எரிகற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எரிகற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஏப்ரல், 2011

இன்று இரவு எரிகற்கள் மழை!


இன்று இரவு எரிகற்கள் மழை!


புது தில்லி, ஏப்.20: வானியல் ஆர்வலர்கள் வியாழக்கிழமை இரவு எரிகற்களை பார்த்து மகிழும் வாய்ப்பைப் பெறலாம்.  இம்மாதம் 21 மற்றும் 22-ம் தேதி இவை விண்ணிலிருந்து பூமியை நோக்கி ஈட்டியைப் போல பாயும் என்று வானியல் ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா தெரிவித்துள்ளார். மணிக்கு இரண்டு கற்கள் வீதம் புவியில் விழுந்தவண்ணம் இருக்கும். இந்த விண்கற்கள் மிகுந்த ஒளியுடனும் புழுதியைக் கிளப்பியபடி விண்ணிலிருந்து கீழே பாயும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் சில விநாடிகளில் இது மறைந்துவிடும்.  இது இம்மாதம் 26-ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒளி வெள்ளம் இல்லாத பகுதியிலிருந்து பார்க்க முடியும். மாலையிலேயே எரிகற்கள் விழுவது ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.




திங்கள், 3 ஜனவரி, 2011



புதுடெல்லி, ஜன.3-
 
"வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதைந்த வால்நட்சத்திரங்கள் வானில் விண் எரிகற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக்கட்டிகள் அடங்கிய கலவையாகும்.
 
இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து பூமிக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும்போது புவிஈர்ப்பு விசையால் ஊராய்வுக்குட்பட்டு எரிந்து சாம்பலாகின்றன.
 
இது ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஒரே நேரத்தில் அதிகமான விண் எரிகற்கள் பூமிக்குள் நுழைகின்றன. இப்படி நுழையும் விண் எரிகற்கள் எரிந்து மழையாக கொட்டுகின்றன. இந்த அரிய காட்சி இந்த ஆண்டு இன்றும், நாளையும் (செவ்வாய்க் கிழமை) அதிக அளவில் நடக்க இருப்பதாக இந்திய வானியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான விண்கற்கள் எரிந்து விழ உள்ளன. அவை மணிக்கு சராசரியாக 40 முதல் 60 கற்கள் வரை எரிந்து விழ வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எரிந்து விழும் விண் எரிகற்களை இரவில்தான் தெளிவாக காணமுடியும். இன்று அமாவாசை என்பதால் அவற்றை மக்கள் தெளிவாக கண்டுகளிக்க முடியும்.