாதன்
12/25/2010 8:42:00 PM
எந்த கூட்டணியில் போட்டியிட்டாலும் காங்கிரஸ் தோற்கும்
By mohan
12/25/2010 8:01:00 PM
அனுபவம் உள்ள இவர் சொல்வதில் உண்மை இருக்கலாம்.
By M.தமிழரசன்
12/25/2010 7:59:00 PM
உன்னை பற்றியும் தெரியும் காங்கிரஸ் பற்றியும் தெரியும்.சீமான் பெரியாரின் பேரன் என்று சொன்னால் அதற்க்கு எவர் என்ன சொன்னார் தெர்யும ?என் தாதா அப்படி எப்படி என்று இருப்பார் என்று கேவலமாக கூறியவன் தான் நீ .....
By பண்டரிநாதன் மயில்சாமி
12/25/2010 7:44:00 PM
தி.மு.க. கூட்டணியில் போட்டி இடாவிட்டால் தி.மு.க.தோற்குமே!
By Bala
12/25/2010 7:27:00 PM
எந்த கூட்டணியில் போட்டியிட்டாலும் காங்கிரஸ் தோற்கும்நிலையில் திமுக அதிமுகன்னு சும்மா பொலம்பாதே காங்கிராஸ் காரனைவிட பொதுமக்களுக்கு உன்னைபற்றி நன்றாகவே தெரியும்
By ரிஜி.கரியப்பட்டினம்
12/25/2010 6:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 9 டிசம்பர், 2010

loss to whom, e.v.k.s.i

கொஞ்ச நாள் கீழ்ப்பாக்கத்தில்  இருந்தார் போலும. நிம்மதியாக இருந்தது. மீண்டும் வந்து விட்டார். செல்வாக்கில்லாமல் ஊடகங்கள் மூலம் செல்வாக்கானவராகக் காட்டுவதில் கில்லாடி. எனினும் காங்.கிற்குச் சாவு மணி அடிக்க முயல்வதால் இவருக்கு நன்றி. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கு நஷ்டம் என்பது தேர்தலில் தெரியும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

First Published : 09 Dec 2010 02:29:40 AM IST


வேலூர், டிச. 8: காங்கிரஸýடனான கூட்டணியைத் துண்டித்துக் கொண்டால் யாருக்கு நஷ்டம் என்பது தேர்தலின்போது தெரியவரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.வேலூரில் புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடுகள் நடந்து வருகின்றன.வீட்டுவசதி வாரிய ஊழல் புகார் வந்ததும், விசாரணை தொடங்கும் முன் மகாராஷ்டிர மாநில முதல்வர் தார்மிக பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது தமிழ்நாட்டிலும் இதே பிரச்னை எழுந்துள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் முன் வருவார் என்று நம்புகிறேன்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்கள் கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது போன்று இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணும். மத்திய அரசிடம்1000 கோடி மழை நிவாரணம் கோரியுள்ளது தமிழக அரசு. ஏற்கெனவே சுனாமியின்போது, மத்திய அரசிடம் வாங்கிய பணத்துக்கு இதுவரை சரியான கணக்கு வழங்கவில்லை.மீண்டும் மீண்டும் குளம் தூர்வாருவது, சாலை போடுவது என்று கூறுகிறது தமிழக அரசு. எத்தனை முறை சாலை போடுவது, குளங்கள் தூர்வாருவது என்று தெரியவில்லை. மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.அரசியல் தலையீடு என்பது அனைத்திலும் இருந்து வந்தது. தற்போது அரசியல் தலையீடு நீதிமன்றத்திலும் நுழைந்து விட்டது.சில சிரமங்கள் ஏற்பட்டாலும் தமிழகத்துக்கு நல்ல முடிவு வரும். ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லும்போது, இதில் யார் யார் பின்னணியில் உள்ளனர் என்று பட்டியலை முதல்வர் வெளியிட வேண்டும் என்றார் இளங்கோவன்.

திங்கள், 22 நவம்பர், 2010

குடும்ப அரசியலால்தான்  இன்றைக்குக் கோவன்போன்றோர் அரசியலில் உள்ளனர். குடும்ப ஆட்சியை முதலில் புகுத்தியதே அவர் சார்ந்த காங்.கட்சிதான். எனவே, உண்மையிலேயே இதில் அவர் கருத்து செலுத்த எண்ணினால் கட்சி அரசியலில் இருந்து வெளியேறி குடும்ப அரசியலுக்கு எதிரான ஓர் இயக்கத்தை நடத்தட்டும். அவ்வாறில்லாமல் தன் உளறல்களை வெளியிட ஊடகங்கள் இருக்கின்றன என்னும் நம்பிக்கையில்  தவளையாய் மாறாமல்  அமைதி காக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்



கவுந்தப்பாடி  : ""தமிழகத்தில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டு பாடுபட வேண்டும்,'' என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் பேசினார்.
கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அத்தகைய ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.தமிழகத்தின் நிலைமை தற்போது மிகமோசமாக உள்ளது. வரும் தேர்தலில் எதையாவது செய்து ஆட்சியை பிடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர்.

நீயும் இதையே செய்; ஜால்றா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதை நினைத்துப் பார்க்கும் போது பயமாக உள்ளது. இந்த தொகைக்கு எத்தனை, "சைபர்' என்று கூட பலருக்கு தெரியாது. சத்துணவுடன் இலவச கல்வியை கொண்டு வந்தவர் காமராஜர். அந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் அன்றைய காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டால் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

இராசா பதவி விலகல் . . . .


குற்றமற்றவர் என்று சொல்லி விட  முடியாது என்றும் குற்றவாளி என்று கூறி விட முடியாது என்றும் குழப்புகிறார். கோவனின் உளறல்களுக்கு ஊடகங்கள் முதன்மை  கொடுக்கும் பொழுது இன்னும் உளறலாம்; இனியும் உளறலாம். குற்றவாளி என்றால் கூட்டுப்பொறுப்பிற்குரிய காங்.கும் குற்றவாளி ஆகும். குற்றமற்றவர் என்றால் தி.மு.க.விற்கு உதவியதாக அமையும். எனவே, எப்படி உளறல்களை உதிர்ப்பது என்று புரியாமல் ஏதோ இரண்டையும் இடைவிட்டுக் கூறி ஏமாற்றுகிறார் என்றால் நீங்களும் வெளியிடலாமா?
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
"ராசா ராஜிநாமா செய்ததாலேயே குற்றமற்றவரல்ல': ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


விழுப்புரம், நவ.18:  மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததாலேயே ஆ. ராசா, குற்றமற்றவர் என்று சொல்லிவிட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) விழுப்புரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பா.ஜ.க, கம்யூனிஸ்ட், அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக ஆ.ராசா ராஜிநாமா செய்தார்.ராசா ராஜிநாமா செய்ததினாலேயே அவர் குற்றமற்றவர் என்று சொல்லிவிட முடியாது. விசாரணை செய்து தீர்ப்பு வந்தபிறகு உண்மை தெரியும்.இதைக் காரணம் காட்டி பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையை முடக்குவது தவறு. ஜனநாயகத்தில் இது தவறான நடவடிக்கை.கர்நாடக முதல்வர் எடியூரப்பா  6 ஆயிரம் கோடியில் நிலமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. மற்ற கட்சிகளைக் குறைகூறும் பாஜக, தன் கட்சியின் எடியூரப்பாவை ராஜிநாமா செய்ய சொல்வார்களா?, அவரை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.அலைக்கற்றை விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்முன்பே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. பொதுக் கணக்கு தணிக்கைக் குழுத் தலைவர் மனோகர் ஜோஷியின் விசாரணைக் குழு போதுமானது.மக்களவைக் குழு விசாரணை தேவையில்லை. பாஜக விசாரணை தேவை என்கிறது, அப்படியென்றால் தன் கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷியின் விசாரணையையே அவர்கள் நம்பவில்லை என்றுதானே அர்த்தம்.முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது, உண்மைக் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றார்.முன்னதாக மாநில ஒருங்கிணைப்புச் செயலர் எஸ்.வி. தட்சிணாமூர்த்தி, மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் எஸ். ஆறுமுகம், நகரத் தலைவர் டி. சங்கர், இளைஞர் காங்கிரஸ் ஏ. சத்யா, ஒன்றியச் செயலர்கள் வெங்கடேசன், ராஜமாணிக்கம், மாயாண்டி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குற்றமற்றவர் அல்லர் எனக் குறிக்க வேண்டும். பிழையின்றி எழுதுவதை வெளியிடும் தினமணியில் இது போன்ற பிழை ஏற்படாமல் விழிப்பாக இருக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

திங்கள், 15 நவம்பர், 2010

இந்தியாவின் வளர்ச்சிக்கு நேருதான் காரணம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை, நவ. 14: இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கும், புகழுக்கும் முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என்று மத்திய முன்னாள் இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தெரிவித்தார். நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம் மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்பு  தொடங்கப்பட்ட நாள் ஆகியவை சென்னை, அடையாறு இளைஞர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதார வல்லரசு நாடு என்ற நிலையை இந்தியா அடையும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் இத்தகைய வளர்ச்சியை எட்டும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பஞ்சமும், ஏழ்மையும் நிறைந்த நாடு இந்தியா என்று அமெரிக்கர்களும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டினரும் கூறினர். இந்தியாவுக்குச் சென்றால் தொற்றுநோய் ஒட்டிக் கொள்ளும் என்றும் கேலி செய்தனர். ஆனால், இன்று அதே அமெரிக்க நாட்டின் அதிபர் இந்தியாவுக்கு வந்து, இந்தியா வளரும் நாடல்ல; ஏற்கெனவே வளர்ந்து விட்ட நாடு என்று கூறுகிறார். இந்தியாவின் இத்தகைய மாபெரும் வளர்ச்சிக்கு ஜவாஹர்லால் நேருதான் காரணம். நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்தவும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகள்தான், இன்று இந்தியாவை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும்; இளைஞர்களின் திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்ட நேரு யுவகேந்திரா அமைப்பினை இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மயிலாப்பூர் எம்எல்ஏ, எஸ்.வி. சேகர், நம்மில் பலர் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ எனக் கருதி, மற்றவர்களுக்காகவே வாழ்கின்றனர். நம்மிடம் நேர்மை இருந்தால், நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இதனை கவனத்தில் கொண்டு இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில், இளைஞர் விடுதி காப்பாளர் எஸ்.ஆர். ராஜு, பொருளாதாரப் பேராசிரியர் பி. ராமநாதன், நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்

கட்சியிலும் ஆட்சியிலும் குடும்பத்தை முதன்மையாக்கியவர், காசுமீரில் பெரும்பகுதியைச் சீனா பறித்தும் அமைதி காத்தவர். தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கியவர். ஊழலை ஒழிக்காமல் ஊழலைச் சொல்பவர்களை ஒழிப்பவர் என மேலும் பல பெருமைகளுக்கும் உரியவர் நேரு. அவ்வாறெல்லாம் இல்லாமல் இருந்தால் அவரது அணிசாராக் கொள்கை இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருக்கும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2010 4:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

செவ்வாய், 9 நவம்பர், 2010

காங்கிரஸ் தலைமையில் தனி அணி உருவாக தொண்டர்கள் விருப்பம்: இளங்கோவன்

நாகர்கோவில், நவ. 8:   தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் தனி அணி உருவாக வேண்டும் என்பதே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸின் தனித்தன்மையைக் குறிப்பிட்டார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பதே காங்கிரஸôரின் விருப்பம்.   இதையே விஜயகாந்தின் தேமுதிகவும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் கூறி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் தனி அணி அமைந்தால் அதில் சேருவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் கூறிவருகிறது. தனி அணி குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும்.  வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேருமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மேலிட தலைவர்களிடம் தமிழக காங்கிரஸôரின் உணர்வுகளை எடுத்துரைத்துள்ளோம். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குழந்தைகளைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் போலீஸôரை குறைகூற விரும்பவில்லை. அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன.  சென்னையில் ராஜீவ்காந்தி சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் திருமாவளவனுக்கு தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது குறித்து எனக்குத் தெரியாது.  கன்னியாகுமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸôரும் பொதுமக்களும் கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம். கன்னியாகுமரியில் அண்ணாவுக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பீடமும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்திக்கும் கன்னியாகுமரியில் சிலை திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது திமுக- காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய நிகழ்ச்சியாக அமையும் என்றார் இளங்கோவன்.காங்கிரஸ் சார்பில் சிமென்ட் விற்பனைதமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முதல்வர் கருணாநிதியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரும் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விலையை குறைக்காவிட்டால், முன்னர் சத்தியமூர்த்திபவனில் மூப்பனார் தலைமையில் சிமென்ட் விற்கப்பட்ட நடவடிக்கையை நாங்களும் தொடங்குவோம்.போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று ராமசுப்பு எம்.பி.யும், வசந்தகுமார் எம்.எல்.ஏ.வும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாதது வருந்தத்தக்கது என்றார் இளங்கோவன்.
கருத்துகள்

உண்மைதான். காங். தனி அணியாக அல்ல, தனியாக நின்று மறைந்து ஒழிய வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் பேரவா. அந்நன்னாள் என்று வருமோ? கண்டிப்பாகக் கோவன் அந்த நாளை விரைவில் கொ்ண்டு வந்து விடுவார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கூட்டணி அறம்

கூட்டணி தர்மத்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம்: இளங்கோவன்


சென்னை, நவ. 6: மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கும் காரணத்தால், சில புகார்களுக்கு காங்கிரஸ் கட்சி "சப்பைக்கட்டு' கட்டும் நிலை உருவாகி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள கட்சிகளில் தி.மு.க.வும் சேர்ந்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்.ஆட்சியில் பங்கேற்றுள்ள காரணத்தால், காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை தருகிறது. பெட்ரோல் விலை உயர்வு போன்ற கொள்கை முடிவுகளில் தி.மு.க.வையும் கலந்து பேசித்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவால் பெரும்பான்மை பெறும் நிலை தமிழகத்தில் இருந்தாலும், தி.மு.க. அரசு எடுக்கும் முக்கியமான முடிவுகளின் போதுகூட காங்கிரஸ் தலைவர்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை.உதாரணமாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுவது பற்றி காங்கிரûஸ கலந்து ஆலோசிக்கவில்லை.மத்தியில் கூட்டணியில் உள்ள ஒரே காரணத்துக்காகத்தான், சில குறிப்பிட்ட புகார்கள் வந்தபோதிலும், நாங்கள் "சப்பைக்கட்டு" கட்டும் நிலை இருக்கிறது.கூட்டணி தர்மத்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம் ஏற்படுகிறது.தமிழகத்தில் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காங்கிரஸ் தொண்டர்கள் பிரதிபலிக்கும் போது சங்கடங்கள் உருவாகின்றன.இதனால் காங்கிரஸ் கட்சி தனித்துவத்தை இழந்து வருவது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.காங்கிரஸ் தலைவர் சோனியா திருச்சியில் பேசியபோதும் இதே கருத்தை வலியுறுத்தினார். தனித்தன்மையை வளர்த்து முதன்மையான கட்சியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.தமிழகத்தைப் பொருத்தவரை தனித்து தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். 1967-ல் தி.மு.க. வென்றபோதுகூட, காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் தி.மு.க. தலைமையில் கூட்டு சேர்ந்துதான் போட்டியிட்டன.எனவே ஒருமித்த கருத்து இருப்போர், மக்களுக்கு நம்பிக்கை உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இருக்கிறது. நல்ல இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.இதுபற்றி மேலும் விரிவாகக் கூறுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை. விரைவில் இதுபோன்ற நல்ல சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திரைப்படத் துறையைப் போல அரசியலிலும் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என அவரது பிறந்தநாளில் வாழ்த்தி கேக் ஊட்டினேன். அதனால் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. நமது கட்சியில் இல்லை என்பதற்காக விஜயகாந்தை நாம் உதாசீனம் செய்யக் கூடாது.தனக்கு உள்ள பலத்தை விஜயகாந்த் சிதற விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் இருப்பது சாதாரண விஷயமில்லை. இதை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று விஜயகாந்த் யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்."சில புகார்களுக்கு காங்கிரஸ் சப்பைக்கட்டு கட்டும் நிலை உருவாவதாக' கூறியது பற்றி இளங்கோவனிடம் "தினமணி' நிருபர் கேட்டதற்கு, அது யார் மீதான புகார்கள் என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததுதானே என்றார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரைப் பற்றி குறிப்பிடுகிறீர்களா என்று கேட்டதற்கு, பதில் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.
கருத்துகள்

அதே போல் ஈழப்படுகொலைகளுக்காகக் காங்.கிற்கு வேறு வழியில்லாமல் கூட்டுப் பஙகாளி என்ற முறையில் தி.மு.க.வும் சப்பைக் கட்டுக்கட்டித் தீராப் பழியை ஏற்று வருவதையும் கோவன் நினைத்துப் பார்க்க வேண்டும். எந்த ஒரு சிறு கட்சியையும் கூட்டு சேர்க்காமல் காங். உண்மையிலேயே தனித்து நின்று தன்னுடைய செல்வாக்கு என்ன என்பதை உணர்ந்தால் நன்று. ஆளைப்பார்த்து அஞ்சாதே! ஊது காமாலை என்பது காங்.கிற்குப் பொருந்தும். எனினும் அதனை அழிக்கக் கோவன் ஒருவரே போதும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 4:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திரு கோபிஅவர்களே! நான் ஆசிரியவுரைக்கு என் கருத்தைப் பதிந்துள்ளதைத் தாங்கள் காணவில்லையா? தமிழ்ப் போர்வையில் ஒளிந்து கொண்டு தமிழை அழிக்க எண்ணும் சிலரிடையே நம்மைப் போன்ற உணர்வாளர்களும் உள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. பன்னாடை என்பது தீயதை வடிகட்டி நல்லதைப் பெற உதவும் ஒன்று எனத் தெரியாத மேதைகள் சிலர் தெய்வப்புலவரின் பெயரைச் சிதைப்பதால் தெய்வக் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். விரைவில் அவர்களைத் தெய்வம் தண்டிக்கும். பண்பிலிகள் மறையட்டும்! அன்புள்ளங்கள் பெருகட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 8:46:00 AM
எங்கள் கட்சிக்கு தொண்டர்கள் தேவை... தகுதியான (உங்கள் சகோதர/சகோதிரிகளுக்கு எதோ நேர்ந்தாலும் எங்கள் கட்சிக்காக கோசம் போடணும், சுயமா சிந்திக்ககூடாது, சிலை கழுவி விட வேண்டும், எங்கள் தலைவர் பேரன்களுக்கு அடிவருடியாக இருக்கவேண்டும். மொத்தில் ஒரு சுடு சொரணை இல்லாதா எருமை மாடு போல இருக்க வேண்டும்...) தொண்டர்கள் வரவேற்க படுகிறார்கள்.
By இளங்கோ(வன்)
11/7/2010 8:46:00 AM
கட்சிக்கும் நாட்டுக்கும் உதவாத அக்கறையைக் காலதாமதமாகவும் பயன்படாமலும் செய்து தன்னையும் கட்சியையும் வளராமல் பார்த்துக்கொண்டு தான் பாதுகாப்பாக இருக்கும் தந்திரம் வாழப்பாடி வழியில் வரும் இவர்களுக்கு அவசியம். அவர் செய்த சரித்திர சாதனைகளின் எச்சத்தை இவர் செய்கிறார்.
By nalan
11/7/2010 8:43:00 AM
ஊழலை நாட்டில் விதைத்தது முதன் முதலில் காங் தான். நேரு காலத்திலேயே இது ஆரம்பித்தது.ஆனால் தி மு க ஆட்சிக்கு வந்தவுடனேயே ஆரம்பித்தது.தேசிய கட்சியான காங் என்றும் குறுகிய நோக்குடைய மு க விடம் கூட்டணியில் இருக்கும்போது பின் பாட்டு பாடத்தான் வேணும்.ஆனால்,ஈழத்தில் முகவை தன்க்கு பின்பாட்டு பாடவைத்தது,காங் சாமர்த்தியமல்ல.அது அவரின் குடும்ப நலன் கருதி செயல் பட்டது காரணம்.
By CHARLES
11/7/2010 8:40:00 AM
This news is dedicated to Pannadai Ilakkuvan Kurulolluvan. உடல் நலக் குறைவால் வல்லெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சசை பெற்றுவரும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார், வெளிநாடுகளில் உள்ள அவரது பிள்ளைகள் பார்க்க விரும்புவதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும், அதனை அரசு முற்றிலும் மறுத்ததாகவும் இந்திய இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு எம்.கே.கிவாஜிலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து அவர் தெரிவிக்கையில் :-பார்வதியம்மாளின் பிள்ளைகள் பாதுகாப்பு அச்சம் காரணமாக நேரடியாக வந்து பார்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அதேபோல அவர்களது குழந்தைகளையோ, பேரப்பிள்ளைகளையோ அனுப்புவதற்கோ அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையிலே அரசாங்கத்துடைய அனுமதியென்ற பேச்சுக்கே இடமில்லை. இந்நிலையிலே அவர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்தால் தான், ஏனையவையெல்லாம், ஆகவே அரசாங்கத்திடம் நான் கோரிக்கை முன் வைத்தேன் என்பது தவறு. என்றார்
By Also Tamil
11/7/2010 8:25:00 AM
”சப்பைகட்டு” கட்டுவது டெலிபோன் ஊழலில் என்பது ஊரறியும்! இது தான் ஆட்சியை நம்பி ஒப்படைத்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்யும் நன்றிகடன்!! திருடர்களுக்கு துணைபோக மக்கள் நலனை பலிகொடுக்கும் நாட்டு நலனில் துளியும் அக்கரை கிடையாது . சோனியாவின் துயரம் ஒன்றே நாட்டு துயரமென கருதி செயல்படும் தமிழக காங்கிரஸ்காரன் ஒரு மூடன் இவன் அதில் ஒரு கூட்டத்திற்கு தலைவன்.
By Unmai
11/7/2010 7:49:00 AM
அதே போல் ஈழப்படுகொலைகளுக்காகக் காங்கிரசிற்கு வேறு வழியில்லாமல் கூட்டுப் பஙகாளி என்ற முறையில் தி.மு.க.வும் சப்பைக் கட்டுக்கட்டித் தீராப் பழியை ஏற்று வருவதையும் இளங்கோவன் நினைத்துப் பார்க்க வேண்டும் இவர் தோற்க இவர் வாயால் ஈழ தமிழர்களை விமர்சிதததைகுறிப்பிடலாம்..
By GIRI ANAGAI
11/7/2010 7:31:00 AM
என்ன இளங்கோவன் தி மு க மட்டுமா கொல்லை அடிக்கிறான் நீங்க அடிக்கலயா ? தி மு க விற்க்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் , உங்கலுக்கு காமன்வெல்த் ஊழல் , எனக்கு தெரின்சு தி மு க , காங்கிரசு ரென்டுமெ கடந்த 50 வருசமா கொல்லை தானடா அடிகிரீங்க. நீமட்டும் உத்தமன் மாதிரி பேசுறியே இளங்கோவன் ?...
By J.Eswaran
11/7/2010 7:16:00 AM
இந்த மெண்டல் கேஸ் இளங்கோவனால் பெரியார் குடும்பத்துக்கே தர்மசங்கடம், தலைக்குனிவு. இந்த ஆளின் பேச்சுக்கு நல்ல முறையில் கருத்துத் தெரிவிப்பது வேஸ்ட். இந்த ஆளை தயவு செய்து ignore பண்ணுங்கள். தினமணி வேண்டுமானால் ஜெயா அம்மாவுக்கு உதவுபவன் என்று முக்கியத்துவம் கொடுக்கட்டும்.
By வச்சா குடுமி
11/7/2010 6:54:00 AM
இலக்குவனார் ஜயா தலையங்கத்துகு தங்களின் கருத்தை எதிர்பார்த்தேன்.
By Gopi,Tiruttani
11/7/2010 6:37:00 AM
யோவ் ...என்னைய்யா பேசுற !....என்ன தர்ம சங்கடம் அது ?...கற்பழிப்பதை விட கற்பழிக்க விளக்கு பிடிப்பது மிகப் பெரிய குற்றம் ! கற்ப்பழிப்பவனை விட கற்பழிக்க விளக்கு பிடிப்பவன் மிகப் பெரிய குற்றவாளி !!! @........
By கொடி காத்த குமரன் !
11/7/2010 5:43:00 AM
இளங்கோவன்: "தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திரைப்படத் துறையைப் போல அரசியலிலும் நல்ல இடத்தைப் பெற வேண்டும். தனக்கு உள்ள பலத்தை விஜயகாந்த் சிதற விட்டுவிடக் கூடாது. இதை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று விஜயகாந்த் யோசிக்க வேண்டும்” ……….. சபாஷ் இளங்கோவன், நன்றி.
By பன்ருட்டி ராமச்சந்திரன்
11/7/2010 5:07:00 AM
இவர் தேமுதிக வை வளர்க்க நினைக்கிறாரா இல்லை காங்கிரஸையா?
By K Rajan
11/7/2010 4:55:00 AM