senkodi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
senkodi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

கரூரில் செங்கொடிக்கு வீர வணக்கம்

கரூரில் செங்கொடிக்கு வீர வணக்கம்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு - பதிவு செய்த நாள் : 29/08/2012



நன்றி :  வழக்குரைஞர் இராசேந்திரன்




வியாழன், 19 ஜூலை, 2012

ஆவணப்படமாகிறது மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை

ஆவணப்படமாகிறது மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை

நட்பு  பதிவு செய்த நாள் : 19/07/2012

இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தீக்குளித்து ஈகியான் காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கைவரலாறு ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ந்து ‘பொன்னுசாமி’ என்ற பெயரில் எழுதி வரும் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். இவர், இயக்குநர் ‘பாலை’ ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றுகிறார். உணர்வாளர்கள் நடத்தும் ஏஸ் சினிமாஸ்(யுஊநு ஊஐNநுஆயுளு)என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான முதல் ஆவணப்படமாக இப்படம் தடம் பதிக்கும் என படத்தின் இயக்குநர் வெற்றவேல் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து படக்குழுவினர் சார்பில் இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்துதற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடியின் வாழ்க்கைவரலாற்று ஆவணப்படுத்தை ஏஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.
இருளர் பழங்குடியினர்இ காடும் காடு சார்ந்த இடங்களை வாழ்விடமாகக்கொண்டவர்கள். பாம்பு, எலி பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இருளர்களையும்இஇவர்களின் மரபு அறிவையும் தவிர்த்து விட்டு, பாம்பு பற்றிய ஆராய்ச்சியைமேற்கொள்வது அரிது.
ஆண் – பெண் சமத்துவம் இவர்களின் அடையாளங்களில் ஒன்று. வீடுகளில்ஆண்கள் சமைப்பது இவர்களிடம் சர்வசாதாரணம். இருளர்களின் இசை தனித்துவம்வாய்ந்தது. இருளர்கள் கலை உணர்வில் சிறந்து விளங்குபவர்கள். ஆடல்இபாடல்களில் தனித்துவம் பெற்றவர்கள். இசைக்கருவிகள் இல்லாத இருளர்வீடுகளே இல்லை.
காடுகள் அழிக்கப்பட்டதால் சமவெளிப்பகுதிக்குக் குடிபெயர்ந்து பாரம்பரியதொழிலை கைவிட்டு கொத்தடிமைகளாக கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்துவருகின்றனர். பழங்குடியினரான இருளர்களில் ஒருவர்தான் சரசு என்கிற செங்கொடி.
2011 ஆகஸ்ட் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தாலுகாஅலுவலகத்தில் தன்னை தீக்கிரையாக்கிக் கொண்டவர், செங்கொடி. பழங்குடியினர்தற்கொலை என்பதை அறியாதவர்கள். இருளர்கள் உள்பட ஒடுக்கப்பட்டசமூகத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்த செங்கொடி சிறை சென்றகளப் போராளி. இசை, நாட்டியம், பாடல் என பன்முக திறமை கொண்டவர்.
மூன்றாம் வகுப்பை வரையே பள்ளிப் படிப்பை முடித்துள்ள செங்கொடி,லெனின், சேகுவாரா, பெரியார் உள்பட உலகத் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றுநூல்களை படித்து அதன் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.
21 வயதான செங்கொடியின் தற்கொலைக்குப் பின்னால் இருப்பதுகோழைத்தனம் அல்ல. அநீதிக்கு எதிராய் கொண்ட பெருங்கோபமும், மூன்றுநிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற லட்சியமும் செங்கொடியின்முடிவுக்குப் பின்னால் இருந்தன.
யாரிந்த செங்கொடி? தனிமனிதராய் அநீதிக்கு எதிராய் பொங்கியெழுந்தசெங்கொடியின் குடும்ப சூழல், அரசியல் பின்னணி என்ன? இவரது இந்த முடிவுஉண்மையில் சாதித்ததுதான் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடியஎன்னுடைய பயணமே, ‘இப்படிக்கு தோழர் செங்கொடி..’ என்கிற ஆவணப்படம்.
இருளர் சமூகம் இன்னும் இருட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தறுவாயில்அவர்களின் பிரதிநிதியாக இருந்த செங்கொடியின் உடலில் பற்றிய நெருப்புஜூவாலையில் வெளிப்படும் இந்திய-தமிழக அரசுகளின் கோரமுகம் அப்பட்டமாகஅம்பலமாயிருக்கிறது. இந்தப் படம் செங்கொடி ஊடாக அரச பயங்கரவாதத்தைஅலசுகிறது. இவை எல்லாவற்றையும் விட இனிமேல் யாரும் இது போன்றதற்கொலை முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது என்பதையும் இந்த ஆவணப்படம்மூலம் வலியுறுத்தியிருக்கிறேன்.
செங்கொடி வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் மீட்டுருவாக்கம்செய்யும் சித்தரிப்புக் காட்சிகள் அடங்கிய பிரமாண்டமான இந்த ஆவணப்படத்தைஏஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரு. நியாஸ் முகமது ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணியை சிறப்புற செய்திருக்கிறார். படத்திற்கான பாடலை கவிஞர் கவிபாஸ்கர் எழுதுகிறார். படத்தின் விளம்பரங்களை பென்சில் டான்ஸ் ஸ்டுடியோஸ் திரு. சந்தோஷ் சிறப்புற வடிவமைத்திருக்கிறார். நண்பா டாக்கீஸ்நிறுவனத்தார் பட வெளியீட்டுக்கானப் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
மரண தண்டனைக்கு எதிராக உருவாகும் முதல் தமிழ் ஆவணப்படும் இது என்ற பெருமையுடன் படத்தின் வேலைகளை நாங்கள் மனநிறைவுடன் செய்து வருகின்றோம். வருகிற ஆகஸ்ட் முதல் வாரம் இப்படத்தின் வெளியீட்டு விழாசென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
ஈகி செங்கொடியின் ஈகத்தை, தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் அவரவர்களது பகுதிகளிலும், இல்லங்களிலும் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கு இந்த ஆவணப்படத்தை நாம் கருவியாகக் கருதி, ஆதரிக்க வேண்டும்.
(Visited 2 times, 2 visits today)

புதன், 7 செப்டம்பர், 2011

poem about senkodi: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அகிம்சையின் பெருநெருப்பு!!


செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அகிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில்
ஒருதுளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ’மையில் உன் விதியெழுதி – எம்
பொய்முகத்தை உடச்சியேடி..
விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,
நீ நெருப்போட புரண்டபோதே
தமிழன் வரலாறே கருகுச்சேடி…
பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..
இப்படி கெட்ட பேரு வாங்கிவர
மரணம் தான் சொல்லுச்சாடி ?
இந்த சின்னவயசு கனவுகளை
வரலாற்றில் எரிச்சியேடி..
இனி கத்தியழ யாரிருக்கா
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா
நீயெல்லாம் எரிந்துப்போனா?
உன்னொருத்தியோட நிருத்திக்கடி
வேண்டாமே இனி ஓரிழப்பு
போராட்ட குணத்திற்கு -
தற்கொலைதான் பேரிழப்பு;
நீ விட்ட உயிரு மீட்டிடாத
கண்ணீர் – மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ
சேரா தமிழ் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!
————————————————————————————–
வித்யாசாகர்
Short URL: http://meenakam.com/?p=34568

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

veera nankai senkodi: இளம் பெண் செங்கொடிக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி


இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி

பதிவு செய்த நாள் : August 30, 2011



காஞ்சிபுரம்: தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது.
காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஞ்சலி செலுத்த பல ஆயிரம் பேர் திரண்டு வந்ததால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை வரை தள்ளி வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட செங்கொடியின் உடல் ஊர்வலமாக நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பேரணியிலும் பங்கேற்றனர். வீடுகளின் மாடிகள், மொட்டை மாடிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 8 வருடமாக மக்கள் மன்றம் மூலமாக காஞ்சிபுரம் மக்களின் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் செங்கொடி என்பதால் காஞ்சிபுரம் மக்கள் செங்கொடியின் இந்த அகால மறைவால் பெரும் சோகமடைந்துள்ளனர். அவரது மரணம் மிகவும் அசாதாரணமானது, உண்மையான தியாகம் என்று பலரும் சோகத்துடன் தெரிவித்தனர்.
இருள் வகுப்பைச் சேர்ந்தவரான செங்கொடியின் தாயார் ஏற்கனவே காலமாகி விட்டார். இதையடுத்து அவரது தந்தை இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு போய் விட்டார். இதனால் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட செங்கொடி மக்கள் மன்றத்தில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.
பறை வாசிப்பதில் மிகவும் கை தேர்ந்தவரான செங்கொடி பல்வேறு சமூக நாடகங்கள் மூலம் மக்களுக்கு சமூ்க கருத்துக்களையும் பரப்பி வந்தார்.
செங்கொடியின் உடல் தற்போது அவரது சொந்த கிராமமான மங்கல்பாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் முக்கியத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். இதன் காரணமாக இன்று நடப்பதாக இருந்த உடல்தகன நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர‌றிவாள‌ன், முருக‌‌ன், சா‌ந்த‌னை தூ‌க்‌கி‌ல் போட 8 வார‌ம் தடை ‌வி‌‌‌‌தி‌த்தது செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்


வாசகர் கருத்துகள் (2)
  1. வீர நங்கை செங்கொடிக்குச் சிறப்பான வீர வணக்கச் செய்தியை வெளியிட்டு உள்ளீ்ர்கள். எனினும் எதற்காகவும் யாரும் உயிரைஇழக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. நம்அரசுகளுக்குயாருடைய உயிரைப்பற்றியும் கவலை இல்லை என்னும் பொழுது அதற்கான முயற்சியில் இறங்குவதும் விழலுக்கு இறைத்த நீரே! எனினும் மூவர் உயிர் காக்கப்படும்!தமிழ் ஈழம் மலரும்! செங்கொடிக்கு வீர வணக்கம். 
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/