குவைத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குவைத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 அக்டோபர், 2019

குவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு

அகரமுதல

வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு
புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல்
பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது.

இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா
மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள” எனும் பாடலைக் குவைத்தினுடைய
கவிஞர் திரு.வித்யாசாகர் எழுதியுள்ளார். இப்பாடலை நமது சிறப்புக் கலைஞர்களான மண்ணிசை இணையர் திருமதி. இராசலட்சுமி -திரு.செந்தில் கணேசு இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

கவிஞர் திரு. வித்யாசாகர் ஏற்கெனவே தனது முகில் கிரியேசன்சு மூலம் பல பாடல்களையும் வெளியிட்டுப், பல புத்தகங்களையும் முகில் பதிப்பகம் வழியே அச்சிட்டுத், தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பெருமை சேர்த்தவர். இலங்கையில் ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு இலவசமாகக் கழிப்பிடம் கட்டித் தந்ததும் தமிழகத்தில் மழைநாட்களில் உதவுவதுமெனப் பல இலக்கிய-சமூகப் பணிகளிலும் மிக ஆர்வமாக பங்குகொள்வார். அண்மையில்கூட இங்கிலாந்து நாட்டில் இலண்டன் பாராளுமன்றம் கவிஞர் திரு. வித்யாசாகருக்கு “உலகத் தமிழ் அமைப்பு” சார்பாக “இலக்கியச் சிகரம்” எனும் உயரிய அருந்திறல் விருதினை வழங்கி வைத்துச் சிறப்பித்தது.
ஒரு திரைப்படப் பாடலை இத்தனைச் சிறப்போடு குவைத்தில் பல உழைக்கும் தமிழரின் முன்னிலையில் வெளியிட்டு ஒரு நல்ல படைப்பாளிக்கு அரியதொரு மேடையை அமைத்துத் தந்த குவைத்து தமிழோசைக் கவிஞர் மன்றம், அதன் பொறுப்பாளர்கள், கொடையாளர்கள், தொழிலதிபர் திரு.ஐதர் அலி (டிவிஎசு குழுமத்தின் நிறுவனர்) அனைவருக்கும் நன்றியை நல்கி விழா இனிதே நிறைவுற்றது.
கீழுள்ள தொடுப்புதனைச் சொடுக்கி இப்பாடலை முழுதாகக் கண்டு களிக்கலாம்.
நன்றிகளுடன்
சேவியர் தாசன், மேலாளர்
முகில் பதிப்பகம் / முகில் கிரியேசன்சு

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’

அகரமுதல

கவிஞர்  வித்யாசாகருக்கு  

‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ 

குவைத்துதாய்மண் கலை இலக்கியப் பேரவை  கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை  மாலை மிகச் சிறப்பாக அறிஞர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது.
அறிஞர்கள் பலரும், அனைத்துக் குவைத்து தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிருவாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின்” பேரன்பில் இணைந்து சிறப்பாக இவ்விழாவை ” குவைத்தின் மிர்காப்பு நகரில் கொண்டாடியது.
தாய்த்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தனது திருக்கரங்களால் வருடந்தோறும்  ‘அறிஞர் அம்பேத்கர் விருது’ வழங்கிச் சிறப்பித்து வருகிறார். அதுபோன்றே குவைத்தில் வாழும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்கள் சேர்ந்து ‘குவைத்து தாய்மண் கலை இலக்கியப் பேரவை’ என்று ஏறத்தாழப் பதினைந்தாண்டு காலமாக நடத்தி. சமூக நல்லிணக்கத்தையும், பல தமிழர் நலஞ்சார்ந்த முன்னேற்பாடுகளையும் எண்ணற்ற தமிழர் நலனிற்கான உதவிகளையும் பல நல்லறத் தொண்டுகளையும் திரு. கமி.அன்பரசுதலைமையில், திரு.அறிவழகன். திரு.மகிழ்நன், திரு.அழகர்சாமி, திரு.பன்னீர்செல்வம் போன்றோர் இணைந்து பங்காற்றி வருகின்றனர்.
அத்தகு, சிறப்பு மிக்கோர் செய்ததொரு ஏற்பாட்டின் கீழ் இவ்வாண்டிற்கான சிறப்பு விருதாக அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ வழங்கிச் சிறந்ததொரு எழுத்தாளரும் கவிஞருமான திரு. வித்யாசாகருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
தகவல்: முகில் பதிப்பகம், குவைத்து.

செவ்வாய், 9 ஜூலை, 2013

பாவேந்தர் கழகம் - குவைத்து


பாவேந்தர் கழகம் - குவைத்து
பாவேந்தர் கழகம் நடத்திய களம் பத்து 05.07.2013 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு மங்காப் பாவேந்தர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.  திரு.இராஜசேகரன் மற்றும் திரு.நடராஜன் முன்னிலை வகிக்க நிகழ்ச்சியினை திரு.ப.சேகர் தொகுத்து வழங்கினார்.
தமிழ் வணங்கு நிகழ்வில் செல்வி.நளினா,  ஜெயபார்வதி, சுபஸ்ரீ ஆகியோர் பாடினர். குறளோடு உறவாடு திரு,சூரஜ்குமார், களப்பாடல் திரு.முருகேசன் கதைகேளு கனியாகு நிகழ்வில் திரு. தண்டாயுதபாணி,.மண்ணிசையில் திருமதி.மஞ்சுளா, திரு.முருகேசன், செல்வி.ஜெயபார்வதி ஆகியோர் பங்கு பெற்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து நடந்த களத்துமேடு நிகழ்வில் சிறுவர்கள் கிட்டுஷான், சுபஸ்ரீ, சஞ்சீவ், நளினா, பிரித்திகா, சூர்யா, நவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது திறைமைகளை வெளிப்படுத்தி அனைவரது கைதட்டல்களை பெற்றனர்.  
அதனைத் தொடர்ந்து வேரூன்றா விழுதுகள் என்ற தலைப்பில் திரு.முனு.சிவசங்கரன் சிறந்த கவிதையையும், திராவிட கீதம் என்ற தலைப்பில் திரு.பழ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு.விஸ்வநாதன் ஆகியோர் சிறந்த உரை நிகழ்த்தினார்கள். திரு.சேந்தை ரவீந்தர் இம்மாதம் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் கழக உறுப்பினர்களுக்கு வாழ்த்தினையும் கொடையாளர்களுக்கு நன்றியினையும் தெரிவித்தார்.
பின்னர் நடந்த கவிதைச்சிறகு நிகழ்வில் முதற்காவிய மூன்று தமிழர்கள் என்ற தலைப்பில் திரு.சுப்ரமணி அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கோவலன் பற்றி பூவை அப்தாகீரும், கண்ணகி பற்றி திரு.சிவமணியும், மாதவி பற்றி திரு.இராவணனும் மிகவும் சிறப்பாக கவிதை படித்தார்கள்.
இக்கவியரங்கின் சிறப்பம்சமாக கண்ணகியாக செல்வி.ஜெயபார்வதியும், மாதவியாக செல்வி. சுபஸ்ரீயும், கோவலனாக செல்வன். சஞ்சீவ்வும் வேடமணிந்து வந்தது அந்தந்த கதாபாத்திரமாக மாறி வசனம் பேசி அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டு பாராட்டினை பெற்றார்கள்.
இனிதினும் இனிது நிகழ்வில் தேசம் திணறி திசை மாறிப் போவது …. அரசியல் மோகத்தாலா? அரசுத்துறை ஊழலாலா? அறிவியல் ஆபத்தாலா? இல்லை எனக்கென்றிருக்கும் மக்களாலா?  என்ற தலைப்பில் திரு. இராஜசேகரன் அவர்கள் தலைமையில் பேச்சரங்கம் நடைபெற்றது. திரு.சரவணன் அரசியல் மோகமென்றும், திரு.முருகேசன் அரசுத்துறை ஊழலென்றும், திரு.நடராஜன் அறிவியல் ஆபத்தென்றும் திருமதி.தேவிரவி எனக்கென்றிருக்கும் மக்களே என்றும் வாதிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து சொல்வோம் வெல்வோம் தமிழ் கேள்வி பதில் நிகழ்வினை திருமதி. கீதா மற்றும் திரு. முத்துகிருஷ்ணன் நடத்தினார்கள் அதில் திரு.பழ.கிருஷ்ணமூர்த்தி பரிசினை வென்றார். வாழிய செந்தமிழுடன் களம் நிறவடைந்தது. அமுதீதல் நிகழ்வில் திரு.சுப்ரமணி மதிய உணவு வழங்கி சிறப்பு செய்தார்.
2 attachments — Download all attachments   View all images   Share all images  
IMG_7468.JPGIMG_7468.JPG
276K   View   Share   Download  
IMG_7842.JPGIMG_7842.JPG
326K   View   Share   Download