வியாழன், 14 ஏப்ரல், 2011

chithirai year greetings of Jaya : ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து


சென்னை, ஏப்.13- அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வளர்ச்சியையும், மலர்ச்சியையும், விடுதலையையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில், மக்களாட்சி மலரும் ஆண்டாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆண்டாக, இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக மாற்றும் ஆண்டாக, மாற்றங்களை மக்களுக்குத் தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்!மலர இருக்கும் கர ஆண்டில் தமிழர் தம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இனிமையும், இன்பமும் கொழிக்க வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

தாங்களுக்கும் எங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் கோடானு கோடி தமிழர்களின் உணர்வை மதித்து, சித்திரை திங்களை தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்கவும்.
By S GNANASEKAR
4/13/2011 7:33:00 PM
நீங்கள் என்றைக்கு மன்னார்குடி மாபியா கும்பலான சசிகலாவின் பிடியில் இருந்து விடுபடுகிரீர்களோ அன்றைக்குத்தான் உங்கள் தொண்டர்களுக்கு உண்மையான தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக இருக்கும் என பணிவுடன் தெரிவிக்க கடமைபட்டுல்லன். கரிசல் இரவி, சிதம்பரம்.
By ரவிச்சந்திரன்.R
4/13/2011 7:04:00 PM
உலகத் தமிழர்கள் அனைவருக்கும், மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழகத்தை சூழ்ந்திருந்த இருள், பீடைகள் ஒழிந்து மக்கள் வாழ்வில் இன்பம் தழைக்கட்டும்.
By A.Alagesan
4/13/2011 6:39:00 PM
இவ்வினிய புத்தாண்டில் இரட்டை இலை மலர்கிறது ! அதனில் மலர்கள் பூத்துக் குலுங்கப் போகிறது ! நல்ல காய்கள் விளைந்து மக்களுக்கு சுவையுள்ள கனிகளைக் கொடுக்கப் போகிறது ! புரட்சித் தலைவிக்கு பெருமைகளும் புகழும் கூடி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதுடன் உலகம் அமைதியில் திளைத்திருக்கப் போகிறது ! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! @ rajasji
By rajasji
4/13/2011 5:57:00 PM
பிறக்கும் இப்புதிய ஆண்டில் பெரும்பான்மையான மக்களின் சார்பாக ஒரு விண்ணப்பம், ஆட்சியில் அமர்ந்தவுடன் மரம்வெட்டி ராமதாஸ், கூஜா தூக்கும் தங்கபாலு, பாவம் வைகோவை விட்டுவிடுங்கள், தறுதலை கரும்பன்னி வடிவேலு,மதுரையில் ரௌடி மு க அழகிரி,இவள் கனிமொழி, பாவம் E.V.K.S. இளங்கோவனை ஒன்றும் செய்ய வேண்டாம் அவருக்கு இவர்கள் கொடுத்த நெருக்கடி கலைஞருக்கு ஆதரவாக இருந்தார், இந்த நாய்களை உள்ளே தள்ளி கழி கொடுக்க வேண்டும்.
By Tajudeen
4/13/2011 5:56:00 PM
muthalvarukku (amma avarkalukku) Nantri tamil puthaandu vazhthukkal
By Tamilan
4/13/2011 5:56:00 PM
muthalvar jeyalalitha avarkalukku nantri. Tamil Puththaandu vazhthukkal
By Tamilan
4/13/2011 5:47:00 PM
வாழ்த்துக்கள் அம்மா, நீங்கள் ஆட்சி கட்டிலில் அமர தமிழர்களின் சார்பாக மீண்டும் வாழ்த்துக்கள்.
By Tajudeen
4/13/2011 5:47:00 PM
இவ்வினிய புத்தாண்டில் இரட்டை இலை மலர்கிறது ! அதனில் மலர்கள் பூத்துக் குலுங்கப் போகிறது ! நல்ல காய்கள் விளைந்து மக்களுக்கு சுவையுள்ள கனிகளைக் கொடுக்கப் போகிறது ! புரட்சித் தலைவிக்கு பெருமைகளும் புகழும் கூடி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதுடன் உலகம் அமைதியில் திளைத்திருக்கப் போகிறது ! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !!! @ rajasji
By rajasji
4/13/2011 5:42:00 PM
தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தில்தான் துவங்கும். ஜெயலலிதாவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிப்போம்.மேலும் அவர் ஆட்சி அமைத்தவுடன் தமிழ் புத்தாண்டு சித்திரையில்தான் தொடங்குகிறது என்ற ஆணையை முதல் ஆணையாக பிறப்பிக்க வேண்டும். இது உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களின் அவாவாகும்.
By மு.நாட்ராயன்
4/13/2011 5:37:00 PM
Thanks J, for your acknowledgment and wishes on Tamil New Year which has been celebrated for hundreds of year not just in Tamil Nadu and other states in India but in Sri Lanka, Thailand, Cambodia, Laos..People can't change the history for their personal interest..
By Jai
4/13/2011 5:35:00 PM
இப்புத்தாண்டு உங்களுக்கும் எல்லா நலங்களையும் அளிக்கட்டும். பதவிக்கு வந்ததும் முதலில் சித்திரை முதல் நாளை புத்தாண்டு பிற்ப்பாக மாற்ற வேண்டும்.
By Nandhini
4/13/2011 5:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக