எரிக்கப்பட்டது யாழ்நூலகம் மட்டுமா?
தமிழ்த்தாத்தா உவேசா தமிழ்நூல்களைத் தேடி
நெல்லைமாவட்டம் கரிவலம்வந்தநல்லூருக்கு வருகிறார். அந்தவூர்,
வரகுணராமபாண்டியன் என்ற மன்னரின் தலைநகர். அரிய பல தமிழ்நூல்கள்,
அவர்காலத்துக்குப் பின் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நூல்களைத்தேடி உவேசா வருகிறாரென கேள்விப்பட்டவுடன் அக்கோவிலில்
பூசைசெய்த பிராமணர்கள் அவ்வளவு தமிழ்நூல்களையும்
எரித்துச்சாம்பலாக்கிவிட்டனர். இச்செய்தியை உ.வே.சா. அவர்களே தனது “எனது
சரித்திரம்”என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மன்னர் வரகுணராமபாண்டியரின் தம்பி
அதிவீரராமபாண்டியர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்.
தமிழில் பெரும்புலமை பெற்றவர். வெற்றிவேற்கை, குட்டித்திருவாசகம் எனச்
சொல்லப்படும் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி போன்ற
பலநூற்களைப்படைத்தவர். அவருடைய நூற்களெல்லாம் அங்குள்ள சிவன்கோவில்
கோபுரத்தின் ஏழுநிலைகளிலும் வைக்கப்பட்டிருந்தன. அந்தக்கோபுரம்
எரியூட்டப்பட்டு அவ்வளவு நூற்களும் தீக்கிரையாக்கப்பட்டு, கோபுரத்தில்
இடிவிழுந்து தீப்பற்றியதாகக் கதை கட்டிவிட்டுவிட்டார்கள்.
“பழையநூற்களையெல்லாம் எரித்தால் பரலோகம்
உடனே கிட்டும்” என்ற பரப்புரையில் பொங்கலுக்கு முதல்நாள் எரிக்கப்பட்ட
நூற்கள் எத்தனை, எத்தனையோ?
அருட்செல்வன் திரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக