சனி, 16 அக்டோபர், 2010

"நெட்' தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 1 கடைசி


சென்னை, அக். 15: கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வு "நெட்'-க்கு (தேசிய தகுதித் தேர்வு) விண்ணப்பிக்க நவம்பர் 1-ம் தேதி கடைசி நாளாகும்.  பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும் இரு முறை இந்தத் தேர்வை நடத்தி வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் 27-ல் நடத்தப்பட்டது. டிசம்பர் 26-ல் மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.  இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி தேதியாகும். இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நேரடியாக விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 1 கடைசி தேதியாகும்.  நேரடியாக விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த தேர்வு மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். யுஜிசி-க்கு நேரடியாக தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விவரங்களை www.ugc.ac.in  என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். ஜூனில் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவுகளும் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

நல்ல தகவலைத் தெரிவிக்கும் தினமணிக்குப் பாராட்டுகள். இதனைப் படித்தவர்கள் தகுதியுடையவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக