திங்கள், 5 அக்டோபர், 2009

அகதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்



செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாயிலில், வட்டாட்சியர் வெங்கடேசன், ஏஎஸ்பி சேவிர்தன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார் தமிழர்கள் பாத
செங்கல்பட்டு, அக். 4: அகதிகளை நிபந்தனையின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். சிறப்பு முகாமில் 15-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அகதிகளை சந்திக்க, தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் செங்கல்பட்டுக்கு வருகை தந்தார். ஆனால் 20 மீட்டர் தூரத்திலேயே போலீஸôர் அவரது காரை நிறுத்தி, முகாம் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ""உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நண்பர்களின் உடல் நலம் அறிந்து கொள்ளவே வந்தேன். சிறப்பு முகாம் என்பதே இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது தானே? எந்த வழக்கும், குற்றச்சாட்டும் இல்லாதவர்களை பல ஆண்டுகளாக இங்கே அடைத்து வைத்துள்ளனர். மேலும் தற்போது இந்த முகாமில் 8 பேர் திறந்தவெளி முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பிணையில் விடுவிக்கப்பட்டவர்களையும் மீண்டும் அடைத்துள்ளனர். விடுதலை செய்தவர்களையும் வெளியே வரும் போதே, கைது செய்யப்பட்டு மீண்டும் அடைக்கின்றனர். முதல்வர் கருணாநிதி உடனடியாக, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்யவேண்டும்'' என்றார். அவருடன் மறு மலர்ச்சி மக்கள் தமிழக தலைவர் துரையரசு உள்ளிட்டோர் உடன் வந்தனர். உண்ணாவிரதம் மேற்கொண்ட 42 பேரில், 13 பேர் உண்ணாவிரதத்தில் இருந்து விலகி கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள் 29 பேருடன் க்யூ பிரிவு போலீஸ் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்கள்

இத்தகைய வதை முகாம்கள் இருக்கும் பகுதிகளைச் சிங்களக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்துச் சிங்கள வதைமுகாம்களுடன் இணைத்துவிடலாம். குறைந்தது நம் அரசுகளே நம்மவர்களைக் கொடுமை செய்கின்றன என்ற அவப் பெயராவது மிஞ்சும் அல்லவா? கச்சத்தீவையே தாரை வார்த்த நாம் இதைக் கூடவா செய்ய மாட்டோம்!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக