veeramani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
veeramani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூன், 2011

because of cong. d.m.k. fall down -k. veeramaniyar: திமுகவின் தோல்விக்குக் காங்கிரசே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு

ஆசிரியர் வீரமணியார் சரியாகத் தெரிவித்து உள்ளார். எனினும் காங்.உடன் விரும்பியே தி.மு.க., இணைந்திருந்ததும் அது  துரத்தினாலும் விரட்டினாலும் ஒட்டிக் கொண்டிருந்ததும்தானே இனப்படுகொலைகளுக்குத்  துணையாக அமைந்தது.தமிழர் நலன் கருதி வெளியேறாமல் மத்திய அரசை இறுகப் பற்றிக் கொண்டு தவம் இருந்தது ஏன்? எனவே, தீ வினை விதைத்தவர்கள் தீ வினை அறுக்க வேண்டும்.  ௨.) குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறும்  பொழுது பரிவு காட்டலாம். ஆனால், குற்றமற்றவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கக்கூடாது அல்லவா? எனவே, படுகொலைகளுக்கு உதவியவர்களுக்காகப் பல்லக்கு தூக்காமல். இனி அ.தி.மு.க. அரசிற்கு ஒத்துழைப்பாக இருந்து தமிழ் நலப் பணிகளை விரைந்து ஆற்ற வழிகாட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு

First Published : 10 Jun 2011 02:34:49 AM IST


சென்னை, ஜூன் 9: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு செயல்களுக்கு பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.  "லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாகும். தமிழர்களின் நன்றிக்குரிய தீர்மானமாகும். இதனை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.  ஒட்டுமொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தத் தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சனம் செய்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.  தமிழக அரசியலில் கடந்தகால கசப்பான அனுபவங்களையே சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள்தான் என்ன?  பொது எதிரியான ராஜபட்ச தப்பித்துக் கொள்ளவே இது வழிவகுக்கும். மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக பொதுப்பிரச்னையை மறந்து விட்டு, பொது எதிரிகளை ஒதுக்கிவிட்டு இங்குள்ள கட்சிகள் ஒருவருக்கொருவர் தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னையை இன உணர்வுப் பிரச்னையாகவோ, மனித உரிமை பிரச்னையாகவோ பார்க்காமல், நல்ல அரசியல் முதலீடு எனக் கருதி தீயை அணைக்க முயலாமல், யார் எந்த அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள் என்ற ஆராய்ச்சி லாவணியிலா இறங்குவது?  காங்கிரஸே காரணம்: இலங்கைக்கு ராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறுமொழியாக திமுக கூற ஆரம்பித்தால் தமிழக அரசின் வலிமை குறைந்து விடும்.  மத்தியில் ஆளும் காங்கிரசுடன் இருந்து கொண்டு அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றது திமுக.  எனவே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயலாக்க ஆளும் கட்சியும், முதல்வரும் முன்வர வேண்டும். அதற்கு நம் அனைவருக்கும் இடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவை' என கி. வீரமணி வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சனி, 5 மார்ச், 2011

dont obey to cong.compulsion-veeramani request: காங்கிரசின் கட்டாயத்திற்கு அடிபணிய வேண்டாம்: கி.வீரமணி வேண்டுகோள்


மடியில் கனமிருந்தால்தான் வழியில் அச்சம்  இருக்கும் என்கிறார்கள். தி.மு.க. துணிவுடன் உள்ளதால் அலைக்கற்றை ஊழலில் காங்.கின் பிடி தி.மு.க.கையில்  இருக்க வேண்டும். எனவே,  இப்படியாவது கொலைகாரக் காங். ஒழிக்கப்படட்டும். வீரமணியாரின் அறிக்கை சரிதான். 
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழே விழி! தமிழா விழி!



காங்கிரஸின் நிர்பந்தத்துக்கு அடிபணிய வேண்டாம்: 
கி.வீரமணி வேண்டுகோள்

சென்னை, மார்ச், 5: திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட 63 தொகுதிகள் வேண்டும் என்றும், போட்டியிடும் தொகுதிகளை தாங்களே முடிவு செய்வோம் என்றும் காங்கிரஸ் நிர்பந்திப்பதாகவும், இது முறைதானா என்றும் திமுக தலைவர் கருணாநிதி மனம் வெதும்பிய நிலையில் நேற்று இரவு கேள்வி எழுப்பினார்,. இதற்கு, காங்கிரஸின் நிர்பந்தத்துக்கு திமுக தலைமை அடிபணிய வேண்டாம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இதுகுறித்த கி.வீரமணியின் அறிக்கை...தி.மு.க. தலைவரது அறிக்கை - நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான -நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறைகளிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை, காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்களின்நிபந்தனையை ஏற்கும் கட்சியாகவும் உள்ளது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இந்தக் கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும் - நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தி.மு.க. இல்லை. மக்களுடைய பேராதரவினைப் பெற்று பட்டிதொட்டியெல்லாம் கிளைகளுடன் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை, தோழர்களைக் கொண்ட - பல்வேறு சோதனைகளைச் சந்தித்து கரையேறி வெற்றி கொண்ட இயக்கம். எனவே, இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை பெறும் அளவுக்கு தி.மு.க. செயல் வீரர் - வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு (விஸ்வரூபம்) கொள்ள வேண்டும். எனவே திமுகவின் உயர்நிலை அரசியல் செயற்குழுக் கூட்டத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது...- என்று தி.க தலைவர் கி.வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.திமுக, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளக்கூடும் என்று சில ஆங்கில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், திமுகவின் உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இந்தச் செய்திகளை காங்கிரஸ் வட்டாரம் மறுத்துள்ளது. இருப்பினும், திமுக உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தங்கள் நிலையை காங்கிரஸ் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.
கருத்துகள்

அடேய் வீரமணி, நீயெல்லாம் ஒரு மனுஷன? பெரியார் சினிமா பார்க்க கூடாதுன்னு சொன்னார். நீ கருணாநிதி சினிமாவை பார்த்து கலைஞர் டிவி யில் கமெண்ட் அடிக்கிறாய். .. நாளை ஜெயலலிதா முதல்வரானால் நீ காலை ...
By raman
3/5/2011 1:48:00 PM
"காங்கிரஸ் இப்படி பண்ணுவது தப்பு,பாரம்பரியமான ஒரு கட்சி அரசியல் ப்ளக்க்மாயில் செய்கிறதோ எண்டு எண்ண தோன்றுகிறது.இப்படி குளறுபடிகள் பண்ணிவிட்டு makkazhidam தான் வரவேண்டும்.ஊழலில் காங்கிரஸ்க்கும் தொடர்புண்டு .கமேன்வீழ்த் ஊழல் ,அதர்ஸ் ஊழல் அதற்கெல்லாம் ஒரு சட்டம்
By kumar
3/5/2011 1:47:00 PM
கலைஞர் இரவோடு இரவாக அவசர அவசரமாக எழுதிக் கொடுத்ததை உங்கள் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளது போல் தெரிகிறதே! "சுயமரியாதை" என்னும் வெறும் வார்த்தையை நமக்கு அவ்வப்போது நினைவு படுத்த இன்னும் சிலர் இருப்பது சற்று ஆறுதலே! மணியாரே! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உமக்கு தெரியாயதா?? மத்தியில் ஆட்சி அமைக்கும்போது நம்ம முதியவர் ஆடிய ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?? காங்கிரசுக்கு எப்படியெல்லாம் கிடுக்கிப்பிடி போட்டு திணற வைத்தார். வடநாட்டு சேட்டு சும்மா விடுவானா? சமயம் பார்த்து மஞ்சள் துண்டை இறுக்குகிறான். ஏற்கனவே "கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை" என்று நம்ம பெரியவருக்கு "செக்" வைத்து அவர் வாயை அடைத்து வைத்துள்ளான். இப்போது சும்மா கும்மு கும்முன்னு குத்துறான். போதாக்குறைக்கு கலைஞரை பணிய வைக்க "கனிமொழிக்கு சிபிஐ சம்மன்" என்னும் துருப்புச் சீட்டை வேறு கையில் வைத்துக் கொண்டு நம்ம பெரியவரின் தூக்கத்தை கலைத்துக் கொண்டு இருக்கிறான். கலைஞரின் சாணக்கியத்தனம் காலாவதியாகி வெகு நாட்களாகி விட்டது. முதியவர் திணறத்தானே செய்வார்.
By Abdul Rahman - Dubai
3/5/2011 1:37:00 PM
காங்கிரஸ் குட்டன்யில் சேந்தாலும் சரி சேராவிட்டாலும் சரி தி மு க குட்டனி மண்ணை கவ்வ போவது உறுதி .
By mohan
3/5/2011 1:20:00 PM
நீ ஒரு திருட்டு பயல் மு.க. ஒரு திருட்டு பயல் காங் ஒரு திருட்டு பயல் total ஒரு திருட்டு பயல்கல்
By ஜெய் indian
3/5/2011 1:12:00 PM
அப்படியானால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி வரச்சொல்லுங்கள் பார்க்கலாம் ...
By நவநீதகண்ணன்
3/5/2011 1:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 4 ஜனவரி, 2011

periyar articles-writ petition dismiss: பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுப

பெரியார் எழுத்துகள் எனக் குறிப்பதை விடப் பெரியாரின் படைப்புகள் எனக் குறிப்பது சரியாக இருக்குமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுபடி


சென்னை, ஜன.3: பெரியார் எழுத்துகளை வெளியிடுவது தொடர்பாக பெரியார் சுயமரியாதை பிரசார மையத்தின் செயலர் கி. வீரமணி அளித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  குடியரசு இதழில் பெரியார் எழுதியவற்றை பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதற்கு உரிமை இல்லை என்று கூறி கி. வீரமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அதே வழக்கில் பெரியாரின் எழுத்துகளை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இடைக்கால மனு தாக்கல் செய்தார்.  இந்த இடைக்கால மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கடந்த 27.7.09-ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து வீரமணி செய்த மேல்முறையீட்டை நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கடந்த 9.6.10-ல் தள்ளுபடி செய்தது.  பெஞ்சின் உத்தரவை எதிர்த்து வீரமணி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.) தாக்கல் செய்தார். அதில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் 26.11.10-ல் உத்தரவு பிறப்பித்தது.  இந்த நிலையில், வீரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர், ""நான் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் சில புதிய விஷயங்களைத் தெரிவித்துள்ளனர். எனவே, அது தொடர்பாக, எனது மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.  இந்த மனுவை நீதிபதி டி. மதிவாணன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  "பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய எழுத்துகள் பொதுமக்களுக்கு உரியன என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, ""மனுதாரர் தான் கூற விரும்பும் விளக்கங்களை தனியாக அளிக்கலாம். ஆனால், அவரை மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது வழக்கின் தன்மையை மாற்றிவிடும். அது எதிர் மனுதாரர்களைப் பாதிக்கும்'' என்று சரியாகக் கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. மனுதாரர் வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி மதிவாணன் கூறியுள்ளார்.

புதன், 7 ஜூலை, 2010

2011 ஆம் ஆண்டை தமிழ்ச் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும் : வீரமணி


கரூர், ஜூலை 6: 2011ம் ஆண்டை தமிழ் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.  திராவிடர் கழக மண்டல மாநாடு கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்த திக மாநிலத் தலைவர் கி. வீரமணி பேசியது:  திகவும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். திராவிடர் கழகம் சமத்துவம் பேசும் இயக்கம் என்கிறார்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் மதம் இந்து மதம். இதில் ஜாதிப் பிரிவுகள் இல்லாமல் இருக்கிறதா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவு மூலம் இந்துக்களை முதல்வர் கருணாநிதி ஒன்றிணைத்துள்ளார். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று இந்து முன்னணி கூறுகிறது. முதலில் ஜாதி வேறுபாடுகளைக் களைய முன் வாருங்கள்.  திகவைப் பார்த்து சில கேள்விகளை முன்வைக்கிறார்கள். சங்கரமடத்தில் தலித் ஒருவர் குருவாக வரும்போது, தகுதியின் அடிப்படையில் திகவிற்கும் தலைவராக தலித் வருவார். திக என்பது ஒரு ஜாதி, சமயமற்ற அமைப்பு. எனவே, இங்கு ஜாதி பார்ப்பதில்லை.  மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென இந்து முன்னணியே போராட்டம் நடத்தலாமே? இதுபோல, கிறிஸ்தவம், இஸ்லாமிலுள்ள மூடநம்பிக்கைகளை எதிர்க்கத் தயாரா என்று கேட்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்தக் கடவுளின் மீதும் நம்பிக்கையில்லை. கடவுள் இல்லை என்பதே எங்கள் கொள்கை. எனவே, மூடநம்பிக்கை எங்கிருந்தாலும் எதிர்ப்போம்.  இதற்கு எங்களிடம் ஒரே அளவுகோல்தான் உள்ளது. பெரியாருக்குச் சிலை வைத்திருப்பது வழிபாடு நடத்துவதற்காக அல்ல. அவரைப் பின்பற்றுவதற்காக, வழிபாடு என்பது வேறு, பின்பற்றுவது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  நாட்டின் சுதந்திரத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எதிராகச் செயல்படும் அமைப்புகள் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்றவை. தமிழர்கள் இதிலிருந்து விலகியிருக்க வேண்டும். பெரும்பான்மை சமுதாயத்திற்கு கிடைக்கும் எல்லா உரிமைகளும் சிறுபான்மை சமுதாயத்திற்கும் கிடைக்க வேண்டும்.  உலகத்தில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட 5 மொழிகளில் சீனமும், தமிழுமே மக்களால் பேசப்பட்டு வருகின்றன. கருணாநிதியின் சாதனைகளில் உச்சகட்ட சாதனை தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததுதான். தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்புதான், சமஸ்கிருதத்திற்கே அந்தப் பெருமை கிடைத்தது. ஆனால், ஒரு சதத்தினர்கூட பேசாத செத்த மொழியான சமஸ்கிருதத்தை கெüரவிக்கும் விதமாக சமஸ்கிருத ஆண்டை பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் முரளிமனோகர்ஜோஷி அறிவித்தார்.  அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழைக் கெüரவிக்கும் விதமாக வரும் 2011ம் ஆண்டை தமிழ்ச் செம்மொழி ஆண்டாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதை முதல்வர் கருணாநிதி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒருவனுக்கு மொழி மூலமாகவே தன்மானம் கிடைக்கும்.  தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் சேதுத் திட்டம் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கும் மதச் சாயம் பூசப்பட்டு ஒரு சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எதிர்ப்பவர்களுக்கு நாங்கள் எதிரிகளல்ல. திருந்து அல்லது திருத்து என்ற அடிப்படையில் திராவிடர் கழகம் இயங்கி வருகிறது என்றார் வீரமணி.  கூட்டத்தில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மக்களவை முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி, கொள்கைப் பரப்பு இணைச் செயலர் பரமத்திசண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கரூர் மாவட்ட திக தலைவர் மு.க. ராசசேகரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் மா. காளிமுத்து நன்றி கூறினார்.
கருத்துக்கள்

2000 ஆம் ஆண்டையே தமிழ் ஆண்டாக அறிவிக்க வேண்டிய அரசு அறிவிக்கவில்லை. தி.க. கோரிக்கையை ஏற்று வரும் ஆண்டையாவது தமிழ் ஆண்டாக அறிவிக்க வேண்டும். பெயரளவு அறிவிப்பாக இல்லாமல் சமற்கிருதத்திற்குத்தந்த நிதியுதவியை விடப் பன்மடங்கு நிதியுதவியை இதற்கென வழங்க வேண்டும். நல்ல கோரிக்கையை முன் வைத்துள்ள ஆசிரியர் வீரமணிக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 5:20:00 PM
Yenna veera mani avargaley, periyar thotruviththa Thi.Ka virkku neenga thaan varisu, ungalukku pinnadi unga paiyan. thi.Ka vil mudalla oru thaliththai thalaivara kondu vaanga apparam maththa pakkalam. Kulaththur mani, periyar pusthagam poda thadai kettu courtukku ponathu yedukku, thi.ka vin agama vidigal meerappadum yenbathala. sameepaththiya semmozhi kalaiganar aiyavoda kumbumba vizhavaga mariponathum, angu thamil arignargalukkum medaiyil idam kidaikka villai yenbathum ungalukku theriyuma...
By gs
7/7/2010 5:14:00 PM
சங்கரமடத்தில் தலித் ஒருவர் குருவாக வரும்போது, தகுதியின் அடிப்படையில் திகவிற்கும் தலைவராக தலித் வருவார். திக என்பது ஒரு ஜாதி, சமயமற்ற அமைப்பு.- Veeramani That means DK and Sankaramadam are one and the same. When anybody can become archakars in temples , why not Dalit as DK President? Is no eligible Dalit member in DK? What is the creteria to become DK Prsident? Tamilmozhiyan
By tamilamozhiyan
7/7/2010 4:52:00 PM
every one should work for the SETHU project.this will benifit not only to tamilnadu but also to entire south.
By suryabaghavan
7/7/2010 3:50:00 PM
2010 ம் ஆண்டை தமிழ் இன படுகொலை ஆண்டாக அறிவிக்கலாம். திராவிடம் பேசி துரோகிகள் தமிழரை அழித்த ஆண்டாக அறிவிக்கலாம்
By RK
7/7/2010 2:16:00 PM
தமிழ் வாழ...தமிழ் இனம் வாழ ..உன் வாயைக் கொஞ்சம் மூடு ! நாடு வாழ ..நானிலம் செழிக்க நீ ஊரை விட்டு ஓடு !!! ஓடு ஓடு ஓடு...hai,....நீ ஊரை விட்டு ஓடு !!!
By rajasji
7/7/2010 1:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
 
 
 
 

ஞாயிறு, 2 மே, 2010

நன்றி மறக்கக் கூடாது: வீரமணிக்கு வைகோ கண்டனம்



சென்னை, மே 1: தில்லியில் பெரியார் மையத்துக்கு இடம் கொடுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மறக்கக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.சென்னையில் ம.தி.மு.க. சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தில்லியில் திராவிடர் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். 1998-ல் பா.ஜ.க. ஆட்சியில் இடிக்கப்பட்ட பெரியார் மையத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.1998-ல் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது வீரமணி என்னை அணுகினார். நான் அப்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமாரை தொடர்பு கொண்டேன். அவர் அரசு அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.அதன்பிறகு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை நான் சந்தித்தேன். பெரியார் மையம் இடிக்கப்பட்ட செய்தியை அவரிடம் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதன் பிறகு நானும், வீரமணியும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்து இது குறித்து முறையிட்டோம். அதன் பிறகு தில்லி அப்பல்லோ மருத்துவமனை அருகில் அன்றைய மதிப்பில் ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெறும் ரூ.2 கோடிக்கு வாஜ்பாய் அரசு வழங்கியது. அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தைதான் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.பெரியார் மையம் அமைவதற்கு காரணமான முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும்,அதற்காக முயற்சி எடுத்த என்னையும் வீரமணி மறந்து விட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல என்றார் வைகோ.
கருத்துக்கள்

வைகோ கூறுவது உண்மைதான். நன்றி மறப்பது நன்றன்று என்பது தமிழ் நெறி. ஆனால்,இன்றைய அரசியல் நெறி என்பது யார்பக்கம் சாய்ந்திருக்கிறார்களோ அவரைத் தாங்குவதும் அவருக்கு எதரானவர் உயிரைக் காப்பாற்றும் உதவியே செய்திருந்தாலும் நன்றி மறந்து தாக்குவதுமே! ஆளும் கட்சியின் பக்கமே சாய்பவர் எவ்வாறு நன்றியை நினைக்க முடியும்? செய்ந்நன்றி அறிதலைப் போற்ற விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 10:41:00 AM

Continued : I surfed the net and got proof Tamilan is not telling truth and shows only his prejudice against Kalaignar. Vaiko was arrested under POTA in July 2002 and Kalaignar met him in jail in November 2002 not after one year as falsely claimed by Tamilan and there was no election at that time as imagined and uttered by Tamilan. So Kalaignar's concern for Vaiko is certainly sincere.

By Puthiyavan Raj
5/2/2010 10:06:00 AM

Tamilan, your logic is not correct. In POTA, there is no bail for one year. Obviously you are not attacking Jaya who arrested Vaiko and put him in jail for 19 months abusing POTA. That shows your prejudice. Can you tell one incident where Kalaignar abused POTA or TADA or false ganja case to settle personal or political scores as Jaya abuse power? Kalaignar took sincere efforts to help Vaiko and Vaiko even said the blunder he did was betraying Kalaignar and vowed he would never part with Kalaignar. You are attacking Kalaignar on hypothetical situation not on facts

By Puthiyavan Raj
5/2/2010 9:51:00 AM

கருணா கிழவனால் வஞ்சிகபட்ட ஒரு நல்ல மனிதர் வைகோ ! கிழவனுக்கு காடு வா வா என்கிறது ஆனால் சேர்த்த சொத்து போதாது என்று டில்லிக்கு பறக்கிறது ! நிச்சயம் கிழவனின் மரணத்திற்கு பிறகு பல நல்லவர்கள் மக்கள் தலைவர்களாக வரவேண்டும் ! வீரமணி சொல்லாவிட்டால் என்ன வைகோ அண்ணா நாங்கள் சொல்கிறோம் நன்றி நன்றி நன்றி

By CHENNAI PODIYAN
5/2/2010 8:59:00 AM

I do not know how many politicians are this much sincere like Vaiko, who never says anything just to please the powerful few in power. Power comes and goes, but friendship and relationships formed during one's life journey also needs to be valued is it not? Leaders like Vaiko should be congratulated for calling, 'a spade, a spade'. He reveals his regard for Vajpayee, with whom he has been close, whenever the occasion arises. Even now, he talks with total conviction, without dilution, on many issues dearer to his heart.

By ASHWIN
5/2/2010 8:10:00 AM

வீரமணிக்கு பெரியாரியத்தையும் , திராவிடர் கழகத்தையும் நடத்துகிற தகுதி போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.ஆட்சியில் இருப்பவர்களை காக்கா பிடித்து வாழ்க்கை நடத்தும் வீரமணிக்கு நன்றியெல்லாம் எங்கே இருக்கப் போகிறது?

By shyla
5/2/2010 7:50:00 AM

வாஜ்பாய்'க்கு ... வாழ்த்துகள்... வைகோ... வாழ்த்துகள் ...

By tamilan
5/2/2010 7:45:00 AM

Dear P.Jose, Mr. Karunanidi wanted vaiko's release only becuase of approaching election and vaiko's hardwork during campaign. Why did Mr. Karunanidi did not speak about Vaiko's release for one year. When election declared, Karunanidi went to Vellore prison and met Vaiko and asked him to come out on bail. Please do not hide the truth.

By Tamilan
5/2/2010 7:44:00 AM

YOU ARE CORRECT Mr. Jose.

By A.DULKARUNAI
5/2/2010 7:05:00 AM

dear jose antha nanrikku karunanari ketta vilai enna theriyumaa? vaikovai vaithu arasiyal naadakam nadathiyathu karuna and jaya - both. stalino azhagiriyo jayilil irunthaal karunanari ippadithan petition pottiruppaaraa?

By lena
5/2/2010 5:09:00 AM

nandri patri pesa Vaiko is not qualified. When jayalalitha put him in jail (for no valid reason), no one but the old man Karunanithi tried so many times and worked hard for his release. What did he do for that old man after that? He is thinking our podu janaga ellam mutalluga.

By P Jose
5/2/2010 4:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்