இது புதியதன்று. விடை பொறி (திருக்நோவ்லேட்கே) ஆகசுட் ௨௦௦௫ ஆம் ஆண்டில் வில்லியம் தன்சுடால் (William Tunstall-Pedoe)என்பவரால் தொடங்கப்பட்டது. இதற்கு முன்பே ௧௯௯௬ இல் ஆன்சர்.காம் (answer .com)தொடங்கப்பட்டுள்ளது. அபௌட்.காம் (about.com) முதலான வேறு சில விடை பொறிகளும் உள்ளன. இவை போன்றவற்றில் தெரிவிக்கப்படும் எல்லா விடைகளும் சரியானவை என்று ஏற்பதற்கில்லை.சில வினாகக்ளுக்கு விடைகிடைக்காமலும் போவதுண்டு. யாகூ தளமும் இது போல் விடை தெரிவிப்புத் தளம் வைத்துள்ளது. இவை யெல்லாம் இணைய நேயர்கள் தரும் விடைகளை வெளியிடும். விடை தெரியா வினாக்களுக்கு மீண்டும் வாசகர்களிடம் விடை கேட்கும். அப்படியும் விடை வராமல் போகும் வினாக்கள் உண்டு. தினமணியும் இவை போன்ற தேடு பொறியை உருவாக்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 15 Feb 2011 12:00:00 AM IST
லண்டன், பிப்.14:இதுவரை தெரியாத விவரங்களை அறிந்து கொள்ள கம்ப்யூட்டரில் தேடுபொறியை நாடி வந்தீர்களா? இனிமேல், தேடுபொறியைத் தேட வேண்டாம். இப்போது "விடை பொறி' வந்துவிட்டது.இங்கிலாந்திலுள்ள விஞ்ஞானிகள் சிலர், நேரடிக் கேள்விகளுக்கு நேர் விடைகளைத் தரும் ஒரு வலைதளத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த தளத்தின் பெயர் "ட்ரூநாலட்ஜ்'.இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலைப் பெற, கூகுள் போன்ற தேடுபொறியில் ஒரு சொல் தொடரைக் கொடுத்தால், அது தன்னிடம் தரப்பட்ட சொற்களைக் கொண்ட பல தலைப்புத் தகவல்களைத் தருகிறது. ஆனால், ட்ரூ நாலட்ஜ் தளம் ஒரு தேடுபொறி அல்ல. இதில் நேராகக் கேள்வியைக் கேட்கலாம். உதாரணமாக, தொலைபேசியைக் கண்டுபிடித்தது யார்? என இந்த வலைதளத்தில் கேட்டால், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என நேரடி பதில் கிடைக்கும். அதற்கு மேற்பட்ட விவரங்கள் உள்ள இணைப்பும் கிடைக்கும்.""இதுவரை கம்ப்யூட்டரில் உபயோகித்து வந்த சொல்லாட்சியிலிருந்து இது மாறுபட்டது'' என்கிறார் இதை உருவாக்கியவர்களில் ஒருவரான வில்லியம் டன்ஸ்டால் பிடோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக