சேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 அக்டோபர், 2013

ஊழியமும், நேர்மையும் தேவை!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_817896.jpg

சேவையும், நேர்மையும் தேவை!
2,500 போலி ரேஷன் கார்டுகளை நீக்கி, தமிழக அரசுக்கு, மாதம், 23 லட்சம் மிச்சப்படுத்திய துடன், ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவும், விசயராகவன்: நான், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். 1994ல், வருவாய் துறையில், ‘டைப்பிஸ்ட்’டாக சேர்ந்தாலும், அடுத்தடுத்து அரசு தேர்வு எழுதி, 2010ல், தாசில்தார் ஆனேன். இடைப்பட்ட காலங்களில், பல நேர்மையான கலெக்டர்களிடம், பி.ஏ.,வாக பணியாற்றினேன். அதனால், சமூகத்துக்காக தன்னலமில்லாமல் உழைக்கவும், சேவை மனப்பான்மையோடு நடக்கவும் முடிவு செய்தேன். கஷ்டப்பட்டு படித்ததால், ஆரம்பம் முதலே, ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவி வந்தேன். கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை, தனி வட்டாட்சியராக பதவியேற்றதும், ‘இனி, ரேஷன் பொருட்கள் வாங்க, பள்ளி மாணவர்கள் வரக் கூடாது’ என, உத்தரவிட்டேன்.
இதனால், ஏழை மாணவர்களின் படிப்பு தடைபடுவது தடுக்கப்படும். மேலும், படிப்பறி
வில்லா பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகளின் படிப்பின் முக்கியத்துவமும் விளங்கும். வாரத்திற்கு, 14 ரேஷன் கடைகளை பார்வையிட்டாலே போதும். ஆனால், 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனையிட்டு, தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 2,500 போலி ரேஷன் அட்டைகளை, பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே கண்டுபிடித்து நீக்கினேன்.
இதன் மூலம், தமிழக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்ததோடு, அதற்காக மாதந்தோறும் செலவிடப்படும், 23 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தினேன். இதற்காக, சுதந்திர தின விழாவில், கலெக்டர், டி.பி ராஜேஷ், விருது வழங்கி பாராட்டினார். கிருஷ்ணகிரியின் நிலத்தடி நீரில், ‘புளோரைடு அமிலம்’ அதிகம். இதனால், குழந்தைகளின் பற்களில், மஞ்சள் கறை படிவதோடு, ஓட்டையும் விழுகிறது. எனவே, அரசு பள்ளிகளில், 30 ஆயிரம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தி, சுத்தமான தண்ணீர் தருகிறேன்.
தொடர்புக்கு: 94435 12245

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தன்­னார்­வத்­ தொண்டு புரிந்தேன்.

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81324420130926233939.jpg

தன்­னார்­வத்­துடன் சேவை செய்தேன்!

கிரா­மங்­களில், எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வை ஏற்படுத்­தி­ய­தற்­காக, 196 நாடு­களின் சர்­வ­தேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்­கேற்ற, நித்­தி­யா­னந்தம்: நான், கோவை மாவட்­டத்தை சேர்ந்­தவன். பள்­ளியில் படிக்கும் போதே, சேவை செய்­வதில் ஆர்வம். நண்­பர்கள் உத­வி­யுடன், 2002ல், தியான பொது
சேவை மையம் துவங்கி, பல சமூக சேவை­களை செய்து வரு­கிறேன். கோவையில் உள்ள, 450க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில், எய்ட்ஸ் மற்றும் குடும்­பக்­கட்­டுப்­பாடு விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்தை, சிறப்­பாக செய்தேன். மாவட்ட ஆட்­சியர் உத­வி­யுடன், இரு­பாலர் சுய­உ­தவி குழுவை ஏற்­ப­டுத்தி, 30 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­டோ­ருக்கு தொழிற்­ப­யிற்சி தந்து, வேலை­வாய்ப்­பையும் ஏற்­ப­டுத்­தினேன். சில மருத்­து­வ­மனை­களை ஒருங்­கி­ணைத்து, இல­வச மருத்­துவ முகாம் மூலம், முழு உடல் பரி­சோ­தனை மற்றும் கண் பார்­வை­யற்­ற­வர்­க­ளுக்கு அறுவை சிகிச்­சை­களை செய்தோம். குஜ­ராத்தில் நடந்த பூகம்­பத்தின் போது, 5 லட்ச ரூபாய் மதிப்­பி­லான மருந்­து­களுடன், நாங்கள் ஒரு குழு­வாக சென்று, ஆறு மாதங்கள் தங்கி சேவை செய்தோம். தமி­ழ­கத்தில், சுனாமி அதிகம் பாதித்த நாகை மற்றும் வேளாங்­கண்ணியில் தங்கி, பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பசி­யாற, உண­வு­களை பங்­கிட்டு கொடுக்கும் கிரா­மப்­பு­றங்­களில், எய்ட்ஸ் விழிப்­புணர்வை சிறப்­பாக செய்­த­தற்கு, 2012ல் வாஷிங்­டனில் நடந்த, 196 நாடுகள் பங்­கேற்ற சர்­வ­தேச எய்ட்ஸ் மாநாட்டில், பங்­கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்­தது. இம்­மா­நாட்டில், ஹிலாரி கிளிண்டன், உலக வங்கி தலைவர் என, பலர் பங்­கேற்­றனர். இந்த ஆண்டு, நியூ­யார்க்கில் உள்ள ஐ.நா., சபையில் நடந்த
மாநாட்டில், எய்ட்ஸ் தொடர்­பாக, 450 கிரா­மங்­களில் நான் செய்த விழிப்­பு­ணர்வு பற்­றிய ஆய்வு கட்­டு­ரையை சமர்ப்­பித்தேன். அதன் கார­ணமாக, உலக எய்ட்ஸ் அமைப்பின், தன் னார்வ தொண்டு நிறு­வன அங்­கீ­காரம் பெற்ற பணி­யா­ள­ராகும் வாய்ப்பை பெற்­றது, பெரு­மை­யாக உள்­ளது. என் சேவையை பாராட்­டிய சேலம் கலெக்டர், சிறந்த இளைஞர் விருது வழங்­கினார்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நற்பயனுக்காகத் தொண்டாற்றினேன்!

புண்ணியம் கிடைக்கச் சேவை செய்தேன்!

23 ஆண்டுகளாக, 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்ததுடன், 35 பயணிகளை காப்பாற்றியதற்கு, அண்ணா பதக்கம் பெற்ற, ஓட்டுநர் இராசகோபால்: நான், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள, கொடுங்குளத்தை சேர்ந்தவன். குடும்ப வறுமையால், 10ம் வகுப்பு வரை படித்தேன். லாரி கிளீனராக கடுமையாக உழைத்து, சொந்தமாக மினி லாரி வாங்கினேன். ஒரு முறை சவாரிக்கு செல்லும் வழியில், சாலை விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், போலீஸ் மற்றும் பொதுமக்கள், கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். நான், அடிபட்டவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உயிர் பிழைக்க வைத்தேன். "நீ நல்லா இருக்கணும்...' என, அவர் வாழ்த்தியதை, நான் புண்ணியமாக கருதினேன். அந்த வாழ்த்து, என் வாழ்க்கையை மாற்றியமைத்தது. ஏனெனில், ஒரு வேளை நான் விபத்தில் சிக்கி, மற்றவர்கள் இப்படி வேடிக்கை பார்த்தால், என் மனநிலை எப்படி இருக்கும் என, சிந்தித்தேன். அன்று முதல், யார் உயிருக்கு போராடினாலும், இறந்து கிடந்தாலும் அவர்களுக்கு உதவினேன். இதுவரை, 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்ததுடன், 15 உடல்களை உறவினரிடம் சேர்த்துள்ளேன். 20க்கும் மேற்பட்டவர்களை, மருத்துவமனையில் சேர்த்து, உயிர் பிழைக்க வைத்தேன்.
மார்த்தாண்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு லோடு ஏற்ற, மினி லாரி ஓட்டி செல்லும் போது, என் லாரியை அரசு பேருந்து வேகமாக கடந்தது. அப்பேருந்தின் பின் பக்க இரட்டை சக்கரங்களில் ஒன்று இல்லாமல் இருப்பதை கண்டு, லாரியை வேகமாக ஓட்டி அரசு பேருந்தை நிறுத்தினேன்.
பின், ஓட்டுனர் இறங்கி வந்து பார்த்த போது தான், சக்கரங்களின் நட்டுகள் சரியாக மாட்டப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 35 பயணிகளின் உயிரையும் காப்பாற்றினேன். அதற்காக, 2011ம் ஆண்டு வீர தீர செயலுக்கான, "அண்ணா பதக்கம்' வழங்கி, தமிழக அரசு பாராட்டியது. தொடர்புக்கு: 98431 07819

திங்கள், 10 ஜூன், 2013

அறுபதாம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

அறுபது ஆண்டு சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உயர்தர சிகிச்சை தருவதால் அபார வளர்ச்சி
 
புற்றுநோய் சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகும் இன்றைய சூழலில், இந்நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்றால், நம்புவதற்கு இப்போது சற்று கடினமாகத் தான் இருக்கும். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, 75 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேக மருத்துவமனையை அமைக்க முயன்றபோது, அவரின் முயற்சிக்கு, அப்போது அரசின் ஆதரவு கிடைக்கவில்லை.

12 படுக்கைகள்
பலகட்ட முயற்சிக்கு பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்தி நகர், "கெனால் பேங்க்' சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை துவக்கினார். 1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1954ம் ஆண்டு, ஜூன், 18ம் தேதி முதல், இம்மருத்துவமனை செயல்படத் துவங்கியது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வரும் நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி என, நாளுக்கு நாள் இம்மருத்துவமனை வளர்ச்சி பெற்றது.
1982ம் ஆண்டு, அடையாறு, சர்தார் படேல் சாலையில் துவங்கப்பட்ட, கிளை மருத்துவ மனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இன்று, பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.

சேவை உணர்வு

அரை நூற்றாண்டிற்கும் மேலாக, புற்றுநோய் மருத்துவத்தில் சேவை உணர்வுடன் பணியாற்றி வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை முதல்வர் சாந்தா
கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், அவர்களின் வருமானத்திற்கேற்ப, 60 சதவீதம் பேருக்கு இலவசமாகவும், 40 சதவீதம் பேருக்கு, குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களை நாடி வருவோருக்கு, தரமான சிகிச்சை வழங்குவதில், நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. கதிர்வீச்சு, மருந்து, அறுவை என, புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சை முறைகளிலும், "கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை வழங்கி வருகிறோம்.ஆண்டிற்கு சராசரியாக, 1.2 லட்சம் பேர், இம்மருத்துவமனையில், உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தமிழக அரசு, எங்கள் மருத்துவமனைக்கு வழங்கி வந்த, 1.3 கோடி ரூபாய் ஆண்டு நிதியை, சமீபத்தில், 2.5 கோடியாக உயர்த்தியது. இதேபோன்று, மத்திய அரசின் நிதியுதவியும், விரைவில் உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கிறோம். கடந்த, 15 ஆண்டுகளாக, வாய், தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது, வருத்தம் அளிக்கிறது. இதை தடுக்க, சிகரெட், பான்பராக் போன்ற புகையிலை பழக்கத்தில் இருந்து, இளைய தலைமுறை விடுபட வேண்டும்.இவ்வாறு சாந்தா கூறினார். புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, புற்றுநோய் மருத்துவம் தொடர்பான உயர்படிப்புகளையும், இம்மருத்துவமனை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை, சென்னை பல்கலை ஆகியவற்றின் கீழ் இயங்கும், டாக்டர் முத்துலெட்சுமி கல்லூரி, எம்.சிஎச்., (புற்றுநோய் அறுவை சிகிச்சை) - டி.எம்., (மருந்து சிகிச்சை) - எம்.டி., மற்றும் டி.எம்.ஆர்.டி., (கதிரியக்க சிகிச்சை), எம்.எஸ்சி., (மருத்துவ இயற்பியல்), பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.
புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுடன், இந்நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், இம்மருத்துவமனை நிர்வாகம், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.பள்ளி, கல்லூரி, பொது இடங்களில், புகையிலைக்கு எதிரான பிரசாரங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில், உடல் ஆரோக்கியத்தின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இம்மருத்துவமனை சார்பில், ஆண்டுதோறும், "இளைஞர் உடல்நலத் திருவிழா' நடத்தப்படுகிறது.

தைரியம் தரும் பண்பாளர்
சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன், 68, என்பவர், கடந்த, 1999ம் ஆண்டு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், தொண்டை புற்றுநோய்க்கு, அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்தார். தன் உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக, அவர் தற்போது, இம்மருத்துவமனை வளாகத்தில், புகை இலைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதுடன், புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயப்படுவோருக்கு, தைரியமும் அளித்து வருகிறார். நற்சான்று தன்னார்வத்துடன் இவர் மேற் கொண்டு வரும் பணி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சேவைக்கு நற்சான்றாக விளங்குகிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், 50 ஆண்டு களுக்கும் மேலாக, செவிலியராக பணிபுரிந்து வரும் ஜானகி கூறுகையில், ""புற்றுநோய் சிகிச்சையில், உலகளவில் பெயர் பெற்று விளங்கும் இம்மருத்துவமனையில் பணிபுரிவதில் பெருமை அடைகிறேன். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோர், அரும்பாடுபட்டு வளர்த்த மருத்துவமனை, இன்று வைர விழா கொண்டாடுகிறது என்பதை நினைக்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.

சாதனை பயணத்தின் சிறப்புகள்...
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின், 60 ஆண்டு கால சாதனை பயணத்தில் முக்கிய அம்சங்கள்:கடந்த, 1954ம் ஆண்டு, தென்னிந்தியாவில் முதல் முறையாக, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவங்கப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக, 1956ம் ஆண்டு, இங்கு,
கதிரியக்க புற்றுநோய் மருத்துவத் துறை ஏற்படுத்தப்பட்டது.
1960ம் ஆண்டு, இந்தியாவில் முதல் முறையாக, குழந்தை
களுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.
1971ம் ஆண்டு, புற்றுநோய்க்கான மருந்து முறை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.
1974ம் ஆண்டு, இம்மருத்துவமனையை, புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மண்டல மையமாக, மத்திய அரசு அறிவித்தது.
ஐ.ஓ.ஆர்.டி., எனும், கதிரியக்க சிகிச்சை தொழிற்நுட்பம், 1995ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.
2002ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் சார்பில், புகையிலை ஒழிப்பு மையம், இம்மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டது. 2005ம் ஆண்டு, ஆசியாவின் உயர்ந்த விருதான, "மகசேசே' விருதை, இம்மருத்துவ நிறுவனம் பெற்றது.
- நமது நிருபர் -
 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

கணினி வழிக் கல்வி; "கைப்பணத்தில்' ஆசிரியர் தொண்டு

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_693830.jpg

கணினி வழிக் கல்வி; "கைப்பணத்தில்' ஆசிரியர்  தொண்டு

காரைக்குடி: காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர். அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார்.