பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூலை, 2024

சிறந்த நூல் பரிசுத் திட்டத்தில் பரிசுகளை உயர்த்திய முதல்வருக்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(காண்க-சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்)

“சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை”  என ‘அகரமுதல’ இதழின் 26.06.2024 ஆம் நாளிட்டஇதழுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். மகிழ்ச்சியான செய்தி. குறுகிய காலத்தில் முதல்வர் வேண்டுகோளில் பரிசு தொடர்பான வேண்டுகோளை ஒரு பகுதி  ஏற்றுள்ளார்.

கடந்த 26.06.2024 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றக் கூட்டத் தொடரில் தமிழ் வளர்ச்சி – செய்தித் துறை நல்கைக் கோரிக்கை விடையுரையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“சிறந்த நூல்களுக்கான பரிசுத் திட்டம் வாயிலாக, 33 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2011 ஆம் ஆண்டு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, நூலாசிரியருக்கு உரூபாய் 30 ஆயிரத்திலிருந்து உரூபாய் 50 ஆயிரமாகவும், பதிப்பகத்தாருக்கு உரூபாய் 10 ஆயிரத்திலிருந்து உரூபாய் 25 ஆயிரமாகவும் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.”

“2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் பரிசளிப்பு விழாவில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி இத்தொகையை நூலாசிரியர்களுக்கு உரூ.30,000/- என்றும், பதிப்பகத்தினருக்கு உரூ.10, 000/- என்றும் உயர்த்தி அறிவித்தார்.கடந்த 15 ஆண்டுகளாக இதில் மாற்றமில்லை.” என்று குறிப்பிட்டோம்.

“சிறந்த நூலுக்கு முதல் பரிசாக உரூ.நூறாயிரமும், இரண்டாம் பரிசாக உரூ.60,000 உம், மூன்றாம் பரிசாக உரூ.40,000 உம் வழங்கப் பெற வேண்டும். பதிப்பகத்தாரால்தான் சிறப்பான நூல்கள் வெளிவந்து தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. எனவே, பதிப்பகத்தார் பரிசுத் தொகையை முறையே உரூ30,000/, உரூ.20,000/, உரூ.10,000/ என வழங்க வேண்டும்.” என வேண்டியிருந்தோம். நூலாசிரியர் பரிசையும் பதிப்பகத்தார் பரிசையும் முறையே உரூ.50,000/-, உரூ.25,000/- என உயர்த்தி அறிவித்துள்ளார். இவ்வறிவிப்பிற்குக் காரணமான முதல்வர், தமிழ்வளர்ச்சி யமைச்சர், நிதியமைச்சர், தமிழ்வளர்ச்சிச் செயலர், பிற அதிகாரிகளுக்கும் நாம் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.

உயரிய  இலக்கியங்களுக்குப் பரிசளிக்கும் பொழுது சிறந்த நூல் என்றுதான் அறிவிக்கிறார்களே தவிர, 1,2,3 என வரிசைப்படுத்தி அறிவிப்பதில்லை. அதைப் பின்பற்றித் தமிழுக்கும் அறிவித்திருக்கலாம்.  ஆனால், உயரிய விருது என்பது பாராட்டும் வகையிலான பரிசுத் தொகையை உடையது. ஆனால், அவற்றோடு ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு அரசு தரும் பரிசு அற்பத்தொகை போன்றது.  எனவே, கலைஞர் மு. கருணாநிதி அறிவித்த மூன்று பரிசுகளை அடுத்து வந்த ஆட்சி அகற்றியதை இன்றைய ஆட்சியும் பின்பற்ற வேண்டா. அல்லது மூன்றாகத் தரப்படுத்த விரும்பவில்லை என்றால் மூன்று நூலுக்குச் சிறந்த நூலுக்கான பரிசுகளை வழங்கலாம்.

இவ்வாறு கூறுவதற்கு மற்றோர் காரணமும் உள்ளது.

மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் என்பன ஒரு பிரிவு, அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித்தமிழ் என ஒரு பிரிவு, இசை, ஓவியம், நடனம், சிற்பம் ஒரு பிரிவு, மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் என ஒரு பிரிவு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக அகழாய்வுகளும் என ஒரு பிரிவு, கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் என ஒரு பிரிவு, பொறியியல், தொழில்நுட்பவியல் என ஒரு பிரிவு என்பனவும் இவை போன்றும் வெவ்வேறு துறை நூல்களை  ஒரு பிரிவிற்குள் அடக்கியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரே ஒரு பரிசுதான் என்றால் அப்பிரிவிலுள்ள பிற துறை நூல்கள் புறக்கணிக்கப்பட்டதாகத்தானே பொருள். எனவே, கலைஞரால் தரப்பட்ட மூன்று பரிசுப் பிரிவுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

நூல்களுக்கான பரிசினை உயர்த்தியதுபோல், பிற வேண்டுகோள்களை நிறைவேற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிச் செயலர் தலைமையில் ஒரு குழுவை அமர்த்தி ஆய்ந்து உரிய முடிவுகளைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௫௰௧ – 651)

பாராட்டுடனும் மீள் வேண்டுகையுடனும்

 இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு

 அகரமுதல

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குக் 
கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசு
கம்பம். ஆக.19. கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறுவர் கதை நூலுக்கு, கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான சிறப்புப் பரிசினை வழங்கியுள்ளது. 
கடந்த 40 ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வரும் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, 14 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி வருகிறது.

2018-ஆம் ஆண்டு வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகளை வழங்கும் விழா, கம்பம் காந்தி பூங்காத் திடலில் கடந்த ஆடி 30 / ஆகத்து 15 மாலை நடைபெற்றது.
கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் சோம.பாரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்க ஆசிரியர் சமசு, பதிப்பாளர் இரவி தமிழ்வாணன், ‘கிழக்கு வாசல் உதயம்’ ஆசிரியர், எழுத்தாளர் உத்தமசோழன்ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
பரிசு பெற்ற படைப்பாளிகளையும் சிறப்பு விருந்தினர்களையும் நகரின் முதன்மை வீதிகள் வழியாக, வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வந்து, விழா மேடையில் பரிசு வென்ற படைப்பாளிகளை அமர வைத்து, அவர்களுக்குப் பாரதி தலைப்பாகை சூடி, பின்னர் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்தப் புதுமையான விழா, 
படைப்பாளர்கள் எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான முன் எடுத்துக்காட்டு விழாவாக அமைந்தது.

இந்த விழாவில், 2018-ஆம் ஆண்டு வெளியான சிறுவர் இலக்கிய நூல்களில் கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சிறப்புப் பரிசினை ‘கிழக்கு வாசல் உதயம்’ ஆசிரியர், எழுத்தாளர் உத்தமசோழன் வழங்கினார்.
விழாவில், ‘இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன், ‘சிகரம்’ ஆசிரியர் பழ.அன்புநேசன், ‘புதுகைத் தென்றல்’ ஆசிரியர் புதுகை மு.தருமராசன், எழுத்தாளர்கள் வே.முத்துக்குமார், அண்டனூர் சுரா, ப.திருமலை ஆகியோரும் பாராட்டப் பெற்றனர்.

புதன், 22 மே, 2019

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு

 கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
  2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை (மே.18) அன்று நடைபெற்றது.
  இவ்விழாவிற்கு,  மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தலைமையேற்றார்.
கவிஞர் தமிழியலன் அனைவரையும் வரவேற்றார்.
 2018-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் சிறுவர் இலக்கியப் பிரிவில் சிறந்த நூலாக கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்’  எனும் நூல் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக உரூ.5000/- பரிசுத்தொகையைத் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன்வழங்கினார்.
  சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசினைப் பெற்றுள்ள கவிஞர் மு.முருகேசு, வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக்  கோட்டைத்  தமிழ்ச்  சங்கத்தின் அறிவுரைஞராகவும் இருந்து சமூகம், கல்வி, கலை இலக்கியப் பணிகளைத்  தொடர்ந்து செய்து வருகிறார். இதுவரை 43-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர்  இலக்கியம், திறனாய்வு நூல்களைப் படைத்துள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

புதன், 16 அக்டோபர், 2013

நலவாழ்வே சிறந்த பரிசு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_827494.jpg

ஆரோக்கியமான வாழ்க்கையேசிறந்த பரிசு!

32 ஏக்கர் வறண்ட தரிசு நிலத்தை, பசுமைக் காடாக மாற்றியதற்கு மத்திய, மாநில அரசுகளிட மிருந்து பல விருதுகள் பெற்ற, அப்துல் கரீம்: நான், கேரள மாநிலத்தை சேர்ந்தவன். நான் பிறந்து வளர்ந்த ஊர், மிகவும் செழிப்பாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன், இன்சூரன்ஸ், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை சப்ளை செய்வது, முந்திரி கமிஷன் ஏஜன்ட், கணக்காளர் என, பல வேலைகள் செய்ததால், வீட்டில் தங்க மாட்டேன்.எனவே, மனைவியின் சொந்த ஊருக்கே குழந்தை களை அனுப்பி வைத்து, மாதம் ஒரு முறை பார்த்து வருவேன். இப்படி பல முறை சென்று வந்ததால், அங்குள்ள கரடு முரடான தரிசு நிலத்தை பார்த்து, மனதில் வெறுமை ஏற்பட்டது. பாலைவனமான வளைகுடா நாடுகளே, மரம் வளர்ந்து செழிப்பாக இருக்கும் போது, இங்குள்ள தரிசு நிலத்தை, ஏன் பசுமை வனமாக மாற்ற முடியாது என்ற சிந்தனை ஏற்பட்டது.காசர்கோடு அருகில், 1977ல், 32 ஏக்கர் தரிசு நிலத்தை விலைக்கு வாங்கினேன். 'பாடுபட்டு சேர்த்த பணத்தை, தரிசு மண்ணில் கொட்டி வீணடிக்கிறானே... இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது' என, மனைவியின் ஊரார் என்னை ஏளனம் செய்தனர். இருந்தும், காடு வளர்ப்பதில் உறுதி யாக இருந்தேன்.நீர் ஆதாரமற்ற தரிசு நிலத்தை சமன் செய்து, 1 கி.மீ., துாரம் வண்டியில் சென்று நீர் எடுத்து வந்து, செடிகளுக்கு ஊற்றினேன். இப்படி தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஊற்றியதால், செடிகள் செழுமையாக வளர்ந்து, 30 ஆண்டுகளில் பசுமை காடுகளாக மாறியதுடன், நிலத்தடி நீரின் அளவும் உயர்ந்துஉள்ளது. சொந்த செலவில், 32 ஏக்கரில் காடு வளர்த்ததற்காக, மத்திய, மாநில அரசுகள் பல விருதுகள் தந்ததுடன், அந்த வனத்திற்கு, 'கரீம் காடுகள்' என, என் பெயரிட்டு, என் சேவையை பாராட்டியுள்ளது. ஆனால், இயற்கை மூலம் கிடைத்த மிகவும் பரிசுத்தமான காற்று, தண்ணீர், குளுமையான தட்பவெப்ப நிலையால் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையையே, நான் மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன். தொடர்புக்கு: 04672254283.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா







கரந்தை செயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார்விழா அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிதம்பரம் ஞானப்பிரகாசர்தெரு சேக்கிழார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேக்கிழார் அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனரின் புதல்விகள் சென்னை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன், யுஎஸ்ஏ டாக்டர் கிருஷ்ணகாந்தி, புதல்வர் வி.எஸ்.மணி ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர். பரிசு பெற்ற மாணவர்கள்: எஸ்.சண்முகப்பிரியா (ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி), கே.ஹாலிக்ரகுமான் (ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி), என்.நிவேதா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி), என்.சாகித்தியா (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி).
விழாவில் டாக்டர் பழநிசுவாமிநாதன், ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி அறங்காவலர் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், தலைமை ஆசிரியர் வி.சுப்பிரமணியன், தமிழாசிரியர்கள் மு.கல்யாணராமன், பி.தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

சிறந்த நூல் பரிசு விண்ணப்பம் - சில தகவல்கள்



  சிறந்த நூல் பரிசு  விண்ணப்பம் -
 சில தகவல்கள்
சிறந்த நூல் பரிசு  பெறுவதற்குரிய விண்ணப்பத்தை அனுப்பும் நாள் 
30.08.13 வரை நீட்டிக்கப் பெற்றுள்ளது. (31.08.13 ஞாயிறு. ஆதலின் 30.08.13தான் இறுதி நாள்.)
தமிழ் வளர்ச்சித்துறை இணையத் தளத்தில்  நீட்டிப்பு நாள் குறிக்கப் பெறவில்லை எனச் சிலர் கேட்டனர்.  தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் மாற்றுமாறு தெரிவித்த பொழுது  முகப்புப் பக்கத்தில் ஓட்டச் செய்தியில் குறிக்கப் பெற்றுள்ளது என்றனர். எனினும் திருத்துமாறு வேண்டி உள்ளேன்.  திட்டம் பற்றிய குறிப்புரையில் 2012-13 எனக் குறிக்கப் பெற்றுள்ளதன் காரணம், இந் நிதியாண்டின் செலவினம் என்பதால்தான்.
2012 ஆம் ஆண்டிற்குரிய பரிசுத்திட்டம்தான் இது. பின் வரும் தளத்தில் விண்ணப்பத்தையும் விதிமுறையையும் காண்க.

http://govt-tn-tdd.s3.amazonaws.com/files/press-releases/sirantha-nool-vinnappam.pdf

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

சிறந்த நூல் பரிசு வழங்கும் திட்டம் - விண்ணப்பப் படிவம்




தமிழ் வளர்ச்சித் துறை - சிறந்த நூல் பரிசு வழங்கும் திட்டம்

http://tamilvalarchithurai.org/a/schemes/6

விண்ணப்பப் படிவம்

சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் : 2012 -2013

1. நூலின் பெயர் :

2. பதிப்பிக்கப்பட்ட ஆண்டு :

3. நூலாசிரியர் பெயர் (புனைபெயர்

உள்பட) தமிழிலும் ஆங்கிலத்திலும்

4. முகவரி (தொலைபேசி எண்ணுடன்)  :


5. பதிப்பகத்தார் மற்றும் பதிப்பகத்தின்

பெயர் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) 

6. முகவரி (தொலைபேசி எண்ணுடன்)  :

7. நூலாசிரியர் ஒப்பம் அல்லது இசைவு  

:

8. பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவு

:

9. பரிசுப் போட்டியில் பங்கு பெறும்

நூலாசிரியரின் தன் விவரக் குறிப்பு

(தனித்தாளில் இணைக்கப்படுதல்

:

11. பதிவுக் கட்டணம் செலுத்திய விவரம்   :

உறுதி மொழி

இந்நூல் போட்டிக்குரிய ஆண்டில் வெளியிடப்பட்டது என்றும், இத்தலைப்பில் / வகைப்பாட்டில்  ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினை இருமுறை பெற்றிருக்கவில்லை என்றும், இதற்கு மைய / மாநில அரசிடமிருந்து நிதியுதவி /பரிசு எதுவும் பெறவில்லையென்றும், பாடநூலில் இந்த நூல் இடம் பெறவில்லை என்றும், இந்த நூலானது அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து வெளியிடப்படவில்லை என்றும், பல்கலைக் கழகங்களில்பட்டங்கள் பெறுவதற்கு இந்நூல் ஆய்வேடாக அளிக்கப்படவில்லை என்றும், நாளிதழ்களில் இது தொடராக வரவில்லை என்றும், வானொலி / தொலைக்காட்சிகளில் தொடராக ஒலி/ஒளிபரப்பு  ஆகவில்லையென்றும் உறுதி அளிக்கிறேன்.  மேலும், இப்பரிசுப் போட்டிக்குரிய விதிமுறைகள் அனைத்தையும் நன்கு அறிந்துள்ளேன் என்பதனையும் அவற்றிற்கு உட்படுகிறேன் என்றும், நான் அளித்துள்ள விவரங்கள் அனைத்தும்
உண்மையானவை என்றும் உறுதி அளிக்கிறேன்.


நூலாசிரியர் ஒப்பம் 

    
    பதிப்பகத்தார் ஒப்பம்

சிறந்த நூல் பரிசுத்திட்ட விதி முறைகள்  

1  பரிசுப் போட்டியில் பங்கு பெறுவோர் விண்ணப்பப் படிவத்தினை விடுபாடின்றி முழுமையாக நிறைவு செய்து அனுப்புதல் வேண்டும்.  முழுமையாக நிறைவு செய்யப்படாத விண்ணப்பம் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
2  ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும்.
3  போட்டிக்கு அனுப்பப்பெறும் நூல்கள் ஒவ்வொன்றிலும் 5 படிகள் அனுப்புதல்
4  பின்வரும் வகைப்பாடுகளில் போட்டிக்கு நூல்கள் பெறப்படும்.
1 மரபுக் கவிதை
2 புதுக் கவிதை
3 புதினம்
4 சிறுகதை
5 நாடகம் (உரைநடை, கவிதை)
6 சிறுவர் இலக்கியம்
7 திறனாய்வு
8 மொழி வரலாறு,

மொழியியல், மொழி
வளர்ச்சி, இலக்கணம்
9 பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10 நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11 அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
12 பயண இலக்கியம் 
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14 நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வாணிகவழிகளும்,
அகழாய்வு
15 கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16 பொறியியல், தொழில் நுட்பவியல்
17 மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18 சட்டவியல், அரசியல்
19 பொருளியல், வாணிகவியல், மேலாண்மையியல்
20 மருந்தியல், உடலியல், நலவியல்
21 தமிழ் மருத்துவ நூல்கள்  (சித்தம், ஆயுர்வேதம்)
22 சமயம், ஆன்மிகம், அளவையியல்
23 கல்வியியல், உளவியல்
24 வேளாண்மையியல், கால்நடையியல்
25 சுற்றுப்புறவியல்
26 கணினி இயல்
27 நாட்டுப்புறவியல்
28 வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29 இதழியல், தகவல் தொடர்பு
30 பிற சிறப்பு வெளியீடுகள்
31 விளையாட்டு 
32 தமிழர் வாழ்வியல்
33 மகளிர் இலக்கியம்

5  பரிசுப் போட்டிக்குக் கருதப்படும் நூல்களின் முதல் பதிப்பானது
போட்டிக்குரிய ஆண்டில் சனவரி முதல் நாளிலிருந்து திசம்பர் 31க்குள்
(01.01.2012 - 31.12.2012) அச்சிடப்பட்டு வெளியிடப்பெற்றிருத்தல்
வேண்டும்.

6  நூலாசிரியர்/பதிப்பகத்தார்  ஒப்பம் அல்லது இசைவுக் கடிதத்துடன்
அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் போட்டிக்குக் கருதப்பெறும். 

7  நூலாசிரியர் ஒப்பமோ இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்தாருக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.
நூலாசிரியர்க்குப் பரிசுகள் வழங்கப்படாது.  பதிப்பகத்தார் ஒப்பமோ
இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால்
பதிப்பகத்திற்கான பரிசுகள் வழங்கப்படமாட்டாது.  

8  இப் போட்டிக்காகப் பெறப்படும் நூல்களை அரசால் அமர்த்தப்பெறும்
நிலைக்குழு ஆய்ந்து பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும்.

9  குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று
படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.

10  வாழும் ஆசிரியர்களின் நூல்களும், நூல்கள் வெளியிடப் பெற்றபோது
வாழ்ந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் நூல்களும் மட்டுமே 
இத் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.  நேர்வுக்கேற்ப,
நூலாசிரியர்களுக்கோ, அவர்களுடைய மரபுரிமையர்களுக்கோ
பரிசுகள் வழங்கப்பெறும்.

11 அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைக்கப்பெற்ற எழுத்துகளில்
அச்சிடப்பெற்ற நூல்கள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும்.

12 தொகுப்பாக அமையும் குறு நாவல்கள் , சிறுகதை என்னும் தலைப்பில்
அடங்கும்.

13 போட்டிக்கு வரப்பெறும் நூல்கள் முன்னுரை முதலியன உட்பட இரட்டை கிரவுன் அளவில் 150 பக்கங்களுக்குக் குறையாமலும், டெம்மி அளவில்130 பக்கங்களுக்குக் குறையாமலும் இருத்தல்  வேண்டும்.  மரபுக்
கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்றுதலைப்புகளுக்கும் பக்க வரையறை இல்லை.  கவிதை, சிறுவர் இலக்கியம் உட்பட அனைத்து வகைப்பாடுகளின் கீழான நூல்களும் கிரவுன் அளவுக்குக் குறையக்கூடாது. 

14 ஒவ்வொரு தலைப்பிலும் ""சிறந்த நூல்"" ஒவ்வொன்றிற்கும் முதற்பரிசாக ரூ.30,000/- வழங்கப்பெறும்.  இந்நூல்களின் பதிப்பகத்தினருக்குஒவ்வொரு நூலுக்கும் பரிசுத் தொகையாக ரூ.10,000/- வழங்கப்பெறும். நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தினருக்கும் சான்றிதழ்களும்வழங்கப்பெறும்.

15 ஒரு தலைப்பில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றால் அத்தலைப்பில் பரிசு வழங்க இயலாது.

16 ஒரு தலைப்பில் / வகைப்பாட்டில் இருமுறை பரிசு பெற்ற நூலாசிரியர்
அதே வகைப்பாட்டில் / தலைப்பில்  மூன்றாவது முறையாகப் பரிசு பெற
இயலாது.

17 மைய / மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்நூலும்
இப்பரிசுப் போட்டிக்குக் கருதப்பட மாட்டாது.

18 பரிசு பெறும் நூல், நூலாசிரியர்களின் கூட்டு முயற்சியால்
ஆக்கப்பட்டதாயின் அந்நூலின் பரிசுத் தொகை அந்நூலாசிரியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

19 அயல்நாட்டு நூலாசிரியரால் எழுதப்பெற்ற ஒரு நூல் பரிசுக்குரியதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடர்புடைய ஆசிரியருக்குப் பாராட்டுச்
சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.  

20 பாடநூலில் இடம் பெற்றுள்ள நூல்கள் பரிசுப் போட்டிக்குக்     கருதப்படமாட்டாது.

21 போட்டிக்காக வரப்பெற்ற நூல்களை எக்காரணத்தைக் கொண்டும்
திருப்பியனுப்ப இயலாது. 

22 பரிசுக்குரிய நூல்கள் விவரம் அரசின் ஏற்புடன் அறிவிக்கப்பெறும்.
திருவள்ளுவர் திருநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்பெறும்.
23  232323 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள்,
பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள்,
கொள்ளப்படமாட்டாது.

24 பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலுள்ள வெளியூர்
நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தினருக்கும் அவர்கள் பரிசுத்
தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் பெறுவதற்காகச் சென்னை
வந்து திரும்புவதற்காக இருப்பூர்தியில் இரு வழி இரண்டாம் வகுப்பு
சாதாரணக் கட்டணம் அளிக்கப்பெறும். சென்னையில்
வசிப்பவர்களுக்குப் போக்குவரத்துப்படி அளிக்கப்படும்.
வெளிநாட்டினருக்குப் பயணப்படி எதுவும் வழங்கப்பெறமாட்டாது.

25 இத்திட்டம் தொடர்பான விதிகளைத் தேவைக்கேற்ப அவ்வப்போது
திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு.

26 இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழக்கூடிய இடர்ப்பாடுகள் குறித்து
அரசால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியானதாகும். அம்முடிவினை
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோ பிற வகையிலோ எதிர்த்தல்
கூடாது.

27 இப் போட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நூலுக்கும்
பதிவுக்கட்டணமாக ரூ.100/- செலுத்தப்படுதல்  வேண்டும்.

இத்தொகை தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாகவோ  அல்லது அலுவலக நாள்களில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரிலோ செலுத்தலாம்.

நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் வந்து  சேருவதற்குரிய கடைசி நாள்   31.8.2013
விண்ணப்பங்கள்  வந்து சேருவதற்குரிய  முகவரி
தமிழ் வளர்ச்சி வளாகம்  (முதல் தளம்) 
 எழும்பூர், சென்னை - 600 008
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
 தொடர்பிற்கு