high level committee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
high level committee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மே, 2012

I was not appointed to do the will and pleasure of the minister - Justice Thomas



கோட்டயம் :முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆராய, உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "கேரளாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை' என, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தெரிவித்திருந்தார். இதற்கு உயர்மட்டக்குழுவில் கேரளா தரப்பு பிரதிநிதியாக இடம் பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், "அமைச்சர் சொன்னபடி நடப்பதற்காக, உயர்மட்டக்குழுவில் என்னை நியமிக்கவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக - கேரள எல்லையை ஒட்டி, 119 ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பலவீன மடைந்து விட்டதாகவும், அதனால், புதிய அணை கட்டவேண்டும் எனவும், கேரளா வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை தர, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை நியமித்தது. இக்குழுவில் தமிழக பிரதிநிதியாக நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளா பிரதிநிதியாக நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, கடந்த மாதம் 25ம்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

கேரளா அதிருப்தி :அந்த அறிக்கையின் நகல்கள், இரு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டன. அதில், முல் லைப் பெரியாறு அணை உறுதியுடன் இருப்பதாகவும், புதிய அணை கட்டத்தேவையில்லை என்றும் உயர்மட்டக்குழு தெரிவித்துள்ளது. இதில், கேரளா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், புதிய அணை கட்டுவது ஒன்றே தமிழகத்துடனான, பல ஆண்டு பிரச்னைக்குத் தீர்வு. இவ்விஷயத்தில் நீதிபதி தாமஸ், கேரளாவுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. இது சம்பந்தமாக கேரளாவின் அதிருப்தியை மத்திய அரசிடம் தெரிவிப்போம்' என்றார்.

நீதிபதி வீட்டுக்கு பேரணி:கோட்டயத்தில் குஞ்ஞிகுழியில் உள்ள நீதிபதி தாமஸ் வீட்டுக்கு நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு போராட்ட சமிதியினர், எம்.எல்.ஏ., பிஜிமோள் தலைமையில் ஊர்வலமாகச் சென்றனர். வீட்டுக்கு சற்று முன்பாக ஊர்வலத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசுக்கும், ஊர்வலம் சென்றவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நீதிபதி கண்டனம்:அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு, நீதிபதி தாமஸ் பதில் அளித்துள்ளார்.

அவர், கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உயர்மட்டக்குழு அறிக்கையை முழுவதுமாகப் படிக்காமல், அமைச்சர் ஜோசப் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தவறான தகவல்களை பகிரங்கமாக தெரிவித்து, பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், நான் நேர்மையாக நடந்துள்ளேன். அணை குறித்து உண்மைகளை உயர்மட்டக்குழுவிடம் தெரிவிக்கவே என்னை நியமித்தனர். அமைச்சர் சொன்னபடி கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய என்னை நியமிக்கவில்லை. நான் சொல்வதும், செய்வதும் உண்மையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்குண்டு. என்னை கேரளாவைச் சேர்ந்தவன் என்றோ, தமிழகத்தைச் சேர்ந்தவன் என்றோ சொல்வதில் அர்த்தமில்லை. இரு மாநிலத்தினருக்கும் நியாயமானதைச் செய்யவே அறிக்கை அளித்துள்ளேன்.இவ்வாறு தாமஸ் கூறினார்.


செவ்வாய், 15 மார்ச், 2011

M.D.M.K. high level committe meets on march 19: மதிமுக உயர்நிலைக்குழு: மார்ச்.19-ல் கூடுகிறது

பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு  வகையில் தங்கள் அளவில் ஊழல்புரிபவர்களாகத்தான் உள்ளனர். ஊழலின் உறைவிடம் என்பதற்காகவோ கொள்ளைக்காரன் அல்லது கொலைகாரன் என்பதற்காகவோ ஒருவனுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையிலும் இல்லை. எல்லாத் தேர்தல்  முடிவுகளும் இவற்றைத்தான் மெய்ப்பிக்கின்றன. இருப்பினும் ஊழலுக்கு எதிராகவும் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாகவும்  வாக்காளர்களைத் திரட்டக் கடுமையாக உழைத்தால் மன நிறைவான வெற்றி காணலாம்.அணியில் நின்று வெற்றி காண்பதை விடத் தனியாய் நின்று தோல்வி கண்டாலும்  தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறளுக்கு இணங்க அதுவே நன்று. தனித்திரு! விழித்திரு! வென்றிடு! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த  வேல் ஏந்தல் இனிது. (குறள்772 )


மதிமுக உயர்நிலைக்குழு: மார்ச்.19-ல் கூடுகிறது

சென்னை, மார்ச்.15: அதிமுக கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு முடிவடையாத நிலையில் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மார்ச் 19-ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கை: மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மார்ச் 19-ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 19-ம் தேதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கும் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

தனித்து நிற்போம் . தன்மானம் காப்போம் . வைகோ யார் என்று நிரூபிப்போம் . வாழ்க வைகோ . வெல்க மதிமுக . க.வெங்கடேசன்,ஸ்ரீ வையாபுரி மருத்துவமனை , சங்கரன்கோவில்.
By க.வெங்கடேசன்
3/15/2011 12:41:00 PM
nalla mudiva yeadunka samy aana april13 kulila yeadunka paathu seeman kittaum sollidu ponga
By balaji
3/15/2011 12:02:00 PM
தலைவா கவலைபட வேண்டாம். எங்களுக்கு என்றும் நீதான். வைகோ தமிழ் நாட்டின் தலை எழுத்து. குடுப்ம ஆட்சிக்கு நீதம் சாவு மணி அடிக்க போகிறாய். என் தலைவன் வைகோ வாழ்க.
By சார்லஸ் அந்தோனி
3/15/2011 12:01:00 PM

வியாழன், 21 அக்டோபர், 2010

அரசியல் நிலவரம்: திமுக உயர்நிலைக் குழு ஆய்வு

சென்னை, அக்.20: தமிழக அரசியல் நிலவரம் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக உயர்நிலைக் குழுவினர் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தனர்.கருணாநிதி, அவரது மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி மற்றும் அன்பழகன் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ராமநாதபுர மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அக்டோபர் 22, 28 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் திமுக உயர்நிலைக் குழுவினர் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதற்கு கட்சியினரை தயார்படுத்தும் வகையில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

எப்படியாவது காங்.கின் காலடியில் வீழ்ந்து உறவு கொள்ள வேண்டும் என எண்ணாமல் தன் மானத்துடன் கட்சியை நடத்தித் தமிழ் மானத்தைக் காக்கும் வகையில்
செயல்படத்திட்டம் தீட்டுவீர்களாக! தமிழினப் 
படுகொலையில் பாராமுகமாக இருந்ததைத்
தொண்டர்கள் கண்டிப்பீர்களாக! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 2:47:00 AM
My dear Tamil people be aware of these wolves who have lapped our blood so long. They have looted us more than enough. The whole property of both DMK, Congress and AIDMK must be confiscated to feed the poor Tamils and for the rehabilation of the Srilankan Tamils. Their assets will be enough to feed four of our generation. Now awake and never allow them to disgrace the Tamil race, swindle us any more. Please Tamil youth go house to house and enlighten the people of the burglary, looting, goondaism, hooliganism they have unleashed on our society. They know very well, Tamils are sentimental fools and will be easily carried away by their speeches before the election. Now it is time to act and act swiftly. This time if you are unwise no God can rescue from their slavery.
By John Christopher
10/20/2010 10:50:00 PM
gagana mangala, surya mangalam, chandra mangalam, vayu mangalam, srava mangalam bhavatu bhavatu bhavatu. Ram nam satya he.Thirumbuka arunachalam. Already the death of DMK is identified by DMK people.
By Palanival
10/20/2010 3:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *