திரு வி.கே.இராமசாமி 24.02.2002 அன்றே மறைந்து விட்டார். அவர் எவ்வாறு விருது வாங்க வரிசையில் நின்றார். செய்தியைச் சரிபார்த்துத்திருத்தவும். அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன்
விருதை வாங்கியதும் இடத்தைக்காலி செய்த முன்னணிக் கலைஞர்கள்
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது. விழாவில் கலந்துகொண்ட கலைமாமணிகளில் அனைவரையும் கவர்ந்த மூன்று சாதனையாளர்கள் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா. விழாவுக்கு வந்த அனைத்து கலைமாமணிகளுக்கும் இருக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். ஆர்யா, அனுஷ்கா, தமன்னாவும் பின்னால் இருந்த அவர்கள் இருக்கையில் அமர்ந்தார்கள். என்ன நடந்ததோ… மூவரும் முன்பாக அழைக்கப் பட்டார்கள். இவர்கள் நம் தேசத்தின் மூன்று முக்கிய தூண்கள் என்பதாலோ அரங்கத்தின் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். போட்டோ கிராபர்களின் ப்ளாஷுக்கு பண்டிகை விருந்தாகவே அமைந்தது இந்த மூவரின் முன்வரிசை முன்னேற்றம். இவர்களுக்கென்று பிரத்தியேக பி.ஆர்.ஓக்கள் அங்கே இருந்ததினாலே கூட இது நடந்திருக்கலாம்.
அனைத்து கலைஞர்களும், பழம் பெரும் நடிகர் வி.கே.ராமசாமி போன்ற வயதில் மூத்த கலைஞர்கள் கூட வரிசையில் நின்று விருதுகளை வாங்கிய போது இந்த மூவர் மட்டும் விருது வழங்கும் நேரத்தில் தான் மேடைக்கு அழைக்கப் பட்டார்கள். சரி இதெல்லாம் கூட ஒரு பெரிய விஷயம் இல்லை. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற வாசகத்திற்கு ஏற்ப சிறப்பு விருதுகள் பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன், இசையமைப்பாளர் இளையராஜா போன்றவர்கள் ஏற்புரை வழங்குவதற்கு முன்பாகவும், விருது கொடுத்த முதல்வர் பேசுவதற்கு முன்பாகவும் விருதை வாங்கிய கையோடு அப்படியே வெளியேறினார்கள் இந்த மூவரும். விழாவில் பேசிய குஷ்பூ… தமிழக அரசின் சார்பில் முதல்வர் எல்லோருக்கும் விருதுகள் கொடுத்தி ருக்கிறார். அடுத்து அவர் பேருரையாற்றவிருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் விருது வாங்கியவர்கள் அரங்கத்தில் இல்லை. விருது கொடுத்து மகிழ்வித்த தமிழக முதல்வருக்கு மதிப்பு கொடுக்கவில்லையே. விழாவின் இறுதி வரை இருந்து முதல்வரின் உரையை கேட்டுவிட்டு செல்ல வேண்டாமா? நான் வேறுமாதிரி பேச நினைத்தேன். எல்லாம் மாறிவிட்டது’’ என்று குஷ்பு பேசியபோது முகத்தில் கடும் கோபம் தெரிந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக