anna university லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
anna university லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 6 நவம்பர், 2013
புதன், 20 ஜூன், 2012
சொல்கிறார்கள் : "படிப்பிற்குத் தடையில்லை!'
"படிப்பிற்குத் தடையில்லை!'
"சிறு துளிகள்' அமைப்பின் மூலம், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி சைதன்யா: பொதுவாக, கல்லூரியில், பிறந்த நாள், பாஸ் செய்தால், அரியர் வாங்கினால், என, அனைத்திற்கும் நண்பர்களுக்கு, "பார்ட்டி' வைப்பது சம்பிரதாயம். அப்படி ஒரு நாள், என் பிறந்த நாள் பார்டிக்கும், சில ஆயிரங்களை செலவிட்டேன். அதில், பெரும்பாலான உணவு வகைகள், வீணாகியிருந்ததைப் பார்த்த போது, இதற்கு ஏதாவது உபயோகமாக செய்திருக்கலாமே என தோன்றியது. எங்கள் கல்லூரியில், காலில் செருப்பு கூட போடாமல் வந்த, ஏழை மாணவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் முழு சம்பளத்தையும் கொடுத்து உதவினார். அந்த உதவும் மனப்பான்மை, எப்போதும், நம்மிடம் இருக்க வேண்டும் என, எங்கள் "டீன்' கூறிய வார்த்தைகள் எங்களை இன்னும் உத்வேகமாக்கியது. தினமும் கேன்டீனிலும், அவ்வப்போது நடைபெறும் நண்பர்கள் பார்ட்டியிலும், செலவு செய்யும் தொகையில் ஒரு பங்கை, எங்கள் அமைப்பிற்காக கேட்டோம். இந்தத் தொகை நம்முடன் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என கூறி, ஒவ்வொரு வகுப்பிலும் பணம் சேகரித்தோம். கல்லூரியில், எங்கள் அமைப்பின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, அதன் நடவடிக்கைகளை முதல்வர், மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு மூலம், கண்காணிப்பது என, முறைப்படுத்தினோம். பணம் கொடுத்தவர்களின் விவரங்களை, எங்கள் இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தோம். இந்த வெளிப்படைத் தன்மை, எங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பத்து ரூபாயில் இருந்து, பல ஆயிரங்கள் வரை, மாணவர்கள் கொடுத்து உதவினர். "படிப்பிற்கும், மருத்துவச் செலவிற்கும், பிற அத்தியாவசிய செலவிற்கும் பணம் தேவையோ, அவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கல்லூரியின் முக்கியமான இடங்களில், பெட்டிகளை வைத்தோம். தக்கச் சான்றுகளுடன் விண்ணப்பித்த பலருக்கும் உதவினோம். எங்கள் கல்லூரியில் இனி யாருக்கும், படிப்பிற்கு குறுக்கே பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது. அதை, "சிறுதுளிகள்' பார்த்துக் கொள்ளும்.

சனி, 1 அக்டோபர், 2011
Anna University: அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு: அரசிதழ் வெளியீடு
ஆணை பிறப்பிக்கவுடன்தான் அரசிதழில் வெளியிடுவார்கள். இங்கே அரசிதழில் வெளியிட்டபின்பு ஆணை பிறப்பிக்கப்படும் என உள்ளதே!. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!
அரசிதழ் வெளியீடு
First Published : 01 Oct 2011 02:59:46 PM IST
சென்னை, அக். 1: அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக உருவாக்கும் சட்டத் திருத்த அரசிதழ் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.இது அரசாணையாக வெளியிடப்பட்ட உடன், அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுவிடும்.கடந்த திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என 5 பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் இந்த 5 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், அதன் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டக் கல்லூரி (எஸ்.ஏ.பி.) உள்ளிட்ட நான்கு கல்லூரிகள் மட்டும் இணைவு பெற்றிருந்தன.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்தற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு அறிவித்தது.இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டதால் கல்வித் தரம் குறைந்துவிட்டது. ஒவ்வொரு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் வெவ்வேறு பாடத் திட்டங்கள், பிற நடைமுறைகளை பின்பற்றுகின்றன. எனவே, பிரிக்கப்பட்ட 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, மீண்டும் மூன்பிருந்ததுபோல் ஒரே சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என அறிவித்தது.தொடர்ந்து இதற்கான சட்டத் திருத்த மசாதோவும் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இப்போது இந்த சட்டத் திருத்தம் அரசிதழாக வெளியிடப்பட்டுள்ளது.இது ஒரிரு நாள்களில் அரசாணையாக வெளியிடப்படும். அவ்வாறு அரசாணையாக வெளியிடப்பட்ட உடன், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு விடும். அன்றைய தினமே இந்த 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரும் பதவி இழந்துவிடுவர். இவர்கள் அனைவரும், அவரவர்களுடைய முந்தைய பணிக்கு சென்று விடுவர்.பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மட்டும் அவர்களுடைய பணியை தொடர்வர்.
கருத்துகள்
By muthu
10/1/2011 4:11:00 PM
10/1/2011 4:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)