கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார். டீ கடை மாஸ்டர். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் செல்வராணி (8). பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இடது கையால் பிம்ப எழுத்துகளை (கண்ணாடியில் பார்த்தால் நேராக தெரியும்) நேர்த்தியாக அதே சமயத்தில் வேகமாகவும் எழுதி அசத்துகிறார்.மாணவி செல்வராணி வலது கையால் நேராகவும், இடது கையால் வார்த்தைகளாக சொல்லச் சொல்ல தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பிம்ப வடிவில் எழுதுகிறார்.
மாணவி செல்வராணி கூறுகையில், "மல்லிகா டீச்சர் தான் நான் எழுதியதை முதலில் பார்த்து, என்னை பாராட்டி வேகமாக எழுத பயிற்சி அளித்தார். தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் என்னை அடிக்கடி பாராட்டுவார். வலது கையால் பாடங்களை நேராக எழுதுவேன். இடது கையால் மட்டும் இதுபோன்று எழுதுகிறேன்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக