புதன், 13 அக்டோபர், 2010

கருணாநிதியை இன்று சந்திக்கிறார் ராமதாஸ்

சென்னை, அக். 12: முதல்வர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை காலை சந்தித்துப் பேசுகிறார், பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ராமதாஸýடன் முதல்வரைச் சந்திக்கின்றனர். தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தனியாக மாநில அரசே நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. இத்தகைய கணக்கெடுப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப் போவதாக அந்தக் கட்சி அறிவித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் கருணாநிதி, "ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது திராவிடர் இயக்கமான திமுகவுக்கோ அல்லது திமுக ஆட்சிக்கோ உடன்பாடில்லாத ஒன்று என்பதைப் போல கற்பனை செய்து கொள்கின்றனர்' என்றார் அவர்.மேலும், இந்தக் கற்பனையை வைத்துக் கொண்டு கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தாங்கள்தான் அதற்கு மூலவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போக்கினை யார் கடைபிடிக்கிறார்கள் அல்லது எந்தக் கட்சி கடைபிடிக்கிறது என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக மத்திய அரசே அறிவித்துள்ளது. ஆனால்  திமுக ஆட்சியை எதிர்த்து ஏதாவது கிளர்ச்சி செய்ய வேண்டும்; ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார்களோ என்று கருணாநிதி கேள்வி எழுப்பி இருந்தார்.ஆனாலும், பாமக தொடர்ந்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தது. இதற்காக, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி, தீர்மானங்களை இயற்றியது. இந்தப் பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.இன்று சந்திப்பு: இந்த நிலையில், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்.இதற்கு முன்பு, மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஆன்மிகத் தலைவர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் ராமதாஸ்.அவரது கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி என நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

தொடர்ந்து மதுவிலக்கை வலியுறுத்தும் ஒரே தலைவராக மரு.இராமதாசு உள்ளார். எனவே, அவர் கட்சி நலனுக்காக இந்தச் சந்திப்பைப் பயன்படுத்த வேண்டா. குறுங்கால உடனடி அரசியல் பதவிகளை நாடாமல், சாதிப்போர்வையைத் தூக்கி எறிந்து விட்டுத் தமிழ்நலக்கூட்டணியை அமைக்கட்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:33:00 AM
Yes. Yes. Thats is why during the last election, voters of the Erode, inserted a stick into the butt of Periyar's grandson.
By PA Valarmathi
10/13/2010 1:12:00 AM
விஷயம் இதுதான் ! சோனியா காலில் கருணாநிதி விழுந்ததைப் பார்த்து ...கருணாநிதி காலில் ராமதாஸ் விழுவதற்கு வருகிறார் ! நீங்கள் அனைவரும் சேர்ந்து வந்து மக்கள் காலில் விழுந்து கதறினாலும் இனிப் பயன் இல்லை ! மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் ! இனி அருவருக்கத் தக்க அரசியல் வியாபாரம் போணியாகாது !
By பெரியாரின் பேரன்
10/13/2010 1:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக