சனி, 16 ஏப்ரல், 2011

Kovan opposes to remove 19 from cong. :காங்கிரசிலிருந்து 19 பேரை நீக்கியது தன்னிச்சையானது: ஈ.வி.கே.எசு. இளங்கோவன்

கோவனைக் காங்.கில் இருந்து நீக்குவது அக்கட்சிக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது; அவருக்குமே நல்லது. தன்னைத்தவிர யார்தலைவராக இருந்தாலும்   சிக்கல் எழுப்பிப்பிறரைத் தூண்டிக் கொண்டே தலைமையை மதிக்காமல் நடந்து கொண்டு பிறரையும் அவ்வாறே எதிர்க்கச் சொல்பவர். தமிழினப் பகைவர். நடுநிலையாளர்போல் பேசித்திரியும் சந்தர்ப்பவாதி.    பரபரப்புச் செய்தி தருகிறார் என ஊடகங்கள் அவருக்கு முதனமை கொடுப்பதால் தன்னைப் பெருந்தலைவராக எண்ணிக்கொண்டு மயக்கத்தில் உழல்பவர். எனவே, உடனடியாக அவர் மீது காங். நடவடிக்கை எடுத்தால் நன்று. மற்றபடி பாழ்செய்யும் பல் குழுக்களால் காங். அழிவது மகிழ்ச்சியே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




காங்கிரஸிலிருந்து 19 பேரை நீக்கியது தன்னிச்சையானது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


கரூர், ஏப். 15: காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட 19 பேரை நீக்கியது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவின் தன்னிச்சையான செயல் என்றார் மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.கரூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 பேரை நீக்கியது செல்லாது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீக்கப்பட்ட 19 பேரில் பாதிப் பேர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள். மீதிப் பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை நீக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் அனுமதி தேவை. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்வானவர்கள். இவர்களை நீக்க காங்கிரஸ் தலைமை, ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். ஆனால், அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாகச் செயல்பட்டு 19 பேரை நீக்கியுள்ளார் தங்கபாலு.தொண்டர்களைத் தலைவர்கள் ஏமாற்றியதாகத்தான் வரலாறு உள்ளது. ஆனால், மனைவியையே தங்கபாலு ஏமாற்றியதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டார். மேலும், வாக்காளர் பட்டியலில் தனது மனைவியின் பெயரே இடம் பெறாத வகையிலும் செய்துவிட்டார். எனவே, மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் (தங்கபாலு) மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியாக பெரிய கட்சி. எனவே, தொண்டர்கள் தங்களின் குறைகளை அமைதியான போராட்டங்கள் மூலமாகத் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு காந்திய வழியிலான போராட்டங்களுக்கு நான் எப்போதும் ஆதரவு தெரிவிப்பேன். இப்போதிருக்கும் தலைவரை மாற்ற வேண்டுமென ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் விரும்புகின்றனர் என்றார் இளங்கோவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக