திங்கள், 5 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 126:
வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல்



விஜயகுமாரதுங்கா - சந்திரிகா
இந்திய அமைதிப் படையின் பணி குறித்து உலகப் பத்திரிகையாளர்களும், இந்தியப் பத்திரிகையாளர்களும் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஆசியா வீக், டைம், நியூஸ்வீக் ஆகிய சர்வதேசப் பத்திரிகைகளும், இந்தியாவின் இந்தியா டுடே, சண்டே இதழ்களும் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் அமைதிப் படையின் செயல்பாடுகளைக் கண்டித்தன என்றே சொல்லவேண்டும். நல்லூர் கந்தசாமி கோயிலில் 50 ஆயிரம் பேர் அடைபட்டு, உணவுக்கும், படுத்துறங்கவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் மக்கள் படும் துன்பங்கள் படங்களுடன் வெளியாயிற்று. சண்டே இதழ் விடுதலைப் புலிகளின் நிலையை மறைமுகமாக ஆதரித்தும், இந்தியா டுடே, இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் அட்டைப் படத்துடன் செய்திக் கட்டுரைகளை வெளியிட்டன. லண்டனில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளோ, ராஜதந்திர ரீதியில் தங்களது விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டன. இவ்வாறான செய்திகளின் மூலம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் வன்னியின் காட்டுப் பகுதியில் முகாம் அமைத்து கொரில்லாத் தாக்குதலைத் தொடர்கிறார்கள் என்றும், பிரபாகரனின் மனைவி மதிவதனி, குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நல்லூர் கந்தசாமி கோயிலில் மக்களோடு மக்களாக அடைபட்டிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. சாவகச்சேரி சந்தையில் வீசப்பட்ட குண்டுகளால் ஏற்பட்ட நாசமும், யாழ்ப்பாணம் மருத்துவமனை குண்டுவீச்சு அவலமும் உலகின் கண்களுக்குத் தெரியவந்தது. டைம் பத்திரிகை, அகதி முகாம் மீது குண்டு வீசித் தாக்கியதை படங்களுடன் வெளியிட்டிருந்தது. இந்தியா டுடே, இந்தியச் சிப்பாய் உயிரிழப்பைப் பெரிதாக்கி தனிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இவையெல்லாமாகச் சேர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையை ஏற்படுத்தியது. இதற்கான அரசு பதிலால் உறுப்பினர்கள் கோபமுற்று அவையைவிட்டு வெளியேறினர்.இலங்கையின் கனவுக் கதாநாயகன் விஜயகுமாரதுங்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் மகள் சந்திரிகாவின் கணவர். வடக்கின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண பல முயற்சிகளை மேற்கொண்டவர். அரசே எதிர்த்தும் யாழ்ப்பாணப் பயணம் மேற்கொண்டதன் மூலம் சிங்களக் கைதிகள் விடுவிக்கப்படவும் காரணமாக இருந்தவர். அப்போது கிட்டு, யாழ் தளபதியாக இருந்து விஜயகுமாரதுங்காவையும் புத்த பிக்குகளையும் வரவேற்றார். விஜயகுமாரதுங்காவின் அரசியல் மற்றும் வடக்கு-தெற்குக்குப் பாலமாகச் செயல்படும் தன்மைகளால் வெறுப்பு கொண்ட ஜே.வி.பி.யினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிப்ரவரி 16, 1988)விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ராஜீவ் காந்திக்கு அடுத்தடுத்து எழுதிய கடிதங்கள் மற்றும் அவ் இயக்கத்தினர் அளித்த பேட்டிகளின் அடிப்படையில், இந்திய உளவுத்துறை அவர்களை மிகவும் பலவீனம் அடைந்த ஒரு குழுவாகக் கணிக்க முற்பட்டது. இந்தக் கணிப்பின் விளைவாக தில்லித் தலைமையும் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதுடன், புலிகளுக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் இறங்கியது. இந்தக் கூட்டமைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை தலைமை ஏற்க வைத்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தத்தைக் கொண்டுவர இலங்கை அரசு முனைப்புக் காட்டியது. இந்த நெருக்கடிக்கு மற்றொரு காரணம், இலங்கையின் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய நிலை. மற்ற பகுதிகளுக்குத் தேர்தல் நடந்து, வடக்கு-கிழக்கில் தேர்தல் நடக்கவில்லையென்றால், அது ஜெயவர்த்தனாவுக்கு மிகப் பெரிய தலைவலி ஆகிவிடும். எனவே, வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட தேர்தலை நடத்துவது என்பது அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. இதன்பின்னர், வரப்போகும் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இத் தேர்தல் அவசியமாயிற்று. இதேபோன்ற ஒரு நெருக்கடி இந்தியாவிலும் இருந்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்தபின்னர் இலங்கை இனப் பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும், தொடர் ஆளுநர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தேர்தல் நடத்தவேண்டியிருந்தது. அதன் அடிப்படையில் அமைதிப் படை, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரை முன்னிறுத்த முனைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினருக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தலில் நிற்க முழுமையான பாதுகாப்புக்கும், தேர்தல் செலவுகளுக்குப் பண உதவியும் செய்வதுடன், பாதுகாப்புக்கு என்று ஆயுதங்களும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு. எனவே, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரும், ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினருடன் உடன்பாடு செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். இலங்கைத் தேர்தல் விதிப்படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப். தங்களை உடனடியாகப் பதிவு செய்து கொண்டன. ஈரோஸ், விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, பிளாட், டெலோ அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. டெலோ பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கூட்டணியுடன் சேர்ந்துகொண்டது. (ஆதாரம்: அசைன்மெண்ட் ஜாஃப்னா -லெப்டி.ஜெனரல் சர்தேஷ் பாண்டே, பக்.79) யாழ்ப்பாணவாசிகள் இந்தத் தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அவர்களைச் சம்மதிக்க வைக்க இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். கூட்டத்தில் மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது. பொதுமக்களில் சிலர் எழுந்து, ""இந்தத் தேர்தலில் பல்வேறு போராளிக் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசும்போது, விடுதலைப் புலிகளை மட்டும் ஏன் அழைத்துப் பேசவில்லை'' என்று கேள்வி எழுப்பினர். தீட்சித் தரப்பில் பேசியவர், ""தேர்தல் என்று வரும்போது, இலங்கைத் தமிழர்கள் எனக் குறிப்பிடும்போது அது யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டும் குறிக்காது'' என்று விளக்கினார். ""அப்படியென்றால் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது ஏன்'' என்று கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள், ""இந்த மேடையிலேயே விடுதலைப் புலிகளுக்கும் அழைப்பு விடுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களைத் தேர்தலில் பங்கேற்குமாறு கேட்டு வருகிறோம். அவர்கள் சுயேச்சைகளை ஆதரித்தாலும் ஆதரிக்கலாம்'' என்றார். இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக சிவானந்த சுந்தரம், ஈரோஸ் பாலகுமாரி உள்ளிட்டோர், ""இது நம்பிக்கைத் துரோகமாகவும், ஏமாற்றுவித்தையாகவும் கருதப்படும்'' என்று வருத்தம் தெரிவித்தனர். (மேற்கூறிய நூல் பக்.79) தமிழீழப் பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான அமைதியான சூழ்நிலை இல்லை என்றும், தேர்தலை நடத்துவதற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டுத் தேர்தலை நடத்தும்படியும் தமிழீழத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் இலங்கை-இந்திய அரசுகளுக்குக் கோரிக்கை வைத்தன. தேர்தலில் கடைசி நேரத்தில் நியமன பத்திரங்களைத் தாக்கல் செய்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்றுதான் அறிக்கை வெளியிட்டது. ஆளும் ஜெயவர்த்தனா கட்சியின் கிழக்கு மாகாண எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை என்று ஜெயவர்த்தனாவிடம் நேரடியாகக் கூறினர். ""அம்பாறை மாவட்டத்தில் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட 24,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் 11,000 பேருக்கு மட்டும் உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'' (வீரகேசரி-5.11.88) ஒப்பந்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். திருகோணமலை புல்மோட்டையில் ஏராளமான தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள கெüளியாமடுவில் சிங்களக் குடியேற்றங்கள் பெருமளவில் நடந்துள்ளன. (வீரகேசரி-22.10.88). தினசரி பத்திரிகைகள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன. அது மட்டுமல்ல- ""கிழக்கு இலங்கையில் உள்ள மக்களில் கலவரங்களினால் தம் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் தமது இடங்களுக்குச் செல்ல முடியாதவாறு இருக்கின்றனர். தமிழ் மக்களுக்குத் தர வேண்டிய அதிகாரங்கள் வரையறுக்கப்படாது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை இலங்கை அரசியல் சட்டத்தின் கீழ் நிரந்தரமாக்காது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பொருள் இல்லையென்றும், நெருக்கடி நிலையை நீக்கி அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேர்தலுக்கு முன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசவேண்டும் என்றும்,'' தமிழ்மக்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.நாளை: தேர்தல் குளறுபடிகள்!
இலங்கைத் தமிழர்களின் தேவையை பூர்த்தி செய்யத் தனிக் குழு: கிருட்டிணசாமி கோரிக்கை



சென்னை, அக். 4: இந்திய அரசு சார்பில் தனிக்குழு அமைத்து இலங்கைத் தமிழர்களுக்கான அத்யாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு வழங்கும் நிதியை நேரடியாக ராஜபட்சவிடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் கடந்த 5 மாதங்களாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு நல்ல உணவு, உடை, தங்குமிடம் போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் இந்தியா தொடர்ந்து மெüனம் சாதித்து வருகிறது. இந்திய அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தச் சமயத்தில் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது புதிய தமிழகம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. தமிழக மீனவர்கள் மீது கடந்த 10 மாதங்களாக இலங்கைக் கடற்படை தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது, வேடிக்கையாக உள்ளது. ஒரு தமிழரான அவர் இவ்வாறு பேசுவது வியப்பாக உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை ஆளும் மத்திய அரசு தவறாகக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு அளித்துள்ள ரூ. 500 கோடியில் வீடு, பள்ளி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் புதிய தமிழகம் சார்பில் இந்த மாதம் 3-வது வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமா-அத், யாதவர் மகாசபை, பன்னாட்டுத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகியன கலந்து கொள்கின்றன என்றார் அவர். இந்தச் சந்திப்பின் போது இந்திய தவ்ஹீத் ஜமா-அத் தலைவர் எஸ்.எம். பாக்கர் கலந்து கொண்டார்.

கருத்துக்கள்

மனித நேயர்கள் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய பொருள்களைக் கூட அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க இயலாத் துப்பு கெட்ட அரசிடம் எக் கோரிக்கை வைத்துப் பயன் இல்லை. மாநிலந் தோறும் சென்று தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் கொடும் போக்கையும் வஞ்சகச் செயலையும் விளக்கி மக்கள் புரட்சியை ஏற்படுத்த முயலுவதே சாலச் சிறந்தது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை: தேமுதிக எதிர்ப்பு



சேலம், அக். 4: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கூடாது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியேற்ற உரிமை வழங்குவது, இலங்கையில் நடைபெறும் இனவெறி அரசின் கொள்கைகளை நாமே நிறைவேற்றி வைப்பதைப்போல் ஆகிவிடும். தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சிந்திப்பது, சிங்களவரிடம் இந்தியாவும், தமிழகமும் சரணடைய செய்யும் முயற்சிதான். தேமுதிக இதை ஒருபோதும் ஏற்காது என்றார்.

கருத்துக்கள்

இந்த நிலைப்பாட்டை மாற்றாமல் போராடி வெற்றி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அகதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்



செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாயிலில், வட்டாட்சியர் வெங்கடேசன், ஏஎஸ்பி சேவிர்தன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார் தமிழர்கள் பாத
செங்கல்பட்டு, அக். 4: அகதிகளை நிபந்தனையின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். சிறப்பு முகாமில் 15-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அகதிகளை சந்திக்க, தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் செங்கல்பட்டுக்கு வருகை தந்தார். ஆனால் 20 மீட்டர் தூரத்திலேயே போலீஸôர் அவரது காரை நிறுத்தி, முகாம் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ""உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நண்பர்களின் உடல் நலம் அறிந்து கொள்ளவே வந்தேன். சிறப்பு முகாம் என்பதே இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது தானே? எந்த வழக்கும், குற்றச்சாட்டும் இல்லாதவர்களை பல ஆண்டுகளாக இங்கே அடைத்து வைத்துள்ளனர். மேலும் தற்போது இந்த முகாமில் 8 பேர் திறந்தவெளி முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பிணையில் விடுவிக்கப்பட்டவர்களையும் மீண்டும் அடைத்துள்ளனர். விடுதலை செய்தவர்களையும் வெளியே வரும் போதே, கைது செய்யப்பட்டு மீண்டும் அடைக்கின்றனர். முதல்வர் கருணாநிதி உடனடியாக, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்யவேண்டும்'' என்றார். அவருடன் மறு மலர்ச்சி மக்கள் தமிழக தலைவர் துரையரசு உள்ளிட்டோர் உடன் வந்தனர். உண்ணாவிரதம் மேற்கொண்ட 42 பேரில், 13 பேர் உண்ணாவிரதத்தில் இருந்து விலகி கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள் 29 பேருடன் க்யூ பிரிவு போலீஸ் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்கள்

இத்தகைய வதை முகாம்கள் இருக்கும் பகுதிகளைச் சிங்களக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்துச் சிங்கள வதைமுகாம்களுடன் இணைத்துவிடலாம். குறைந்தது நம் அரசுகளே நம்மவர்களைக் கொடுமை செய்கின்றன என்ற அவப் பெயராவது மிஞ்சும் அல்லவா? கச்சத்தீவையே தாரை வார்த்த நாம் இதைக் கூடவா செய்ய மாட்டோம்!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கைத் தமிழர் பிரச்னை:
அக்டோபர் 9-ல் திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்



சென்னை, அக். 4: இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்பக் கோரி திருச்சியில் அக்டோபர் 9-ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமை, மாநில சுயாட்சி வழங்கி அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்னைகளில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய நிர்பந்தத்தை அளித்து தீர்வு காண வலியுறுத்தி திருச்சியில் அக்டோபர் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கருத்துக்கள்

தமிழர்களின் தாயகம் தமிழ் ஈழம் என்பதை உணராத வரையில்அல்லது உணர்நததை மக்களுக்கு உரைத்துப் போராடாதவரையில் மார்க்சியப் பொதுவுடைமையினர் போலிப் போராட்டங்களில் ஈடுபட்டுப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அ.தி.மு.க. - பா.ம.க. உறவு முறிந்தது



சென்னை, அக். 4: அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியது. திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பா.ம.க. தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது. அப்போது பா.ம.க.வுக்கு 7 மக்களவைத் தொகுதிகளையும், 2010-ல் காலியாகும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை இடத்தையும் அளிப்பது என உடன்படிக்கை ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்தலுக்குப் பின் கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். ஆனால் பா.ம.க. தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை. இதனால் அ.தி.மு.க. - பா.ம.க. இடையே அதிருப்தி நிலவுவதாகப் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கொடநாடு சென்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். தேர்தலுக்குப் பின் இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை எனவும், எனவே மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது மணி தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் சனிக்கிழமை (அக். 3) செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை, பா.ம.க. ஆதரிக்கும் என தெரிவித்தார். ஆனால் அடுத்த நாளே அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக பா.ம.க. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பா.ம.க. அலுவலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கை: "தேர்தலின்போது ஏற்பட்ட ஒரு மோதல் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மருமகன் பரசுராமன், தம்பி சீனிவாசன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டு, கொலை வழக்கில் சேர்க்கப்பட்டனர். காவல்துறை புலன் விசாரணைக்குப் பின் ராமதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இப்பிரச்னை தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, பா.ம.க. தலைவர் கோ.க. மணி, முன்னாள் எம்.பி. கோ. தன்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினார்கள். ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று விளக்கினார்கள். எனினும் அதற்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டம் திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், ""இது சாதாரண விஷயம் அல்ல; இத்தகைய நிலைமைக்குப் பிறகும் அ.தி.மு.க.வுடன் தோழமை உறவு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை; எனவே அ.தி.மு.க.வுடன் இனி உறவு தேவையில்லை; இனியும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கக் கூடாது'' என ஒருமித்த குரலில் வலியுறுத்தினார்கள். எனவே, "அ.தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி, தோழமை உறவை பா.ம.க. முறித்துக் கொள்கிறது' என நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஏற்பட்ட கூட்டணி, அக்டோபரில் முறிந்துவிட்டது. பா.ம.க.வின் கூட்டணிகள் 1991 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி. 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வெற்றி. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அடங்கிய கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க., 20 தொகுதிகளில் வெற்றி. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வெற்றி. 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் நீடித்த பா.ம.க., 18 தொகுதிகளில் வெற்றி. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 7 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை (அக். 4) அறிவித்துள்ளது.

கருத்துக்கள்

இனி திமுக பக்கம் சேராமல் காங். உடன் சேர முயலாமல் தனி அணி அமைத்தால் நன்று. இல்லையேல் அரசியல் வணிகராக இழப்புக் கணக்கில் மூழ்கி யாராலும் தேற்ற முடியாத நிலையே காண வேண்டும். சாதிப் பித்தையும் பதவிப் பித்தையும் தூக்கி எறிந்து தமிழ்நலக் கட்சியாக மாற வேண்டுகோள் விடுக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 2:54:00 AM

ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான். இவன மாதிரி அயோக்கியன், பொறுக்கிய பார்க்கவே முடியாது. இவனுக்கு, கேடிப்ப்பயபுள்ள சனியன் புடிச்ச கருணாநிதியே பரவாயில்லை.

By INdian
10/5/2009 2:46:00 AM

ramdas pondra varhalai makkal adayalam, kandu sariyanma paadam puhatta veandum makkal inium amalihalaha irukkadeerhal abu salik

By abu salik
10/5/2009 2:24:00 AM

Makalai emalinu ninikum ramadoss pondra ayokurkuluku vote poduvathai eniyavuthu niruthuvom.

By ananth
10/5/2009 1:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-125: அன்னை பூபதியின் உண்ணாவிரதம்

First Published : 04 Oct 2009 10:06:00 PM IST


நாவலடியில் உள்ள அன்னை பூபதி நினைவு மண்டபம்

கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, "திகாடுமல்லை' என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும்.
இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை.
இவர்களில் விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது வேதனை தரும் விஷயமாகும்.
இதன் ஆரம்பம், "மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்' என்று பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார்.
இந்தப் பாலியல் பலாத்காரத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று "முறிந்தபனை' நூல் விரிவாக விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412 வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன?
"நமது சமூகத்தில் தன்னுடைய சுய விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மெüனமாகத் தமக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன் வருவதில்லை.
""பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம் வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்'' - என்று "முறிந்தபனை' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள் சி.புஷ்பராஜாவின், "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 - 460).

இச்செயல்கள் மட்டக்களப்பில் அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:
"திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக "உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை' மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்'.
அந்தக் கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை.
இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி - அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி "அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது' என்றார்.
அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு, "புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - அதன்பின்னரே பேச்சுவார்த்தை' என்றார்.
அன்னையர் முன்னணியினரோ, ""எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக் காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்'' என்று கேட்டனர்.
பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, "புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்' என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.
மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.
அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது. இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக் கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட் தேர்வானார்.
1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச் செல்லப்பட்டார்.

இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.
13-10-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும் முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு, இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும் கைது செய்யப்பட்டனர்.
அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர் விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார். பூபதி அம்மாள் 13-10-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.
அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல், அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது. நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்; மறுபக்கம் மக்கள் கடல்!
"தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி அம்மாள் என்றும் திகழ்வார்' என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை முடித்துள்ளார்.

நாளை: வடக்கு - கிழக்கு மாகாணத் தேர்தல்!

இலங்கை தமிழரின் உரிமை காக்க முயற்சி தேவை: மத்திய, மாநில அரசுகளுக்கு
காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை



சென்னை, அக். 3: வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதே ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களில் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.
இலங்கையிலுள்ள இவர்களின் சொத்துகள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும். இவர்களில் எவ்வளவு பேர் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ, அந்த அளவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு மகிழ்ச்சி அதிகமாகும்.
சிங்களவர்களை அந்தப் பகுதிகளில் குடியமர்த்த முயற்சிப்பர்.
இதை கவனத்தில் கொண்டு, இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில், வீட்டிற்கு ஒருவரேனும் இலங்கைக்குச் சென்று தங்களது உரிமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.


கருத்துக்கள்

தமிழ்ப்பற்றாளர் மகன் என்ற மரபு வழி உணர்வால் கட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழுணர்வுடன் கருத்துகளை வெளியிடுகிறார். இவரது முயற்சியாலாவது காங். திருந்தட்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2009 5:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சாதியைக் கூறாமல் "தமிழன்' என்று கூறும் நிலை வர வேண்டும்: ஸ்டாலின்



கரூர், அக். 3: "நீ யாரென்று கேட்டால் சாதியைக் கூறாமல் நான் தமிழன் என்றோ அல்லது நான் மனிதன் என்றோ கூறும் நிலை வர வேண்டும்' என்றார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வீரணம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:
நீங்கள் யார்? என்று கேட்டால், நம்மில் எத்தனை பேர் நான் தமிழன் என்றோ, மனிதன் என்றோ கூறுகிறோம். எல்லோரும் அவரவர் சாதியைதான் கூறுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். நான் தமிழன் அல்லது நான் மனிதன் என்று கூறும் நிலை வர வேண்டும்.
சதிக்கு கால் முளைத்ததால் அது சாதி; அதேபோல, சா"தி'-க்கு கொம்பு முளைத்தால் அது "தீ'யாக மாறிவிடும்.
இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ. 20,000 அளிக்கும் திட்டம் உள்பட பெண்களின் முன்னேற்றத்துக்கென மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இப்போது 4,05,680 சுய உதவிக் குழுக்கள் 65,20,000 பெண்களுடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் ரூ. 4,188 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியில், ரூ. 76 கோடி சுழல்நிதியாகவும், ரூ. 1,644 கோடி கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 99 சதவீத கடன் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டு வருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றார் ஸ்டாலின்.


கருத்துக்கள்

மிகச் சரியான கருத்து. ஆனால் சொல்பவர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால்தான் பிறரும் தம்மைச் சாதிவழியாகச் சிந்திக்காமல் தமிழனாகவோ மனிதனாகவோ சிந்திப்பர். அடி மனத்தில் இருந்து இந்த உரை வந்தது என்றால் முதலில் கலைபண்பாட்டுத் துறையை முறைகேடாக இசைவேளாளர்களை நியமித்து இசை வேளாளர்துறையாக மாற்றியதை - திமுக ஆட்சியில் மேற்கொண்ட நியமனங்களை நீக்கம் செய்து சாதிக்கு அப்பாற்பட்ட தகுதி அடிப்படையிலான நியமனங்களை மேற்கொண்டு - தமிழினத் துறையாக மாற்ற வேண்டும். துணை முதல்வர் முன்வருவாரா?

மாண்புமிகு முதல்வரின் கட்டுப்பாட்டில் வரும் கலைபண்பாட்டுத்துறை

சீரடைய வேண்டும் என விரும்பும்

இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2009 5:09:00 AM

UNNAI POLUM UNATHU APPANAI POLUM THAMILAI VITKUM PORUKKIKAL TAMIL NADDAI AALUM MADDUM TAMILAN TAMILANANKA IRUKKA MAADDAAN.ILANKAI TAMILANAIP PAAR...AVAN TAMILAN !!!

By Mathi
10/4/2009 4:36:00 AM

Let Karunanidhi, and Stalin, Alagiri, and other members of the family who own DMK choose the MLA, and MP candidates without basing caste, and religion. First question they ask is what is the caste from which this candidate applicant comes from. The statement by Stalin , a dictator whose name he bears must correct himself before talking about others. Caste, and religion are going to stay for a long time, and may come out in a different form. When is he going to give scholarship for education or reservation of jobs without caste? Does he have courage to do so?

By guest
10/4/2009 4:11:00 AM

is it possible until your dirty family die and get lost from tn politics

By reg
10/4/2009 3:06:00 AM

FANTASTIC&MARVELLOUS ADVICY BY DY CM STALIN.EASYTO ADVISE AND PROPOGATE.BUT DIFFICULT TO FOLLOW BY THE PREACHER HIMSELF. LET MLAsMPs&POLITICIANS START THIS IDEAL INCLUDING NAMING THEMSELVES IN THOOYATAMIL>I AM SURE TAMILNADU WILL PROSPER.VAAZHA THOOYATAMIZHARHAL.VAAZHA ANNANAAMAM?AYYANIN KURIKKOL.

By VALADI LAKSHMINARAYANAN SETHURAMAN
10/4/2009 1:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கை துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன், தா.பாண்டியன், கி.வீரமணி கோரிக்கை

First Published : 04 Oct 2009 02:14:27 AM IST

Last Updated : 04 Oct 2009 02:35:25 AM IST

சென்னை, அக். 3: சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர்.
"இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. எனவேதான், அவற்றைப் பார்வையிட யாரையும் அனுமதிக்கவில்லை' என துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறியதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் விவரம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:
தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் அனுமதி உள்ளது. துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இதை மறைத்து, உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது போர் முடிந்துவிட்டதென்று கூறும் இலங்கை அரசு, வெளிநாட்டினரையோ, செய்தியாளர்களையோ தமிழ் மக்களைச் சந்திக்க அனுமதி மறுக்கிறது. இந்த நிலையில், முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விலங்குகள் போல் சித்திரித்துப் பேசிய துணைத் தூதரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
கச்சத் தீவு குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறியுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். அவரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளார் திருமாவளவன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: இலங்கைத் தமிழர்களை அழித்ததோடு, இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியத் தமிழர்களையும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இழிவாகப் பேசியுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.
அவர் இலங்கையில் உள்ள முகாம்கள் மிருகக் காட்சி சாலை அல்ல என்று வர்ணித்திருப்பது அந்த நாடு உலக மக்களின் கருத்தை மதிக்க மறுக்கும் காட்டு மிராண்டி அரசு என்பதைக் காட்டுகிறது.
கச்சத்தீவு, இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்டது. கொடை தந்த நாட்டை எச்சரித்திருப்பதும், உங்களுக்கு உரிமை இல்லை என இந்திய மண்ணில் இருந்து பேச இடம் தந்திருப்பதே பெரும் தவறாகும்.
மீனவர்களைக் காக்கவும் கச்சத்தீவில் உரிமைகளை மீட்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் மிருகங்களாக நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளது.
அதனை வேறு வகையில் இலங்கை துணைத் தூதர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றே இதைக் கருத வேண்டும்.
இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.


கருத்துக்கள்

தமிழ் இனத் தலைவர்கள் ஒப்புக்கு மாரடித்துப் பயனில்லை. இலங்கையிலும் ஈழத்திலும் தமிழர்கள் உரிமையுடன் வாழும் வரை தமிழ் நாட்டில் இலங்கைத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம், சிங்கள வான் வழிப் போக்குவரத்து, சிங்கள நிறுவனங்கள் எனச் சிங்களம் தொடர்பான எதுவும் தேவையில்லை எனப் போராடி வெற்றி கண்டால் பாராட்டிற்குரியவர்கள்.பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நடித்துக் கொண்டு காங்கிற்கும் அதன் பின்பாடிகளுக்கும் துதிபாடிகளாக விளங்கிக் கொண்டு ஆரவார ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுப் பயன் இல்லை. முதன்மைக் கட்சிகளை அண்டிப் பிழைக்காமல் தமிழ் நலக் கூட்டணியை அமைத்துப் போராடினால் அன்றித் தமிழர்களுக்கு விடிவு கிடையாது. எனவே அண்டிப்பிழைக்கும் வரை தமிழர் நலன் குறித்துப் பேசி வெறுப்புணர்ச்சிக்கு ஆளாகாமல் இருத்தலே சாலச் சிறந்தது.

உண்மைத் தமிழினத் தலைவர்களாக மாற வேண்டும் என விழையும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2009 4:44:00 AM

This Thirumavalavan, Nedumaran,pandiyan .. velinaadukalukku pokum pothu puli vaalkal ivarai veru oru veeddil thanga vaipparkal. Yean entral thankaludan nintral ivarkal thankaludaiya phone..i paavithu thankalukku bill yeatti viduvarkal enpathal. Ivarkal thanki nintra veedukalil irunthu kondu America mattum naadukalukku avarkal veeddil irunthu osi phone oru kadduppau illamal use panniyi irukkiraarkal. Ithanal anthe veeddu kararkal telephone comppanykku solli long distance calls feature enpathanai cut panni viddaarkal. Intha Pichaikkara naikal pora idankalilum aadkali nimmathiyaka vaazha vida maddarkal. Enke idam kidaithatho anke suruddi viduvom entru nitkirarkal. Ippothu ivarkalum varumaanam illamal nitkirarkal.

By suppan
10/4/2009 4:33:00 AM

I don't find this person is any way worst than our tamil politicians, particularly Thiruma he is the bloody double headed snake! Thiruma is making noise only because sorinai sonia kicked his balls!

By Nethaji
10/4/2009 3:40:00 AM

where is this shameless animal karunanthi comment for this animal statement

By reg
10/4/2009 3:00:00 AM

................................To Thinamani: I would like to thank you and your staff for your efforts in reporting on the horrific acts perpetrated by the Sri Lankan regime. I appreciate your expressively honest portrayal of this monstrous government and its ravaging of Tamil civilians and I hope that other newspapers follow your example of integrity.

By Vani Kumar, London, UK
10/4/2009 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *