scientists லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
scientists லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 நவம்பர், 2011

sand hills in mars: செவ்வாய்க் கோளில் மணல் குன்றுகள்


பலத்த காற்றினால் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
வாஷிங்டன், நவ. 29-
 
அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அது எடுத்து அனுப்பியுள்ள போடடோக்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
இதுகுறித்து, அமெரிக்காவின் ஜோன்ஸ் காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி நாதன் பிரிட்ஜஸ் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மிக பலத்த புயல் காற்று வீசுகிறது.   அதனால் அங்கு பறக்கும் மணல்கள் குன்றுகளாக உருவாகியுள்ளன. மேலும் மணலும் அலைகளாக மாறி அடுக்கடுக்காக தெரிகின்றன என்று தெரிவித்துள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மணல் குன்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால், அவை தானாக உருவானது என கூறி வந்தனர். தற்போதுதான் அவை புயல் காற்றினால் ஏற்பட்டவை என கண்டுபிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்

செவ்வாய், 8 நவம்பர், 2011

2 1/2 கோடி ஆண்டு வயது மிக வெளிச்சமான, சுழலும் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

2 1/2 கோடி ஆண்டு வயது மிக வெளிச்சமான, சுழலும் நட்சத்திரம் கண்டுபிடிப்பு
வாஷிங்டன், நவ. 7-
 
அமெரிக்காவின் “நாசா” விஞ்ஞானிகள் பெர்மி காமா கதிர் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அதிசய நட்சத்திரத்தை கண்டு பிடித்தனர். அது மிகவும் வெளிச்சமாக உள்ளது. அதிகவேகமாக சுழன்று வருகிறது. அது உருண்டையாக ஒன்று சேர்ந்து திரண்டு இருப்பது போன்று காட்சி அளிக்கிறது.  
 
அந்த நட்சத்திரத்துக்கு ஜெ 1823-3021ஏ என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 27 ஆயிரம் வெளிச்சம் மைல் தொலைவில் உள்ளது. இதன் வயது 2 1/2 கோடி வருடம் என கணித்துள்ளனர்.
 
இந்த நட்சத்திரம் அதிசக்தி வாய்ந்த “காமா” கதிர்களை வெளியேற்றுகிறது. இதை வைத்து விஞ்ஞானிகள் மேலும் பல நட்சத்திரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தனி அமர்வு: முதல்வருடன் ​மயில்சாமி ஆலோசனை



முதல்வருடன் மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு
சென்னை, ​​ பிப்.11: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்துகள் பரிமாறப்படும் வகையில் தனி அமர்வுக்கு ஏற்பாடு செய்வது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனை நடத்தினார்.முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.​ இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியது:""நாசா போன்ற மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழில் படித்த விஞ்ஞானிகள் பலர் உள்ளனர்.​ அவர்கள் ​ தங்களது ஆராய்ச்சி உள்ளிட்ட விஷயங்களை செம்மொழி மாநாட்டில் தமிழிலேயே பரிமாறிக் கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினேன்.இதற்கென 50 விஞ்ஞானிகள் வரை அமர்ந்து விவாதிக்க தனி அமர்வுக்கு ஏற்பாடு செய்வது குறித்தும் அவருடன் விவாதிக்கப்பட்டது."சந்திரயான் 2' விண்கலம் 2012 இறுதியில் அல்லது 2013}ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும்.​ சந்திரனில் கனிமங்கள் இருக்கின்றனவா?​ என்பதை அறிய "சந்திரயான் 2' பயன்படுத்தப்படும்.​ இதன் அடுத்த கட்டமாக,​​ சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது குறித்து ஆய்வு நடத்தப்படும்'' என்றார் அவர்.
கருத்துக்கள்

தமிழ் வழி பயின்ற அறிவியல் அறிஞர்களைப் பங்கேற்கச் செய்வது பாராட்டிற்குரியது. ஆனால், தமிழ் வழியாகப் பயின்றவர்களையும் பயில எண்ணுபவர்களையும் ஊக்கப்படுத்த இது போதா. தமிழ் வழி பயின்றவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அரசு நடைமுறைப்படுத்தினால் இப் பழைய வரலாறு எதுவும் தேவையில்லை. மொழிப் பாடமாகத் தமிழைப் படிப்பிக்கச் செய்வதைக் கூடத் தவணை முறையில் நிறைவேற்றும் அரசி்ற்கு முதலில் அவர் அறிவூட்ட வேண்டும். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்து தமிழால் பயன்பெறுவோர் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்ப் பகை ஆட்சி வந்தா இதனை நடைமுறைப்படுத்த முடியும்? கட்டாயத் தமிழ் மொழிக் கல்வியையும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கல்வி முறையையும் உடனே நிறைவேற்ற வேண்டும். அல்லது தமிழ் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டுக் கல்வி குறிர்த்துப் பேச வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
dinamalar
General India news in detail