புதன், 13 அக்டோபர், 2010

செம்மொழித் தமிழாய்வு நூலகத்துக்கு பாவேந்தர் பெயர்: தமிழக அரசு

சென்னை, அக். 12: செம்மொழித் தமிழாய்வு நூலகத்துக்கு பாவேந்தர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட செய்தி:சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், திமுக ஆட்சிக் காலத்தில் பத்து மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு ""நாமக்கல் கவிஞர் மாளிகை'' என்று பெயர் சூட்டப்பட்டது.இதைப்போன்றே, சட்டப் பேரவை இருந்த இடத்தில் ""செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்'' நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் எனப் பெயரிடப்படுகிறது.போட்டோ பிலிம் நிறுவனம்: ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிறுவனத்தின் சீரமைப்புக்காக மதிப்புக்கூட்டு வரிச் சலுகை, மின்சார வரிவிலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.திண்டுக்கல் மாவட்டம் கரிகாலி கிராமத்தில் செட்டிநாடு சிமென்ட் நிறுவனம், தனது விரிவாக்கத் திட்டத்தை அமைக்க இருக்கிறது. இதற்காக, மற்ற தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதைப் போலவே, மூலதன மானியம், மதிப்புக்கூட்டு வரிச் சலுகை, மின்சார வரிவிலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
கருத்துக்கள்

நல்ல முடிவு. பாராட்டலாம். நூலகம் அமைந்தகட்டடப் பகுதிக்கு அறிஞர் கால்டுவெல் பெயரைச் சூட்டலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தற்போது இயங்கி வரும் கட்டடத்திற்குப் பரிதிமாற்கலைஞர் பெயரைச் சூட்டலாம். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக