welikadai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
welikadai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 நவம்பர், 2012

இலங்கைச் சிறைக் கலவரம்: 15 பேர் பலி


இலங்கை ச் சிறை க் கலவரம்: 15 பேர் பலி ;
 மதில் சுவர் ஏறி பலர் தப்பி ஓடினர் 

கொழும்பு: இலங்கை வெலிக்கடை சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமுற்றனர். கடும் குற்றம் புரிந்த குற்றவாளிகள் வெலிக்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போர்க்காலத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 50 பேர் வரை இந்த சிறையில் உள்ளனர். இங்கு சோதனை நடத்துவதற்காக அதிரடிப்படையினர் வந்தபோது எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். இதனையடுத்து போலீசார் கண்ணீர்புகை மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கைதிகள் 15 பேர் பலியாயினர்.

சிறை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்து கைதிகள் தாக்குதல் நடத்தினர். பலர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இறந்தவர்கள் அனைவரும் கைதிகளே ஆவர் பாதுகாப்பு போலீசார் ஒரு சிலர் காயமுற்றதாக தெரிகிறது. கைதிகள் கலவரத்தை அடுத்து சிறையை சுற்றிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கலவரத்தை பயன்படுத்தி பல கைதகிள் மதில்சுவர் ஏறி வெளியே தப்பி விட்டதாக கூறப்படுகிறது. பல கைதிகள் சிறை கூடாரத்தின் மதில் மீது ஏறி நின்ற படி இருந்தனர். இந்த கலவரம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகவும் சிறை வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சப்தம் கேட்டபடி இருந்ததாகவும் உள்ளூர் காரர் ஒருவர் தெரிவித்தார். இந்த மோதலில் தமிழ்கைதிகள் யாரும் இறக்கவில்லை
 

செவ்வாய், 9 நவம்பர், 2010

இலங்கையில் கைதிகள்- ககாவலர் மோதல்


இலங்கையில் கைதிகள்-போலீஸ் மோதல்: 42 பேர் காயம்


கொழும்பு, நவ.7: இலங்கையில் உள்ள வெளிக்கடை சிறைக்குள் கைதிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது. இதில் 42 பேர் காயமடைந்தனர்.இலங்கையில் உள்ள பெரும்பாலான சிறைகளுக்குள் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக போதைத் தடுப்பு போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைகளுக்குள் மூன்று வாரங்களுக்கு முன்பு திடீர் சோதனை தொடங்கி நடந்து வருகிறது.ஞாயிற்றுக்கிழமை வெளிக்கடை சிறைக்குள் சோதிக்க வந்த போதைத் தடுப்பு போலீஸôர், சிறைகளுக்குள் இதுவரை நடத்திய சோதனையில் கணிசமான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 11,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதைக்கேட்ட கைதிகள் ஆத்திரம் அடைந்தனர். தங்களையும் போலீஸôர் கைது செய்து விசாரிக்க அழைத்துச் சென்றிடுவார்களோ என்று அச்சம் அடைந்து போலீஸôர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸôரும் தாக்குதல் நடத்தினர். இதனால் சற்று நேரம் சிறை கலவரக் களமாக காட்சி அளித்தது. இதில் 42 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் போலீஸôர் எத்தனை பேர், கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்

போதைப்பொருள் கடத்தியவர்களில் 11000 பேர் சிறையில் அடைக்கப்பட்டு அவர்களில் ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். செய்தியில் இடம் பெற்றவாறு சிறையில் போதை வைத்திருந்த 11000 பேர் கைது செய்யப்படவில்லை.சிறைக்குள் இருப்பவர்களை மீண்டும் கைது செய்ய வேண்டிய தேவை என்ன? செய்தியைச் சரிபார்த்து உள்ளவாறு வெளியிடவும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

திங்கள், 26 ஜூலை, 2010

குட்டிமணியின் கண்கள்

குட்டிமணியின் கண்கள் “எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து  பார்வையற்ற ஒருவருக்குப்   பொருத்துங்கள் நான்   பார்க்க முடியாத தமிழீழத்தை என்கண்களாவது பார்க்கட்டும்  குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது நாளை மலரப் போகும்
தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள்   தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும்  வாழ்வதற்காக
தன்னை அழித்துக்  கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன் ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப்படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில்
மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி  அந்த  விடுதலை வீரரை 08-05-1981 அன்று சிங்களக்
காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் சிங்கள  நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக்  கேட்டபோது, அதற்கு குட்டிமணி கூறிய  பதில் அவரது உள்ளக்  கிடக்கையையும்  விடுதலைமேல் அவர்  கொண்டிருந்த தீராத  பற்றையும் உலகுக்கு வெளிச்சம்  போட்டுக் காட்டியது. “எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற  ஒருவருக்குப்  பொருத்துங்கள். நான்  பார்க்க முடியாத
தமிழீழத்தை என்  கண்களாவது பார்க்கட்டும்.” இதுதான் அந்த  விடுதலை வீரரின் கடைசி ஆசை அதற்குப் பின் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார் . அந்தச் சிறையில்  ஏற்கனவே பல சிங்களக்  கைதிகளும் தமிழ்க்  கைதிகளும்   இருந்தனர். சிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாபாலியல்  வல்லுறவு போன்ற  குற்றங்களுக்காக சிறைவைக்கப்பட்டிருந்தனர்.தமிழர்கள்  விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக்
கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். குட்டிமணி 34
தமிழ்க்கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.1983ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக்கலவரம் மூண்டது. யூலை-24-1983 தொடங்கிய அந்தக் கலவரம் பலவாரங்கள்  தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கான
தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும் இறங்கியது. இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது.
சிறைக்காப்பாளர்கள்  அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க்கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர் .கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ்க் கைதிகளின்
உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக்கூத்தாடினர். குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின்  இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள்மக்களுக்காக நீதி,நியாயம்,விடுதலை,சுதந்திரமே கேட்டார்கள்
} You can leave a response, or trackback from your own site.
கொழும்பு சிறையில் தமிழர்கள் மீது தாக்குதல்


கொழும்பு, ஜூலை 24: கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிறைக் காவலர்கள் மற்றும் சிங்கள கைதிகள் சேர்ந்து இத்தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.இதுகுறித்த விவரம்: கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் மீது சிறைக் காவலர்கள் சனிக்கிழமை காலையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு சிறையில் உள்ள மற்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சிறையில் உள்ள சிங்கள கைதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் சிறைக்காவலர்கள் இதை தடுக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறை சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வுத் துறை அமைச்சர் டி.குணசேகர மற்றும் சிறைத் துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
கருத்துக்கள்

1983 ஆம் ஆண்டு சூலை 25 இல் வெளிக்கடைச்சிறையில் குட்டிமணி, செகன் உட்பட 53 பேர்களை வன்கொடுமையால் சாகடித்ததைத் தங்கள் வழக்கப்படிச் சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர் போலும்! அதற்கு முன்பிருந்தும்அதன் பின்னும் இக்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. தட்டிக் கேட்கத் த்ரணியில் யாருமில்லாதவரை கொடுமை தொடரத்தான செய்யும். தண்டிக்கும் உரிமையுடைய தமிழக அரசை அமைப்பதுதான் ஒரே வழி! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:49:00 AM
Tamila tamila Yan Nee Pogi YaLuvai Intha Singala & Indiya Naikal Kolvaduku Tamil Elam Thuram Ellai
By thamem
7/26/2010 2:47:00 AM
Day seeman odura srilankavikku!indiavil irukkathey. if you donot like india why you are staying here. get out.we donot want thesathrogi like you. you are not faithful for srilankan peole and you are not faithful for indian people. every one knows that you are barking for foreign money.whatever drama you do your true colour is known by the whole world,including srilankan people
By indiANA
7/25/2010 8:04:00 PM
தமிழர்கள் சிங்களவரால் கொன்றெழிக்கப்படுவது தாக்கப்படுவது தினசரி நிகழ்வாகும் ஒரு மிருகங்களை எப்படி சித்திரவதை செய்து துன்புறுத்தி வாழ்வார்களே. அதை போலவே தமிழரை சித்திரவதை செய்து சிங்களவன் துன்புறுத்தி ஆனந்தப்படுகிறான் புலிகள் இருக்கும் வரை தமிழரை நிமிர்ந்து பார்கக பயந்த சிங்களவன் இன்று இந்திய மத்திய மானில அரசுகளின் அஜாயகங்களேடு கொன்றொழிக்கப்பட்ட இல‌ட்சக்கணக்கான தமிழர்களின் மயான பூமியின் மேல் ஏறி நின்று தெடர்ச்சியாக சிங்களவன் தமிழிச்சிகளை கர்ப்பழித்து ஆறு தலைமுறை தமிழர்களை கொல்(ன்று)லும் அரக்கனுக்கு
By naam tamilar
7/25/2010 4:52:00 PM
செம்கம்பள வரவேற்பை கொடுத்து தமிழரை தொடர்ச்சியாக கொல்வதற்கு ஊக்கமழிக்கும் இந்திய தேசமே கொலைகார தேசம் .கருணாநிதியால் நடத்தப்பட்ட தாமிரபரணி கொலை தாண்டவத்தை போல் இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பான‌ முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வரலாற்றில் ஏந்திநிக்கும் இந்த கயவர்களிடம் மனுகொடுக்கவும் ஆதரவு கோட்கவும் புறப்படும் எருமை மாட்டு கூட்டங்கள் திருந்த போவதுமில்லை இலங்கை தீவின் தமிழின அழிப்பின் முடிவுரை தீரும் வரை இந்த கூட்டங்கள் தமிழீழ தமிழக மக்களை கொலை செய்தே தீருவன் என்பதில் பிடிவாதமாக நிற்கின்றனர் தமிழருக்கும் இவர்கட்க்கும் எதுவிதமான. சம்மந்தமிமும் இல்லாத இனமென்பதால் தமிழரை அழித்தே வார் தமிழர்கள் விழித்துக்கொண்டு தங்களை பலப்படுத்தாது விடின் தமிழர் என்ற இனம் வாழ்ததுக்குண்டான அடையாளத்தை இழக்கும் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்க
By naam tamilar
7/25/2010 4:50:00 PM
அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். எம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள வுயுபு இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞசம் நிறை;நத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைத்துள்ளார்.அவரது தமிழின விரோதப் போக்கை புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழக முதல்வருக்கு கண்டனக் கடிதங்கள் அனுப்பியிருப்பதை கேள்விப்பட்டு பெரிதும் மகிழ்ந்தேன். அளவற்ற உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றைக்கும் சீமான் நன்றி சொல்வதோடு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போர்க்குணத்தோடு வாழ்வான் என்பதை பணிவுடன் தெரிவ
By naam tamilar
7/25/2010 4:49:00 PM
ithu kaalam kaalamaaka nadakkum ina azhippu nadavadikkai . enpaththu moontru julaiyil nadanthathu enna?kaithu seithu adaiththu vaiththuviddu siththiravathai seithu kolvathu.kannaikkadappaaraiyal kuththi eduththu siththiravathai seithu kontrathai yaarum maranthirukka mudiyathu . athuvum ulakaththitku tharmaththai pothiththapuththa pakavaanin pikkukalaal nadaththappaddathu .puththa sinkala naakareekam nadaththiya inappadukolai .
By thavam
7/25/2010 3:37:00 PM
என்று தனியும் இந்த அவல நிலை? என்று எங்கள் தலைவர் எம்மை காப்பாற்றப்போகிறார்?
By தங்கராஜன்
7/25/2010 2:43:00 PM
என்று தனியும் இந்த அவல நிலை? என்று எங்கள் தலைவர் எம்மை காப்பாற்றப்போகிறார்?
By தங்கராஜன்
7/25/2010 2:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *