திங்கள், 11 ஏப்ரல், 2011

New restrictions for N.R.Ilangai Thamizhs to get paasport வெளிநாடுவாழ் இலங்கையர்கடவுச்சீட்டு பெற புதுக் கட்டுப்பாடு

இலங்கைத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் எந்த நாட்டில் வசிக்கிறார்களோ அந்தந்த நாடுகளில் கடவுச்சீட்டு வழங்கும் முறையை அனைத்து நாடுகளும பின்பற்ற வேண்டும். கடவுச் சீட்டுகளுக்காக அவர்களை இலங்கைக்குப் போகச் சொல்வதும் மரணக் கொட்டிலுக்கு அனுப்புவதும் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் தமிழ் ஈழ அரசு மலருவதாக!  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

வெளிநாடுவாழ் இலங்கையர் பாஸ்போர்ட் பெற புது கட்டுப்பாடு



கொழும்பு, ஏப்.10: வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக இனி பாஸ்போர்ட் வழங்குவதில்லை என அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.அதன் விவரம்: வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைப் பிரஜை ஒருவர், அதே நாட்டில் வசிக்கும் காலத்தில் அவருக்கு இலங்கை பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்ற நடைமுறை 4-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று அகதி அந்தஸ்து கோரும் நபர்கள் முதலில் தமது இலங்கை பாஸ்போர்ட்டை கிழித்துவிட்டே தமக்கு இலங்கையில் வாழ முடியாத நிலை உள்ளதாக அந்த நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர்.அதன் பின் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரியான முறையில் இருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் புதிய இலங்கை பாஸ்போர்ட்டை பெற்று அதில் தமது விசாவை பதிக்க வேண்டியிருக்கும்.அவ்வாறு விசாவை பதித்துக் கொள்வதற்காக புதிய பாஸ்போர்ட் பெற முயற்சிப்பவர்களுக்கு இனி வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக பாஸ்போர்ட்டுகள் வழங்குவதில்லை என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.அதற்கு பதிலாக இலங்கை செல்வதற்கான தற்காலிக அடையாள ஆவணம் வழங்கப்படும். அதை எடுத்துக்கொண்டு இலங்கை சென்று புதிய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொண்டு தாங்கள் வாழும் நாடுகளின் விசாவை பதிவுசெய்துகொள்ளலாம் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.இவ்வாறு அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

one can not live in srilanka in the name of "Tamils", since many dispo people are rich enough and very informative, so srilankan government wants to kill them, so this is the idea to bring them to srilanka and kill them, so they can not tell in the internation people. Rajarajan was over rulled in 1000 years back, and same time will come as per time cycle in future
By velan
4/10/2011 10:20:00 PM
இலங்கைஇக் சென்ன்றல் திரும்பி செல்ல முடியாது தமிழ்ழர்களுக்கு மற்றும் ஒரு அநிதி,
By ராமலிங்கம்
4/10/2011 6:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக