விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 23 நவம்பர், 2013
வெள்ளி, 11 அக்டோபர், 2013
தமிழில்நடைபெற்ற செம்மொழிவிருது விழா - தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு
' தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு ' என்னும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்க்காப்புக்கழகம் மூலம் செம்மொழி விருதுகள் விழா தமிழில் நடத்தப் பெற வேண்டும் எனத் 'தமிழக அரசியல்' இதழ் முதலான ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தொடர்ந்து செம்மொழி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தமிழில் நடத்திவிட்டுப்பிற மொழியில் விழா நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. செம்மொழி நிறுவன இயக்குநர் திருவாட்டி பூமா, பதிவாளர் முனைவர் முத்துவேல், பொறுப்பு அலுவர் முனைவர் இராமசாமி ஆகியோர் தொடர் நடவடிக்கை எடுத்தனர். குடியரசுத்தலைவர் மாளிகையிலும் வேண்டுதலின் அறநிலையைப் புரிந்து கொண்டனர். அதன்படி தமிழில் விருதுகள் குறிப்பு முதலில் தெரிவிக்கப்பட்டதும் தமிழுக்கு உரிய இடம் தந்ததும் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்புடைய அனைவருக்கும் செய்தியை வெளியிட்ட தினமணிக்கும் நன்றி. தொடர் வேண்டுகோளின்படி மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள் விருதுகளையும் விடுபட்ட விருதுகளையும் வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு தொல்காப்பியர் விருது
2009-10, 2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர்
விருதுகளை முறையே ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் ஆகியோருக்கு குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கெüரவித்தார். மேலும் 12 பேருக்கு
செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருதுகளையும் அவர் வழங்கினார்.
மூன்று பிரிவு விருதுகள்: செம்மொழி தமிழுக்காகவும், தமிழ் இலக்கிய
மேன்மைக்காகவும் பங்காற்றி வரும் அறிஞர்களுக்கு செம்மொழித் தமிழ்
குடியரசுத் தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழியின்
வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அறிஞர்களுக்கு ரூ.5
லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் தொல்காப்பியர் விருது;
வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத்
தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, பொன்னாடை
ஆகியவற்றுடன் குறள் பீட விருதுகள்; தமிழ் மொழி பயிற்சி, ஆராய்ச்சி,
பதிப்புகளை வெளியிடும் இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ.1
லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் இளம் அறிஞர் விருதுகள் என
மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அறிஞர்களுக்கு கௌரவம்: இதையொட்டி, 2009-10, 2010-11-ஆம் ஆண்டுகளுக்கான
குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழா தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர்
மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் "தினமணி' நாளிதழின்
முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவனுக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான
"தொல்காப்பியர் விருது' வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
கௌரவித்தார்.
2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெறுவதற்காக பேராசிரியர்
இராம. தமிழண்ணல் பெரிய கருப்பன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
அதைப் பார்த்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருக்கையில் இருந்து
வந்து அவருக்கு விருதை வழங்கினார்.
இதேபோல, செக் குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசெக்குக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான குறள் பீட விருது வழங்கப்பட்டது.
தமிழ் செம்மொழிப் புலமையுடன் விளங்கி வரும் இளம் அறிஞர்களான தி. சுரேஷ்,
சே. கல்பனா, இரா. சந்திரசேகரன், வாணி அறிவாளன், சோ. முத்தமிழ்ச்செல்வன்
ஆகியோருக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான இளம் தமிழ் அறிஞர் விருதையும், து.
சங்கையா, அ. ஜெயகுமார், ஆ. மணி, சி. சிதம்பரம், க. சுந்தரபாண்டியன்
ஆகியோருக்கு 2010-11-ஆம் ஆண்டுக்கான இளம் தமிழ் அறிஞர் விருதையும்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் தமிழறிஞரும் தமிழ் இணையக் கல்விக் கழகத் தலைவருமான
முனைவர் வா.செ. குழந்தைசாமி, தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட
தமிழ் ஆர்வலர்கள், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
"2010-11 ஆம் ஆண்டுக்கான குறள் பீட விருதுக்குத் தேர்வான இங்கிலாந்தைச்
சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் உடல் நலம் சரியில்லாததால்
நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்குரிய விருது, ரொக்கப் பரிசு ஆகியவை
தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்படும்' என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனத்தின் இயக்குநர் பூமா தெரிவித்தார்.
தமிழக அமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை
தெலங்கானா விவகாரத்தில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பல்லம் ராஜு உள்ளிட்ட ஆறு ஆந்திர அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியை ராஜிநாமா
செய்தனர். தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்தை பல்லம் ராஜு புறக்கணித்தார்.
இந் நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத்
துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செம்மொழித் தமிழ் விருது வழங்கும்
நிகழ்ச்சியில் பல்லம் ராஜு "மத்திய அமைச்சர்' என்ற முறையில் பங்கேற்று
முதல் வரிசையில் அமர்ந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று விட்டார். தமிழகத்தைச்
சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன்,
வே. நாராயணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தில்லியில் இருந்த போதும்
விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு மனித ஆற்றல்
மேம்பாட்டுத் துறை முறைப்படி அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற
செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில்
விருதும், விருது பெறுவோர் தொடர்பான குறிப்பும் வழக்கமாகக்
கடைப்பிடிக்கப்படும் மரபை மீறி தமிழில் வாசிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நடைபெற்ற அசோகா மண்டபத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி வந்தார். அப்போது, விருதுகளின் பெருமை குறித்தும், விருது பெறும்
அறிஞர்கள் குறித்தும் தமிழ் மொழியில் குறிப்பு வாசிக்கப்பட்டது. செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பூமா இக் குறிப்பை வாசித்தார்.
வழக்கமாகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இந்தி
மொழியில் தொகுத்து வழங்கப்படுவது மரபாகும். அதன்படியே, கடந்த ஆண்டு
செம்மொழி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளின் குறிப்பு இந்தி மொழியில்
வாசிக்கப்பட்டது. அந்த மரபு முதன்முறையாக புதன்கிழமை மாற்றப்பட்டு தமிழில்
விருதுகள், விருது பெறுவோரின் குறிப்பு வாசிக்கப்பட்டது அறிஞர்களுக்கு
மகிழ்ச்சி அளித்தது. தமிழைத் தொடர்ந்து இந்தி மொழியில் அக் குறிப்பு
வாசிக்கப்பட்டது.
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா
கரந்தை செயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார்விழா
அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதல்
மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்
வழங்கும் விழா சிதம்பரம் ஞானப்பிரகாசர்தெரு சேக்கிழார் மண்டபத்தில்
சனிக்கிழமை நடைபெற்றது.
சேக்கிழார் அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை
வகித்தார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.
அறக்கட்டளை நிறுவனரின் புதல்விகள் சென்னை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன்,
யுஎஸ்ஏ டாக்டர் கிருஷ்ணகாந்தி, புதல்வர் வி.எஸ்.மணி ஆகியோர் மாணவ,
மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். பரிசு
பெற்ற மாணவர்கள்: எஸ்.சண்முகப்பிரியா (ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி),
கே.ஹாலிக்ரகுமான் (ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி), என்.நிவேதா (அரசு
பெண்கள் மேல்நிலைப்பள்ளி), என்.சாகித்தியா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி).
விழாவில் டாக்டர் பழநிசுவாமிநாதன், ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி
அறங்காவலர் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், தலைமை ஆசிரியர்
வி.சுப்பிரமணியன், தமிழாசிரியர்கள் மு.கல்யாணராமன், பி.தமிழ்செல்வி
உள்ளிட்டோர் பங்கேற்றனர். செவ்வாய், 30 ஜூலை, 2013
செவ்வாய், 16 ஜூலை, 2013
செவ்வாய், 9 ஜூலை, 2013
பாவேந்தர் கழகம் - குவைத்து
பாவேந்தர் கழகம் - குவைத்து
பாவேந்தர் கழகம் நடத்திய களம் பத்து 05.07.2013 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு மங்காப்
பாவேந்தர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரு.இராஜசேகரன் மற்றும் திரு.நடராஜன்
முன்னிலை வகிக்க நிகழ்ச்சியினை திரு.ப.சேகர் தொகுத்து வழங்கினார்.
தமிழ் வணங்கு நிகழ்வில் செல்வி.நளினா, ஜெயபார்வதி, சுபஸ்ரீ ஆகியோர் பாடினர். குறளோடு உறவாடு திரு,சூரஜ்குமார், களப்பாடல் திரு.முருகேசன்
கதைகேளு கனியாகு நிகழ்வில் திரு. தண்டாயுதபாணி,.மண்ணிசையில் திருமதி.மஞ்சுளா, திரு.முருகேசன், செல்வி.ஜெயபார்வதி
ஆகியோர் பங்கு பெற்று பார்வையாளர்களை
உற்சாகப்படுத்தினார்கள்.
தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து நடந்த களத்துமேடு நிகழ்வில் சிறுவர்கள் கிட்டுஷான்,
சுபஸ்ரீ, சஞ்சீவ், நளினா, பிரித்திகா, சூர்யா, நவீன்குமார் ஆகியோர்
கலந்துகொண்டு தங்களது திறைமைகளை வெளிப்படுத்தி அனைவரது கைதட்டல்களை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து வேரூன்றா விழுதுகள் என்ற தலைப்பில் திரு.முனு.சிவசங்கரன் சிறந்த
கவிதையையும், திராவிட கீதம் என்ற தலைப்பில் திரு.பழ.கிருஷ்ணமூர்த்தி மற்றும்
திரு.விஸ்வநாதன் ஆகியோர் சிறந்த உரை
நிகழ்த்தினார்கள். திரு.சேந்தை ரவீந்தர் இம்மாதம் பிறந்தநாள் மற்றும் திருமணநாள்
காணும் கழக உறுப்பினர்களுக்கு வாழ்த்தினையும் கொடையாளர்களுக்கு நன்றியினையும்
தெரிவித்தார்.
பின்னர் நடந்த கவிதைச்சிறகு நிகழ்வில் முதற்காவிய
மூன்று தமிழர்கள் என்ற தலைப்பில் திரு.சுப்ரமணி அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கோவலன் பற்றி
பூவை அப்தாகீரும், கண்ணகி பற்றி திரு.சிவமணியும், மாதவி பற்றி திரு.இராவணனும் மிகவும் சிறப்பாக கவிதை
படித்தார்கள்.
இக்கவியரங்கின் சிறப்பம்சமாக கண்ணகியாக செல்வி.ஜெயபார்வதியும், மாதவியாக செல்வி. சுபஸ்ரீயும்,
கோவலனாக செல்வன்.
சஞ்சீவ்வும் வேடமணிந்து வந்தது அந்தந்த கதாபாத்திரமாக மாறி வசனம் பேசி அனைவராலும்
வெகுவாக ரசிக்கப்பட்டு பாராட்டினை பெற்றார்கள்.
இனிதினும் இனிது நிகழ்வில் தேசம் திணறி திசை மாறிப் போவது …. அரசியல் மோகத்தாலா? அரசுத்துறை ஊழலாலா? அறிவியல் ஆபத்தாலா?
இல்லை
எனக்கென்றிருக்கும் மக்களாலா? என்ற தலைப்பில் திரு.
இராஜசேகரன் அவர்கள் தலைமையில் பேச்சரங்கம் நடைபெற்றது. திரு.சரவணன் அரசியல்
மோகமென்றும், திரு.முருகேசன் அரசுத்துறை ஊழலென்றும், திரு.நடராஜன் அறிவியல்
ஆபத்தென்றும் திருமதி.தேவிரவி எனக்கென்றிருக்கும் மக்களே என்றும் வாதிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து சொல்வோம் வெல்வோம் தமிழ் கேள்வி பதில் நிகழ்வினை திருமதி.
கீதா மற்றும் திரு. முத்துகிருஷ்ணன் நடத்தினார்கள் அதில் திரு.பழ.கிருஷ்ணமூர்த்தி பரிசினை
வென்றார். வாழிய செந்தமிழுடன் களம் நிறவடைந்தது. அமுதீதல் நிகழ்வில் திரு.சுப்ரமணி மதிய உணவு வழங்கி சிறப்பு செய்தார்.
| IMG_7468.JPG 276K View Share Download |
| IMG_7842.JPG 326K View Share Download |
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
கொள்கைமணி ஆ.கோ.குலோத்துங்கன் விருதுகள்
கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் அறிஞர் அண்ணா அவர்களால் கொள்கைமணி எனப் போற்றப்பெற்றவர் (3 photos)
கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் சீரிதழாளர்களுக்கு விருது வழங்கும் விழா
கொள்கையிதழ்”கண்ணியம்”ஆசிரியர்
ஆ.கோ.குலோத்துங்கன் எழுபதாம் ஆண்டு நிறைவு-சீரிதழாளர்களுக்கு விருது
வழங்கும் விழா;சென்னைப்பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் பொற்கோ விருது
வழங்கல்-செம்மொழி இராமசாமி,மறைமலை இலக்குவனார்,மா.செங்குட்டுவன்,பெங்களூர்
முத்துசெல்வன்,தமிழ்முழக்கம்”வேதமூர்த்தி பங்கேற்பு.-தொகுப்பு:3 (4 photos)
கொள்கையிதழ்”கண்ணியம்”ஆசிரியர்
ஆ.கோ.குலோத்துங்கன் எழுபதாம் ஆண்டு நிறைவு-சீரிதழாளர்களுக்கு விருது
வழங்கும் விழா;சென்னைப்பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் பொற்கோ விருது
வழங்கல்-செம்மொழி இராமசாமி,மறைமலை இலக்குவனார்,மா.செங்குட்டுவன்,பெங்களூர்
முத்துசெல்வன்,தமிழ்முழக்கம்”வேதமூர்த்தி வாழ்த்துரை. (6 photos)
கொள்கையிதழ்”கண்ணியம்”ஆசிரியர்
ஆ.கோ.குலோத்துங்கன் எழுபதாம் ஆண்டு நிறைவு-சீரிதழாளர்களுக்கு விருது
வழங்கும் விழா;சென்னைப்பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் பொற்கோ விருது
வழங்கல்-செம்மொழி இராமசாமி,மறைமலை இலக்குவனார்,மா.செங்குட்டுவன்,பெங்களூர்
முத்துசெல்வன்,தமிழ்முழக்கம்”வேதமூர்த்தி பங்கேற்பு.-தொகுப்பு:2 (3 photos)
கண்ணியம்
சிற்றிதழ் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கனிடம் உள்ள
மொழிப்பற்று,மனிதப்பற்று,நேர்மை இவை எல்லாவையும் விட அவரிடம் கண்டு நான்
வியப்பது தொழிலாளர்களுக்காக அவர் போராடியதும் அதன் பயனாய் தன் சொத்தையே
இழந்ததையும் தான். திராவிட இயக்கம்,திமுக ,பின் ...See More
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
வெள்ளி, 14 டிசம்பர், 2012
தொலைந்த தூக்கம் ..முதல்வர் விழாவில் தவித்த ஆசிரியைகள்
|
சென்னையில், 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கப்பட்டது
சாதனையாக இருந்தாலும், அதை
வாங்க ஆசிரியர்கள், கடுமையான நெருக்கடிகளை சந்திக்க
வேண்டியிருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, இம்மாதம் 9, 10, 11ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே, 650 பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரிய தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு, சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாக, குளித்து தயாராக அறிவுறுத்தப்பட்டது. |
|
தொடர்ந்து,
இரவு இரண்டு மணி முதலே, அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு, பஸ்கள் மூலம் அழைத்துச் வரப்பட்டு, அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர
வைக்கப்பட்டனர். 50 பேருக்கு
இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் மூலமே, உணவு வழங்கப்பட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும், அவர்கள் அனுமதியின்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்டவர்களில், பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்கு @பாதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. ஆங்காங்@க இருந்த, மொபைல் கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு மொபைல் கழிப்பிடத்திற்கும், 20க்கும் மேற்பட்டவர்கள், வரிசையில் நின்றே, சென்று வந்தனர். முதல் நாள் இரவு முதலே அவர்கள், அங்கு அமர வைக்கப்பட்டதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். கொ”க்கடியால், பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயனாளிகள் புலம்பினர். ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், 36 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில், நான்கு மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மற்றவர்களுக்கு, அவர்கள் சார்ந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்கினர். அரை மணி நேரத்தில்,20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, நியமன ஆணைகளை அவர்கள் வழங்கினர்.நிகழ்ச்சி முடிந்ததும், அனைவருக்கும் பணி குறித்த, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன் பின், வந்தது போல், ஒவ்வொரு பஸ்சிலும் ஏற்றி, அவர்கள் அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், நியமன ஆணை பெற்றவர்கள் செல்ல விரும்பினால், தங்கள் உறவினர்களுடன் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்து சென்றனர். - தினமலர் செய்தியாளர்- |
புதன், 3 அக்டோபர், 2012
உசுபெகிசுதானில் தமிழ் ஆய்வு - Tamizh research in Uspikisthan
உசுபெகிசுதானில் தமிழ் ஆய்வு
First Published : 03 October 2012 05:31 AM IST
இந்த விழாவில் விருது பெற்றவர்கள் சிலர் ஆற்றிய உரையின் சாராம்சம்:
லோலா. மக்துபா: திராவிட மொழிக் குடும்பத்தின் பிரதான மொழியான தமிழுக்கும், உஸ்பெஸ்க் மொழிக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன. இரு மொழி
களுக்கிடையே உள்ள தொடர்புகள் குறித்து நேரடி ஒப்பாய்வு, தொகுப்பாய்வு நடைபெறுகிறது.
கு.சின்னப்பபாரதியின் பவளாயி நாவலில் பெண் விடுதலை குறித்து குறிப்பிட்ட கருத்துகள்தான் உஸ்பெகிஸ்தானிலும் இப்போது எதிரொலித்து வருகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் அங்கு தமிழை வளர்க்கும் வகையில் தமிழாய்வு நிறுவனம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
உபாலி லீலாரத்ன: கு.சின்னப்பபாரதியின் மூன்று நாவல்கள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இலங்கையில் இப்போது தமிழர்களும், சிங்களர்களும் கு.சி.பா. பற்றியே பேசுகின்றனர்.
நாடுகள் எதுவானாலும் மொழி, இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஏற்படும் மோதல்களே சகோதரர்களாக வாழும் மக்கள் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்குகிறது. இவ்வாறான வன்முறையை வளர்ப்பது மனித குலத்துக்கு எதிரானது.
புலவர் செ.ராசு: கல்வெட்டுகள் பண்டைய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அத்தகைய கல்வெட்டுகள் குறித்த ஆய்வுகளும், பதிப்புகளும் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம். நமது வரலாற்றில் 122 ஆண்டு கால கல்வெட்டுகள் அச்சுக்கு வராததால் பல வரலாற்றுத் தகவல்களை வளரும் சமுதாயத்துக்குத் தெரியப்படுத்த இயலவில்லை.
எனவே, கல்வெட்டுகள் மூலம் வரலாற்றை அறிவோம், அதை வரும் காலத்துக்கு அறிவிப்போம்.
லோலா. மக்துபா: திராவிட மொழிக் குடும்பத்தின் பிரதான மொழியான தமிழுக்கும், உஸ்பெஸ்க் மொழிக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன. இரு மொழி
களுக்கிடையே உள்ள தொடர்புகள் குறித்து நேரடி ஒப்பாய்வு, தொகுப்பாய்வு நடைபெறுகிறது.
கு.சின்னப்பபாரதியின் பவளாயி நாவலில் பெண் விடுதலை குறித்து குறிப்பிட்ட கருத்துகள்தான் உஸ்பெகிஸ்தானிலும் இப்போது எதிரொலித்து வருகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் அங்கு தமிழை வளர்க்கும் வகையில் தமிழாய்வு நிறுவனம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
உபாலி லீலாரத்ன: கு.சின்னப்பபாரதியின் மூன்று நாவல்கள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இலங்கையில் இப்போது தமிழர்களும், சிங்களர்களும் கு.சி.பா. பற்றியே பேசுகின்றனர்.
நாடுகள் எதுவானாலும் மொழி, இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஏற்படும் மோதல்களே சகோதரர்களாக வாழும் மக்கள் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்குகிறது. இவ்வாறான வன்முறையை வளர்ப்பது மனித குலத்துக்கு எதிரானது.
புலவர் செ.ராசு: கல்வெட்டுகள் பண்டைய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அத்தகைய கல்வெட்டுகள் குறித்த ஆய்வுகளும், பதிப்புகளும் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம். நமது வரலாற்றில் 122 ஆண்டு கால கல்வெட்டுகள் அச்சுக்கு வராததால் பல வரலாற்றுத் தகவல்களை வளரும் சமுதாயத்துக்குத் தெரியப்படுத்த இயலவில்லை.
எனவே, கல்வெட்டுகள் மூலம் வரலாற்றை அறிவோம், அதை வரும் காலத்துக்கு அறிவிப்போம்.
திங்கள், 13 ஆகஸ்ட், 2012
மரணத் தண்டனைக்கு எதிரான ஆவணப்படம் வெளியீட்டு விழா
மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படம் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
முத்தமிழ் வேந்தன்
நட்பு பதிவு செய்த நாள் : 13/08/2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

_Page_1.jpg)
_Page_2.jpg)
_Page_3.jpg)


